பயனர் பேச்சு:Shanmugamp7/தொகுப்பு 4

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வார்ப்புரு:Multiple issues[தொகு]

வணக்கம் சண்முகம், {{Multiple issues}} இந்த வார்ப்புரு இடப்படும் கட்டுரைகள் குறித்த பகுப்பில் வர என்ன செய்ய வேண்டும்? எ.கா: தோள் சீலைப் போராட்டம், குமரி விடுதலைப் போராட்டம் ஆகியவற்றில் வார்ப்புரு இடப்பட்டுள்ளது. பகுப்பு:பல சிக்கல்களைக் கொண்டுள்ள கட்டுரைகள் என்ற பகுப்பில் வர வேண்டும். --Anton (பேச்சு) 03:01, 20 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

noinclude ல் பகுப்பு இருந்ததால் கட்டுரையில் சேரவில்லை. அதை மாற்றியுள்ளேன் அன்டன்.--சண்முகம்ப7 (பேச்சு) 04:00, 20 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
நன்றி சண்முகம் :) --Anton (பேச்சு) 07:16, 20 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

உதவி வேண்டும்[தொகு]

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற பக்கத்தில் அதன் நடுநிலைமை கேள்விக்குட்படுத்தப் பட்டுள்ளது என்று சொல்லி http://ta.wikipedia.org/s/1n9n மேற்கண்ட இணைப்பை கொடுத்திருக்கிறீகள் இங்கிருந்து அமைப்பின் செயல் திட்டங்கள் பகுதி அப்படியே நகலெடுக்கப்பட்டுள்ளது ஏண்ரூ குரிப்பிட்டிருக்கிரிகள் http://www.sltjweb.com/%E0%A E%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/ என்ர பகுதியில் உள்ளவை http://www.tntj.net/head-office/bylaw என்ர பகுதியில் நகலெடுக்கப்பட்டுள்ளது இதுவே முதன்மையானதாகும் −முன்நிற்கும் கருத்து Muhamed (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

வணக்கம் முகம்மது, எங்கிருந்து எடுத்திருந்தாலும் அப்படியே பயன்படுத்துவது பதிப்புரிமை மீறலே, மேலும் அப்பகுதி அப்போதே மாகிரால் நீக்கப்பட்டது, அதன் பிறகு இந்த மாற்றத்தில் பயனர்:Ziyapdm ஆங்கில விக்கியில் இருந்து நகலெடுக்கும் போது நடுநிலைமை கேள்விக்குட்படுத்தப் பட்டுள்ளது வார்ப்புருவையும் சேர்த்து நகலேடுத்துள்ளர்--சண்முகம்ப7 (பேச்சு) 10:58, 27 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

help me to shift the article from sandbox to new title[தொகு]

sir, help me to the editing of nayaka article from http://en.wikipedia.org/wiki/User:Premloganatha/sandbox , it should be appeared in the title of nayaka, and help me to move from sand box to the title of the article 'nayaka', please help me to shift the same from sandbox to 'nayaka' title..... thanks.... --Premloganatha (பேச்சு) 10:29, 24 சனவரி 2013 (UTC)[பதிலளி]

I think that article needs more cleanup, i'm not familiar with that subject. If i move that to main space it may be deleted, so please register another account or reset the password for that old account, then cleanup the article and then move it to main namespace, Thanks --சண்முகம்ப7 (பேச்சு) 10:38, 24 சனவரி 2013 (UTC)[பதிலளி]


thank you sir, i will do the same as you advised me.... --Premloganathan (பேச்சு) 10:54, 24 சனவரி 2013 (UTC)[பதிலளி]


SIR, I AM PREMLOGANATHAN, I DEVELOPLED THE ARTICLE OF http://ta.wikipedia.org/s/25ue, YESTERDAY I TRIED TO LOGIN THE ID OF MINE, I COULD NOT OPEN IT, AND SENT A PASS WORD REQUEST TO YOU TO MY MAIL ID premloganathan@gmail.com SO PLEASE HELP ME IN URGENT, I HAVE WRITTEN SOME OTHER ENGLISH ARTICLE FOR PUBLICATION IN ENGLISH WIKI. THANKS WITH WARD REGARDS, premloganathan- −முன்நிற்கும் கருத்து 122.178.121.158 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

If you've confirmed email address associated with that account, you can retrieve/reset the password. --சண்முகம்ப7 (பேச்சு) 08:58, 24 சனவரி 2013 (UTC)[பதிலளி]

thank you for your service, we are having own domain in the name of nayaka.in, then we will publish our own articles with all historical with proper evidence, simply you people doing deletion job without any intimation, simple you destroyed the article page ofhttp://ta.wikipedia.org/s/25ue, here we are new and try to create article according to the standards of you ok. if you give feed back mail me at premloganathan@gmail.com, why should you delete the page, and do you in proper in all the streams, you people are having personal bios ever, you people dont know the research work hardness and etc. good bye to stay with and work with you in the past.−முன்நிற்கும் கருத்து 122.178.118.208 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

Sure, You can publish your research articles in your own site, I have no problem with it. I haven't deleted that article, I've removed your machine translated text. We have official policy about machine translation, see விக்கிப்பீடியா:தானியங்கித் தமிழாக்கம். Please remember that this is not a place for publishing your research work & Do not post machine translated text. I've already intimated to you, See பயனர் பேச்சு:122.178.118.208, Thanks --சண்முகம்ப7 (பேச்சு) 11:50, 22 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

