உள்ளடக்கத்துக்குச் செல்

தவாங்

ஆள்கூறுகள்: 27°35′18″N 91°51′55″E / 27.58833°N 91.86528°E / 27.58833; 91.86528
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தவாங் டவுன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தவாங்
நகரம்
தவாங் நகரத்தின் விகாரை, அருணாச்சலப் பிரதேசம், இந்தியா
தவாங் is located in அருணாசலப் பிரதேசம்
தவாங்
தவாங்
இந்தியாவின் அருனாச்சலப் பிரதேசத்தில் தவாங் நகரத்தின் அமைவிடம்
தவாங் is located in இந்தியா
தவாங்
தவாங்
தவாங் (இந்தியா)
ஆள்கூறுகள்: 27°35′18″N 91°51′55″E / 27.58833°N 91.86528°E / 27.58833; 91.86528
நாடு இந்தியா
மாநிலம்அருணாச்சலப் பிரதேசம்
மாவட்டம்தவாங்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்தவாங் நகராட்சி
ஏற்றம்
3,048 m (10,000 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்11,202
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
790104
வாகனப் பதிவுAR-03
ClimateCwb
இணையதளம்tawang.nic.in

தவாங் நகரம் (ஆங்கில மொழி: Tawang Town, இந்தி: तवांग) வடகிழக்கு இந்தியாவில் உள்ள அருணாசலப் பிரதேச மாநிலத்தில் உள்ள நகரம் ஆகும். இது சராசரியாக கடல் மட்டத்தில் இருந்து ஏறக்குறைய 3,048 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இப்பிரதேசத்தை திபெத்தின் தென்பகுதி என சீன அரசும், அருணாசலப் பிரதேசத்தின் பகுதி என இந்திய அரசும் கூறிவருகின்றன. முன்னர் இது மேற்கு காமெங் மாவட்டத்தின் தலைமையகமாக இருந்தது. பின்னர் தவாங் மாவட்டம் உருவாக்கப்பட்டதால் தற்போது தவாங் மாவட்டத்தின் தலைமையகமாக உள்ளது. தவாங் நகரம், மாநிலத் தலைநகரான இட்டநகருக்கு வடமேற்கே 447 கிலோ மீட்டர் தொலைவிலும்; கவுகாத்திக்கு வடக்கே 440 கிலோ மீட்டர் தொலைவிலும்; தேஜ்பூருக்கு வடமேற்கே 330.7 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்நகரத்தின் இந்திய-சீனா எல்லைப்பகுதியில் இமயமலையில் பூம் லா கணவாய் உள்ளது.

மக்கள் தொகை

[தொகு]

2011 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 11,202 ஆகும்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தவாங்&oldid=3623694" இலிருந்து மீள்விக்கப்பட்டது