விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு74

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அதிகாரிகளுக்கான அறிவிப்புப்பலகை[தொகு]

அதிகாரிகளுக்கான அறிவிப்புப்பலகையில் நான்கு வேண்டுகோள்கள் நிலுவையிலுள்ளன என்பதை அதிகாரிகளுக்கு அறியத் தருகின்றேன். --மதனாகரன் (பேச்சு) 13:55, 23 ஏப்ரல் 2012 (UTC)

ஒலிம்பிக் விளையாட்டு வரவேற்புப் பாடலில் தமிழ்[தொகு]

லண்டனில் நடைபெற உள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கான வரவேற்புப் பாடல் வணக்கம் என்கிற தமிழ்ச் சொல்லுடன் தொடங்குகிறது. இப்பாடலைப் பார்க்க, கேட்க--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:35, 23 ஏப்ரல் 2012 (UTC)

நன்றி. நன்றாக உள்ளது. --Natkeeran (பேச்சு) 13:03, 24 ஏப்ரல் 2012 (UTC)

மீடியாவிக்கி 1.20wmf1 நிறுவப்பட்டுள்ளது[தொகு]

சில நாட்களில் வெளிவரவுள்ள தமிழ் சிறப்பு எழுத்துக்களை உள்ளீடு செய்ய உதவும் கருவி

wikitech:Software_deployments#Week_of_April_23 இன் படி, 1.20wmf1 பதிப்பு மீடியாவிக்கி நிறுவப்பட்டுள்ளது. இதில் மிகப்பெரிய மாற்றம் என்றால், மாற்றங்களைக் காணும் நிரங்கள் இப்பொழுது மஞ்சளும், நீலமும். சிவப்பும், பச்சையும் வேண்டுமென்றால் அதற்கு கருவி ஒன்று உருவாக்க வேண்டும். நிர்வாகி யாரேனும் இதைச் செய்யலாம். en:MediaWiki:Gadgets-definition பக்கத்தில் உள்ள NewDiff, OldDiff கருவிகள் தமிழில் உருவாக்கப்பட வேண்டும். இனி பொதுவாக மீடியாவிக்கி 4-6 வாரங்களுக்கு ஒரு முறை இற்றைப்படுத்தப் படும் 1.18 க்கும் 1.19 க்கும் 1 வருடமாக இருந்த இடைவேளி,1.19க்கும் 1.20க்கும் தொடரும். ஆனால் இடையில் 1.20wmf1,1.20wmf2 முதலிய மாதம் ஒருமுறை இற்றைப்படுத்தப்பட்டு நிறுவப்படும். ஸ்ரீகாந்த் (பேச்சு) 06:17, 26 ஏப்ரல் 2012 (UTC)

Y ஆயிற்று. என் விருப்பத்தேர்வுகள் > கருவிகள் > தோற்றம் மூலம் பழைய வேறுபாடு முறையைத் தேர்வு செய்யலாம்--சோடாபாட்டில்உரையாடுக 15:02, 26 ஏப்ரல் 2012 (UTC)
நன்றி சோடா,
  • '~' இனி தட்டச்சு கருவி பயன்படுத்தும் பொழுதும் பயன்படுத்த முடியும். தேவையற்ற மாறுதல் நீக்கப்பட்டது.
  • சிறப்பு எழுத்துக்களில் தமிழ் எண்களை அண்மையில் சேர்த்துள்ளேன், இது அடுத்த இற்றைப்படுத்தல் முதல் அனைத்து விக்கிகளிலும் தெரியும். ஸ்ரீகாந்த் (பேச்சு) 15:50, 26 ஏப்ரல் 2012 (UTC)
மிக்க நன்றி ! நல்ல பணி !!!--மணியன் (பேச்சு) 15:41, 28 ஏப்ரல் 2012 (UTC)

முறையீடு[தொகு]

117.206.81.16, 117.206.95.191 & 117.206.81.16 என்ற முகவரியிலிருந்து ஒருவர்/சிலர் வீக்கி பற்றிய தெளிவற்று கட்டுரைகளை ஆக்க முயற்சிக்கிறார்(கள்). நடவடிக்கை எடுக்கவும். முறையிடும் இடம் தெரியாததால் இங்கு தெரிவிக்கிறேன். நன்றி!

--Anton (பேச்சு) 12:04, 26 ஏப்ரல் 2012 (UTC)

முறையிட வேண்டிய தேவை இல்லை. {{delete}} வார்ப்புருவைச் சேர்த்து விடுங்கள். கட்டுரைகளில் தேவையற்ற மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பின் அவற்றை மீளமைத்து விடுங்கள். இரண்டு மூன்று நாட்களில் நீக்கப்படாவிட்டால் தொடர்ந்து செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நிருவாகியின் பயனர் பேச்சுப் பக்கத்திலும் குறிப்பை இட்டு விடலாம். --மதனாகரன் (பேச்சு) 12:15, 26 ஏப்ரல் 2012 (UTC)
நன்றி அன்ரன், மதனாகரன், முதலாவது கட்டுரையை நீக்கலாம். வேறு ஒரு கட்டுரையில் இருந்து படியெடுத்திருக்கிறார்கள். இரண்டாவதில் இவர்(கள்) வழிமாற்று ஏற்படுத்த முயன்றிருக்கிறார்கள் போல் தெரிகிறது.--Kanags \உரையாடுக 12:38, 26 ஏப்ரல் 2012 (UTC)

வேண்டுகோள்[தொகு]

இவ்வகை யரசிற் கவியரங்கேறினார்

ஐவகையரசர் ஆயிடைச் சங்கம்

விண்ணகம் பரவும் மேதகுகீர்த்திக்

கண்ணகல் பரப்பிற் கபாட புரமென்

இப்பாடல் எவ்விலக்கியத்தில் உள்ளது என்று எவரேனும் கூறினால் உதவியாக இருக்கும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:18, 26 ஏப்ரல் 2012 (UTC)

பார்க்க தமிழ் எழுத்து » இரண்டாம் சங்கம்-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:58, 26 ஏப்ரல் 2012 (UTC)

அந்த பாடலை எடுத்தது அத்தளத்திலிருந்தே. ஆனால் அதிலும் இலக்கியம் என்னவென்று குறிப்பிடவில்லை. அந்த பாடலின் வகை அகற்பா என்றே உள்ளது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:01, 26 ஏப்ரல் 2012 (UTC)

இப்பாடல் அகவற்பா வகையினைச் சார்ந்தது, வால்மீகி ராமாயணம் அல்லது வியாச பாரதம், நூலில் இருந்து எடுக்கப்பட்டிருக்கலாம். பார்க்க-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:11, 27 ஏப்ரல் 2012 (UTC)


