ஊனா மாவட்டம்
ஊனா மாவட்டம் | |
---|---|
ஊனாமாவட்டத்தின் இடஅமைவு இமாசலப் பிரதேசம் | |
மாநிலம் | இமாசலப் பிரதேசம், இந்தியா |
தலைமையகம் | ஊனா |
பரப்பு | 1,549 km2 (598 sq mi) |
மக்கட்தொகை | 4,47,967 (2001) |
மக்கள்தொகை அடர்த்தி | 291/km2 (750/sq mi) |
நகர்ப்புற மக்கட்தொகை | 8.8% |
படிப்பறிவு | 81.09% |
பாலின விகிதம் | 997 |
சராசரி ஆண்டு மழைபொழிவு | 1253 mm |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
ஊனா இமாசலப் பிரதேசத்தில் உள்ள ஒரு மாவட்டம். இமாவட்டத்தின் எல்லை இமாசலப் பிரதேச மாநிலத்தைப் பஞ்சாபின் ஹோசியர்பூர் மாவட்டத்துடன் இணைக்கிறது. ஊனா இம்மாவட்டத்தின் தொழில் நகரமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் இந்நகரம் குல்லு, மணாலி, தர்மசாலா போன்ற சுற்றுலா தளங்களுக்குச் செல்பவர்களுக்கு ஒரு இடைவழி நகரமாக உள்ளது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி ஊனா மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 521,057 பேர் ஆவர்.[1] இது தோராயமாக கேப் வேர்ட் நாட்டின் மக்கள் தொகைக்குச் சமமானதாகும்.[2] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 543 ஆவது இடத்தில் உள்ளது.[1] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 338 inhabitants per square kilometre (880/sq mi).[1] மேலும் ஊனா மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 16.24 % ஆகும் .[1]ஊனா மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 977 பெண்கள் உள்ளனர்.[1] மேலும் ஊனா மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 87.23% ஆகும்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
- ↑ US Directorate of Intelligence. "Country Comparison:Population". Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2011-10-01.