பயனர் பேச்சு:Sengai Podhuvan/தொகுப்பு 3

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரணேற்றல்[தொகு]

வணக்கம் ஐயா.. பரணேற்றி விட்டேன்.. சரிதானே :).. வரவேற்பு தகவலை மட்டும் விட்டுவிட்டேன்..வேண்டுமானால் அதையும் ஏற்றிவிடலாம்.. நீங்கள் அதற்கு கீழே தொகுப்புப் பெட்டியை உருவாக்கியிருந்தாதால் அதை மட்டும் பரணேற்றவில்லை :)..நன்றி--shanmugam (பேச்சு) 20:02, 21 மார்ச் 2012 (UTC)

அன்புள்ள சண்முகம் இதுதான் உற்றுழி உதவி. தடுமாறுபவர்களுக்குக் கைகொடுத்தல். நன்றி. வரவேற்புத் தகவலையும் ஏற்றிவிடுங்கள். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 20:20, 21 மார்ச் 2012 (UTC)
Y ஆயிற்று ஐயா..--shanmugam (பேச்சு) 20:27, 21 மார்ச் 2012 (UTC)

வேண்டுகோள்[தொகு]

வணக்கம். திருக்குறள் பகுப்புக்கள் கட்டுரையில்,

22 தொடித்தலை விழுத்தண்டினார் பார்வை: அறத்துப்பாலில் 4 இயல் - பாயிரம், இல்லறம், துறவறம். என்று தரப்பட்டுள்ளது. பாயிரம், இல்லறம், துறவறம் என மூன்றுதான் உள்ளன. ஆனால் 4 இயல் எனக் கூறப்படுள்ளது. இதனைச் சற்று கவனிக்கவும். நன்றி.--Booradleyp (பேச்சு) 04:07, 8 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

அன்புள்ள பூ! பிழை திருத்தப்பட்டுள்ளது. நன்றி. அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 06:59, 8 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

நாட்டுடைமை நூல்கள்[தொகு]

ஐயா, நீங்கள் அறிந்திருப்பீர்களா என்பது எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் கூறவேண்டும் என்று தோன்றியது. நாட்டுடைமை ஆக்கப்பட்ட தமிழர்களின் நூல்கள் இங்கு கிடைக்கின்றன.[[1]]. சங்ககாலம் பற்றிய நூல்களும் உள்ளன.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:22, 30 மார்ச் 2012 (UTC)

அன்புள்ள தென்காசியாருக்கு, வணக்கம். அறிவேன். பயன்படுத்துகிறேன். சங்கம்-முச்சங்கம் கட்டுரை இதன் துணைகொண்டே எழுதப்பட்டது. நான் எடுத்தபோது அது Unicode எழுத்தில் இல்லை. TAB-LFS kamban எழுத்தில் இருந்தது. என் நண்பர் அந்நிறுவன இயக்குநர் நக்கிரனிடமும், தலைவர் வா.செ.குழந்தைசாமியிடமும், நேரிலும், தொலைபேசியில் பல முறையும் போராடியபின் அவர்கள் இப்போது Unicode-க்கு மாற்றியுள்ளனர். அவர்களிடம் உள்ள சில சொல்தேடல் software நம்மிடம் இல்லை. இருந்தால் நாம் இன்னும் பயன்பெறலாம். செய்திக்கு நன்றி. அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 07:18, 30 மார்ச் 2012 (UTC)

ஐயா, பேச்சு:தெய்வப் பாண்டியன் இங்கு பார்க்கவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:18, 3 ஏப்ரல் 2012 (UTC)

பரதவரும், மத்தியும்[தொகு]

பரதவர் கோமான் மத்தி என்று இலக்கியங்களில் உள்ளதாக படித்திருக்கிறேன். இதில் வரும் பரதவர் கோமான் மத்தியும் நீங்கள் எழுதிய மத்தி கட்டுரையில் வருபவரும் ஒருவரா?

பரதவர் விற்கொடி (வில் மட்டும்) கொண்டனர் என்றும் படித்தாக ஞாபகம்.--தென்காசி சுப்பிரமணியன் 07:52, 7 சனவரி 2012 (UTC)[பதிலளி]

பரதவர் என்போர் நெய்தல்நில மக்கள். வெண்ணி சோழநாட்டிலுள்ள ஊர். விற்கொடி கொண்டிருக்க வாய்ப்பு இல்லை. நீங்கள் படித்தது உண்மையேயாயினும் அது வெண்ணி ஊர் இருக்குமிடம் அறியாதவர் தந்த செய்தி எனத் தோன்றுகிறது. அடிப்படைச் சான்று இருந்தால எண்ணிப் பார்க்கலாம். --Sengai Podhuvan 10:54, 7 சனவரி 2012 (UTC)[பதிலளி]

நீஙகள் மத்தி பரதவர் கோமான் என்று கூறப்பட்டதற்குஆதாரம் கேட்டிருந்தீர்கள். அதனால் உங்கள் பரனிலுள்ள உரையாடல்க்ளை இங்கு இட்டிருக்கிறேன்.

