நெடுஞ்செழியன் (மாங்குளம்)
Appearance
நெடுஞ்செழியன் என்ற பெயர் மாங்குளம் கல்வெட்டுகளில் காணப்படும் ஒரு பாண்டிய மன்னனின் பெயராகும். இக்கல்வெட்டுகளின் காலம் பொ.மு. 2ஆம் நூற்றாண்டாகும். இவனின் முழுப்பெயர் தெரியவில்லை. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், தலையலங்கான நெடுஞ்செழியன் போன்றவர்களுக்கு இவன் முன்னோனாக கருதப்படுகிறான்.
கல்வெட்டுகள்
[தொகு]தமிழ்நாடு, மாங்குளத்தில் இச்செழியன் பற்றிய இரு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. ஒன்றில் இச்செழியனின் பணயனான கடலன் வழுதி என்பவன் கணியன் நந்தா என்ற சமண குருவுக்கு கொடுத்த குகைத்தானம் பற்றியுள்ளது.[1] மற்றொன்றில் இச்செழியனின் சகலனாகிய இளஞ்சடிகன் தந்தை சடிகன் என்பவன் இதே துறவிக்கு பள்ளி அமைத்து கொடுத்தது பற்றியுள்ளது.[2]
மூலம்
[தொகு]- பண்டைய தமிழகம், சி. க. சிற்றம்பலம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை.