ஜௌகர்
Appearance
சௌகர் அல்லது ஜௌகர், சௌகடு, ஜௌகட் (Jaugarh or Jaugada), இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் கஞ்சாம் மாவட்டத்தில் அமைந்த பழைய சிதிலமடைந்த கோட்டை ஆகும். இங்கு பேரரசர் அசோகர் நிறுவிய பெரும் பாறைக் கல்வெட்டு உள்ளது. இது பெர்காம்பூருக்கு வடமேற்கே 35 கிலோ மீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரம் புவனேஸ்வருக்குத் தென்மேற்கே 160 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. அசோகர் கைப்பற்றிய கலிங்க நாட்டின் கோட்டை இவ்விடத்தில் இருந்தது. அசோகரின் கல்வெட்டால் இவ்வூர் புகழ் பெற்றது.
- அசோகரின் கட்டளைகள் கொண்ட கல்வெட்டு
இக்கல்வெட்டு கிமு 250-இல் அசோகரால் நிறுவப்பட்ட பெரும் பாறைக் கல்வெட்டாகும். இக்கல்வெட்டில் 16 சொற்றொடர்கள் உள்ளன.[1] இதன் வடகிழக்கே 250 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த அசோகரின் தௌலி கல்வெட்டைப் போன்றே இதுவும் பிராமி எழுத்தில் உள்ளது.
-
அசோகரின் ஜௌகர் கல்வெட்டு
-
அசோகரின் கல்வெட்டு, ஜௌகர்
இதனையும் காண்க
[தொகு]- அசோகர் கல்வெட்டுக்களின் பட்டியல்
- அசோகரின் பெரிய தூண் கல்வெட்டுக்கள்
- அசோகரின் சிறு தூண் கல்வெட்டுகள்
- அசோகரின் பெரும் பாறைக் கல்வெட்டுக்கள்
- அசோகரின் சிறு பாறைக் கல்வெட்டுக்கள்
மேற்கோள்கள்
[தொகு]- Yule, Paul, Early Historic Sites in Orissa (Delhi 2006) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-89645-44-7