"வல்வில் எறுழ்த்தோள் பரதவர் கோமான்

பல்வேல் மத்தி கழாஅர் முன்றுறை" - அகநானூறு - 226 - 22- 7--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:23, 15 ஏப்ரல் 2012 (UTC)

அன்புள்ள தென்காசியாருக்கு வணக்கம். கழாஅர் காவிரியாற்றங்கரையில் சோழநாட்டில் உள்ள ஊர். அதன் அரசன் 'வில்'கொடி கொண்டிருந்தான் என்பது எப்படி? எண்ணிப்பாருங்கள். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 11:47, 15 ஏப்ரல் 2012 (UTC)

நான் விற்கொடி கொண்டிருந்ததாக படித்தது மத்தியை அல்ல. அது வேறொரு பரதவரை. அந்த புத்தகத்தை மீண்டும் நூலகத்திலிருந்து எடுத்துளேன். பார்த்துச் சொல்கிறேன். நீங்கள் எழுதிய மத்தியின் ஊர் வெண்ணி. பரதவர் கோமான் மத்தியுடையது கழாஅர். அதனால் இருவரும் வேறு எனத்தோன்றுகிறது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:06, 16 ஏப்ரல் 2012 (UTC)

அன்புள்ள தென்காசியாருக்கு வணக்கம். வெண்ணி, வெண்ணிவாயில், வெண்ணிப் பறந்தலை, திருவெண்ணி, கோயில்வெண்ணி என்னும் பெயர்கள் சோழநாட்டில் உள்ள ஒரே ஊரைக் குறிப்பன.. அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 18:32, 16 ஏப்ரல் 2012 (UTC)

அகவற்பாவில் கபாடபுரம்[தொகு]

இவ்வகை யரசிற் கவியரங்கேறினார்

ஐவகையரசர் ஆயிடைச் சங்கம்

விண்ணகம் பரவும் மேதகுகீர்த்திக்

கண்ணகல் பரப்பிற் கபாட புரமென்

ஐயா, இந்த அகவற்பா பாடல் எந்த இலக்கியத்தில் வருமெனத் தெரியுமா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:24, 24 ஏப்ரல் 2012 (UTC)

அனபுள்ள தென்காசியாருக்கு வணக்கம். தாங்கள் காட்டிய அகவலைப் படித்ததாக நினைவு வரவில்லை. --Sengai Podhuvan (பேச்சு) 18:58, 24 ஏப்ரல் 2012 (UTC)

கலித்தொகையில் பழங்குடியினர்[தொகு]

ஐயா, கலித்தொகையில் ஓவியர், மறவர், எயினர், ஒலியர், அருவாளர், பரதவர் போன்ற பழங்குடிகள் பாண்டிய நாட்டிற்கு இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்ததாக ஒரு பாடல் உள்ளதாமே. அது எப்பாடல் என்றும் அங்கு என்ன கூறினர் என்றும் கூறி உதவ முடியுமா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:58, 29 ஏப்ரல் 2012 (UTC)

நன்மா இலங்கை, தொன்மா இலங்கை பற்றிய குறிப்புகள் சிறுபாணாற்றுப்படை நூலில் உள்ளன. இந்நூலின் பாட்டுடைத் தலைவன் நல்லியக்கோடன் ஓவியர் குடியினின் தலைவன். இந்த ஓவியர்-குடி மக்கள் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து குடியேறியவர்கள் என்பது பொருத்தமானதுதான். பிற பழங்குடியினர் பற்றிய ஆய்வில் நான் இன்னும் இறங்கவில்லை. --Sengai Podhuvan (பேச்சு) 07:26, 29 ஏப்ரல் 2012 (UTC)

மாலை மாற்று[தொகு]

தமிழ் இலக்கியத்தில் மாலை மாற்றுப் பற்றிய தகவல்களை இந்தக் கட்டுரையில் சேர்த்து மேம்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன். --மதனாகரன் (பேச்சு) 12:53, 3 மே 2012 (UTC)[பதிலளி]

இருக்கும் கட்டுரையே சிறப்பாக உள்ளது. எனினும் மேலும் இணைக்க முயல்கிறேன். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 20:17, 14 மே 2012 (UTC)[பதிலளி]

நன்றிகள்! --மதனாகரன் (பேச்சு) 12:55, 15 மே 2012 (UTC)[பதிலளி]

தமிழ்நூல் தொகை[தொகு]

தமிழ்நூல் தொகை இக் கட்டுரையைத் தொடங்கித் தொகுப்பதற்கு நன்றி. மிகப் பெறுமதியான ஒரு தொகுப்பு. --Natkeeran (பேச்சு) 17:25, 14 மே 2012 (UTC)[பதிலளி]

அன்புள்ள நற்கீரன், எளியேன் விக்கியில் நுழைந்தது முதல் என்னை உந்தி உதவிக்கொண்டு துணைவருகிறீர்கள். கடப்பாடு. அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 20:13, 14 மே 2012 (UTC)[பதிலளி]

பரிநூலம் கரிநூலும்[தொகு]

ஐயா தற்போதைய கூட்டு முயற்சி கட்டுரையான குதிரையில் பரிநூலில் கூறப்படும் குதிரை வகைகளையும் விளக்கங்கங்களையும் சேர்த்து தமிழரின் பரிநூலறிவை வெளிப்படுத்த வேண்டுகிறேன். அப்படியே யானை கட்டுரையையும் கவனிக்க.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:57, 22 மே 2012 (UTC)[பதிலளி]

அன்புள்ள தென்காசியாருக்கு வணக்கம். தாங்கள் காட்டிய இரு கட்டுரைகளையும் பார்த்தேன். விலங்கியல் கோணத்தில் அவை நன்கு அமைந்துள்ளன. அந்தக் கட்டுரையில் எந்த அளவுக்கு நம் பெருமையைச் சான்றுகளூடன் சேர்க்க முடியும் என எண்ணிப் பார்க்கிறேன். கவனத்தில் கொண்டுள்ளேன். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 06:53, 22 மே 2012 (UTC)[பதிலளி]