ok, sir now i worked with that and presented the same if you given a time of chance then i will publish the same, if you seen it has been eligible then give me permission to remove the old and insert the new, even if you can, please do it in your system, thanks a lot. now read the edited one பழங்குடியினரான போயர்கள் (போயாஸ்) மற்றும் யாழிகாஸ் (எளிகஸ்) சில முன்பு நூற்றாண்டுகளாக ஒரு சிருகுன்றினை சுற்றி அடர்ந்த காட்டு பகுதியில் வசித்து வந்தார். அவர்களால் நவாப்புகளின் அடக்குமுறை மற்றும் தானியங்கி ஆட்சி முறையை பொறுக்க முடியாமல் சீற்றம் கொண்டு போய மக்கள் முஸ்லீம் வீரர்கள் மீது பழி வாங்கும் பொருட்டு அவர்களை விரட்டினர். தீய சக்திகளை எதிராக அவர்கள் சேமித்த மற்றும் நூற்றாண்டுகளாக பிரபலமான ஆனது கங்கம்மா கோவில், கட்டப்பட்டது வெற்றி பெற்ற போயர்களால். அந்த கோவிலின் கீழே உள்ள கிணற்று நீர் பல தோல் வியாதிகளுக்கு குணப்படுத்த படுவதாக நம்பப்படுகிறது. உள்ளூர் மக்கள் கிணற்று தண்ணீர் மிகவும் சக்திவாய்ந்த ஒன்று என்று நம்புகின்றனர், மற்றும் விவசாய நிலத்தில் தெளிப்பதால் அது நன்கு விவசாயத்தினை பெருக்குவதாக நம்புகின்றனர். பக்தர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஸ்ரீ கங்கம்மா தேவி தலையில் பூ வைத்து குறி கேட்கின்றனர், மற்றும் நிறைவேறும என்பதனை சோதிக்க முடியும் என்றும் நபுகின்றனர். உள்ளூர் மக்கள் மலர் வலது பக்கத்தில் விழுந்தால் அது நேர்மறை மற்றும் இடது விழுந்தால் எதிர்மறை என்றும் நம்புகின்றனர். ஒரு வருடத்திற்கு ஒரு முறை வரும் நவராத்திரி திருவிழா இந்த கோவிலில் விசேசமானது மேலும் , இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வருகின்றனர். கன்கம்மா கோவில் 1990 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேச அறக்கட்டளை துறையினரால் எடுத்துக்கொள்ளப்பட்டது.−முன்நிற்கும் கருத்து 122.178.118.208 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

If possible, please create an account using this form, then we can easily contact you. Still it looks like machine translation, You have to work more with this :). Please do not use Google translation or any other translation tools, see விக்கிப்பீடியா:தமிழ்த் தட்டச்சு to type in Tamil. Provide references, see விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல்--சண்முகம்ப7 (பேச்சு) 12:11, 22 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

thank you sir, i will create new account with you and most probably, i will join with you on monday 24th september 2012, for further correction in that articles, please guide me yar. thank you and happy week end to you, bye bye.........−முன்நிற்கும் கருத்து 122.178.118.208 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது. now my account is with you, premloganathan@gmail.com −முன்நிற்கும் கருத்து Premloganathan (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது. ‎‎

Sure, I'll always help you :) , see பயனர் பேச்சு:Premloganathan & Please read the policy and guidelines pages to easily contribute. Thanks.--சண்முகம்ப7 (பேச்சு) 12:28, 22 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

sir, today i have altered the page according to the standards of you (knowing level of mine) and that was in http://ta.wikipedia.org/s/27wu to get approval and uploaded the same at http://ta.wikipedia.org/s/25ue by premloganathan

Hi, you can update போயர் page with contents of this page. please see your talk page பயனர் பேச்சு:Premloganathan, Thanks--சண்முகம்ப7 (பேச்சு) 07:27, 27 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

thank you so much sir, i will not forget your help to improve my pages. i will follow as you said. i will get in touch with you ever sir, my mail id premloganathan@gmail.com

shanmugam please help me, to edit the page of போயர் கட்டுரை only one time, i will follow the things accordingly and develop the article as you said and teach. THANK YOU..

ok shanmugam once again i thank you, according to your guidance i have done the things at போயர் கட்டுரை, have a nice day with lot of joy and fun... by premloganathan

உதவி வேண்டல்[தொகு]

வணக்கம் சண்முகம், பிரகாசம் மாவட்டம் கட்டுரையில் /references tags does not exist என்ற பிழை வருகிறது. சரி செய்ய முயன்றேன். முடியவில்லை. திருத்தி உதவுங்கள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:12, 23 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

நீங்கள் இங்கு கூறுவதற்கு முன்பே திருத்தி விட்டேன் தமிழ்க்குரிசில் :)--சண்முகம்ப7 (பேச்சு) 10:17, 23 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

இங்கே கூறிய பின்னரே பார்த்தேன். உங்களது வேகத்தைத் தான் நானறிவேனே! :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:05, 23 செப்டெம்பர் 2012 (UTC) சிவா ஐயாதுரை கட்டுரையிலும் அதே பிழை. திருத்தி விடுங்களேன். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:16, 23 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று :)--சண்முகம்ப7 (பேச்சு) 15:37, 23 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

sir, i have submitted the completed article at http://ta.wikipedia.org/s/25ue, waiting for your approval sir, thank you... have a nice day ... bye ...Premloganathan

லித்தியம் கட்டுரையிலும் அதே பிழை. திருத்திவிடுங்கள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:29, 28 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று--சண்முகம்ப7 (பேச்சு) 15:46, 28 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

வணக்கம் சண்முகம், எஸ்தர் (கி) (நூல்) என்பது எஸ்தர் (நூல்) (en:Book of Esther) எனவும், எஸ்தர் (நூல்) என்பது எஸ்தர்(en:Esther) எனவும் பெயர் மாற்றப்பட வேண்டும். பேச்சுப் பக்கத்தில் காரணங்களைத் தெரிவித்துள்ளேன். --Anton (பேச்சு) 02:26, 30 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று, சரியாகச் செய்துள்ளேனா? :) --சண்முகம்ப7 (பேச்சு) 02:33, 30 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
நன்றி சண்முகம்! சரியாகத்தான் செய்துள்ளீர்கள். --Anton (பேச்சு) 02:34, 30 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

சந்தித்தல்[தொகு]

சண்முகம்!நேற்று இரவு 12மணிக்குத் தான் மின்னஞ்சல் பார்த்தேன். அதிக மின்வெட்டு. அதனால் தான் ஒரு வாரமாக பங்களிக்க இயலவில்லை. இன்று ஞாயிறு மின்வெட்டு அதிகம் இருக்காது என்றே எண்ணுகிறேன். இன்னும் 1மணிநேரத்தில் வருகிறேன்.லினக்சு கற்பதில் முன்னேற்றம்.தமிழ் விக்சனரிக்கான உருவாக்கிய அந்த துணைக்கருவியொன்றை அலசுவோம்.-- உழவன் +உரை.. 02:46, 30 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

சரி தகவலுழவன், மின்வெட்டு இல்லையெனில் #wikipedia-taconnect வாருங்கள்--சண்முகம்ப7 (பேச்சு) 02:50, 30 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

தலைப்பை நகர்த்துதல்[தொகு]

வணக்கம், சண்முகம். ஒரு கட்டுரையின் தலைப்பை நகர்த்தும் போது மேற்கொள்ள வேண்டிய படிகளை வரிசைப்படி எனக்குத் தரவேண்டும்.

