விக்கிப்பீடியா பேச்சு:படிமங்களை அடையாளப்படுத்தலும் வகைப்படுத்தலும்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்கிப்பீடியா:படிமங்களை அடையாளப்படுத்தலும் வகைப்படுத்தலும் பணியில் ஈடுபடும் பொழுது, எண்ணற்ற பகுப்புகளும் துணைப்பகுப்புகளும், உருவாக்குவது அவசியமாகிறது. இது குறித்து கருத்துக்கள் தேவை. பார்க்கவும்.-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:25, 15 மே 2012 (UTC)[பதிலளி]

என்னைப் பொருத்தவரை இது மிகவும் தேவையான பணி. கட்டுரையை நாம் தமிழில் தேடல் பலகையில் அடித்து தெரிந்து கொள்ளலாம். ஆனால் படிமத்திற்கு சில பேர் எண்களை மட்டும் வைத்தே தரவேற்றுவர். உதாரனத்திற்கு எனக்கு சங்ககாலம் பற்றி மட்டும் படிமங்கள் தேவை என்றால் எப்படிக் கண்டறிவது? அதுவே சங்ககால படிமங்களுக்கு தனிப்பகுப்பிருந்தால் தமிழில் அடித்து தெரிந்து கொள்ளலாமே. அந்த வகையில் என் முழு ஆதரவு இதற்குண்டு.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:38, 15 மே 2012 (UTC)[பதிலளி]
அவசியமான பணி தான். ஒரு பகுப்புக்கு ஒரு படிமம் என்ற அளவில் ஏகப்பட்ட பகுப்புகளை உருவாக்கி விடாமல், இயன்ற அளவு பெரும்பகுப்புகளாகச் செய்வது நன்று. கட்டுரைகளைப் பகுப்பதற்கும் இதே அணுகுமுறையைத் தான் மேற்கொள்கிறோம். ஒரு பகுப்பில் படிமங்களின் அளவு மிகவும் கூடும்போது தேவைப்பட்ட தனிப்பகுப்புகளை உருவாக்கிக் கொள்ளலாம். எடுத்துக்காட்டுக்கு, ஒவ்வொரு மொழி வாரியாகவும் நடிகர்கள், எழுத்தாளர்கள் என்று பகுக்காமல் ஒட்டு மொத்தமாகவே நடிகர்கள், எழுத்தாளர்கள் என்று பகுக்கலாம். --இரவி (பேச்சு) 12:46, 15 மே 2012 (UTC)[பதிலளி]
இரவி, சுமார் 666 வகைப்படுத்தாத படிமங்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் மட்டும் உள்ளன, இது தவிர்த்து, சரியாக மற்றும் முறையாக பகுப்புகளில் இடப்படாத படிமங்கள் எண்ணற்றவை. பகுப்புகளில் ஒரு படிமம் இருந்தாலும், சரியான இடத்தில் இருப்பதே சிறப்பு எனக்கு தோன்றுகிறது. எழுத்தாளர்கள் என்று பகுப்பிற்குள் துனைப்பகுப்புகள் சேர்த்துவிடலாம். படிமங்கள் அதிகமாகும் போது, இது எளிதாகவே இருக்கும். எழுத்தாளர்கள் மற்றும் நடிகர்கள் என்று மட்டும் பகுப்பு இட்டால், மீண்டும் ஒருமுறை துப்புரவு செய்வது அவசியமாகிவிடும். :-) -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 07:04, 16 மே 2012 (UTC)[பதிலளி]


விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tamil Nadu
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


இப்பகுப்பில் உள்ள உரியக்கோப்புகளை, தமிழ்நாடு பெரும்பகுப்பின், துணைப்பகுப்புகளுக்கும் மாற்றக்கோருகிறேன். அங்குள்ள கோப்புகள், பிற உலகமொழியினரின், அதேவகைக்கோப்புகளோடு, முறைப்படி இணைக்கப்பட்டுள்ளன. வணக்கம்.பயனர்:தகவலுழவன்/கையொப்பம்
தகவலுழவன், அவ்விருபகுப்புகளையும் பார்வையிட்டேன், மாற்ற வேண்டுமென்று கூறியுள்ளீர்கள் அதாவது, TamilWiki_Media_Contest பகுப்பிலிருந்து நீக்க வேண்டுமா அல்லது, அதனுடன் சேர்த்து மற்ற துணைப்பகுப்புகளையும் சேர்க்கவேண்டுமா? -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 07:04, 16 மே 2012 (UTC)[பதிலளி]
தகவலுழவன் கூறியது வேறு பகுப்புகளுக்குள்ளும் சேர்க்க வேண்டும் என்பதையே. Category:TamilWiki_Media_Contest இலிருந்து எடுத்து விட வேண்டாம். அனைத்தையும் தமிழ்நாடு பகுப்புக்குள் இடாமல், தேவையான உபபகுப்புகளுள்ளும் சேர்க்க வேண்டும்.--Kanags \உரையாடுக 08:08, 16 மே 2012 (UTC)[பதிலளி]
விளக்கத்திற்கு நன்றி Kanags!, விரைந்து அப்பணியை மேற்கொள்கிறேன்.-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:27, 16 மே 2012 (UTC)[பதிலளி]
கனகு!தெளிவாக கூறியமைக்கு நன்றி. பயனர்:தகவலுழவன்/கையொப்பம்

