கற்றது கடலளவு (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கற்றது கடலளவு
கற்றது கடலளவு
நூலாசிரியர்து. கணேசன்
அட்டைப்பட ஓவியர்ஓவியர் மருது
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பொருண்மைகப்பல் வாழ்க்கை
வகைபயணக் கதை
வெளியீட்டாளர்விகடன் பிரசுரம்
ஊடக வகைமென்னட்டை (Paperback)
பக்கங்கள்396 பக்கங்கள்

கற்றது கடலளவு, து. கணேசன் எழுதிய நூல். கப்பல் பணியிலிருந்த நூலாசிரியர், தன் பயண அனுபவங்களை இந்நூலில் விவரிக்கிறார். இவர் உலகின் பல நாட்டுத் துறைமுகங்களுக்குப் பயணித்திருக்கிறார். புதிய கடல்சார் துறை மாணவர்களுக்கு கப்பலைப் பற்றிய அடிப்படைத் தகவல்களை வழங்கியுள்ளார். இந்நூல் ஜூனியர் விகடனில் தொடர் கட்டுரையாக வெளியானது. கடல் மற்றும் கப்பல் தொடர்பான நூல்கள் தமிழில் குறைவு. படிப்போருக்குப் புரியும்படியாக எளிய தமிழில் தன் பயண அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். கப்பலில் கற்றவைகளையும் ஒவ்வொரு துறைமுகத்திற்குச் செல்லும்போதும் அங்கு நிகழ்ந்தவற்றையும் விவரித்துள்ளார்.[1] இந்நூலுக்கு கடலோடி நரசய்யா முன்னுரை எழுதியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://dinamani.com/book_reviews/article1264986.ece புத்தக மதிப்பீடு-கற்றது கடலளவு

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கற்றது_கடலளவு_(நூல்)&oldid=2875829" இலிருந்து மீள்விக்கப்பட்டது