நான் காலாந்த கண்டர் என்ற கட்டுரையின் தலைப்பை காலாந்தகக் கண்டர் என மாற்றினேன். சில நாள் கழித்துப் பேச்சுப் பக்கத்தையும் நகர்த்த வேண்டும் எனத் தெரிந்தது. அதையும் மாற்றினேன். அதன் பிறகு நீங்கள் பழைய பேச்சுப் பக்கத்தை நீக்கியுள்ளதைக் கண்டேன்.

எனவே இனி வரும் காலத்தில் நான் தலைப்பை மாற்றும்போது சரியாகச் செய்ய வேண்டிதான் இந்த உதவியைக் கேட்கிறேன். நன்றி--Booradleyp (பேச்சு) 13:19, 9 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

வணக்கம் Booradleyp, பொதுவாக பக்கத்தின் தலைப்பை நகர்த்தும் போது பேச்சுப் பக்கத்தையும் சேர்த்து நகர்த்துவது நல்லது, ஏனெனில் வழிமாற்றியின் பேச்சுப் பக்கத்தை யாரும் பார்க்க போவதில்லை, மேலும் பேச்சுப் பக்க வழிமாற்றும் தேவையில்லாதது, எனவே நீக்குகிறோம், பக்கத்தை நகர்த்தும் போது பேச்சுப் பக்கத்தையும் நகர்த்திவிட்டு, முடிந்தால் பழைய பேச்சுப் பக்க வழிமாற்றில் {{delete}} சேர்த்து விடுங்கள் :)--சண்முகம்ப7 (பேச்சு) 13:24, 9 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]


தமிழ் விக்கிப்பீடியாவில் நகர்த்தவும் என்றால் என்ன?[தொகு]

திருவாளர் சண்முகம் அவர்களுக்கு, இங்கு தமிழ் விக்கி பீடியாவில் போயர் எனும் கட்டுரையை எனக்கு தெரிந்தவரையில் தக்க ஆதாரங்களுடன் தொகுத்துள்ளேன், தயவு கூர்ந்து அடுத்த கட்டத்திற்கு செல்ல அறிவுறுத்தவும்,

மேலும் premloganathan மற்றும் premloganathan / மணல்தொட்டி படிவங்களை அழித்துவிடலமா என்று ஆலோசனை வழங்குங்கள்.

நகர்த்தவும் என்று ஒரு வாசகம் வரலாட்ற்றை காட்டவும் அருகில் வருகிறதே, என்ன செய்வது. இக்கட்டுரையினை தொகுக்க மிகவும் சிரமப்பட்டு மேற்கோள்களை திரட்டி இருக்கின்றேன். அன்பு கூர்ந்து தமிழ் விக்கி பீடியாவில் இந்த கட்டுரையினை காப்பது எப்படி என கூறுங்கள்.

மேலும் இக்கட்டுரையினை காலப்போக்கில் விரிவாக்கம் தக்க/நேரிய முறையில் விரிவாக்கம் செய்துதருகின்றேன் என்றும் இதன்மூலம் தங்களுக்கு உறுதியளிக்கின்றேன்.

தங்கள் ஒத்துழைப்பிற்கு மிக்க நன்றிகள். --Premloganathan (பேச்சு) 12:17, 18 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

வணக்கம் பிரேம், இங்கு விக்கியில் அடுத்த கட்டத்திற்கு அனுமதிப்பது என எதுவும் இல்லை, தகுந்த மேற்கோளுடன் சரியான விக்கி நடையில் இருந்தால் அக்கட்டுரை அப்படியே இருக்கும், அதை காக்க வேண்டிய தேவையில்லை (முடிந்தளவு எழுத்துப் பிழையின்றி தகுந்த நடுநிலையான ஆதரங்களுடன் எழுதுங்கள்), ஆனால் விக்கி கொள்கைப்படி மாற்றங்கள் நடை பெறலாம். பக்கத்தை நகர்த்துதல் என்பது ஒரு பக்கத்தை இன்னொரு புதிய தலைப்பிற்கு நகர்த்த உதவுவது, எகாவாக ஒரு பக்கத்தை எழுத்துப் பிழையுடன் ஆரம்பித்து விட்டீர்கள் எனில் இந்த தெரிவு மூலம் அதனை சரியான தலைப்பிற்கு நகர்த்தலாம். மேலும் விவரங்களுக்கு பார்க்க உதவி:பக்கத்தை நகர்த்துதல் .. பயனர்:Premloganathan என்பது உங்களை பற்றிய தகவல்களை கூறுவதற்கான பக்கம், அதில் உள்ள உள்ளடக்கங்களை நீக்கி விட்டு, உங்களைப் பற்றிய தகவல்களை தந்தால் நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளாலாம் :). premloganathan / மணல்தொட்டி பக்கத்தில் உள்ள உள்ளடக்கத்தை நீக்கிவிட்டு வேறு கட்டுரையை தொகுக்க பயன்படுத்தலாம், எனினும் அந்த பக்கம் வேண்டாம் எனில் {{delete}} என அப்பக்கத்தில் சேர்த்து விடுங்கள், நன்றி--சண்முகம்ப7 (பேச்சு) 12:31, 18 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

திருவாளர் சண்முகம் அவர்களின் அறிவுறுத்தல்களுக்கு மிக்க நன்றி, மீண்டும் தங்களை இவ்வலை தலத்தில் சந்திக்கின்றேன், அய்யா நான், விக்கியில் போடோக்களை எவ்வாறு upload செய்வது. தாங்கள் விளக்கங்களை அளித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி!--Premloganathan (பேச்சு) 06:01, 19 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

பார்க்க விக்கிப்பீடியா:படிமங்கள் தரவேற்றம்--சண்முகம்ப7 (பேச்சு) 06:43, 19 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

நான் இன்று Boyar (caste) கூடுதல் தகவல்களை தக்க இணைப்புகளுடன் அளித்தேன் ஆனால், யாரோ ஒருவர் தகவல்களை அழித்துவிட்டனர், ஆகையால் நான் புதிய தலைப்புடன் boya எனும் கட்டுரையினை துவக்கியுள்ளேன் அந்த ஆங்கில பதிப்பானது மிகவும் உபயோகமானதாக என்னுடைய தமிழ் கட்டுரைக்கு இருக்கும் எனும் நோக்குடன் துவக்கியுள்ளேன். தங்களின் ஆலோசனை தேவை.--Premloganathan (பேச்சு) 12:20, 19 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