இப்பாடல் எந்த இலக்கியத்திலும் இல்லாத தனிப்பாடலாய்த் தெரிகிறது. இஃது "அவருட் கவியரங்கேறினார் ஐவர் பாண்டியரென்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கபாடபுரத்தென்ப” என்ற இறையனார் அகப்பொருளுரையை அடிப்படையாய்க் கொண்டு இயற்றப்பட்ட அகவற்பா.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 05:26, 27 ஏப்ரல் 2012 (UTC)

குறுந்தொடுப்பை படியெடுத்தல்[தொகு]

தமிழ் விக்கி கட்டுரைகளின் வலது மூலையில் தோன்றும் குறுந்தொடுப்பை ஒருமுறை கிளிக் செய்தால் படியெடுக்கும்படி அவற்றை மாற்ற முடியுமா?. குறுந்தொடுப்பின் மேல் கிளிக் செய்யும்போது கிளிப் போர்டில் படியெடுக்க முடிந்தால் கையாள்வதற்கு எளிமையாய் இருக்கும். தற்போது அவற்றை பிரதி எடுக்க ஒருபுறம் கர்சரை வைத்து மறுமுனைக்கு இழுக்கும்போது இரண்டு-மூன்று முறை குறி தவறிவிடுகிறது. :-) --எஸ்ஸார் (பேச்சு) 09:00, 28 ஏப்ரல் 2012 (UTC)

right-click பண்ணி copy shortcut ஐத் தேர்ந்தெடுங்கள்.--Kanags \உரையாடுக 10:28, 28 ஏப்ரல் 2012 (UTC)
நன்றி கனக்ஸ்!firefox-இல் copy link location என்பதனால் எளிமையாக கையாளமுடிகிறது. வணக்கம்.பயனர்:தகவலுழவன்/கையொப்பம்
Click-to-copy என்பது ஜாவாஸ்கிரிப்ட் மூலம் கிளிப் போர்டில் நேரடியாக படிஎடுக்க இயலாது. பிற தளங்களில் flash மூலம் இதனை செய்கிறார்கள், ஆனால் விக்கியில் அதனை பயன்படுத்த முடியாது. பயனர்:Bharathkaush இதனை சற்று எளிமையாக்கும் முயற்சியை தொடந்தார், தூண்டுதலுக்கு நன்றி, அதன் நிலை கேட்டறிகிறேன். ஸ்ரீகாந்த் (பேச்சு) 06:19, 29 ஏப்ரல் 2012 (UTC)


மொழிபெயர்ப்பு உதவி[தொகு]

விக்கிமீடியா இந்தியா உருவாக்கியுள்ள விக்கிப்பீடியா தொகுத்தல் உதவி நூலை தமிழில் மொழி பெயர்க்க உதவி தேவைப்படுகிறது. இப்பக்கத்தில் அப்படியே தமிழில் மொழிபெயர்த்து உதவ வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 17:59, 29 ஏப்ரல் 2012 (UTC)

திருமண் கட்டுரை வைணவ பரிபாஷைகள்[தொகு]

திருமண் என்ற கட்டுரை ௦09 பிப்ரவரி 2012 அன்று என்னால் வெளியிடப்பட்டது. பயனர் Karthi Dr. இந்தக் கட்டுரையின் ஒரு பகுதியான வைணவ பரிபாஷைகள் பற்றிய தொகுப்புகளை நீக்கியுள்ளார். தவறுகளை சுட்டிக் காட்டலாம். என்னிடம் கேட்டிருக்கலாமே. நான் கூட வைணவ பரிபாஷைகள் தலைப்பில் தனிக் கட்டுரையாக எழுதியிருப்பேன் அல்லவா? ஆனால் இது போன்ற நடைமுறைகள் - தானே முடிவெடுத்து தானே செயல்படுத்துவது அழகல்ல (Unilateral decision and unilateral implementation) இது போன்ற நடவடிக்கைகள் எழுதுபவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலைத் தருமல்லவா! மிகவும் வருந்துகிறேன். இரா♣முத்துசாமிஉரையாடுக 16:10, 1 மே 2012 (UTC)[பதிலளி]


அந்தக் கலைச்சொற்களைத் தனியான பட்டியலாகத் தொகுப்பது நன்றே. பல பராமரிப்புப் பணிகளைச் செய்யும் போது இவ்வாறு நிகழ்ந்துவிடுவதுண்டு. வரும் காலங்களில் முக்கிய பொருத்தமற்ற தொகுப்புகள் தொடர்பாக கட்டுரையின் அல்லது பயனர் உரையாடல் பக்கத்தில் விளக்கிப் பதிவு செய்வதை வழக்கமாகக் கொள்ளலாம். சுட்டிக் காட்டியதற்கு நன்றி. --Natkeeran (பேச்சு) 17:15, 1 மே 2012 (UTC)[பதிலளி]

தங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியமைக்குப் பெரிதும் வருந்துகிறேன். இனி இது போன்ற தவறுகள் நிகழாதவாறு பார்த்துக்கொள்கிறேன். நன்றி. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 17:30, 1 மே 2012 (UTC)[பதிலளி]

46,000 கட்டுரைகள்[தொகு]

தமிழ் விக்கியின் கட்டுரை எண்ணிக்கை 46,000த்தை தாண்டியது. இன்னும் 12 நாட்களக்குப் பிறகு நான் கட்டுரை எழுதுவதை குறைத்துவிட்டு கட்டுரை தர மேம்படுத்தலில் அதிகம் கவனம் செலுத்தப் போகிறேன். அதிக முதற்பக்க கட்டுரைகளை உருவாக்க வேண்டும். நன்றி--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:17, 3 மே 2012 (UTC) 👍 விருப்பம்-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 07:47, 3 மே 2012 (UTC) 👍 விருப்பம் --மதனாகரன் (பேச்சு) 10:07, 3 மே 2012 (UTC) 👍 விருப்பம்--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:17, 3 மே 2012 (UTC)[பதிலளி]

கட்டுரை ஒன்றிணைப்புக் கொள்கை குறித்து கருத்து தேவை[தொகு]

காண்க: விக்கிப்பீடியா பேச்சு:கட்டுரை ஒன்றிணைப்பு. நன்றி--இரவி (பேச்சு) 12:12, 3 மே 2012 (UTC)[பதிலளி]

பட்டியல்கள் & பகுப்புகள்[தொகு]

முக்கிய/ஆங்கில பக்கப்பட்டியல் கொண்ட பகுப்புகளை தமிழில் பட்டியல் இடுவதற்கு அனுமதிக்கலாமே. உதாரணம் இந்திய எழுத்தாளர்கள் பட்டியல் en:List of Indian writers, தமிழ் மொழி எழுத்தாளர்கள் பட்டியல்- en:List of Tamil-language writers இவற்றிற்கான பகுப்புகள் மூலம் தகவலை எடுத்துக் கொள்ளாலாம் தான் ஆனால் பட்டியல் என்று இடுவதால் வார்ப்புரு கொடுக்கவோ, வேறு பக்கத்தில் இணைப்பு கொடுக்கவோ, பக்கம் இல்லாத தகவல்களை தொகுக்கவோ உதவும் என்று நினைக்கிறேன். விக்கி கொள்கை முரண் இருக்குமானால் அனுமதிக்க வேண்டாம் --நீச்சல்காரன் (பேச்சு) 07:50, 5 மே 2012 (UTC)[பதிலளி]

