உள்ளடக்கத்துக்குச் செல்

சீயகங்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமராபரணன் சீயகங்கன் (இயற் பெயர் : திருவேகம்பமுடையான்) எனபவர் கங்கர் பரம்பரையில் வந்த ஓர் அரசன். சங்க காலக் கங்கன் வழியில் வந்த மேலைக் கங்கர் மரபினர் ஆவார். இவர் மூன்றாம் குலோத்துங்க சோழனுக்கு அடங்கிய சிற்றரசனாக இருந்தார். இவரது தலைநகரம் அக்காலத்தில் குவளாலபுரம் என்று அழைகபட்ட தற்கால கோலார் நகரமாகும். கங்கர் சமண மதத்தினர். சீயகங்கன் நன்னூல் என்னும் இலக்கண நூல் தோன்றக் காரணமாக இருந்தவன். நன்னூல் இயற்றிய ஆசிரியர் பவணந்தி முனிவரையும், இந்தப் பவணந்தியார் காலத்திலேயே நன்னூலுக்கு உரை எழுதிய மயிலைநாதரையும் பேணிப் பாதுகாத்தவன்.

இவனது மெய்க்கீர்த்தி இவனை அமராபரணன், ஸ்ரீமத் குவளாலபுர பரமேசுரன் [1] கங்க குலோற்பவன், சூரநாயகன் என்றெல்லாம் பாராட்டுகிறது. இவனுக்குத் திருவேகம்பமுடையான் என்னும் பெயரும் உண்டு எனத் தெரிவிக்கிறது. [2]

சீயகங்கன் மதுராந்தகப் பொத்தம்பிச் சோழனின் மைத்துனன். (மனைவியின் உடன்பிறப்பு). [3]

குடும்பம்

[தொகு]

அமராபரணன் சீயகங்கனின் மனைவியின் பெயர் அரிய பிள்ளை ஆகும். சீயங்கனுக்கு அருங்குன்றைப் பிள்ளையாரான செயகங்கன் (சீயகங்கன்) என்ற மகனும், வடவாயில் செல்வியாரான சந்திரகுல மாதேவியார் என்ற மகளும் இருந்தனர்.[4]

கருவிநூல்

[தொகு]
  • நன்னூல் மூலமும் மயிலைநாதர் உரையும், டாக்டர் உ. வே. சாமிநாதையர் குறிப்புரையுடன் அவரது மகன் கலியாண சுந்தரையர் பதிப்பு, 1946 டி. ஏ. கோபிநாதையர் 'செந்தமிழ்' இதழ் நான்காம் தொகுதி மேற்கோள்.
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, 2005

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. குவலாளபுரம் என்னும் ஊர் ஜோலார்பேட்டையிலிருந்து பெங்களூர் சொல்லும் வழியில் உள்ளது.,
  2. மூன்றாம் குலோத்துங்க தேவனுடைய 27ஆம் ஆண்டுக் கல்வெட்டு (கி. பி. 1205)
  3. கங்கன் சங்ககாலத்தில் சோழனை எதிர்த்தான். இவன் மேலைக்கங்கரின் முன்னோன். கங்கன் வழிவதந்த கங்கர்குல அரசன் சீயகங்கன் கீழைக்கங்கர் வழிவந்தவன். இவன் காலத்தில் சோழர் குடியினரோடு மண உறவு இருந்தது. சங்ககாலத்திலும் சரி, சீயகங்கனின் 13-ஆம் நூற்றாண்டிலும் சரி இந்தக் கங்கர்கள் தமிழர்களே.
  4. வேங்கடராமையா, சோழர் கால அரசியல் தலைவர்கள் நூல், பக்கம் 135-139, பதிப்பு பிப்ரவரி, 1977 கட்டுரை, அமராபரணன் சீயகங்கன்

வெளியிணைப்பு

[தொகு]

சீயகங்கன் பற்றிய கொங்கு மண்டலச் சதகப் பாடல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீயகங்கன்&oldid=3718412" இலிருந்து மீள்விக்கப்பட்டது