ஆங்கில விக்கியில் கட்டுரையில் ஆதராமில்லா தகவல்களை நீக்கி இருக்கிறார்கள் என நினைக்கிறேன், இங்கு யார் நீக்கினார்கள், எதற்காக எனப் பார்க்கலாம். மேற்கொண்டு தகவலுக்கு அந்த நீக்கிய பயனரை தொடர்பு கொள்ளவும், மேலும் தமிழ் விக்கியில் ஆங்கிலத்தில் ஏதேனும் கட்டுரை தொடங்கி மொழிபெயர்க்க விரும்பினால் , அதனை உங்கள் பயனர் வெளியில் தொடங்கி, பிறகு தமிழில் மொழிபெயர்த்து பிறகு முதன்மை வெளிக்கு நகர்த்தவும், உங்கள் Boyarபக்கத்தை பயனர்:Premloganathan/Boyar பக்கத்திற்கு நகர்த்தியுள்ளேன், தயவுசெய்து முதன்மை வெளியில் ஆங்கில தலைப்பு அல்லது உள்ளடக்கம் கொண்ட பக்கங்களை துவங்க வேண்டாம் --சண்முகம்ப7 (பேச்சு) 13:04, 19 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]


திருவாளர் சண்முகம், நன்றி.--Premloganathan (பேச்சு) 13:31, 19 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]


திருவாளர் சண்முகம் அவர்களே, தங்கள் கூறியபடி premloganathan பக்கத்தில் எனக்கு தெரிந்தவரில் என்னை பற்றிய தகவல்களை தந்துள்ளேன், இதில் எதாவது மாற்றங்கள் வேண்டின் உதவியருளுமாறு கேட்டுகொள்கின்றேன். வணக்கங்களுடன் --Premloganathan (பேச்சு) 07:15, 20 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

அது உங்களுடைய பயனர் பக்கம் ஆதலால், நீங்கள் விரும்பியவாறு அமைத்துக் கொள்ளலாம், ஆனால் விக்கிப்பீடியா:பயனர் பக்கம் பக்கத்திற்கேற்ப இருத்தல் நலம் --சண்முகம்ப7 (பேச்சு) 08:18, 20 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

ருவாளர் சண்முகம், நன்றி!--Premloganathan (பேச்சு) 09:37, 20 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

உதவி[தொகு]

வணக்கம், சண்முகம். தஞ்சாவூர் பொம்மை படிமத்தை பதிவேற்றுகிறேன் பேர்வழி என்று நான் ஒரு முட்டாள்தனம் செய்திருக்கிறேன். எனது காமெராவில் அப்படத்தின் பெயர் US Trip 2012 002.jpg என இருந்தது. அப்பெயரை மாற்ற மறந்துபோய் அப்படியே பதிவேற்றி விட்டேன். அதன்பிறகு அதன் பெயரை எப்படி மாற்றுவது என்று தெரியவில்லை. அதன் உரையாடல் பக்கத்தில் நீக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டு, மீண்டும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை என்ற தலைப்பில் அதே படிமத்தைப் பதிவேற்றினேன். (படிமம்:தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை.jpg) இந்தக் கோளாறை எப்படியாவது சரி பண்ண முடியுமா? --Booradleyp (பேச்சு) 15:21, 22 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

முதலில் இட்ட படிமத்தை நீக்கி உள்ளேன். Y ஆயிற்று--இரவி (பேச்சு) 15:31, 22 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
நன்றி இரவி, @Booradleyp கோப்புப் பெயர்களை பயனர்களால் மாற்ற இயலாது, நிர்வாகிகள் குழுவில் உள்ள பயனர்கள் மட்டுமே கோப்புகளை நகர்த்த இயலும், எனவே தவறான பெயரில் கோப்பைப் பதிவேற்றினால் யாரவது நிர்வாகி பயனர்களை கேட்டால் மாற்றிவிடுவார்கள்--சண்முகம்ப7 (பேச்சு) 16:13, 22 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
இருவருக்கும் நன்றி.--Booradleyp (பேச்சு) 16:18, 22 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

வகைநுண்கணிதம்[தொகு]

வணக்கம், சண்முகம். ஏன் வகைநுண்கணிதம் கட்டுரையை வகையிடல் கட்டுரைக்கு வழிமாற்றினீர்கள்? இரண்டும் வேறு வேறு அல்லவா?

  • வகைநுண்கணிதம்-differential calculus;
  • வகையிடல்-finding the derivative

ஆயினும் வகைநுண்கணிதம் கூகுளாக்கக் கட்டுரையாக இருந்தது என நினைக்கிறேன். அது இல்லாமல் போனதும் சரிதான். அதைச் சரி செய்வதைவிட புதிதாக எழுதுவது எளிது என எனக்குத் தோன்றும். வகைநுண்கணிதம் கட்டுரையைப் புதிதாக அமைக்க முடியுமா?--Booradleyp (பேச்சு) 03:40, 26 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

வகைநுண்கணிதம் என்ற கட்டுரையே இருக்கவில்லை. முன்னர் வகையீடு கட்டுரைக்கு வழிமாற்றப்பட்டிருந்தது. வகையீடு கட்டுரை ஆரம்பிக்கும் எண்ணம் உங்களுக்கு இப்போதைக்கு உண்டா?--Kanags \உரையாடுக 04:34, 26 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
ஆங்கில விக்கியில் differential calculus கட்டுரையில் உள்ள தமிழ் இணைப்பு வகைநுண்கணிதம் என்ற தலைப்பில் கூகுளாக்கக் கட்டுரையை சற்றுமுன் தந்ததே. நான் பார்த்தேனே.

வகையீடு கட்டுரை எனது சோதனை பக்கத்தில் உருவாக்கிக் கொண்டிருக்கிறேன்.--Booradleyp (பேச்சு) 04:51, 26 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

கனக்ஸ் கூறியது போல வகையீடு பக்கத்திற்கு வகைக்கெழு காணல்‎ பக்கமும், வகைநுண்கணிதம் பக்கமும் வழிமாற்றப்பட்டிருந்தது, வகையீடு பக்கம் வகையிடல் என வழிமாற்றின்றி நகர்த்தப்பட்டிருந்ததால் இவையிரண்டும் முறிந்த வழிமாற்றாயின, எனவே அவற்றை சரி செய்தேன். நீங்கள் கூறும் வகை நுண் கணித கூகிள் தமிழாக்கக் கட்டுரை இடைவெளியுடன் இருந்திருக்கிறது :). பார்க்க வகை நுண்கணிதம்--சண்முகம்ப7 (பேச்சு) 06:44, 26 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
கவனித்தேன் சண்முகம். நன்றி.--Booradleyp (பேச்சு) 08:52, 26 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

நளதமயந்தி[தொகு]