அதில் ஏதும் சிக்கல் இருப்பதாகத் தெரியவில்லை. ஆங்கில கட்டுரையிலும் கூட போருக்கு குதிரை பயன்படுத்துவது பற்றி துணைத்தலைப்பு உள. நான் முக்கியமாக சேர்க்கச் சொன்னது குதிரைகளின் வகைகளை. 7 அல்லது 8 வகை குதிரைகளையும் யானைகளையும் படித்ததாக நினைவு. சங்கப்பாடல்களிலும் குதிரை மற்றும் யானை வகைகள் இருக்கும் என நினைக்கிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:30, 22 மே 2012 (UTC)[பதிலளி]

நன்றி[தொகு]

தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி ஐயா.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 02:25, 23 மே 2012 (UTC)[பதிலளி]

உயர்வுள்ளி ஊக்கம் பிறத்தல் இனிது. அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 20:15, 23 மே 2012 (UTC)[பதிலளி]

பதக்கம்[தொகு]

சிறந்த உழைப்பாளர் பதக்கம்
தமிழ் இலக்கியங்கள் பற்றிய கட்டுரைகளை எழுதி வருவதற்காக வழங்கப்படுகின்றது. மதனாகரன் (பேச்சு) 14:57, 24 மே 2012 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

அன்புள்ள மதனாகு அரன் [1] அவர்களுக்கு வணக்கம். உழைப்பு உதவியாய் அமையுமேல் பாடு பெறுவேன். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 20:19, 24 மே 2012 (UTC)[பதிலளி]
  • குறிப்பு
  1. மதன் = வலிமை, 'மதனுடை நோன்தாள்' - திருமுருகாற்றுப்படை 4, சிறுபாணாற்றுப்படை 259, பட்டினப்பாலை 278 முதலான பல சொல்லாட்சிகள் - அம்மை என்னும் சத்தியோடு இணைந்து வலிமையாக விளங்கும் சிவபெருமான்

நன்றிகள்! --மதனாகரன் (பேச்சு) 02:03, 25 மே 2012 (UTC)[பதிலளி]

நன்றி[தொகு]

நன்றி!
நிருவாகி அணுக்கத்திற்காக எனக்கு வாக்களித்தமைக்கு மிக்க நன்றி.

-பார்வதிஸ்ரீ



தங்கள் வாழ்த்துக்கும் ஊக்கத்திற்கும் என் நன்றிகள் ஐயா!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:25, 26 மே 2012 (UTC) +1 மிக்க நன்றி ஐயா--சண்முகம் (பேச்சு) 11:50, 26 மே 2012 (UTC)[பதிலளி]

வல்லார்க்கு வழிவிடுதல் செல்லாதார் கடமை. அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 12:09, 26 மே 2012 (UTC)[பதிலளி]

+1 நன்றி. ஸ்ரீகாந்த் (பேச்சு) 14:22, 30 மே 2012 (UTC)[பதிலளி]

தெளிவு தேவை[தொகு]

ஆயிரப் பிரபந்தம் கட்டுரையில் -ஆசிரியர் கமலை ஞானப்பிரகாசரா அல்லது சுவாமி ஞானப்பிரகாசரா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.--Booradleyp (பேச்சு) 08:39, 28 மே 2012 (UTC)[பதிலளி]

அன்புள்ள பூர்டலி, ஞானப்பிரகாசர் பாருங்கள். ஊக்கம் தந்து உந்தியமைக்கு நன்றி. அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 11:00, 28 மே 2012 (UTC)[பதிலளி]

வணக்கம், தெளிவு படுத்தியமைக்கு நன்றி.

  • தங்கள் விளக்கத்திற்கு நன்றி. ஆயினும் எனது ஐயப்பாடு இன்னமும் முழுமையாகத் தீரவில்லை.

உலகநாத பண்டிதர் கட்டுரையில்:

\\உலகநாத பண்டிதர் என்பவர் 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ சமயப் பற்றுள்ள பெருமகனார். இவரால் பாடப்பட்ட நூல் உலகநீதி// என்றுள்ளதே. இதனையும் சற்றுப் பார்க்கவும். உங்கள் நேரத்தை அதிகம் எடுத்துக்கொள்வதற்கு மன்னிக்கவும். நன்றி.--Booradleyp (பேச்சு) 04:43, 30 மே 2012 (UTC)[பதிலளி]

பதக்கம்[தொகு]

சிறந்த வழிகாட்டுனர் பதக்கம்
எங்களைப் போன்ற இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டியாக, அருமையான தமிழில், அயராது ஆயிரக்கணக்கான கட்டுரைகளை எழுதி வரும் உங்களுக்கு இப்பதக்கத்தை வழங்கி நானும் பெருமையடைந்து கொள்கிறேன். தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 07:33, 1 சூன் 2012 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

இள நாகனார்[தொகு]

வணக்கம், நீங்கள் அக்டோபர் 1, 2010‎ அன்று துவங்கிய இள நாகனார் கட்டுரை பாதியிலேயே நிற்கிறது. விரைந்து அக்கட்டுரையினை முடித்திட வேண்டுகிறேன். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:27, 1 சூன் 2012 (UTC)[பதிலளி]

  • அன்புள்ள தினேசு, காலத்தில் நினைவூட்டியமைக்கு நன்றி. கட்டுரை நிறைவு செய்யப்பட்டுள்ளது. 'நீக்கக் குறிப்பை' நீக்கிவிடுங்கள். --Sengai Podhuvan (பேச்சு) 21:00, 1 சூன் 2012 (UTC)[பதிலளி]
Y ஆயிற்று..பகுப்பு:விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள் இப்பகுப்பில் தாங்கள் உருவாக்கிய சில கட்டுரைகள் உள்ளன. அவற்றையும் மேம்படுத்த வேண்டுகிறேன். நன்றி--சண்முகம் (பேச்சு) 02:43, 2 சூன் 2012 (UTC)[பதிலளி]

