சித்தேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்தேரி
வருவாய் கிராமம்
சித்தேரி மலையின் ஒரு தோற்றம்
சித்தேரி மலையின் ஒரு தோற்றம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
பின்கோடு636903

சித்தேரி (Sitheri or Sitteri) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு மலைக்கிராமம் ஆகும்.[1][2][3] இது கடல் மட்டத்தில் இருந்து 3,600 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

அமைவிடம்[தொகு]

சித்தேரி மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து 26 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. சித்தேரி, அரூரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 13, 25, 27 ஆகிய வழித்தட எண்கள் கொண்ட பேருந்துகள் போக்குவரத்து வசதிக்காக பயன்படுத்தப்படுகின்றன. சித்தேரி மலை அடிவாரத்தில் வள்ளிமதுரை அமைந்துள்ளது. அதை அடுத்து 12 கிலோமீட்டர்கள் மலை மீது பயணம் செய்ய வேண்டும். மலை அடிவாரத்தில் தோல்தூக்கி என்னும் கிராமம் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 1,842 வீடுகளும் 8,370 மக்களும் வாழ்கின்றனா். இதில் 4,308 பேர் ஆண்களும், 4,062 பேர் பெண்களும் ஆவா்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-22. பார்க்கப்பட்ட நாள் 2015-10-28.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-08-08. பார்க்கப்பட்ட நாள் 2015-10-28.
  3. "Pappireddipatti Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-31.
  4. "Sitteri Village in Pappireddipatti (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-17.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சித்தேரி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தேரி&oldid=3610688" இலிருந்து மீள்விக்கப்பட்டது