வணக்கம். நளதமயந்தி (திரைப்படம்), நள தமயந்தி இரண்டையும் இணைக்க வேண்டும்.--Booradleyp (பேச்சு) 05:36, 6 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று--சண்முகம்ப7 (பேச்சு) 05:41, 6 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

இணைத்தமைக்கு நன்றி--Booradleyp (பேச்சு) 12:00, 6 நவம்பர் 2012 (UTC).[பதிலளி]

உதவி தேவை[தொகு]

வணக்கம் சண்முகம். எனது பயனர் பக்கத்தில் ஒரு பட்டியல் அமைத்துள்ளேன், அவை சிவத் தலங்கள் என்னும் கட்டுரையில் இருந்த திருத்தலங்களை பட்டியலிட்டுள்ளேன், அப் பட்டியல் உங்களுக்கு சரி என்று தோன்றினால் அதே பக்கத்துக்கு வழி மாற்றம் செய்ய முடியுமா??? நன்றி --சிவம் 18:32, 6 நவம்பர் 2012 (UTC)

சரியாகவே உள்ளது, உங்கள் பயனர் பக்கத்தில் உள்ளவற்றை நகலெடுத்து சிவத்_தலங்கள் பக்கத்தில் உள்ள சாதாரண பட்டியலை நீக்கிவிட்டு இதனை ஒட்டி விடுங்கள்--சண்முகம்ப7 (பேச்சு) 22:55, 6 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

வார்ப்புரு:அமைப்பு தகவல் பெட்டி உருவாக்கம் - உதவி வேண்டல்[தொகு]

நண்பரே வார்ப்புரு:அமைப்பு தகவல் பெட்டி உருவாக்கம் என்ற கட்டுரையை எப்படி உருவாக்குவது -- நன்றி -- கருப்பன்.முனியப்பன் (Muniyankaruppan (பேச்சு) 21:11, 10 நவம்பர் 2012 (UTC))[பதிலளி]

உங்கள் கேள்விக்கு மேலும் விளக்கம் தந்தால் நல்லது. குறிப்பாக எந்தக் கட்டுரைக்கு தகவல்பெட்டியை இணைக்கப் போகிறீர்கள்? ஏற்கனவே பல வார்ப்புருக்கள் தமிழ் விக்கியில் உள்ளன. அவற்றில் ஒன்றைப் பயன்படுத்துங்கள். பொதுவாக இங்குள்ள வார்ப்புருக்கள் ஆங்கில விக்கியில் இருந்தே எடுக்கப்பட்டுள்ளன. அமைப்பு என நீங்கள் குறிப்பிடுவது நிறுவனத்தையா? அவ்வாறென்றால் வார்ப்புரு:தகவல்பெட்டி நிறுவனம் என்ற வார்ப்புருவைப் பயன்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 21:28, 10 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

Tamil Article Redirection Problem of Tamil Nadu Government Organizations[தொகு]

Problem:

  • The Tamil Article of Tamil Nadu Government Organizations is தமிழ்நாடு அரசின் அமைப்புகள் (http://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_அரசின்_அமைப்புகள்).
  • But while redirecting from English Article Tamil Nadu Government Organizations (Left side - Languages section "தமிழ்") to Tamil Article தமிழ்நாடு அரசின் அமைப்புகள், It wrongly redirects to Tamil Article வார்ப்புரு:தமிழ்நாடு அரசின் அமைப்புகள் (this is the Tamil language version of English article "Template:State Organizations of Tamil Nadu")

Request:

Thanking You Karuppan.Muniyappan Muniyankaruppan (பேச்சு) 07:00, 16 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

கனக்‌ஸ் சரி செய்து விட்டார் என நினைக்கிறேன், நன்றி கனக்‌ஸ். மன்னிக்கவும் Muniyankaruppan, நான்கு நாட்களாக எனது Reliance netconnectல் விக்கிப்பீடியா தளங்களை (**.wikipedia.org) தடை செய்து விட்டார்கள், இன்று சரியாகிவிட்டது என நினைக்கிறேன், அதுவும் உறுதியாக தெரியவில்லை, அதனால் உடனடியாக உதவ முடியவில்லை :)--சண்முகம்ப7 (பேச்சு) 11:43, 20 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

உதவி[தொகு]

வணக்கம். கற்றது கடலளவு (நூல்) கட்டுரைக்காக, அந்நூலின் அட்டைப் படத்தை இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து (நூல் அட்டைக்கு அனுமதி உண்டு என்ற அனுமானத்தில்) த.விக்கியில் பதிவேற்றி கட்டுரையில் இணைத்தால் படம் தெரியவில்லை. அதைச் சரி செய்து தரும்படுயும், எனது தவறு என்ன என்பதை எனக்குச் சுட்டும்படியும் கேட்டுக் கொள்கிறேன். --Booradleyp (பேச்சு) 13:05, 20 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று, இது தகவற் பெட்டி வார்ப்புரு சிக்கல். ஒரு சில வார்ப்புருக்களில் கோப்பு பெயரை மட்டும் சேர்த்தால் போதும், சிலவற்றில் [[File:கோப்புப்பெயர்]] என்பதனையும் சேர்க்க வேண்டும். மேலே குறிப்பிட்ட கட்டுரை இரண்டாம் வகை. வேறுபாடு.--சண்முகம்ப7 (பேச்சு) 13:38, 20 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

சரி செய்தமைக்கு மிகவும் நன்றி சண்முகம்.--Booradleyp (பேச்சு) 13:49, 20 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

AJAX patrol[தொகு]

Hello, I see that you use AjaxPatrolLinks. I have good news for you: AJAX patrolling is now in core! On Wikimedia projects, it should arrive with MediaWiki 1.21wmf5, between 2012-11-26 and 2012-12-5. You should disable this gadget when the new feature change is enabled, because it will become redundant and to avoid double patrolling. Thanks, Nemo (பேச்சு) 08:07, 21 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

Thanks for the notification Nemo, will disable that script--சண்முகம்ப7 (பேச்சு) 10:37, 21 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

உதவி[தொகு]

வணக்கம்.