இப்படியான பட்டியல்களை அமைக்கலாம். ஆனால் தமிழ் விக்கியில் உள்ள கட்டுரைத் தலைப்புகளை மட்டும் கொண்டு அமைக்காமல், கட்டுரை இல்லாதவர்களையும் (சிவப்பு இணைப்புகளில், சிறியவர்களோ, பெரியவர்களோ) சேர்க்க வேண்டும்.--Kanags \உரையாடுக 09:03, 5 மே 2012 (UTC)[பதிலளி]
சிறீதரன் கருத்துடன் உடன்படுகிறேன். தமிழ் விக்கிப்பீடியாவின் தொடக்க காலம் முதற்கொண்டே இது போன்ற பல பட்டியல்களை உருவாக்கியே வந்திருக்கிறோம். உருவாக்க வேண்டிய கட்டுரைகளுக்கு நினைவூட்டியாகச் செயல்படும். எனவே, குறிப்பிடத்தக்கவர்கள் / குறிப்பிடத்தக்கனவற்றை மட்டுமே பட்டியலில் இடுவதும் நன்று--இரவி (பேச்சு) 10:54, 5 மே 2012 (UTC)[பதிலளி]
நன்றி அவ்விருப்பக்கங்களும் கவனக்குறைவால் நீக்கப்பட்டிருக்கலாம். மீண்டும் மீளமர்த்திவிடுங்கள்--நீச்சல்காரன் (பேச்சு) 04:09, 6 மே 2012 (UTC)[பதிலளி]

en:List of scandals in India இந்த பட்டியலை மறந்து விட வேண்டாம். இதைப்போன்ற மிகவும் தேவைப்படும் கட்டுரைப் பட்டியல்களுக்கு தனிப் பக்கம் உள்ளதா..?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:58, 9 மே 2012 (UTC)[பதிலளி]

கவனிக்க[தொகு]

விக்கிப்பீடியா:தர மேம்படுத்தல் யோசனைகள் இந்த பக்கத்தை கவனிக்கவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:15, 9 மே 2012 (UTC)[பதிலளி]

மேற்கோள்கள் இணைப்பு குறித்து[தொகு]

ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ளது போன்று பல்வேறு வகையான மேற்கோள்கள் இணைக்கும் கருவியை (Cite Button, which includes cite web, cite news, cite book, cite journal) கருவிப்பெட்டியில் இணைத்தால் உச்சாத்துணை, குறிப்புகள், மேற்கோள்கள் போன்றவற்றை இணைக்க இலகுவாக இருக்கும். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:28, 9 மே 2012 (UTC)[பதிலளி]

விருப்பத்தேர்வில் ProvIT! கருவியை செயலாக்கி, நீங்கள் கூறியதற்கு நிகரான கருவியைப் பயன்படுத்த முடியும். ஸ்ரீகாந்த் (பேச்சு) 10:48, 9 மே 2012 (UTC)[பதிலளி]

ProvIT செயல்படும் முறையை விளக்க ஏதும் பக்கமுளதா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:57, 9 மே 2012 (UTC)[பதிலளி]

நன்கு வேலை செய்கிறது, ஸ்ரீகாந்த், நன்றி! :-) @தென்காசி சுப்பிரமணியன்: ProvIT செயல்பாட்டிற்கு இலகுவாகவே உள்ளது, முயற்சிக்கவும். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:02, 9 மே 2012 (UTC)[பதிலளி]
ProvIT ஆங்கில உதவிப்பக்கம். இந்த பக்கத்தின் குறுகிய தமிழாக்க உதவிப்பக்கம் இங்கு உருவாக்கினால், பல பயனர்களுக்கு பயன்படும். தொகுத்தல் சுருக்கத்தில் அப்பக்க இணைப்பை சேர்க்கலாம், அதன் மூலம் நிறைய பயனர்கள் ProvIT பற்றி அறிய வாய்ப்புள்ளது. ஸ்ரீகாந்த் (பேச்சு) 07:38, 10 மே 2012 (UTC)[பதிலளி]

தொகுத்துக் கொண்டிருக்கிறார் குறித்து[தொகு]

தொகுக்கப்படுகிறது வார்ப்புரு இட்டிருக்கும் போது, அப்பக்கத்தில் மாற்றம் செய்வது அல்லது அப்பக்கத்தினை வேறொரு தலைப்பிற்கு மாற்றுவது (புதுத்தலைப்பு சரியாக இருப்பினும்) தடை செய்ய முடியுமா? நான் தொகுக்கும்பொழுது இவ்வாறான சிக்கல் வருகிறது. அதேபோல், ஒரே சமயத்தில் இருவர் ஒரே பக்கத்தில் தொகுக்கப்படுகிறது வார்ப்புரு இட்டதும் நேற்று நான் தொகுக்கும் போது நடைபெற்றது :-(. இதற்கு சரியான கொள்கையை கடைபிடித்தல் நலம்.

இவ்வாறு தலைப்பு மாற்றுவது அல்லது அல்லது தொகுக்கும் பொழுது, உரையாடல் பக்கத்தில் சிறுகுறிப்பு விடலாம், ஒரு நாள் அல்லது, குறிப்பிட்ட கால அளவுற்குப் பிறகும் அப்பக்கம் தொகுக்கப்படாமல் இருந்தால் இவ்வாறான கொளகையை கடைபிடிக்கலாம். இது குறித்து சான்றோர்களின் கருத்து தேவை.-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:18, 10 மே 2012 (UTC)[பதிலளி]

இப்போது பலர் தங்கள் பயனர் பெயர்வெளியில் கட்டுரைகளை ஆரம்பித்து எழுதி முடித்து விட்டுப் பின்னர் கட்டுரை வெளிக்கு மாற்றுகிறார்கள். இது ஒரு நல்ல நடைமுறை. அதனைக் கடைப்பிடித்தால் இந்தப் பிரச்சினை எழ வாய்ப்பில்லை.--Kanags \உரையாடுக 10:54, 10 மே 2012 (UTC)[பதிலளி]
(மதனாஹரன் பேச்சுப் பக்கத்தில் தினேஷ்குமார் பொன்னுசாமி கூறியுள்ளதற்கு) இவ்வாறு தொகுத்தல் முரண்பாடு ஏற்படும் போது நீங்கள் செய்த மாற்றங்கள் பக்கத்தின் அடிப்பகுதியில் இருக்கும். அங்கிருந்து நகலெடுக்கலாம். அல்லது நீங்கள் செய்த மாற்றங்கள் பெரியாதாகவும் மற்றவர்கள் செய்த மாற்றங்கள் சிறியதாகவும் இருந்தால் உங்கள் பதிப்பை சேமித்து விட்டு பிறகு அடுத்தவருடைய மாற்றத்தை நீங்களே சரி செய்துவிடலாம். பார்க்க w:en:Help:Edit conflict--shanmugam (பேச்சு) 11:08, 10 மே 2012 (UTC)[பதிலளி]
@கனக்ஸ், தொகுத்தல் முரண்பாடுகள் குறித்த உரையாடலை பார்க்க. நன்றி! சன்முகம். பக்கத்தினை பார்த்தேன், மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தமிழில் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும், விரைவில் தமிழில் மொழிபெயர்க்க முயல்கிறேன் :-) -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:14, 10 மே 2012 (UTC)[பதிலளி]

