கோபுரங்கள் சாய்வதில்லை (திரைப்படம்)
Appearance
கோபுரங்கள் சாய்வதில்லை | |
---|---|
இயக்கம் | மணிவண்ணன் |
தயாரிப்பு | பி. கலைமணி |
கதை | மணிவண்ணன் |
திரைக்கதை | மணிவண்ணன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | மோகன் சுகாசினி ராதா எஸ். வி. சேகர் |
ஒளிப்பதிவு | ஏ. சபாபதி |
படத்தொகுப்பு | எல். கேசவன் |
கலையகம் | எவரெஸ்ட் பிலிம்சு |
விநியோகம் | எவரெஸ்ட் பிலிம்சு |
வெளியீடு | அக்டோபர் 15, 1982 |
ஓட்டம் | 135 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கோபுரங்கள் சாய்வதில்லை (Gopurangal Saivathillai) என்பது மணிவண்ணன் இயக்கத்தில் 1982ஆவது ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் மோகன், சுகாசினி, ராதா மற்றும் எஸ். வி. சேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்த இத்திரைப்படம் 1982 அக்டோபர் 15 அன்று வெளியானது.[1]
நடிகர்கள்
[தொகு]- மோகன் - முரளி[2]
- சுகாசினி - அருக்காணி[3]
- ராதா - ஜூலி
- எஸ். வி. சேகர் - ஸ்டான்லி (ஜூலியின் சகோதரர்)
- வினு சக்ரவர்த்தி - பூதலிங்கம்
- டி. கே. எஸ். சந்திரன்
- சுந்தர்
- மனோபாலா
- கமலா காமேஷ்
- நளினி
- என். மோகன்
- வெள்ளை சுப்பையா
- செந்தில்
- லூஸ் மோகன்
- ஹசா சாரீப்
- சபிதா ஆனந்த்
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படம் இளையராஜாவின் இசையமைப்பில் வெளியான திரைப்படமாகும்.[4]
எண் | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | நீளம் (நி:நொ) |
1 | "என் புருசந்தான்" | எஸ். பி. சைலஜா, சசி ரேகா | முத்துலிங்கம் | 04:05 |
2 | "ஊரெங்கும்" | இளையராஜா | கங்கை அமரன் | 03:58 |
3 | "பூ வாடைக்காற்று" | இளையராஜா, எஸ். ஜானகி, கிருஷ்ணசந்தர் | வைரமுத்து | 03:57 |
4 | "புடிச்சாலும் புடிச்சன்" | கிருஷ்ணசந்தர் | அவினாசி மணி | 04:14 |
5 | "வாடி சமஞ்ச" | பி. சுசீலா | வாலி | 04:08 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ராம்ஜி, வி. (17 October 2019). "பாக்யராஜுக்கும் மணிவண்ணனுக்கும் கத்திச்சண்டை; 'கோபுரங்கள் சாய்வதில்லை' - அப்பவே அப்படி கதை" (in ta). Hindu Tamil Thisai இம் மூலத்தில் இருந்து 18 October 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191018202508/https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/520723-gopurangal-saivathillai.html.
- ↑ Sangeetha, P (18 September 2018). "Manivannan is the only director who excelled in all kinds of cinema: Karu Palaniappan". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 21 September 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180921203721/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/manivannan-is-the-only-director-who-excelled-in-all-kinds-of-cinema-karu-palaniappan/articleshow/65856127.cms.
- ↑ Rajendran, Sowmya (24 January 2014). "Racism in Kollywood & the 'Kumar Vishwas' uproar". Sify. Archived from the original on 20 September 2018. பார்க்கப்பட்ட நாள் 20 September 2018.
- ↑ "கோபுரங்கள் சாய்வதில்லை பாடல்கள்". raaga. பார்க்கப்பட்ட நாள் 2015-07-09.