  • ஆ.வியில் ஒரு பயனரின் சொந்த ஆக்கமாக உள்ள ஒரு படிமத்தை த.விக்கு பதிவேற்றும் போது அனுமதியில் தேர்வு செய்ய வேண்டியது எந்த option என்று விளக்கமுடியுமா? நானும் சொந்த ஆக்கம் என்று தேர்வு செய்தால் அது எனது படிமம் ஆகிவிடும், அது தவறுதானே?
  • கூகுள் தேடலில் கிடைக்கும் படிமங்களில் (முக்கியமாகக் கோவில்கள்) எவை எவற்றை நாம் பயன்படுத்த முடியும் என்பதைப் பற்றியும் ஆலோசனை கூற வேண்டும். நூல் அட்டை, பதாகை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது மட்டுமே எனக்குத் தெரியும்.--Booradleyp (பேச்சு) 15:43, 22 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]
பொதுவாக சொந்த ஆக்கங்கள் அனைத்தும் கிரியேடிவ் காமன்ஸ் அல்லது GFDL உரிமையின் கீழ் வழங்கப்பட்டிருக்கும், எனவே அவற்றை எந்த திட்டத்தில் வேண்டுமானாலும் அந்த பயனர் பெயரை குறிப்பிட்டு பதிவேற்றலாம் (ஆங்கில விக்கியில் உள்ள அதே உரிமத்துடன்). எனினும் இது போன்ற படிமங்களை காமன்சுக்கு நகர்த்துவதே ஊக்குவிக்கப்படுகிறது. அதற்கு இரு வழிகள் உள்ளன. ஒன்று : இந்தக் கருவி வழியாக நேரிடையாக நகர்த்தலாம். ஆனால் அதற்கு TUSC கணக்கு வேண்டும், அதற்கு இங்கு பதிய வேண்டும், அல்லது அதே கருவியில் கோப்பு பெயரை மட்டும் கொடுத்து do it பொத்தனை அழுத்தினால் கீழே விக்கி உரை தானே வரும், பிறகு உங்கள் கணினியில் அந்த படத்தை தரவிறக்கி பின்னர் அக்கருவியில் வரும் விக்கி உரையுடன் (பதிப்புரிமை விவரங்கள் அதிலேயே இருக்கும்) காமன்சில் பதிவேற்றலாம், அதற்கு பழைய பதிவேற்ற படிவத்தை பயன்படுத்த வேண்டும்.--சண்முகம்ப7 (பேச்சு) 16:16, 22 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]
கூகிளில் கிடைக்கும் பெரும்பாலான படங்களை நாம் பயன்படுத்த இயலாது, கோவில்கள் படங்களை பொறுத்த வரை எடுத்தவரின் அனுமதியில்லாமல் நாம் பயன்படுத்துவது கடினம். panoramio, flickr. picasa போன்றவற்றில் cc-by-sa உரிமம் அல்லது வேறு ஏதாவது வணிக பயன்பாடு மற்றும் Derivative work போன்றவற்றை அனுமதிக்கும் இலவச உரிமத்தின் கீழ் இருந்தால் பதிவேற்றலாம். எடுத்தவரின் அனுமதி பெற பார்க்க commons:OTRS, மேலும் Commons:Commons:Email templates இங்குள்ள வடிவத்தில் எடுத்தவரிடம் இருந்து அனுமதி பெற்று permissions-commons@wikimedia.org என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். கூகிளில் இருந்து எடுத்து பயன்படுத்தத்தக்க கோப்புகளுக்கு பார்க்க விக்கிப்பீடியா:நியாயமான_பயன்பாடு--சண்முகம்ப7 (பேச்சு) 16:26, 22 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

உங்கள் விளக்கத்திற்கு நன்றி சண்முகம். --Booradleyp (பேச்சு) 05:55, 23 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]


மீண்டும் எனக்கொரு உதவி வேண்டும். கோவை மாவட்டத்தின் பொள்ளாச்சி வட்டம் நவ 22 லிருந்து இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தி, தினமணி கோவை பதிப்பில் (நவ 23) பக்கம் 4-இல் உள்ளது. அப்பக்கத்தை என்னால் தினமணி செய்தித்தாளின் இணைய வடிவில் தேடிப்பிடிக்க முடியவில்லை. பொள்ளாச்சி வட்டம் கட்டுரையை இற்றைப் படுத்தும் முயற்சியில் உரிய மேற்கோளாக என்னால் அந்த இணைய விலாசத்தை இணைக்க முடியவில்லை. அதைச் செய்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன். அதன் பின் கிணத்துக்கடவு வட்டம், அன்னூர் வட்டம், அந்தியூர் வட்டம் ஆகியவற்றுக்குத் தனிக்கட்டுரை ஆக்கலாம் என நினைக்கிறேன். தொடர்ந்து தொல்லை தருவதற்கு மன்னிக்கவும். இணையத்துக்குள் செல்வது எனக்கு கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல உள்ளது. ஒருமுறை உங்களைப் போல யாரிடமாவது உதவி கிடைக்கும்போது அச்சு அசலாக அதே போன்ற வேறொரு வேலையை மட்டும், செய்ய முடிகிறது. --Booradleyp (பேச்சு) 06:50, 23 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

நீங்கள் தேடிய செய்தி இதுவா? இதுபோன்ற குறிப்பிட்டத் தகவலை, குறிப்பிட்ட இணையதளத்தில் இருந்து எடுக்க, site:dinamani.com பொள்ளாச்சி வட்டம் என்று கூகிள் தேடலில் கொடுக்கவும். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:35, 23 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]
நன்றி தினேஷ், தொந்தரவெல்லாம் ஒன்றுமில்லை Booradleyp, இந்த மின்தடை காரணமாக உங்களுக்கு உடனே உதவ முடியவில்லையே என வருந்துகிறேன், மேலும் முடிந்தவரை இணைய இணைப்பை கொடுக்க பாருங்கள், இல்லையேல் தேதி, பதிப்பு, பக்க எண் ஆகியவற்றை கொடுத்தலாயே போதுமானது. இதுவும் உதவலாம்--சண்முகம்ப7 (பேச்சு) 10:59, 23 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

தினேஷ் குறிப்பிட்டுள்ள செய்திதான் நான் தேடியது. இருவரது உதவிக்கும் நன்றி.