சிவருத்திரப் புராணம்[தொகு]

தங்களிடம் சிவருத்திரப் புராணம் குறித்த தகவல்கள் ஏதும் உள்ளதா? --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 11:54, 1 சூன் 2012 (UTC)[பதிலளி]

நான் எழுதி வரும் நூல் ஒன்றிற்காக சிவருத்ர புராணம் குறித்த சில தகவல்கள் தேவையாக இருப்பதால் கேட்டேன். நன்றி.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 02:07, 2 சூன் 2012 (UTC)[பதிலளி]
  • சிவருத்திர புராணம் என்னும் பெயரில் ஒரு நூல் இருக்குமேல் அது 18-ஆம் நூற்றாண்டுக்குப் பிந்தியதாக இருக்கலாம். எனக்குத் தெரியவில்லை. அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 21:03, 2 சூன் 2012 (UTC)[பதிலளி]
என்னிடம் 1949 ல் வெளியிடப்பட்ட சிவருத்திரர் கலிவெண்பா எனும் நூல் உள்ளது. அந்த நூலில் பழங்கால ஏட்டுப் பிரதியிலுள்ள சிவருத்திர புராணத்தைத் தழுவி எழுதப்பட்ட நூல் எனும் குறிப்பு உள்ளது. அதன் மூலம் தெரிந்து கொள்ளவே தங்களிடமுள்ள தகவலில் அது இருக்கிறதா எனக் கேட்டேன். தகவலுக்கு நன்றி.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:55, 3 சூன் 2012 (UTC)[பதிலளி]

பாண்டிநாட்டுத் துறைமுகங்கள்[தொகு]

ஐயா, பாண்டியர் நாட்டுத் துறைமுகப் பட்டினங்கள்‎ கட்டுரையில் 29 முற்கால மற்றும் பிற்காலப் பாண்டிநாட்டுத் துறைமுகப் பட்டினங்கள் பற்றிய பட்டியலை சேர்த்துளேன். ஆனால் அதில் சங்ககாலத் துறைமுகப்பட்டினங்கள் பற்றி சேர்க்கவில்லை. அந்த தகவல்களை நீங்கள் சேர்க்குமாறு வேண்டுகிறேன்.

  1. மேலும் அதில் தொண்டி, மானவீரப்பட்டினம் போன்றவையின் காலம் 875க்கு முன் என்று பொதுவாக உளதால் அது சங்ககாலத்தில் இருந்ததா என்று தெரிய வேண்டும்.
  2. மேலும் முத்துராமலிங்கப்பட்டினம், அம்மாப்பட்டினம் பற்றிய காலங்களி அறிய முடியவில்லை அவையும் சங்ககாலத்தை சேர்ந்தவையா என்றறிய வேண்டும்.
  3. எப்படியும் நீங்கள் சங்ககால துறைமுகத்தைப் பற்றி சேர்த்து விடுமாறு வேண்டுகிறேன். நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:04, 3 சூன் 2012 (UTC)[பதிலளி]
எயிழ் பாண்டிநாட்டுப்பட்டினமா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:32, 4 சூன் 2012 (UTC)[பதிலளி]
  1. அன்று. கட்டுரையில் இடம் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.
  2. ஊணூர் காண்க.
  3. சான்றில்லா ஊர்களை என்னால் சேர்க்க இயலாது. விக்கியின் தரம் கெட்டுவிடும் அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 05:46, 4 சூன் 2012 (UTC)[பதிலளி]

சேர்த்துளேன் ஐயா. ஆனால் காவிரிப் பூம்பட்டினம் எவ்விதம் பட்டினப்பாக்கம், மருவூர்ப்பாக்கம் என்று 2 பிரிவுகளை கொண்டதோ அதே போல் மருங்கூர் என்ற நகரம் மருங்கூர்ப் பட்டினம் மற்றும் ஊணூர் இரண்டையும் அடக்கியிருந்ததாம். அத்துடன் தாலமி குறிப்பிடும் சாலூர் (Salour) என்பது இந்தச் மருங்கூரென்றும் மயிலையார் குறிப்பிடுவார். (மயிலை சீனி.வேங்கடசாமி; 'பழங்காலத் தமிழர் வணிகம்' பக்கம் 95-96). அதனால் இரண்டையும் மருங்கூர் துறைமுகத்திலேயே அடக்கியுளேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:17, 5 சூன் 2012 (UTC)[பதிலளி]

  • நெல்லின் ஊர் தாலமியால் மேல்சின்டா என்றே அழைக்கப்பட்டது. அதனால் தாலமியால் அழைக்கப்பட்ட சாலியூர் இந்த நெல்லின் ஊராக இருக்காது என்று தோன்றுகின்றது. ஆங்கில்க்கட்டுரையில் நெல்சிந்தா தாலமியால் மேல்கிந்தா என்றே அழைக்கப்பட்டதாக உள்ளது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:28, 7 சூன் 2012 (UTC)[பதிலளி]
  • தாலமி குறிப்பு எனக்குக் கிடைக்கவில்லை. உங்கள் குறிப்பைக்கொண்டு என் குறிப்பைத் தந்தேன். தாலமி குறிப்பு எங்குள்ளது? இணைப்பு தாருங்கள். அல்லது உங்கள் சான்றுகளைக் காட்டி அக்கட்டுரையில் இணைப்புச் செய்தி சேருங்கள். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 20:26, 7 சூன் 2012 (UTC)[பதிலளி]

பகுப்புகளை சேர்க்கக் கோரி[தொகு]

ஐயா நீங்கள் இயக்கும் கட்டுரைகள் அனைத்திற்கும் பகுப்புகளை இடுவதில்லை போல் தெரிகிறது. நீங்கள் எழுதும் கட்டுரையில் இறுதியில் பின்வருமாறு இட்டுவிடுங்கள்.

