அரியநாயகியம்மன் கோயில், கீழாநிலைக்கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரியநாயகியம்மன் கோயில் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டத்தில் கீழாநிலைக்கோட்டையில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் அறந்தாங்கி-காரைக்குடி சாலையில் 14 கிமீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.[1]

மூலவர்[தொகு]

இக்கோயிலின் மூலவர் அரியநாயகி அம்மன் ஆவார்.[1]

சிறப்பு[தொகு]

இது வல்லம்பர் சமுதாய கிராம மக்களின் குலதெய்வமாக இந்த அம்மன் உள்ளார். ஆடி மாத கடைசி செவ்வாய்க்கிழமை மது எடுப்புத் திருவிழா கொண்டாடப்படுகிறது.[1] தமிழகத்தின் ஆறாவது கற்றளி கோவிலாகும்.

திறந்திருக்கும் நேரம்[தொகு]

காலசந்தி (காலை 8.00 மணி), உச்சிக்காலம் (நடுப்பகல் 12.00 மணி), சாயரட்சை (மாலை 5.30 மணி), அர்த்தசாமம் (இரவு 8.00 மணி) என்ற வகையில் நான்கு கால பூசைகள் இங்கு நடத்தப்பெறுகின்றன.இக்கோயில் காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 முதல் 8.00 வரையிலும் திறந்திருக்கும். ஆனித் திருவிழா 11 நாள்கள், ஆடி செவ்வாய் திருவிழா 10 நாள்கள் புரட்டாசி நவராத்திரி 9 நாள்கள் சிறப்பாகக் கொண்டாடப்பெறுகின்றன. ஆனித் திருவிழாவில் 11ஆம் நாளன்று பூக்களால் செய்யப்பட்ட தேரிஅம்மன் பவனி வருகிறார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 புதுக்கோட்டை மாவட்டத் திருக்கோயில்கள் பயணியர் கையேடு, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, சென்னை, 2003