உள்ளடக்கத்துக்குச் செல்

வெண்மணி வாயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெண்மணி வாயில் என்பது சங்ககாலத்தில் சிறப்புற்று விளங்கிய ஊர்களில் ஒன்று.

மாமூலனார் பாடல் அகம் 211 இந்த ஊருக்கு இப் பெயர் வந்த காரணத்தைப் புலப்படுத்துகின்றது. இப் பெயர் தோன்றுவதற்கு முன்னர் இவ்வூரின் பெயர் வெண்ணி என்று வெறுமனே வழங்கப்பட்டது.

சங்ககாலத்தில் மத்தி என்னும் அரசன் இதனைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான்.

மத்தி செயல்[தொகு]

மத்தி கல்லா எழினியோடு போரிட்டு அவனது பல்லைப் பிடுங்கிக் கொண்டுவந்து தன் வெண்மணிவாயில் கோட்டைக் கதவில் பதித்துக்கொண்டான். பல் வாயில்கதவில் வெண்மணி போல் விளங்கியதால் வெண்மணி என்னும் ஊரின் பெயரே வெண்மணிவாயில் என வழங்கப்படுவதாயிற்று.

கல்லா எழினி[தொகு]

அதியமான் கடையெழு வள்ளல்களில் ஒருவன். அவன் மகன் பொகுட்டெழினி.

அதியமானைக் கடையெழு வள்ளல்களில் ஒருவனாகச் சிறுபாணாற்றுப்படை என்னும் நூல் தொகுத்துக் காட்டுகிறது.

பெருஞ்சித்திரனாரின் புறநானூற்றுப் பாடல் (158) அதியமானின் மகன் பொகுட்டெழினியைக் 'கூவிளங்கண்ணிக் கொடும்பூண் எழினி' என்று குறிப்பிட்டு கடையெழு வள்ளல்களில் ஒருவனாகக் குறிப்பிடுகிறது.

அதியமான் தகடூர் அரசன். மாமூலனார் குறிப்பிடும் 'கல்லா எழினி' அதியமானின் மகன் அல்லன். இவன் போர்த்தொழிலைக் கல்லாதவன்.

ஒப்புநோக்குக[தொகு]

வெண்ணி
வெண்ணிப் பறந்தலை
வெண்ணிவாயில்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்மணி_வாயில்&oldid=2566640" இலிருந்து மீள்விக்கப்பட்டது