[[பகுப்பு:பகுப்பின் பெயர்]]

நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு)

ஐயா, மேலும் நீங்கள் இயக்கும் கட்டுரை ஏற்கனவே உள்ளதா எனத் தேடிப்பார்த்தபின் புதுப்பெயரில் கட்டுரை இயக்கவும். உதாரணத்திற்கு பரணி இலக்கியங்கள், நெடுஞ்செழியன் (ஆரியப்படை கடந்தவன்), தொண்டை நாடு போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். உங்களுக்கு கட்டுரைப்பெயரிட்டு தேடுவது சிரமமாக இருப்பின் பகுப்புகளைக் கொண்டு தேடலாம். உதாரணம் நீங்கள் செழியன் கட்டுரையை இயக்குவதாக இருந்தால் ஏற்கனவே உங்களுக்குத் தெரிந்த பாண்டிய மன்னன் பெயர் கட்டுரையை எடுத்து அதன் கீழ் வரும் பகுப்புகளில் தேடிப்பார்த்தாலே இதை கண்டறியலாம்.

நீங்கள் இயக்கும் கட்டுரைகளை மற்றொரு கட்டுரையோடு இணைக்கும் போது நேரம் அதிகமாகும். அதனால் சற்று சிரத்தை எடுத்து செய்ய வேண்டுகிறேன்.

மேலும் பகுப்புகளை எளிதாக உருவாக்க விக்கிப்பீடியா:விரைவுப்பகுப்பி கட்டுரையை பார்க்கவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:54, 9 சூன் 2012 (UTC)[பதிலளி]


இரானுசார்ய திவ்விய சரிதை[தொகு]

வணக்கம் ஐயா. பார்க்கவும். பேச்சு:இரானுசார்ய திவ்விய சரிதை நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:14, 11 சூன் 2012 (UTC)[பதிலளி]

வணக்கம். பிள்ளை லோகஞ்சீயர் கட்டுரையில் அவர் எழுதிய நூல்களின் பட்டியலில் இராமானுசார்ய திவ்ய சரிதை என்று கொடுத்துள்ளீர்கள் ஆனால் இக்கட்டுரைக்குத் தலைப்பு இரானுசார்ய திவ்விய சரிதை என்று தந்துள்ளீர்கள் என்பதைத் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.--Booradleyp (பேச்சு) 14:47, 11 சூன் 2012 (UTC)[பதிலளி]

  • நன்றாகத் நெரிந்தும் தன்னை அறியாமல் சோர்வின் காரணமாகச் செய்யும் இப்படிப்பட்ட பிழையைத்தான் திருவள்ளூவர் "பொச்சாப்பு" என்கிறார்.
  • பொச்சாப்புக் கொல்லும் புகழை"
  • உன்னிப்பாய் இருந்து உதவும் செஞ்சங்களை வாழ்த்துகிறேன். வணங்குகிறேன்

நெடுஞ்செழியன் கால சர்ச்சை[தொகு]

ஐயா. இங்கு உங்கள் கருத்துக்கள் வேண்டப்படுகிறது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:35, 16 சூன் 2012 (UTC)[பதிலளி]

சமணர் கல்வெட்டுக்கள்[தொகு]

ஐயா,

  • எவுமி நாட்டு குமட்டூர் பிறந்த காவிதி ஈதன்கு சிறுபோசில் இளையான் செய்த அதிட்டானம்

என்று ஏழடிப்பட்டம் சமணர் படுக்கைகள் கல்வெட்டுகள் கூறும் எவுமி நாடும் குமட்டூர் பிறந்த காவிதி ஈதன் என்பவன் பற்றிய குறிப்புகள் சங்ட்க இலக்கியங்களில் உண்டா.

மேலும் சமணர் கல்வெட்டுகள் கி.மு. 300 தொட்டே நெடுஞ்செழியன் (மாங்குளம்) காலத்தில் காணப்படுகிறது. இருக்கும் சங்க இலக்கியங்களிலேயே சமணர் பற்றி குறிக்கும் பழைய தமிழ் இலக்கியம் எது? மேலும் சங்கப் புலவர்களில் காலத்தால் முந்திய சமணப் புலவர் யார்?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12
47, 27 சூன் 2012 (UTC)
அன்புள்ள தென்காசியாருக்கு
வணக்கம்
தமிழர்க்குப் பெருமை சேர்க்கும் செய்திகளை எழுதிவருகிறார்கள்.
எளியேனையும் அரவணைத்துக்கொள்கிறீர்கள்.
*எவ்வி நாட்டு குமட்டூர் பிறந்த காவிதி ஈதனுக்கு, சிறுபோசில் இளையான் செய்த அதிட்டானம்' - 
என்பதாக  இதன் பொருளை விளங்கிக் கொள்ளலாம்.
விரிவு தொடரும் --Sengai Podhuvan (பேச்சு) 18:49, 27 சூன் 2012 (UTC)[பதிலளி]

ஒரு திருத்தம்[தொகு]

வணக்கம். கல்வியொழுக்கம் கட்டுரையில் கருவிநூல்-நூற்றாண்டு எது என்று தெளிவாக இல்லை. சரி செய்து விடுங்கள். நன்றி.--Booradleyp (பேச்சு) 06:54, 3 சூலை 2012 (UTC)[பதிலளி]

