விஜயாலய சோழீஸ்வரம்

ஆள்கூறுகள்: 10°30′47″N 78°36′04″E / 10.51306°N 78.60111°E / 10.51306; 78.60111
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஜயாலய சோழீஸ்வரம்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:புதுக்கோட்டை
அமைவு:நார்த்தாமலை
ஆள்கூறுகள்:10°30′47″N 78°36′04″E / 10.51306°N 78.60111°E / 10.51306; 78.60111
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:இந்துக் கோயில் கட்டிடக்கலை, Rock cut
வரலாறு
அமைத்தவர்:சாத்தன் பூதி முத்தரையர்

விசயாலய சோழீசுவரம், நார்த்தாமலை கிராமத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் மலைமீது அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1]

பெயர்க்காரணம்[தொகு]

இக்கோயில் பல்லவர் மற்றும் சோழர் கலைப்பாணியினைக் கொண்டதாகக் கூறப்படுகிறது. [2]கோயிலின் வெளிப்புறச் சுவரில் உள்ள கல்வெட்டின்மூலமாக இது சாத்தன் பூதி முத்தரையர் என்பவரால் கட்டப்பட்டதாகவும், மழையின் காரணமாக இடிந்துவிட்டதால், மல்லன் விடுமன் என்பவர் இதனை விஜயாலய சோழன் காலத்தில் புதுப்பித்தார் என்றும் கூறப்படுகிறது. விஜயாலயன் காலம் முதல் இக்கோயில் விஜயாலய சோழீஸ்வரம் என்று வழங்கப்பட்டு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.[1]

அமைப்பு[தொகு]

இக்கோயில் தமிழ்நாட்டில் உள்ள கோயில் அமைப்பில் தனித்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படுதிறது. மூலவரை அடுத்துள்ள உட்சுவர், வட்ட வடிவில் காணப்படுகிறது. அடுத்துள்ள வெளிச்சுவர் சதுரவடிவில் உள்ளது. உள் திருச்சுற்றுச் சுவர்களில் ஓவியங்கள் அழிந்த நிலையில் உள்ளன.கருவறைமீது உள்ள விமானம் அதிட்டானம் முதல் உச்சிவரை கல்லால் ஆனதாகும். இது ஒரு கட்டுமான கற்கோயிலாகும். இது காஞ்சி கைலாசநாதர் கோயிலின் விமானத்தின் தோற்றத்தைக் கொண்டு அமைந்துள்ளது. விமானத்தைச் சுற்றி எட்டு துணை கோயில் இருந்ததாகவும், தற்போது ஆறு கோயில்கள் நல்ல நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவற்றில் வழிபாட்டிற்கு தெய்வ உருவங்கள் காணப்படவில்லை.[1]

சிறப்பு[தொகு]

கோயில் வாயிலில் உள்ள துவாரபாலகர் சிற்பங்களும், விமானத்தின்மேல் உள்ள சிற்பங்களும் முற்காலச் சோழர் கலையைச் சேர்ந்தவையாக உள்ளன. வெளியிலிருந்து பார்க்கும்போது சதுர வடிவ கருவறை போன்று தோற்றமளித்தாலும் உள்ளே கருவறையானது வட்ட வடிவில் உள்ளது. அதற்கு வெளியே சாந்தாரப் பகுதி மட்டும் சதுர வடிவில் உள்ளது. அப்பகுதியில் நான்கு தூண்கள் உள்ளன. வட்ட வடிவ கருவறைக்கு முன் உள்ள மண்டபத்தின் நடுவில் ஆறு தூண்கள் உள்ளன. பக்கச் சுவர்களில் ஆறு அரைத்தூண்கள் உள்ளன. விமானத்தின் சிகரம் வட்ட வடிவில் உள்ளது. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 TVU
  2. திருக்கோயில், மே 1992, ப.19[தொடர்பிழந்த இணைப்பு]
  3. நார்த்தாமலை நீருக்குள் ஜுரஹரேஸ்வரர், ஆன்மிகம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜயாலய_சோழீஸ்வரம்&oldid=3789721" இலிருந்து மீள்விக்கப்பட்டது