பொதுவாக ஒரு கருத்தைச் சொல்ல விரும்புகிறேன். தொகுக்கப்படுகிறது வார்ப்புரு இடுவது ஒரு வேண்டுகோள் தான். மற்ற பயனர்கள் இவ்வார்ப்புரு இட்ட பக்கங்களிலும் அனைத்து விதமான தொகுப்புகளையும் செய்வது விக்கிப்பீடியா விதிகளுக்கு உட்பட்டது தான். விக்கிப்பீடியா விதிகளுக்கு உட்பட்ட வழமையான மாற்றங்களுக்கும் பேச்சுப் பக்கத் தகவல் இட வேண்டும் என்று எதிர்பார்ப்பது குறுகிய வளங்களை உடைய தமிழ் விக்கிப்பீடியாவின் உழைப்பை வீணாக்கும். மற்றவர்களின் தொகுப்புகளை நன்னோக்கில் எடுத்துக் கொண்டு வழமையான பணிகளை மேற்கொள்வதே சிறப்பு. இதனை முன்னிட்டு விதிகளை மீறுவதாகக் கருதுவதும் மற்றவர்களைத் தொகுக்க வேண்டாம் என்பதும் பயனர்களிடையேயான நல்லுறவுக்கும் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கும் உதவாது. "தங்கள் கட்டுரையைத் தொகுத்ததற்கு மன்னிக்கவும்" என்ற அளவுக்குச் சில பயனர்கள் வருந்துவது கவலையளிக்கும் போக்கு. ஒரே பயனர் எண்ணற்ற கட்டுரைகளில் இந்த வார்ப்புருவை இட்டு நெடுநாட்கள் கட்டுரையைத் தொகுக்காமல் இருப்பதையும் தவிர்க்க வேண்டும். நன்றி. --இரவி (பேச்சு) 16:44, 10 மே 2012 (UTC)[பதிலளி]

தொகுக்கப்படுகிறது வார்ப்புரு இட்டிருக்கும் பொழுது பக்கத்தினை நகர்த்துதலால், தட்டச்சு செய்து வைத்திருந்தவைகள் வீணாகின்றன, ஏற்கனவே பலமுறைகளை இவ்வாறு பல பயனர்களுக்கு வந்திருக்கிறது, சாதாரணமாக தொகுத்தல் பணியின் போது இருவர் ஒரே சமயத்தில் தொகுக்கும்போது முரண் ஏற்படுகிறது. குறுகிய வளங்களை உடைய தமிழ் விக்கிப்பீடியாவில் ஒருவர் ஒரு பணியில் தீவிரமாக உழைத்துக்கொண்டிருக்கும் பொழுது, மற்றொருவர், செய்த சிறிய மாற்றத்தினால் (மாற்றம் அவசியமானாதாயினும்), அவருடைய உழைப்பும், நேரமும் வீணாகுவது, மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மற்றவர்கள் வருந்தும் அளவிற்கு செய்துவிட்டு, பிறகு மன்னிப்பு கேட்பதில் எனக்கு உடன்பாடில்லை. ரவி சொன்னது போல, பயனர்களிடையேயான நல்லுறவுக்கும் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு தடை வரக்கூடாது என்பதில் கவனம் செலுத்தியே, அதற்கான ஒரு தெளிவான கொள்கை தேவை என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளேன். under construction வார்ப்புருவில் உள்ளது போல, கடைசியாக தொகுக்கப்படுகிறது வார்ப்புருவிலும், அவ்வார்ப்புருவை இட்ட பயனர் பெயரினையும் குறிக்கலாம். அப்பக்கத்தில் ஏதேனும் மாற்ற செய்ய விரும்பினால், அப்பயனரின் பேச்சு பக்கத்தில் ஒரு குறிப்பை இட்டுவிட்டு பிறகு தேவையான மாற்றங்களை செய்யலாம், அல்லது அது குறித்து அப்பயனரிடம் உரையாடலாம். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:13, 11 மே 2012 (UTC)[பதிலளி]

//தொகுக்கப்படுகிறது வார்ப்புரு இட்டிருக்கும் பொழுது பக்கத்தினை நகர்த்துதலால், தட்டச்சு செய்து வைத்திருந்தவைகள் வீணாகின்றன, ஏற்கனவே பலமுறைகளை இவ்வாறு பல பயனர்களுக்கு வந்திருக்கிறது//

இது குறித்து இங்கு சோதித்துப் பார்த்தேன். ஒருவர் ஒரு பக்கத்தைத் தொகுக்கும்போது, மற்றொருவர் அதனை வழிமாற்றுடனோ வழிமாற்று இன்றியோ நகர்த்தினாலும் கூட, தட்டச்சு செய்து வைத்திருக்கும் உரை முதலில் உள்ள கட்டுரைப் பெயரிலேயே சேமிக்கப்படுகிறது. வேறு யாராவது ஒருவரும் சோதித்துப் பார்த்து விட்டு உறுதிப்படுத்தலாம்.

//under construction வார்ப்புருவில் உள்ளது போல, கடைசியாக தொகுக்கப்படுகிறது வார்ப்புருவிலும், அவ்வார்ப்புருவை இட்ட பயனர் பெயரினையும் குறிக்கலாம்.//

செய்யலாம்.

