படந்தால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
படந்தால்
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விருதுநகர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் R. கண்ணன், இ. ஆ. ப. [3]
ஊராட்சி மன்ற தலைவர் நல்ல தம்பி தேவர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


படந்தால் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு வருவாய் கிராமமும் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஊராட்சியும்[4][5] ஆகும்.


பெயர் வரலாறு[தொகு]

ஒரு காலத்தில் சாத்தூர் அருகே ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. மரத்தின் அடியில் பெருமாள் கோயில் ஒன்று இருந்தது. ஆலமரமும் பெருமாள் ஆலயமும் அன்றைய காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்தது. அந்தப் பெரிய ஆலமரம் படர்ந்தும் செழித்தும் காணப்பட்டது. படர்ந்த ஆலமரம் இருந்த அந்தப் பகுதியை மக்கள் ’படர்ந்த ஆல்’ என அழைத்தனர். அது நாளடைவில் ’படர்ந்தால்’ எனவும் அதன் பின்னர் ’படந்தால்’ எனவும் மருவியது. அந்த மரம் தற்பொழுது இல்லை. கடந்த 1995 ஆம் ஆண்டு பெய்த கனமழையில் அந்த மரம் வேரோடு சாய்ந்து விட்டது.

கோவில்கள்[தொகு]

1. அருள்மிகு ஸ்ரீ பாதாள துர்க்கை அம்மன் திருக்கோயில், படந்தால்.

2. அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோவில், படந்தால்.

3. அருள்மிகு ஸ்ரீ வீர காளியம்மன் திருக்கோவில், படந்தால்.

4. அருள்மிகு ஶ்ரீ அய்யனார் திருக்கோவில், படந்தால்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=26&centcode=0008&tlkname=Sathur#MAP
  5. http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=26&blk_name=Sattur&dcodenew=24&drdblknew=11
"https://ta.wikipedia.org/w/index.php?title=படந்தால்&oldid=2981601" இருந்து மீள்விக்கப்பட்டது