ஆசிய நெடுஞ்சாலை 41
Jump to navigation
Jump to search
ஆசிய நெடுஞ்சாலை 41 அல்லது ஏஎச்41 (AH41), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். மியன்மாருக்கும் வங்காளதேசத்துக்கும் இடையிலான எல்லையில் இருந்து வங்காளதேசத்தில் உள்ள மோங்லா என்னும் இடம் வரை செல்லும் இந்த நெடுஞ்சாலை முழுவதும் வங்காளதேசத்துக்கு உள்ளேயே அமைந்துள்ளது. இதன் மொத்த நீளம் 948 கிலோமீட்டர்.
ஏஎச்2 நெடுஞ்சாலையின் ஒரு பகுதியூடாகச் செல்லும் இச் சாலை, ஏஎச்1 சாலையை இரண்டு இடங்களில் வெட்டிச் செல்கிறது.
நாடுகள்[தொகு]
இந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.
- வங்காளதேசம் - 948 கிமீ
உசாத்துணை[தொகு]
- "எஸ்காப்" நிறுவனத்தின் போக்குவரத்து மற்றும் சுற்றுலாப் பிரிவு, ஆசிய நெடுஞ்சாலைகள் கையேடு, 2003. (ஆங்கில மொழியில்)