//அப்பக்கத்தில் ஏதேனும் மாற்ற செய்ய விரும்பினால், அப்பயனரின் பேச்சு பக்கத்தில் ஒரு குறிப்பை இட்டுவிட்டு பிறகு தேவையான மாற்றங்களை செய்யலாம், அல்லது அது குறித்து அப்பயனரிடம் உரையாடலாம்.//

வார்ப்புரு:தொகுக்கப்படுகிறது பக்கத்தில் கூடிய விரைவில் மேம்படுத்த உத்தேசித்திருக்கிறார் என்னும் வரியை நீக்குவது நன்று. தொகுக்கும் போது மட்டுமே இவ்வார்ப்புருவைப் பயன்படுத்துவதும் ஒரு பயனர் அன்று / அவ்வேளைக்கான கடைசித் தொகுப்பு முடிந்ததும் இதனை உடனே நீக்கிவிடுவதும் நன்று. இவ்வாறு உருவாக்கப்படுவது பலரை ஈர்க்கக்ககூடிய முக்கிய தலைப்பிலான கட்டுரை என்றால் உடனுக்குடன் மற்றவர்கள் தொகுக்க விழைவது இயல்பு மட்டும் அன்று அவசியமும் ஆகும். எனவே, மணிக்கணக்கில் இத்தகைய வார்ப்புருவை இடுவதும் சரியாக இருக்காது. கட்டுரையை விரிவாக்கும் பயனர் சிறு சிறு தொகுப்புகளாகவேனும் சில மணித்துளிகளுக்கு ஒரு முறை இற்றைப்படுத்தி வந்தால் மற்றவர்கள் அதனைக் கவனித்துத் தொகுக்காமல் இருக்க வாய்ப்புண்டு. விக்கிப்பீடியா ஒரு இணைய வழி கூட்டு முயற்சி. அதன் அடிப்படைத் தன்மையை நீர்த்துப் போகச் செய்யாமல் ஒவ்வொரு பயனரும் தத்தம் தொகுப்புப் பாணியை வகுத்துக் கொள்வதே நன்று. நன்றி--இரவி (பேச்சு) 05:02, 11 மே 2012 (UTC) 👍 விருப்பம்-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 05:27, 11 மே 2012 (UTC)[பதிலளி]

வார்ப்புரு:தொகுக்கப்படுகிறது பயன்படுத்துவதன் மூலக் காரணம், பக்கம் குறுங்கட்டுரையாக இருப்பதால் நீக்க வேண்டாம் என்பதற்காக, தொகுத்தல் முரணை தவிர்க்க அல்ல :) ஸ்ரீகாந்த் (பேச்சு) 07:40, 11 மே 2012 (UTC)[பதிலளி]
அப்படியானால் வார்ப்புரு:வேலை நடந்துகொண்டிருக்கிறது மற்றும் வார்ப்புரு:தொகுக்கப்படுகிறது இரண்டும் ஒன்றா? ---- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:54, 11 மே 2012 (UTC)[பதிலளி]
விக்கிப்பீடியா போன்ற ஒரு திறந்த அமைப்பில் இவ்வார்ப்புருவால் எவ்வித நன்மையும் இருப்பதாகத் தெரியவில்லை. சிறீகாந்து குறிப்பிடுவது போல இது தொகுத்தல் முரணைத் தவிர்க்க மட்டுமே நீங்கள் பயன்படுத்துவதானால் அதனைப் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது.--Kanags \உரையாடுக 08:43, 11 மே 2012 (UTC)[பதிலளி]
முரணைத் தவிர்க்க மட்டுமல்லாமல், தொகுத்தல் பணியும் நடைபெறுவதால், இவ்வார்ப்புருவை பயன்படுத்தி வந்தேன். பயனில்லாத வார்ப்புருவை பயனுள்ளதாக மாற்றுவதற்கு வழியில்லாததால், அவற்றை பயன்படுத்தாமல் இருப்பதே நலம் :-( -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:54, 11 மே 2012 (UTC)[பதிலளி]
"தொகுக்கப்படுகிறது" வார்ப்புரு முற்றாகவே பயனற்றது என்று சொல்லிவிட முடியாது. நான் இவ்வார்ப்புருவைப் பயன்படுத்துவது இல்லை என்றாலும், பிறர் எழுதும் கட்டுரைகளில் இவ்வாறான வார்ப்புருவைப் பார்த்தால் அதற்கு மதிப்பு அளிப்பது வழக்கம். ஆனாலும் இந்த வார்ப்புருவைப் பயன்படுத்துபவர்கள் தொகுத்துக்கொண்டு இருக்கும்போது மட்டும் அதனைப் பயன்படுத்தினால் நல்லது. --- மயூரநாதன் (பேச்சு) 06:10, 12 மே 2012 (UTC)[பதிலளி]
நல்ல கலந்துரையாடல். இந்த வார்ப்புரு இடாமலே நாம் தொகுத்துக்கொண்டிருக்கும் சில கட்டுரைகளை வேறொருவர் அந்நேரம் மாற்றும் போது நமக்கு எரிச்சல் வருவது இயல்பே. விக்கிப்பீடியாவின் சிறப்பே மற்றவர்களின் அறிவையும் சேர்த்து வைப்பதுதான். அதனால் அக்கட்டுரை இப்போது எனது பார்வைக்கு வரும்போது நான்(பயனர்) அறிந்ததை எழுதவே விரும்புவேன்(சமீபத்தில் [கட்டுரையில்] இதுபோன்ற வார்ப்புரு இருந்த பக்கத்தை நான் மாற்றினேன். எனினும் இரண்டு மணிநேர இடைவெளி இருந்தது). இப்பொழுது அதனை திருத்தாவிட்டால் பிறகு அது எனது பார்வையில் படாமல், அல்லது மறந்து போகலாம். இரவி சொல்வது போல இவ்வார்ப்புரு இட்ட பக்கத்தை தொகுத்தால் மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியமில்லை. மாற்றம் இருந்தால் தொகுத்தல் பக்கத்தில் மாற்றங்கள் தெரிவதால் தனியாக கொள்கை தேவையில்லை, எனினும் அறிவுறுத்தல்கள், வழிகாட்டல் போன்று எழுதிவைக்கலாம். --மாகிர் (பேச்சு) 16:51, 12 மே 2012 (UTC)[பதிலளி]

தொகுத்தல் முரண் விரைவில் சரித்திரமாகக் கூடும். கூகிள் நிரலாக்க பருவத்தில் ஒரே நேரத்தில் பலர் தொகுக்ககூடிய முன்னோடி உருவாக்கிக்கொண்டுள்ளார் ஓர் மாணவர். ஸ்ரீகாந்த் (பேச்சு) 20:16, 13 மே 2012 (UTC)[பதிலளி]

தலைப்பு மாற்ற வேண்டுகோள்[தொகு]

பேச்சு:பாலம்-இந்தப் பக்கத்தைக் கவனிக்கவும். --மதனாகரன் (பேச்சு) 11:16, 10 மே 2012 (UTC)[பதிலளி]

கூட்டு முயற்சியும் சிறப்புக் கட்டுரையும்[தொகு]

கூட்டு முயற்சி வார்ப்புருவில் இந்த வாரக் கூட்டு முயற்சிக் கட்டுரையான சூழல் மாசடைதலை இற்றைப்படுத்தி, விரிவாக்கி மேம்பட்ட சிறப்புக் கட்டுரையாக்க உதவுங்கள். நன்றி. என்றுளதே. ஆனால் இப்போது தான் சிறப்புக்கட்டுரைகள் கண்டுகொள்ளப்படுவதில்லையே.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:48, 11 மே 2012 (UTC)[பதிலளி]

வார்ப்புருவைத் திருத்தியுள்ளேன் :)--இரவி (பேச்சு) 16:35, 11 மே 2012 (UTC)[பதிலளி]

தணிக்கை என்ற சொல் வெவ்வேறு பொருளில்[தொகு]

தணிக்கை என்ற சொல் இலங்கைத் தமிழ் வழக்கில் censor என்ற பொருளில் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் தமிழ்நாட்டு வழக்கில் Audit என்ற பொருளில் பயன்படுத்தப்படுவது போல் உணரமுடிகின்றது. Audit என்பதை கணக்காய்வு என ஈழத்தில் பயன்படுத்துகின்றோம். தமிழ் விக்கியிலும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வேறுபட்ட பொருளுடன் கையாளப்பட்டுள்ளது.

