கவர்மெண்ட் மாப்பிள்ளை (1992 திரைப்படம்)
கவர்மெண்ட் மாப்பிள்ளை | |
---|---|
இயக்கம் | மணிவண்ணன் |
தயாரிப்பு | ஜி. எஸ். மது |
இசை | தேவா |
நடிப்பு | ஆனந்த் ராஜ் கஸ்தூரி ராம்குமார் சாரதா ப்ரீத்தா மணிவண்ணன் செந்தில் டெல்லி கணேஷ் வாசு விக்ரம் பொன்வண்ணன் |
ஒளிப்பதிவு | டி. சங்கர் |
படத்தொகுப்பு | பி. வெங்கடேஸ்வர ராவ் |
வெளியீடு | 6 மார்ச் 1992 |
ஓட்டம் | 145 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கவர்மெண்ட் மாப்பிள்ளை (Government Maapillai), 1992 ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை மணிவண்ணன் இயக்க ஜி. எஸ். மதுவால் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் ஆனந்த் ராஜ், கஸ்தூரி, மணிவண்ணன், பொன்வண்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். 6 மார்ச் 1992 இல் வெளியான இப்படத்திற்கு இசை அமைத்தவர் தேவா ஆவார்.
நடிகர்கள்
[தொகு]- ஆனந்த் ராஜ் (நடிகர்) - சுந்தரபாண்டியன்
- கஸ்தூரி (நடிகை) - மள்ளரியா
- ராம்குமார் - கார்த்திகேயன்
- சாரதா ப்ரீத்தா - கல்யாணி
- மணிவண்ணன் - மணிவண்ணன்
- செந்தில் - சொக்கா
- டெல்லி கணேஷ் - கார்த்திகேயனின் தந்தை
- வாசு விக்ரம் - எம் எல் ஏ
- பொன்வண்ணன்
- வாசுதேவன்
- பெரிய கருப்பு தேவர்
- கென்னடி
- ராகசுதா - செல்லாயி
- விஜயதுர்கா - அருக்காணி
- ஜானகி - கார்த்திகேயனின் அன்னை
- ஹல்வா வாசு
கதைச்சுருக்கம்
[தொகு]மணிவண்ணன் எனும் பணக்கார மனிதருக்கு அடியாளாக வேலை செய்யும் முன்கோபி சுந்தரபாண்டியன் ஆனந்த் ராஜ் ஓர் அனாதை. சிறு தவறுகளுக்கு அடிக்கடி சிறைக்கு செல்வதை வழக்கமாக கொண்டவன். மணிவண்ணன் வீட்டில் வேலை ஆளாக சேரும் கார்த்திகேயன் (ராம்குமார்) அவரது மகள் கல்யாணியை (சாரதா ப்ரீத்தா) விரும்புகிறான். இந்நிலையில், சுந்தரபாண்டியனைத் திருத்த முயற்சிக்கும் மள்ளரியாவும் (கஸ்தூரி) ஓர் அனாதை. மள்ளரியாவும் சுந்தரபாண்டியனும் காதலிக்கின்றனர். ஒரு நாள், ஊழல்வாதி எம்எல்ஏ (வாசு விக்ரம்) செல்லாயி (ராகசுதா) எனும் சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிடுகிறார். சுந்தரபாண்டியனும் மள்ளரியாவும் ஒரு வழியாகத் திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணம் செய்தும் பணப்பற்றாக்குறையால் அவர்களால் ஊரை விட்டு ஓட இயலவில்லை. கல்யாணிக்கும் எம்எல்ஏவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. அதனால் கல்யாணியின் காதலனைக் கொல்ல சுந்தரபாண்டியனுக்கு கட்டளை இடுகிறார் மணிவண்ணன். ஆனால், நல்லவனாகத் திருந்தி இருக்கும் சுந்தரபாண்டியன் கொல்ல மறுத்து அந்த கல்யாணி கார்த்திகேயன் ஜோடிக்கு உறுதுணையாக செயல்பட்டு எவ்வாறு மணிவண்ணனை முறியடிக்கிறான் என்பது தான் மீதிக் கதை.
இசை
[தொகு]இத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் தேவா ஆவார். இப்படத்தின் 7 பாடல்களையும் எழுதியவர் காளிதாசன்.
வரிசை
எண் |
பாடல் | பாடகர்கள் | பாடல் ஒலிக்கும் நேரம் |
---|---|---|---|
1 | சின்ன பொண்ணு | தேவா, எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஸ்வர்ணலதா | 04:16 |
2 | இளவட்ட பூவே | கிருஷ்ணராஜ், சித்ரா | 04:39 |
3 | மாமா மாமா உன்னை | கிருஷ்ணராஜ், , சித்ரா | 04:15 |
4 | மனிதனுக்கு | மலேசியா வாசுதேவன் | 04:11 |
5 | ஒரு வேப்பமர தோப்பு | மலேசியா வாசுதேவன் | 04:58 |
6 | சொந்தம் என்பது | கிருஷ்ணராஜ், சித்ரா | 03:14 |
7 | சொட்டு சொட்டாக | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா | 04:30 |
மேற்கோள்கள்
[தொகு]- http://spicyonion.com/movie/government-mappillai/
- https://web.archive.org/web/20070815073735/http://cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=government%20mapillai
- http://mio.to/album/29-tamil_movie_songs/255164-Government_Mappillai__1995_/#/album/29-tamil_movie_songs/255164-Government_Mappillai__1995_/ பரணிடப்பட்டது 2014-03-01 at the வந்தவழி இயந்திரம்