கந்தி பாடல்கள்[தொகு]

வணக்கம், எனக்கு ஒரு சந்தேகம். கந்தி பாடல்கள் என்பது கந்தியார் பாடியதா அல்லது கந்தியார் பற்றிப் பாடப்பட்டதா எனத் தெளிவு படுத்த வேண்டும்.நன்றி.--Booradleyp (பேச்சு) 15:13, 8 சூலை 2012 (UTC)[பதிலளி]

அன்புள்ள பூ,
நடை தள்ளாடும்போது ஊன்றுகோலாய் உதவுகிறீர்கள். தொளிவுபடுத்தியுள்ளேன். நன்றி --Sengai Podhuvan (பேச்சு) 21:01, 8 சூலை 2012 (UTC)[பதிலளி]

பக்க வழி நெறிப்படுத்தல்[தொகு]

வணக்கம் ஐயா, பக்க வழி நெறிப்படுத்தல் பக்கங்கள் உருவாக்கும் போது முந்தைய பக்கத்தை நகலெடுத்து புதிய பக்கத்தை உருவாக்குவதை விட அப்படியே நகர்த்திவிட்டு பிறகு பக்க வழி நெறிப்படுத்தல் பக்கம் உருவாக்குதல் நன்று. அப்போதுதான் பக்க வரலாறும் சேர்ந்து வரும். பார்க்க உதவி:பக்கத்தை நகர்த்துதல்--சண்முகம்ப7 (பேச்சு) 06:25, 9 சூலை 2012 (UTC)[பதிலளி]

வரலாற்றுடன் இணைத்துள்ளேன். சரிபார்த்துக்கொள்ளுங்கள் ஐயா--சண்முகம்ப7 (பேச்சு) 07:08, 9 சூலை 2012 (UTC)[பதிலளி]

br இடைவெளி[தொகு]

வணக்கம். தாங்கள் எழுதும் கட்டுரைகளில் சிறு சிறு சொற்றடர்கள் என்றாலும் தொடர்ந்தே எழுதலாமே? அதுவே விக்கி நடைமுறை. br குறி இட்டு சிறு சிறு வரிகளாக வெட்டுவதைத் தவிர்க்கலாமே? நன்றி--இரவி (பேச்சு) 12:56, 12 சூலை 2012 (UTC)[பதிலளி]

அன்புள்ள இரவி, கண்ணோட்டத்தில் கருத்துகள் விடுபடாமல் இருக்க இந்த முறையைப் பின்பற்றினேன். புதுமையை விரும்பாவிட்டால் மரபைப் பின்பற்றக் கடமைப்பட்டுள்ளேன். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 13:22, 12 சூலை 2012 (UTC)[பதிலளி]

கட்டுரை சிறிதாக இருக்கும் போது இவ்வாறு வெட்டி எழுதுவது பார்க்க நன்றாகவும், கருத்துகள் உடனே பதிவதாகவுமே உள்ளது உண்மை. ஆனால், மரபைப் பின்பற்றலாம் என்ற அடிப்படையிலேயே வேண்டினேன். புரிதலுக்கு நன்றிங்க--இரவி (பேச்சு) 13:24, 12 சூலை 2012 (UTC)[பதிலளி]

உங்கள் கவனத்துக்கு[தொகு]

சீயகங்கன்[தொகு]

வணக்கம். சீயகங்கன் கட்டுரையில்

  • உரையாசிரியர் மயிலை நாதரைப் பேணியவன்,
  • நன்னூல் ஆசிரியர் பவணந்தி முனிவரைப் பேணியவன், என இரு தகவல்கள் உள்ளன.

இருவரும் ஒருவரா அல்லது வெவ்வேறு அரசர்களா? என்ற ஐயம் தோன்றுகிறது. தெளிவுபடுத்த வேண்டும், நன்றி. --Booradleyp (பேச்சு) 17:22, 27 சூலை 2012 (UTC)[பதிலளி]

அன்புள்ள பூ! சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. தெளிவுபடுத்தியுள்ளேன். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 19:56, 27 சூலை 2012 (UTC)[பதிலளி]

நன்றி, சீயகங்கன் கட்டுரை சோழ அரசர்கள் பகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. அப்படியானால் இம்மன்னன் சோழ வம்சத்தினனா? ஆனால் கட்டுரை இவன் கங்க வம்சம் என்றும் சொல்கிறதே? இதற்குப் பொருத்தமான விளக்கம் என்ன?--Booradleyp (பேச்சு) 01:46, 28 சூலை 2012 (UTC)[பதிலளி]

அன்புள்ள பூ! இப்போது பாருங்கள். வரலாறு தெளிவாகும். ஊக்கப்படுத்துகின்றமைக்கு நன்றி. --Sengai Podhuvan (பேச்சு) 11:43, 28 சூலை 2012 (UTC)[பதிலளி]
  • வணக்கம். மற்றுமொரு சந்தேகம் உள்ளது. பழையன் கட்டுரையில் பழையன் பாண்டியச் சிற்றரசன் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதே பழையன் கட்டுரையை உள்ளிணைப்பாகக் கொண்டுள்ள கங்கன் மற்றும் கட்டூர் கட்டுரைகள் பழையனைச் சோழனின் படைத்தளபதியாகக் கூறுகின்றன. எனக்கு இது முரண்பாடாகத் தோன்றுகிறது. என் சந்தேகத்தைப் போக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். உங்கள் ஆக்கங்கள் கருவூலங்களாக உள்ளன. அவற்றை வாசிக்கும் போது எழும் ஐயங்களைக் கேட்டுக் கேட்டு, உங்களை அதிகம் தொந்திரவு செய்வதைச் சற்றுப் பொறுத்துக் கொள்ளவும். நன்றி.--Booradleyp (பேச்சு) 17:26, 28 சூலை 2012 (UTC)[பதிலளி]
அன்புள்ள பூ! குழப்பம் தீரும்படி தெளிவுபடுத்தியிருப்பதாக எண்ணுகிறேன். மேலும் குழப்பம் இருந்தால் கூசாமல் எழுதுங்கள். செய்வன திருந்தச் செய்வோம். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 21:09, 28 சூலை 2012 (UTC)[பதிலளி]