எ.கா;

பொது வழக்கில் இலங்கையில் தணிக்கை என்பது censor என்றே அறியப்பட்டுள்ளது. எனவே பக்கவழிமாற்று செய்வது அவசியமாகப்படுகின்றது.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 07:19, 14 மே 2012 (UTC)[பதிலளி]

தணிக்கை என்பது இரண்டு வெவ்வேறு பொருளில் தமிழகத்தில் பயன்படுத்தப்படுகிறது போல் தெரிகிறது. audit இற்கு கணக்காய்வு என்ற சொல் நல்ல பொருத்தம். அது ஏன் பயன்படுத்தப்படுவதில்லை?--Kanags \உரையாடுக 08:56, 14 மே 2012 (UTC)[பதிலளி]
தணிக்கை என்ற சொல் செயற்பாடுகளை ஆராய்வது என்ற பொருளில் கொள்ளப்படுகிறது. எனவே கணக்கிற்கும் பொருந்துகிறது; ஆக்கங்களை நெறிப்படுத்துவதையும் உணர்த்துகிறது. தவிர சுற்றைச்சூழல், மின்சாரப் பயன்பாடு இவற்றிற்கு இடப்படும் விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதை ஆய்வதையும் குறிக்கிறது. ஆங்கில auditஇன் முழு வீச்சிற்கும் இணையாகத் தமிழகத்தில் பயன்படுத்தப்படுகிறது. கணக்காய்வு என்பது மிகக் குறுகியத் துறைக்கு மட்டுமே பொருந்துவதாக அமையும்.--மணியன் (பேச்சு) 15:21, 14 மே 2012 (UTC)[பதிலளி]

அருள்கூர்ந்து, இது போன்ற உரையாடல்களை கலைச்சொல் ஒத்தாசை பக்கத்திலோ அந்தந்த கட்டுரைகளின் பேச்சுப் பக்கங்களிலோ மேற்கொள்ள வேண்டுகிறேன். இப்பொழுதே ஆலமரத்தடிக்கு 74 தொகுப்புப் பக்கங்கள் உள்ளன ! வருங்காலத்தில், தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி, செயல்பாடு, வரலாறு குறித்து யாரேனும் அறிய விரும்புவார்கள் எனில், அவர்களுக்கு எந்த வகை உரையாடல்கள் பயனுள்ளதாக இருக்குமோ அவற்றை மட்டும் ஆலமரத்தடியில் மேற்கொள்வது உகந்ததாக இருக்கும். நன்றி--இரவி (பேச்சு) 07:26, 15 மே 2012 (UTC)[பதிலளி]

படிமங்களுக்கு பகுப்பு சேர்த்தல்[தொகு]

விக்கிப்பீடியா:படிமங்களை அடையாளப்படுத்தலும் வகைப்படுத்தலும் பணியில் ஈடுபடும் பொழுது, எண்ணற்ற பகுப்புகளும் துணைப்பகுப்புகளும், உருவாக்குவது அவசியமாகிறது. இது குறித்து கருத்துக்கள் தேவை. பார்க்கவும்.-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:25, 15 மே 2012 (UTC)[பதிலளி]

என்னைப் பொருத்தவரை இது மிகவும் தேவையான பணி. கட்டுரையை நாம் தமிழில் தேடல் பலகையில் அடித்து தெரிந்து கொள்ளலாம். ஆனால் படிமத்திற்கு சில பேர் எண்களை மட்டும் வைத்தே தரவேற்றுவர். உதாரனத்திற்கு எனக்கு சங்ககாலம் பற்றி மட்டும் படிமங்கள் தேவை என்றால் எப்படிக் கண்டறிவது? அதுவே சங்ககால படிமங்களுக்கு தனிப்பகுப்பிருந்தால் தமிழில் அடித்து தெரிந்து கொள்ளலாமே. அந்த வகையில் என் முழு ஆதரவு இதற்குண்டு.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:38, 15 மே 2012 (UTC)[பதிலளி]
என் கருத்தை விக்கிப்பீடியா பேச்சு:படிமங்களை அடையாளப்படுத்தலும் வகைப்படுத்தலும் பக்கத்தில் பகிர்ந்து உள்ளேன். உரையாடலை அங்கு தொடர வேண்டுகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 12:46, 15 மே 2012 (UTC)[பதிலளி]

சிறப்புப் படமும் பயனர் பெயரும்[தொகு]

ஆங்கில விக்கியில் இன்றைய சிறப்புப் படத்தில் புகைப்படம் எடுத்தவரின் பெயர் போடும் வழக்கம் உள்ளதே. அதைப் போல் தமிழில் கொண்டு வந்தால் என்ன?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:51, 15 மே 2012 (UTC)[பதிலளி]

ஒரு சில வாரங்களாக தமிழ் விக்கி ஊடகப் போட்டிப் படங்கள் முதற்பக்கத்தில் இடம்பெற்ற போது, அவற்றில் படம் எடுத்தவர் பெயரும் இருந்தது. அதைப் போலவே எல்லா படங்களுக்கும் செய்வதில் யாருக்கும் மறுப்பு இருக்க முடியாது. கடுமையான கருத்து மாறுபாடு ஏற்படும் போது மட்டும் வாக்கெடுப்பைத் துவக்கலாம். விக்கிப்பீடியா பேச்சு:இன்றைய சிறப்புப் படம் பக்கத்தில் உரையாடலைத் தொடரலாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி--இரவி (பேச்சு) 14:36, 15 மே 2012 (UTC)[பதிலளி]

 ஆதரவு

இதற்கு வாக்கெடுப்பு எதுவும் தேவையில்லை. ஆனாலும், சொந்தப் படங்களுக்கு மட்டுமே அவரவர்களின் பெயர்களைப் போடலாம்.--Kanags \உரையாடுக 21:11, 15 மே 2012 (UTC)[பதிலளி]

பிழை[தொகு]

இன்று நான் தொகுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் போது, கீழே உள்ளவாறு மூன்று முறை நிகழ்ந்தது, இதனை எவ்வாறு புகாராக தெரிவிப்பது?