ஆயிரக்கணக்கான படிமங்கள் தொடர்பான பணி என்பதால் இதனை நன்கு திட்டமிட்டு விக்கி சமூகத்தின் ஒப்புதல் பெற்றுச் செய்வது சீர்மை காக்க உதவும். என் ஐயங்கள்:

  • தற்போது தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள படிமங்கள் குறித்த பகுப்புகளின் பெயர்களை அறிவது எப்படி? பகுப்பு:படிமங்கள் என்பதனைத் தாய்ப் பகுப்பாகக் கொண்டு அனைத்துப் படிமப் பகுப்புகளையும் இதன் கீழ் இணைக்கலாமா? முதலில் படிமப் பகுப்புப் பெயர்களுக்கான பெயரிடல் முறையை இறுதி செய்து இவற்றில் சீர்மை கொண்டு வர வேண்டும். இது தொடர்பாக காமன்சில் பரிந்துரைக்கப்படும் முறைகளை ஒப்பு நோக்கலாம்.
  • காமன்சு தளத்தில் தமிழில் பகுப்புகள் இட ஒப்புவார்களா? அங்கு உள்ள பகுப்புப் பெயர்களுக்கும் (ஆங்கிலத்தில் ஆனாலும் சரி தமிழில் ஆனாலும் சரி) இங்கு உள்ள பகுப்புப் பெயர்களுக்கும் சீர்மை பேண வேண்டும்.
  • நியாய பயன்பாட்டுப் படிமங்கள் தவிர மற்ற அனைத்தையும் காமன்சிலேயே பதிவேற்றி வருகிறோம். எனவே, வருங்காலத்தில் கூடுதல் படிமங்கள் வரும் என்று எண்ணி, நிறைய துணைப்பகுப்புகளை உருவாக்குவதில் எனக்கு ஒப்புதல் இல்லை. ஒரு பேச்சுக்கு, நூறு படிமங்களை நூறு துணைப்பகுப்புகளாக இடுகிறோம் என்று கொள்வோம். பத்து விக்கிப்பீடியர்கள் ஆளுக்குப் பத்து பகுப்பாகச் செய்தால், அவ்வளவாக வேலை இல்லை. இது ஒரு முறை மட்டுமே செய்யப்படும் வேலை. ஆனால், ஆயிரக்கணக்கான வாசகர்கள் ஒவ்வொரு நாளும் நூற்றுக் கணக்கான படிமப் பகுப்புப் பக்கங்களைச் சொடுக்கிப் பார்த்துத் தான் அனைத்துப் படிமங்களையும் பார்க்க முடியும் என்றால் வாசகர்கள் முனையில் கூடும் வேலைப் பளுவையும் இந்த பகுப்பாக்க முறையின் திறன் குறைபாட்டையும் உணரலாம். ஒரு பகுப்பில் மிகக் குறைவான படிமங்கள் இருந்தாலும் சரி ஆயிரக்கணக்கான படிமங்கள் இருந்தாலும் சரி... இரண்டுமே பயனற்ற பகுப்பாக முறை தான். ஒரு நூலகத்தில் உள்ள துறைகள், புத்தக அடுக்குகள் முறையை ஒப்பிட்டுப் பார்த்தால், எப்படி ஒரே பகுப்பின் கீழ் கணிசமான நூல்கள் இருப்பது இலகுவாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளலாம். எனவே, விக்கிப்பீடியர்களின் வேலைப்பளுவைக் கருதாமல் வாசகர்களின் பயன்பாட்டுக்கு எது இலகுவாக இருக்கும் என்று எண்ணிப்பார்த்துச் செய்வது நன்று. இந்த அடிப்படையில் முதலில் பெரும் பகுப்புகளில் படிமங்களை இட்டு, அவற்றில் 50+ அல்லது 100+ படிமங்கள் சேரும் போது தேவையான துணைப்பகுப்புகளை உருவாக்கலாம் என்று பரிந்துரைக்கிறேன். --இரவி (பேச்சு) 05:57, 17 மே 2012 (UTC)[பதிலளி]
இரவி, நீங்கள் கூறியது போல், ஆங்கில விக்கியில் தமிழ் பெயர்களை இட ஒப்புவார்கள் என்பது சந்தேகமே, நியாய பயன்பட்டுப் படிமங்கள் (Fair use images), தவிர படிமங்களின் உரிமை தெரியாத 666 வகைப்படுத்தாத படிமங்கள் தமிழ் விக்கிப்பீடியாவிலும் உள்ளது (16-ம் திகதி வரையிலும்), அவற்றையும் சரி செய்ய வேண்டியிருக்கிறது. நீங்கள் கூறியது போல், பகுப்புகளில் அதிகமான படிமங்கள் சேர்ந்த பின் துணைப்பகுப்புகளை உருவாக்கலாம். படிமங்களை ஒரு முறையாவது பார்த்த பிறகே, அதனுடைய துறை பற்றி முடிவு செய்ய இயலும், நீங்கள் கூறுவது போல, ஆளுக்குப் பத்து பகுப்பு உருவாக்குவது மிக எளிமையான ஒன்று, ஆனால், சரியான படிமங்களை சேர்ப்பது அவ்வளவு எளிதாக தோன்றவில்லை, சரியான திட்டமிடுதல், பிற விக்கிப்பீடியர்களில் ஆலோசனைகள், கருத்துகள் தேவையான அளவு பெற்ற பிறகு, ஒரு குழுவோ அல்லது குறிப்பிட்ட சிலரோ இப்பணியில் ஈடுபட்டால், குறைந்த நேரத்தில் இப்பணியை செம்மையாக செய்து முடிக்கலாம். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 06:51, 17 மே 2012 (UTC)[பதிலளி]