சங்ககாலக் கலிங்கம்[தொகு]

ஐயா, சங்ககாலத்தில் கலிங்கத்தை எவ்வாறு அழைத்தனர். வடுகர் என்ற பிரிவில் கலிங்கர் அடங்குவரா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:00, 30 சூலை 2012 (UTC)[பதிலளி]

வேங்கடத்துக்கு அப்பால் இருந்த நாடுகளைச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடவில்லை. வடபுலம், மொழிபெயர் தேஎம் என்னும் பெயர்களால் வழங்கின. எருமை நன்னாடு போன்ற குறிப்புகள் சில உள்ளன. காண்க: வேங்கடம் அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 20:42, 30 சூலை 2012 (UTC)[பதிலளி]

விக்கி நிர்வாகிகளுக்கு வேண்டுகோள்[தொகு]

தமிழ் விக்கியில் தாராளமாக உங்கள் கணினிக்கலை விளையாடட்டும். பக்கத்தை இரண்டாகப் பகுத்ததால் விளைந்த அலங்கோலத்தை, முதற் பக்கம், சங்க காலப் புலவர்கள், தமிழ்நூல் தொகை, சங்ககால மலர்கள், முல்லை வகை போன்ற கட்டுரைகளில் பார்த்துவிட்டு விளையாடுங்கள். முன்பொருமுறை நீலவண்ணம் பின்னணியாகப் பூசி விளையாடியது நினைவிருக்கலாம். இப்போது இதைத் செய்கிறீர்கள். விளையாட்டுகள் ஆக்கப் பணிக்கு உதவட்டும். அழிவுப் பணிக்கு என்றால் ஆர் என்ன செய்யமுடியும். சேர்ந்தே அழிவோம் அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 19:30, 31 சூலை 2012 (UTC)[பதிலளி]

நீங்கள் எதை கூறுகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை. --குறும்பன் (பேச்சு) 01:38, 1 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

பக்கங்களை நிருவாகிகள் பிரிக்கவில்லை. தாங்கள் தான் மேலே வலது பக்க மூலையில் நேரத்துக்கு இடப்புறத்திலுள்ள என்ற குறியீட்டைத் தவறுதலாகச் சொடுக்கியிருக்க வேண்டும். அந்தக் குறியீட்டில் மீண்டும் சொடுக்கினால் நிலைமை சரியாகி விடும். --மதனாகரன் (பேச்சு) 03:05, 1 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

  • அன்புள்ள மதனாகு அரன்! நீங்கள் சொன்னது போல் செய்து சரியாகிவிட்டது. கணினியில் போதிய தேர்ச்சி இல்லாததால் நேர்ந்த எனது பிழை என்னைத் திண்டாட வைத்துவிட்டது. தக்க வழியில் ஆற்றுப்படுத்தியமைக்கு நன்றி. அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 07:24, 1 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
நன்று! உங்களுக்கு இந்தக் கருவி வேண்டவே வேண்டாமென்றால் இப்பக்கத்தில் பயனர் இடைமுகப்புக் கருவிகள் என்பதன் கீழ் விரைவுப் படிப்பான் என்பதற்கு நேரேயுள்ள சரியை எடுத்து விட்டுச் சேமியுங்கள். --மதனாகரன் (பேச்சு) 10:27, 1 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

மகதைப் பெருமாள்[தொகு]

வணக்கம். மகதைப் பெருமாள் கட்டுரையில் நீங்கள் பாடல் சொல்லும் செய்தியாகக் கொடுத்துள்ள பொருளில் எனக்கு சற்றுக் குழப்பமாக உள்ளது. பாடலின்படி -[அரசர்கள் தம்தம் மார்பில் வீர பெருமாள் மகதேசனின் பெயரை எழுதிக்கொண்டு அதன் பலனாக தார், முடி, முரசு மற்றும் தமக்குரிய அரசு ஆகியவற்றைப் பெற்றனர்] என்பது போல எனக்குத் தோன்றுகிறது. எனது எண்ணம் தவறாக இருக்கலாம். ஏனென்றால் தமிழ்ச் செய்யுட்களுக்குப் பொருள் கூறும் அளவுக்கு எனக்குத் தமிழில் ஆழ அறிவு கிடையாது. ஆயினும் எனக்குத் தோன்றிய சந்தேகத்தைத் தெளிவுபடுத்திக் கொள்ளவே இந்த உரையாடல். நன்றி.--Booradleyp (பேச்சு) 02:07, 1 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

அன்புள்ள பூ! தங்கள் கருத்து செவ்விது. இணைத்துள்ளேன். செம்மைப்படுத்தியமைக்கு நன்றி. அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 03:24, 1 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

சைவ சமய மடங்கள்[தொகு]

ஒரு சந்தேகம். சைவ சமய மடங்கள் கட்டுரையில்: திருவையாறு செப்பறை மடம் என்னும் பீடம்,