If you report this error to the Wikimedia System Administrators, please include the details below. Request: POST http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D&action=submit, from 116.50.59.180 via cp1005.eqiad.wmnet (squid/2.7.STABLE9) to () Error: ERR_SOCKET_FAILURE, errno (98) Address already in use at Wed, 16 May 2012 05:02:53 GMT--- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 05:16, 16 மே 2012 (UTC)[பதிலளி]

பௌத்தம்-தகவல் தேவை[தொகு]

தமிழ் நாட்டிலுள்ள புத்த மதக் கோயில்கள் பற்றி ஏதும் பட்டியல் உள்ளதா? ஏதேனும் இணைப்போ அல்லது புத்தகமோ தெரிந்தால் கூறி உதவுங்களேன். நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:34, 16 மே 2012 (UTC)[பதிலளி]

முன்னாள் தமிழ் விக்கிப்பீடியா பயனரான வினோத் இச்சமயத்தில் மிகுந்த ஆர்வமும் அறிவும் உள்ளவர். அவர் ஒரு வேளை அறிந்திருக்கலாம். vinodh@virtualvinodh.com என்ற முகவரிக்கு எழுதிப் பாருங்கள். இதைப் போன்ற கேள்விகளை விக்கிப்பீடியா:உசாத்துணை பக்கத்தில் கேட்கலாம்--இரவி (பேச்சு) 06:15, 24 மே 2012 (UTC)[பதிலளி]
நல்ல ஆய்வாளர்களுள் ஒருவராகக் கருதப்படும் மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் பௌத்தமும் தமிழும் என்று ஒரு நூல் எழுதியுள்ளார். அதில் பல தகவல்கள் இருக்கும். சுவீடனில் உள்ள உப்பசாலா பல்கலைக்கழகத்தில் உள்ள பேராசிரியர் பீட்டர் சால்க்கு (Peter Schalk) என்பாரின் படைப்புகளிலும் தகவல்கள் கிடைக்கும். நாகப்பட்டிணம் சூடாமணி விகாரா என்பது புகழ்பெற்ற கோயில்களுள் ஒன்று.--செல்வா (பேச்சு) 21:18, 27 மே 2012 (UTC)[பதிலளி]

பக்கத்தின் அடிப்பகுதி குறித்து[தொகு]

ஆலமரத்தடியில் தலைப்பைச்சேர் பொத்தான் அழுத்தும்போது, COTWupdate வார்ப்புருவிற்கு பிறகு தலைப்பு சேர்க்கப்படுகிறது, இதனை மாற்ற முடியுமா? -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 06:44, 16 மே 2012 (UTC)[பதிலளி]

வாழ்க்கையில் சில வேளை, மேலே போகிறவர்களையும் கீழே இழுத்து விட வேண்டியது தான் :) --இரவி (பேச்சு) 06:15, 24 மே 2012 (UTC)[பதிலளி]

Updates and Ideas for and from the India communities (May 2012)[தொகு]

Greetings! Here is another series of updates from across Indic language communities which might be useful for the Tamil community!

  • The first Indian language Wikipedia conference: WikiSangamolsavam was successfully conducted by Malayalam Wikipedians in Kollam, Kerala.
  • The Film project in Hindi Wikipedia has been active since December, 2011 with 4 editors and over 1000 film articles. It's also an open invitation for more members to hop in and expand the project scope.
  • Gujarati Wikipedians have started working on their third book on Wikisource called Bhadrambhadra. They are also planning to conduct a Wiki summer camp for students in Gujarat.
  • The Assamese community is doing great on a bunch of projects including the CD project, medicine project and the ongoing photo contest organized by volunteers. The community is also planning an event to celebrate the 10th anniversary of Assamese Wikipedia on June 10th, 2012.
  • The translation project in Kannada Wikipedia is 12 members strong.
  • The Odia community members have implemented the social media pilot to attract newbies and engage them in editing via Facebook. This plan requires mentors from the existing community to guide new users to edit Wikipedia
  • Here's is a list of all the Outreach documents translated in Indic languages by respective community members. This is work in progress and all community members are welcome to help translate more documents!
  • Here's a blog post by Barry Newstead, the Chief Global Development Officer, WMF on his wonderful experience at the WikiSangamolsavam in Kerala.
Please reach out to Shiju or I for any support you need. (Our email IDs are shiju@wikimedia.org and noopur@wikimedia.org respectively.)

Please share your comments and ideas below on any of these updates.Noopur28Noopur28 (பேச்சு) 09:31, 16 மே 2012 (UTC)[பதிலளி]

இந்திய விக்கி இதழ்[தொகு]

இந்திய விக்கிகளின் இதழ் விக்கிப்பத்ரிகா சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. பார்க்க. தமிழ் விக்கி செய்திகளை தொகுக்க உதவிய பயனர்:Shanmugamp7 நன்றிகள் ஸ்ரீகாந்த் (பேச்சு) 18:23, 17 மே 2012 (UTC)[பதிலளி]

அரசாங்க படிமங்கள் தொடர்பாக[தொகு]

இங்கு பார்க்க விக்கிப்பீடியா பேச்சு:படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:59, 18 மே 2012 (UTC)[பதிலளி]

நிருவாகி தரத்துக்கான வேண்டுகோள்[தொகு]

சண்முகத்தை நிருவாகியாக நியமிப்பதற்குப் பரிந்துரைத்துள்ளேன். உங்கள் வாக்குகளை அளியுங்கள். பார்க்க: விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்#நடப்பு வேண்டுகோள் --மதனாகரன் (பேச்சு) 11:03, 18 மே 2012 (UTC)[பதிலளி]

அரவிந் சுகுமார்[தொகு]

நேற்று எனது முதலாவது கட்டுரையை எழுத முயன்று தவறுதலாக வேறு இடத்தில் இட்டுத் தொலைத்துவிட்டேன். எனவே அதை விடுத்து இன்று ஒரு புதிய கட்டுறையை எழுதத் தொடங்கி முடித்து விட்டேன். கட்டுரை எழுதப்பட்டுள்ள விதம் குறித்துத் தங்களது கருத்துக்களை அறிய விரும்புகின்றேன். இது என்னுடைய முதற் தடவை என்ற படியால், ஏதாவது பிழைகள் சுட்டிக்காட்டப்படின் இனிவருங் காலங்களில் அவற்றைத் திருத்திக்கொள்ள முடியும். இன்னும் என்னுடைய பயனர் பக்கத்தை வடிவமைக்கவில்லை(தற்போதுதான் அதை உணர்ந்தேன்). எனவே பின்னூட்டங்களை எனது மின்னஞ்சல் முகவரியான aravinthsjc@googlemail.com இற்கு அனுப்புங்கள். தலைப்பு: குதிரைலாட நண்டு-------- நன்றி--அரவிந் சுகுமார்

விக்கிமூலம் குறித்து வேண்டுகோள்[தொகு]

விக்கிமூலத்தின் சில மாற்றங்கள் தேவைப்படுகின்றன:

  • பகுப்புகள் சேர்ப்பதற்கான, ஆட்கேட் கருவி தேவைப்படுகிறது.
  • விக்கிமூலத்திலும் பங்களிப்பாளர் அறிமுகம் செய்யலாமே?
  • தலைப்புகள் (Page Titles) ஆங்கிலத்திலேயே உள்ளது, தமிழாக்கம் செய்யலாமே?

