ஆசிய நெடுஞ்சாலை 42

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆசிய நெடுஞ்சாலை 42 அல்லது ஏஎச்42 (AH42), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். சீனாவிலுள்ள லான்சூ என்னும் இடத்தில் தொடங்கி இந்தியாவில் உள்ள பார்கி என்னும் இடம் வரை செல்லும் இந்த நெடுஞ்சாலை ஆசியாவிலுள்ள மூன்று நாடுகளூடாகச் செல்கிறது. இதன் மொத்த நீளம் 3,754 கிலோமீட்டர்.

ஏஎச்5 நெடுஞ்சாலையை லான்சூவில் சந்திக்கும் இச் சாலை, ஏஎச்2 சாலையின் ஒரு பகுதியூடாகச் சென்று ஏஎச்1 நெடுஞ்சாலையை பார்கி என்னுமிடத்தில் சந்திக்கிறது.

நாடுகள்[தொகு]

இந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.

உசாத்துணை[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிய_நெடுஞ்சாலை_42&oldid=3363387" இலிருந்து மீள்விக்கப்பட்டது