வெண்ணி
Appearance
வெண்ணி என்பது சங்ககாலத்தில் சிறப்புடன் விளங்கிய ஊர்களில் ஒன்று.
இருப்பிடம்
[தொகு]தஞ்சாவூரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் நீடாமங்கலம் அருகே உள்ள கோயில்வெண்ணி என்னும் பெயருடன் இன்றுள்ள ஊர்தான் சங்ககால(கழகக் கால) வெண்ணி. இதனைத் திருவெண்ணி என்றும் குறிப்பிடுவர். இக்காலத்தில் இங்குள்ள சிவாலயத்தில் குடிகொண்டுள்ள இறைவனின் பெயர் வெண்ணிக்கரும்பர்.
சங்ககாலத்தில்
[தொகு]1. கரிகால் வளவன் வெண்ணிப் போர்களத்தில் போரிட்டபோது அவனை எதிர்த்துத் தாக்கிய இரு பெரு வேந்தரும் ஒரே போர்களத்தில் மாண்டொழிந்தனர். [1] 2. கைவண் கிள்ளி என்னும் சோழன் இவ்வூர் அரசன். நீர்நாய் வாளைமீனை மேயும் வளமான பொய்கைகளைக் கொண்டது இவ்வூர். [2]
இவற்றையும் பார்க்க
[தொகு]ஆதாரங்கள்
[தொகு]- ↑ (முடத்தாமக் கண்ணியார் - பொருநராற்றுப்படை - அடி 147)
- ↑ (ஔவையார் - நற்றிணை 390)