இணைய முகவரியில் இருந்தால் பார்க்க வசதி என்பதால்தான் அதைத் தரலாம் என நினைத்தேன். நன்றியுடன்.--Booradleyp (பேச்சு) 14:26, 23 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

மின்னஞ்சல்[தொகு]

வணக்கம், மின்னஞ்சல் கட்டுரையைப் பார்க்கவும். அதன் நடுவில் மாலை மாற்று என்று சம்பந்தம் இல்லாமல் ஒரு பக்கத்தலைப்பு உள்ளது.--Booradleyp (பேச்சு) 16:29, 24 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

அதனை நீக்கியுள்ளேன், இதற்கு மாதனாகரன் பேச்சுப் பக்கத்தில் பதில் கூறுவதற்கு பதில் தவறுதலாக பொதுவன் ஐயா அங்கு எழுதிவிட்டார் போலிருக்கிறது--சண்முகம்ப7 (பேச்சு) 18:07, 24 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

நன்றி, சண்முகம்.--Booradleyp (பேச்சு) 04:13, 25 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

தமிழ் ஆவண மாநாடு 2013 ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்பு[தொகு]

ஆய்வுக்கட்டுரை சமர்ப்பது பற்றி பரிசீலிக்கவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 01:52, 26 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

குளத்துப்புழா ஐயப்பன் கோவில்[தொகு]

வணக்கம். குளத்துப்புழா ஐயப்பன் கோவில் கட்டுரையில் கேரள அரசு சுற்றுலாத்துறை -எனும் மேற்கோளை இரு இடங்களில் தந்திருக்கிறேன். ஆனால் இரண்டாவது முறை அதனைச் சுருக்க வடிவில் தராததால் மேற்கோள்கள் தலைப்பில் 1, 2 என வந்துள்ளது. அதனைச் சரிசெய்து தர வேண்டும்.--Booradleyp (பேச்சு) 04:48, 26 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று--சண்முகம்ப7 (பேச்சு) 05:06, 26 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

நன்றி சண்முகம்.--Booradleyp (பேச்சு) 08:13, 26 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

உதவி வேண்டல்[தொகு]

வணக்கம் சண்முகம், நீண்ட நாள் கழித்து சந்திக்கிறோம். :). உக்ரைனியர்கள் கட்டுரையில் ரெஃப் பிழைகள் காட்டுகின்றன. சரி செய்து தாருங்கள். பின்னர் பகுதிவாரியாக விரிவாக்குவேன். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:26, 26 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

Already done by Parvathisri :)--சண்முகம்ப7 (பேச்சு) 15:46, 26 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

வானம் வசப்படும்[தொகு]

ஓர் உதவி, வானம் வசப்படும் கட்டுரையில் படிமம் சேர்த்தேன். படிமத்திற்கு மேலும் கீழும் தேவையில்லாத [[File,... சில உள்ளனவே, அவை இல்லாமல் செய்து தரவேண்டும்.--Booradleyp (பேச்சு) 17:24, 29 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று :)--சண்முகம்ப7 (பேச்சு) 17:27, 29 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

நன்றி, சண்முகம்.--Booradleyp (பேச்சு) 02:55, 30 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

Tidel Park CBE[தொகு]

Hi Shanmugamp7, I just created my first article: டைடல் பூங்கா, கோயம்புத்தூர். Please let me know if it is alright. --Rsrikanth05 (பேச்சு) 06:42, 8 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

வேண்டுகோள்[தொகு]

வணக்கம். திருப்பாம்புரம் கட்டுரையை, திருப்பாம்புபுரம் பாம்பேசுவரர் கோயில் கட்டுரையுடன் இணைக்க வேண்டும்.--Booradleyp (பேச்சு) 13:42, 20 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று--சண்முகம்ப7 (பேச்சு) 13:49, 20 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

நன்றி.--Booradleyp (பேச்சு) 05:15, 22 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

சண்முகம், எனக்கும் டேனியல் செல்வராஜ் கட்டுரையையும் டி. செல்வராஜ் கட்டுரையையும் இணைத்து உதவிட வேண்டுகிறேன். டி. செல்வராஜ் கட்டுரை மேம்படுத்தப்பட்டுள்ளது. --மணியன் (பேச்சு) 12:11, 22 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று, தலைப்பை டேனியல் செல்வராஜ் என்றே விட்டுவிட்டேன் :)--சண்முகம்ப7 (பேச்சு) 15:56, 22 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

வணக்கம் சண்முகம், பகுப்பு: தடைய மருத்துவ அறிவியல் என்பதனை தடய அறிவியல் என்றோ தடய மருத்துவ அறிவியல் என்றோ மாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்..-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:20, 6 சனவரி 2013 (UTC)[பதிலளி]

வணக்கம். மடல் ஊர்தல் கட்டுரையை, மடலேறுதல் கட்டுரையுடன் இணைக்க வேண்டும். ’மடலேறுதல்’ என்ற தலைப்பே இருக்கட்டும். ’மடலூர்தல்’ என ஒரு வழிமாற்று உருவாக்கி விடும்படி கேட்டுக்கொள்கிறேன். --Booradleyp (பேச்சு) 05:20, 10 சனவரி 2013 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று--சண்முகம்ப7 (பேச்சு) 05:23, 10 சனவரி 2013 (UTC)[பதிலளி]

நன்றி சண்முகம். மேலும் ஒரு உதவி. டெல்லி கணேஷ் கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள படிமம் பதிவேற்றப்பட்டது முறையானதா என்று கொஞ்சம் பார்க்க வேண்டும். எனக்கு சரியாகத் தெரியவில்லை. ஒருவேளை அது காப்புரிமைச் சிக்கல் கொண்டது எனில் பயனர் மூர்த்திக்கு அது குறித்து சரியான வழிகாட்டுதலையும் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp (பேச்சு) 16:27, 11 சனவரி 2013 (UTC)[பதிலளி]

மீண்டும் ஒரு வேண்டுகோள். வேர்ல்டு சயின்டிபிக் கட்டுரை ’பக்கா மெஷின் மொழிபெயர்ப்பு’. நீங்களும் செக் பண்ணிப்பார்த்துவிட்டு எனது கணிப்பு சரியெனில் பயனரை எச்சரிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp (பேச்சு) 17:06, 11 சனவரி 2013 (UTC)[பதிலளி]

அது காலையிலேயே தானியங்கி தமிழாக்கமாகத்தான் எழுதப்பட்டது, சரி ஏன் நீக்குவானே என்று குறுங்கட்டுரையாக்கினேன், மணியன் ஏற்கனவே எச்சரித்திருந்தார். மீண்டும் அவ்வாறே செய்கிறார்.--சண்முகம்ப7 (பேச்சு) 17:39, 11 சனவரி 2013 (UTC)[பதிலளி]

நன்றி[தொகு]

நன்றி
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! --மதனாகரன் (பேச்சு) 06:06, 14 சனவரி 2013 (UTC)[பதிலளி]


நன்றிகள்
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு என் பங்கினை ஆற்ற இது பெரிதும் உதவி செய்யும்!
--Anton (பேச்சு) 06:24, 14 சனவரி 2013 (UTC)[பதிலளி]

+1--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:48, 15 சனவரி 2013 (UTC)[பதிலளி]

உதவி[தொகு]