--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 06:48, 19 மே 2012 (UTC)[பதிலளி]

http://ta.wikisource.org/wiki/Wikisource:%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF எனுமிடத்திற்கு நகர்த்தப்பட்டது.
தினேஷ்குமாரின் வேண்டுகோளை இங்குள்ள தொழிநுட்ப வல்லுனர்கள் கவனிக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 22:50, 19 மே 2012 (UTC)[பதிலளி]

தெளிவுபடுத்தியமைக்கு நன்றிகள்! விக்கிமூலத்திற்கும் நகர்த்தியுள்ளேன். --மதனாகரன் (பேச்சு) 02:30, 20 மே 2012 (UTC)[பதிலளி]

விக்கிமீடியா சிறப்பம்சங்கள், ஏப்ரல் 2012[தொகு]

விக்கிமீடியா சிறப்பம்சங்கள், ஏப்ரல் 2012 வெளிவந்துள்ளது. இது முழுவதும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேலும் இதில் தமிழ் விக்கி ஊடகப் போட்டி பற்றிய குறிப்பும் உள்ளது.--சண்முகம் (பேச்சு) 12:48, 19 மே 2012 (UTC)[பதிலளி]

புதிய பயனர்களின் கோப்பு பதிவேற்றம்[தொகு]

கோப்பை பதிவு ஏற்றுவது எப்படி?

இது பயனர்:Mkarthikeyan அவர்களின் கையொப்பமிடாத கேள்வி.. கார்த்திகேயன் தங்கள் உரையாடல் பக்கத்தைக் காணவும்

அவர் புதிய பயனர் என்பதால் கோப்பைப் பதிவேற்று கருவி அவருக்கு இன்னும் வரவில்லை. ஆனால் எப்போதிருந்து புதிய பயனர்களால் கோப்பைப் பதிவேற்ற இயலும் எனக் கூற இயலுமா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:49, 19 மே 2012 (UTC)[பதிலளி]

//Wiki user accounts that are more than four days old and have made at least 10 edits are considered autoconfirmed. Autoconfirmed status (or membership of the 'confirmed' group; see below) is required to move pages, edit semi-protected pages, and upload files or upload a new version of an existing file.// http://en.wikipedia.org/wiki/Wikipedia:User_access_levels#Autoconfirmed_users --இரவி (பேச்சு) 15:36, 19 மே 2012 (UTC)[பதிலளி]

நிர்வாகிகளின் உதவி தேவை[தொகு]

தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகிகள் பட்டியல் பக்கத்தில் பயனர் நிர்வாகிகளாக இருப்பவர்கள் குறித்த விவரங்களை பயனராகச் சேர்ந்த நாள், நிர்வாகி அணுக்கம் பெற்ற நாள், தொகுப்புகள் எனும் சில தலைப்புகளின் கீழ் அட்டவணைப்படுத்த முயன்ற போது பயனர் பெயர் ஆங்கிலத்தில் வைத்திருந்தவர்களது பயனராகச் சேர்ந்த நாள், தொகுப்புகள் போன்றவைகளை அறிந்து உள்ளீடு செய்ய முடிந்தது. சில ஆண்டுகளாகப் பங்களிக்க முடியாத நிலையிலிருக்கும் நிர்வாகிகள் கடைசியாகப் பங்களிப்பு செய்த நாள் தகவலையும் பெற முடிந்தது. தமிழில் பயனர் பெயர் வைத்திருப்பவர்களின் தகவலை என்னால் பெற முடியவில்லை. நிர்வாகி அணுக்கம் பெற்ற நாள் குறித்த தகவலை விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்/முந்தைய வேண்டுகோள்கள் பக்கங்களின் வழியாகப் பெற முடிந்தது. இவற்றிலும் சில தகவல்களை என்னால் பெற இயலவில்லை. இது குறித்த விவரம் முழுமையாக அறிந்த நிர்வாகிகள் இக்கட்டுரைப் பக்கத்தில் நிரப்பப்படாத தகவல்களை நிரப்பி நிர்வாகிகள் பட்டியல் பக்கத்தின் அட்டவணையை முழுமையாக்கி உதவிட வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 03:45, 21 மே 2012 (UTC)[பதிலளி]

நாமே முழுமையாக்கி விடலாம். தொகுப்பு எண்ணிக்கை2 என்றுள்ள கருவியைப் பயன்படுத்துங்கள். --மதனாகரன் (பேச்சு) 12:31, 21 மே 2012 (UTC)[பதிலளி]

சிறு மாற்றம் தேவை[தொகு]

இந்திய விக்கிகளின் இதழ் விக்கிப்பத்ரிகாவின் தமிழ் விக்கிப்பீடியாவிற்கான செய்தியைச் சற்று முன் பார்த்தேன். தமிழ் விக்கிப்பீடியாவிற்கான செய்தியில்

Tamil Wikipedian User:Theni.M.Subramani's book on Tamil Wikipedia (titled Tamil Wikipedia) released during Wikipedia 10 celebrations at Chennai got best Tamil book award for the year 2011, in computer science category from Govt of Tamilnadu.

என்று தமிழ் விக்கிப்பீடியா நூலுக்கான தமிழ்நாடு அரசு விருது செய்தி படத்துடன் தரப்பட்டிருந்தது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இக்குறிப்பில் for the year 2011 என்பது for the year 2010 எனக் குறிப்பிட வேண்டும். இந்தக் குறிப்பில் சிறந்த நூலாசிரியருக்கான விருதினை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார் என்று குறிப்பிடுவது மேலும் சிறப்பாக இருக்கும். தொடர்புடையவர்கள் மாற்றம் செய்து உதவலாமே...? --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 04:04, 21 மே 2012 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று மேலும் மாற்றங்கள் செய்ய விரும்பினால் நீங்களே இந்த பக்கத்தை தொகுக்கலாம்.--சண்முகம் (பேச்சு) 04:21, 21 மே 2012 (UTC)[பதிலளி]

தொகுத்தல் உதவி[தொகு]

விக்கிப்பீடியா:தொகுத்தல் இப்பக்கம் இன்னும் தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. செய்தால் புதுப்பயனர்களுக்கும் உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 07:08, 22 மே 2012 (UTC)[பதிலளி]

இதனை இந்த வாரக் கூட்டு முயற்சிக் கட்டுரைக்குப் பரிந்துரைக்கலாமே..--மணியன் (பேச்சு) 11:20, 22 மே 2012 (UTC)[பதிலளி]