போயர்
போயர் | |
---|---|
வகைப்பாடு | பிற்படுத்தப்பட்டோர் & பிற பிற்படுத்தப்பட்டோர் |
மதங்கள் | இந்து |
மொழிகள் | தமிழ், தெலுங்கு |
நாடு | இந்தியா |
மக்கள்தொகை கொண்ட மாநிலங்கள் | தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கருநாடகம், கேரளா மற்றும் இந்தியாவின் வடக்கு மாநிலங்கள் |
போயர்(Boyar) என்பவர்கள் தென்னிந்தியாவில் உள்ள ஒரு சாதியினர் ஆவர். இவர்களது தாய் மொழி தெலுங்கு ஆகும்.
இவர்கள் ஒரிசாவில் இருந்து வந்தவர்கள் எனப்படுகிறது. போயர் என்னும் பெயர் மாலர்களின் உட்பிரிவாகவும், ஏகாரிகளுக்குரிய பெயராகவும், ஒட்டர்களின் பட்டப் பெயராகவும், சவர இனத்தவரின் சமய சடங்குகளை செய்பவராகவும் உள்ளது. ஒரிய மொழி பேசும் பாவுரியர் அல்லது பவுரி என்பவர் பல்லக்குத் தூக்குவதைத் தம் குலத் தொழிலாக கொண்டிருந்தனர். இதனால் போயி, போயன் என்பன பல்லக்குத் தூக்குபவர் என்ற பொருளைத் தரக்கூடியது என்று தெரிகிறது. இந்த போயி என்னும் சொல் வேயி என்ற சொல்லின் திரிபாக இருக்கலாம் எனப்படுகிறது. மலை மேலிருந்து பல்லக்குக்குத் தேவையான மூங்கிலைக் கொண்டுவரும் தொழிலைச் செய்தவர்களாதலால் வேணி- போயி என்று அழைக்கப்பட்டிருக்கலாம்.[1]
வரலாறு
போயர்கள் ஒட்டர் சாதியில் இருந்து பிரிந்தவர்களாக தெரிகிறது. போயரும் ஒட்டரும் தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர்கள். முன்பு ஒட்டர் என்று அழைக்கப்பட்டவர்கள் இப்போது போயர் என்று அழைத்துக் கொள்கின்றனர். அரசு ஆவணங்களிலும் போயர் என்றே குறித்துக் கொள்கின்றனர். முந்தைய தருமபுரி மாவட்டத்தில் இவர்களின் ஊர்பெயர்கள், தெருப் பெயர்கள் பல ஒட்டம்பட்டி, ஒட்டத்தெரு போன்று ஒட்ட என்ற அடைமொழியுடனே காணப்படுகிறன. ஆனால் அங்கு வாழ்பவர்கள் அனைவரும் தங்களை போயர் என்றே அழைத்துக் கொள்கின்றனர். பதினாறாம் நூற்றாண்டுகளில் போயர் என்பது வழக்கில் இல்லை.[2]
தருமபுரி பகுதியில் குடி போயர், தேச போயர், காப்ரி போயர், பள்ளி போயர், ஜோகி போயர், ராஜூ போயர், ராஜகுல போயர், படே போயர், சின்ன போயர், சுண்ணாம்பு போயர் போன்ற பிரிவினர் வசிக்கின்றனர். [2]
போயர்கள் விஜயநகரப் பேரரசு காலத்தில் அவர்களின் படைகளுடன் தமிழ் நாட்டுக்கு வந்து குடியேறியதாக தெரிகிறது. இவர்கள் பெரும்பாலும் கல் உடைக்கும் மொழில், சுண்ணாம்புக் கல் தயாரிக்கும் தொழில் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர்.[1]
இன்றைய நிலை
போயர்களை ஒன்றிய அரசு பிற பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும், ஆந்திரப்பிரதேசத்தில் பின்தங்கிய சமூக வகுப்பினராக ஏ பட்டியலிலும் அறிவித்துள்ளனர், மற்றும் தமிழகத்தில் போயர்கள் (Boya, Boyas, Boyer / Boyar) எனக் குறிப்பிட்டு பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்ட பட்டியலில் உள்ளனர்.[3] [4] [5]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 முனைவர் கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும், நூல், பதிப்பு: 2018, கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம் ஒசூர், பக்கம் 159-160
- ↑ 2.0 2.1 இரா. இராமகிருட்டிணன், தகடூர் வரலாறும் பண்பாடும், நூல், பதிப்பு: 2008, ராமையா பதிப்பகம், சென்னை-14, பக்கம் 443-447
- ↑ ANDHRA PRADESH LIST OF SOCIALLY AND EDUCATIONALLY BACKWARD CLASSES, BACKWARD COMMUNITIES GROUP-A (2009). Castes and Tribes of Southern India. Vol. html. Andhra Pradesh: Government Press. p. 1. பார்க்கப்பட்ட நாள் 2012-10-10.
- ↑ ANDHRA PRADESH
LIST OF SOCIALLY AND EDUCATIONALLY BACKWARD CLASSES, OBC. CENTRAL LIST OF OBCs FOR THE STATE OF ANDHRA PRADESH (PDF). Vol. pdf. Andhra Pradesh: Government Press. p. 2. பார்க்கப்பட்ட நாள் 2012-10-10.
{{cite book}}
: line feed character in|last1=
at position 15 (help) - ↑ MBC CLASSES, BC. TAMILNADU STATE BC LIST. Vol. html. Tamil Nadu: Government Press. p. 1. பார்க்கப்பட்ட நாள் 2012-10-10.