உள்ளடக்கத்துக்குச் செல்

திருப்பாம்புரம்

ஆள்கூறுகள்: 10°57′57″N 79°36′05″E / 10.965800°N 79.601400°E / 10.965800; 79.601400
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருப்பாம்புரம்
—  கிராமம்  —
திருப்பாம்புரம்
அமைவிடம்: திருப்பாம்புரம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°57′57″N 79°36′05″E / 10.965800°N 79.601400°E / 10.965800; 79.601400
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவாரூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


38 மீட்டர்கள் (125 அடி)


திருப்பாம்புரம் தமிழ்நாடு, திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்திலுள்ள ஓர் ஊராகும்.[4][5]

அமைவிடம்

[தொகு]

கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் செல்லும் வீதியில் கொல்லுமாங்குடிக்கு மேற்கே கற்கத்தி என்ற ஊர் உள்ளது. அங்கிருந்து தெற்குத் திசையில் திருப்பாம்புரம் என்னும் இந்த அழகிய ஊர் அமைந்துள்ளது.[6] இந்தப் பகுதி பண்டைய சோழ நாடு ஆகும்.

ஊர் சிறப்பு

[தொகு]

இங்கு திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில் என்ற பிரசித்தி பெற்ற கோவில் உள்ளது. இக்கோவிலில் இராசராசன், இராசேந்திரன், சுந்தர பாண்டியன், சரபோஜி மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்கள் காணப்படுவதால் இது ஒரு பழம் பெருமை வாய்ந்த ஊராகும். கல்வெட்டுக்கள் இறைவனை பாம்புரம் உடையார் எனவும், பிள்ளையாரை ராஜராஜப் பிள்ளையார் எனவும், அம்பாளை மாமலையாட்டி எனவும் குறிப்பிடுகின்றன.

பிரபல நபர்கள்

[தொகு]

திருப்பாம்புரம் பிரபல இசை வித்துவான்களின் பிறப்பிடமாகும். நாதசுவர வித்துவான் திருப்பாம்புரம் நடராஜசுந்தரம் பிள்ளை, அவரது மகனும் பிரபல புல்லாங்குழல் வித்துவானுமாகிய திருப்பாம்புரம் என். சுவாமிநாத பிள்ளை ஆகியோர் இந்த ஊரைச் சேர்ந்தவர்களே.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2014-01-01.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-23. Retrieved 2014-01-01.
  6. திருப்பாம்புரம் அமைவிடம்

வெளி இணைப்பு

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருப்பாம்புரம்&oldid=3663476" இலிருந்து மீள்விக்கப்பட்டது