  • மச்சுச் செட்டியார் என்னும் மச்சுக்கறை வணிக யோகி நிறுவினார் என்றும்
  • சந்திரசேகரன் வழியில் திருவையாறு சாமிநாத தேசிகர் முதலான 15 பேர் மடத்தை நிறுவினர் என்றும்
என்று இருவிதமாக உள்ளது. இது சற்றுக் குழப்பமாக உள்ளதுபோல் தோன்றுகிறது. தெளிவிக்க வேண்டும்.--Booradleyp (பேச்சு) 03:03, 5 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
அன்புள்ள பூ! தெளிவுபடுத்தியுள்ளேன். தாங்களும், கனகசீர் அவர்களும் எனக்கு ஊன்றுகோலாய்க் கிடைத்தது என் பேறு. --Sengai Podhuvan (பேச்சு) 05:36, 5 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

வணக்கம். தெளிவுபடுத்தியமைக்கு மிகவும் நன்றி. வேறொரு சந்தேகமும் உள்ளது.

இந்நான்கு கட்டுரைகளிலும் இக்கருத்தினைச் சரிசெய்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.--Booradleyp (பேச்சு) 16:20, 5 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

தருமபுர ஆதீன பரம்பரை[தொகு]

வணக்கம். தருமபுர ஆதீன பரம்பரை கட்டுரையில் எனது ஐயங்கள்:

  • கட்டுரையின் தலைப்பில் ஆதீனப் பரம்பரை என ஒற்று மிகாதா?
ஆதீனம் என்பது ஆதீனத்தில் உள்ளவர்களைக் குறிக்கும் உயர்திணைச் சொல். எனவே ஒற்று மிகாது. 'கபில பரணர்' என்பது போன்றது.
  • சந்தானக் குரவர் என ஒற்று மிகாதா?
'சந்தானம்' வழிவழியாக வரும் பரம்பரையினரைக் குறிக்கும் உயர்திணைச்சொல். எனவே இந்தத் தொடரிலும் ஒற்று மிகாது.
  • புறச் சந்தான குரவர்களாகத் தரப்பட்டுள்ள நால்வரில் சன்ற்குமார முனிவர் என்ற பெயரில் ஏதேனும் எழுத்து மாற்றம் வேண்டுமா அல்லது இதுவே தான் அவரது சரியான பெயரா?
சனற்குமார் என இருத்தல் வேண்டும். Tamil 99 முறையைப் பயன்படுத்தும்போது நேர்ந்த கவனக் குறைவு.

விளக்க வேண்டுகிறேன்.

விளக்கியுள்ளேன்.

உங்களுக்கு வசதிப்படுமானால் இனிமேல் எனது ஐயங்களை அந்தந்தக் கட்டுரைகளின் உரையாடல் பகுதியில் இடட்டுமா? நன்றி.--Booradleyp (பேச்சு) 18:14, 7 ஆகத்து 2012 (UTC).[பதிலளி]

முதற் பக்கம் அண்மைய மாற்றங்கள் பகுதிக்கு நான் பெரும்பாலும் செல்வதில்லை. எனவே இப்பகுதியிலையே என்னை இழுத்துவிடுங்கள்.அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 19:40, 7 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

வணக்கம். உங்களது விளக்கங்களுக்கு மிகவும் நன்றி. நீங்கள் தந்துள்ள வல்லின ஒற்று மிகா இடங்கள் எனக்கு கட்டுரைகளில் உரை திருத்தும்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • தருமபுர ஆதீனப் பரம்பரையில் தரப்பட்டுள்ளவர்கள் அந்த ஆதீனத்தின் தலைவர்களாக இருந்தவர்களா? அல்லது அங்கு உறைந்தவர்களா? இந்த ஆதீனம் தொடங்கப்பட்ட காலம் எது? எனக்கு இந்த ஐயம் வரக் காரணம், இக்கட்டுரையின் பட்டியலில் குருஞான சம்பந்தர் இறுதியில் தரப்பட்டுள்ளார்.
  1. தருமபுர ஆதீன பரம்பரையில் விளக்கம் சேர்க்கப்பட்டுள்ளது
  2. 'சிவபெருமானின் நந்தி' (கற்பனை) காலத்தை எப்படிச் சொல்லமுடியும்?
மடத்தில் இருந்து ஆதீனத்தைத் தோற்றுவித்தவர் இவர். பரம்பரை அவர்கள் கூறிக்கொள்ளும் பரம்பரை.

அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 02:50, 8 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

  • 16 ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட ஒரு ஆதீனத்திற்கு 12 ஆம் நூற்றாண்டிலிருந்து வாழ்ந்த வந்தவர்கள் (முதல் நான்கு கற்பனைக் குரவர்களை நீக்கிவிட்டுப் பார்த்தாலும்) பரம்பரை எனக் கூறப்படுவதுதான் எனக்கு இன்னமும் சற்று நெருடலாக உள்ளது. இதற்கு எனது தமிழ் இலக்கிய வரலாறு குறித்த தெளிவின்மையும் காரணமோ என்னவோ. எனினும் உடனுக்குடன் சிரத்தையுடன் விளக்கம் அளிக்கும் தங்கள் அன்பிற்கு நன்றி.--Booradleyp (பேச்சு) 14:49, 8 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
    • மடம் தோன்றியது 16-ஆம் நூற்றாண்டு. பரம்பரை தோன்றியது 12-ஆம் நூற்றாண்டு. என் முன்னோர் சில தலைமுறைகளாக வாழ்ந்தனர். நான் வீடு கட்டிக்கொண்டேன். இப்படி எண்ணிப் பாருங்கள். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 22:15, 8 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]