வணக்கம் சண்முகம், தற்போதய எனது விக்கிப்பீடியா பயனர் கணக்கை கொண்டு மற்றய விக்கித்திட்டங்களில் புகுபதிய முடிவதில்லை (இந்தக்கணக்கு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தே இப்படித்தான்), இதற்கு என்ன செய்யலாம், எனது பயனர் கணக்கிற்கு உலகளாவிய அணுக்கம் ஏற்படுத்துவது எப்படி?, தங்களுக்கு தெரிந்தால் இதற்கு ஏதேனும் தீர்வு கூறுங்கள், நன்றி.--சங்கீர்த்தன் (பேச்சு) 21:16, 20 சனவரி 2013 (UTC)[பதிலளி]

சிறப்பு:MergeAccount பயன்படுத்தவும் சங்கீர்த்தன், உதவிக்கு பார்க்க m:Help:Unified login--சண்முகம்ப7 (பேச்சு) 04:33, 21 சனவரி 2013 (UTC)[பதிலளி]
சண்முகம், சிறப்பு:MergeAccount என்பதை பார்த்தேன் எனது அதே பயனர் பெயரில் வேறு விக்கிகளில் மற்றய பயனர்கள் கணக்கு வைத்திருக்கிறார்கள் என்பதை அறிந்தேன், அதனால் தான் போலும் மற்றய விக்கிகளில் என்னால் புகுபதிய முடிவதில்லை, எனது பயனர் பெயரை மாற்றினால் இப்பிரச்சனை தீரும் என நினைக்கின்றேன், நிருவாகிகளால் பயனர் பெயரை மாற்ற இயலுமா?--சங்கீர்த்தன் (பேச்சு) 05:16, 21 சனவரி 2013 (UTC)[பதிலளி]
இதன் படி மற்ற விக்கிகளில் உள்ள கணக்குகளில் எவ்வித பங்களிப்பும் இல்லை. எனவே அங்குள்ள அதிகாரிகளிடம் உங்கள் கணக்கை ஒன்றிணைக்க சொல்லலாம், இதை ஒவ்வொரு விக்கியிலும் செய்ய வேண்டும். அல்லது இங்கு பெயர் மாற்றம் செய்து அதனை சிறப்பு:MergeAccount செய்து கொள்ளலாம். அதிகாரிகளால் மட்டுமே பெயர் மாற்றம் செய்ய இயலும். பார்க்க m:Steward requests/SUL requests and m:Index of pages where renaming can be requested--சண்முகம்ப7 (பேச்சு) 05:25, 21 சனவரி 2013 (UTC)[பதிலளி]
மொத்தம் 7 விக்கிகளில் கணக்கை ஒன்றிணைக்க கேட்பதை விட இங்கு பெயர் மாற்றுவது இலகு என நினைக்கின்றேன், பயனர் பெயர் மாற்றுவதால் தீமை ஏதுவும் இல்லை தானே?..பொறுமையாக எனது கோள்விகளுக்கு பதிலளித்தமைக்கு நன்றி சண்முகம்..:)--சங்கீர்த்தன் (பேச்சு) 05:43, 21 சனவரி 2013 (UTC)[பதிலளி]
இந்தப் பெயரில் நீங்கள் வேறு விக்கிகளில் பங்களிக்கவில்லையாதாலால் உங்கள் பங்களிப்பு எண்ணிக்கை எதுவும் குறையப் போவதில்லை. எனவே இங்கு பெயர் மாற்றுவதால் தீமை ஏதுமில்லை. புதியப் பெயரை யாராவது உபயோகிக்கின்றனரா என பார்த்து விட்டு மாற்றக் கேட்பது நல்லது. --சண்முகம்ப7 (பேச்சு) 08:59, 21 சனவரி 2013 (UTC)[பதிலளி]
நன்றி சண்முகம்..:)--சங்கீர்த்தன் (பேச்சு) 10:17, 21 சனவரி 2013 (UTC)[பதிலளி]

வேலம்பாளையம்[தொகு]

வணக்கம்,

நன்றி, கனக்ஸ்.--Booradleyp (பேச்சு) 12:12, 23 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  • ஓர் ஊர் அல்லது பகுதியின் latitude, longitude கண்டுபிடிப்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட தளங்கள் உள்ளனவே, எது நம்பகமானது? ஆ.விக்கியில் அல்லது த.விக்கியில் தமிழ்நாட்டு ஊர்களுக்குத் தரப்பட்டுள்ள latitude, longitude எங்கிருந்து கையாளப்படுகிறது? அக்கட்டுரைகள் தரும் அளவுகள், பிற தளங்களிலிருந்து காணும் அளவிலிருந்து சற்று (தசமபின்னங்கள்) மாறுபடுகிறது. இதற்கு சரியான முறை குறித்த ஆலோசனை தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp (பேச்சு) 06:07, 23 சனவரி 2013 (UTC)[பதிலளி]
விக்கியில் எப்படி எழுதுகிறார்கள் எனத் தெரியவில்லை. en:Geocoding முறையை இது போன்ற வலைத்தளங்கள் மூலம் கண்டறியலாம், அல்லது en:Geotagging முறையில் கேமரா, அலைபேசி போன்றவற்றின் மூலம் எடுக்கலாம். எடுத்துக்காட்டாக File:Cat on the ladder 1.jpg இந்தப்படம் இந்த ஊரில் எடுத்திருந்தாலும் அதன் ஆள்கூறுகள் வேறுபட காரணம் அவ்வூரின் மையப் பகுதியில் அப்படம் எடுக்கப்படவில்லை . எனவே இது போல யாரவது விக்கியில் குறிப்பிட்டிருந்தால் சிறிய அளவில் மாற வாய்ப்புண்டு :) , நம்பகமானது என்றால் எது என்று தெரியவில்லை (ஒருவேளை நாமே ஒவ்வொரு இடத்திற்கும் சென்று GPS மூலம் விவரங்களை திரட்டினால் நம்பகமானதாயிருக்கலாம் :D) , மேற்கூறியது போல கூகிள் மேப்ஸ் வலைத்தளங்களில் எடுக்கலாம் என நினைக்கிறேன் :) .--சண்முகம்ப7 (பேச்சு) 09:18, 23 சனவரி 2013 (UTC)[பதிலளி]

நன்றி, சண்முகம். எல்லா இடங்களுக்கும் போய் எடுப்பது என்பது சாத்தியமில்லை. வலைத்தளங்களைத்தான் நம்பவேண்டும் என நினைக்கிறேன். (அவற்றுள் மாறுபாடு செகண்ட்களில் தான் இருப்பதால்)--Booradleyp (பேச்சு) 12:12, 23 சனவரி 2013 (UTC)[பதிலளி]