எனது தாழ்மையான கருத்துக்களை இங்கு பதிவு செய்கிறேன். (பி.கு: என்ன என்ன வகையான பகுப்புகள் உள்ளன என்று ஒரு பட்டியல் பக்கம் இருக்கிறதா என்று தெரியவில்லை. அப்படி ஒரு திட்டப்பக்கம் த.வி.யில் தற்போது இருக்கிறது என்றால் கீழ்வரும் முதல் பத்தியை தவிர்க்கவும்.)

  • பகுப்புகள் குறித்து ஒரு திட்டப் பக்கம் ஒன்றை (தற்காலிகமாகக் கூட) ஏற்படுத்தி அங்கே அனைவரும் காணும் வகையில் (பகுப்பளர்கள் பார்க்கும் வகையில்) நாம் நான்கு அறிந்த பகுப்புகளை வரிசைப்படுத்தலாம். புதிய பகுப்புகளை சேர்க்கலாம் ஒவ்வொரு பகுப்பின் கீழும் என்ன என்ன மாதிரியான படிமங்கள் இந்த பகுப்பின் கீழ் வரவேண்டும் என்ற விளக்கத்தை அங்கே குறிப்பிடலாம்.
  • முதலில், மேல்மட்ட பகுப்புகளை மட்டும் வரிசைப்படுத்துவதில் முழுக்கவனதையும் செலுத்தலாம். இங்கு ஏற்கனவே உள்ள பகுப்புகளையும் சேர்த்து ஒரு பொது கருத்து எட்டும் வரை அவற்றை மேம்படுத்த வேண்டும். பிறகு ஒரு முடிவை எட்டியபிறகு படிமங்களிலும் அந்த பகுப்புகளை இடத் தொடங்கலாம்.
  • ஒவ்வொரு படிமங்களையும் பார்த்து முடிவெடுக்க வேண்டியது அவசியம் ஆதலால் தானியங்கிகளுக்கு இங்கே வேலை இல்லை. பகுப்பார்வலர்களுக்கு ஒரு தெளிவும், பகுப்பு பணியில் ஒரு சீர்மையும் இருக்க வேண்டுமானால் படிமப் பகுப்பு குறித்து மையப்படுத்தப்பட்ட ஒரு தகவல் பக்கம் தேவை.
  • தினேஷ்குமார் பொன்னுசாமி குறிப்பிட்ட வகைப்படுத்தப்படாத படிமங்களில் பல படங்கள் அளவில் மிகச் சிறியதாகவும் காப்புரிமை சிக்கலுள்ள படங்களாகவும் இருக்கிறன.
  • அளவில் மிகச்சிறிய படங்களை பகுக்கப்படாமல் இருப்பதே நல்லது என்று தோன்றுகிறது. அளவில் சிறிய படங்கள் பயன்படுவதை தவிர்க்கலாம். முடிந்தால் படவணுக்கள் (pixels) குறித்து ஒரு நிர்ணயம் செய்யவேண்டும். (regarding the dimension and minimum KB).
  • ஊடகப் போட்டியில் வந்த ஊடகங்களில் தமிழ் விக்கிமீடியா போட்டி என்ற பகுப்பு தொடரலாம். ஆங்கிலத்திலும் Wiki love monuments பகுப்பு தொடர்வதை காணமுடிகிறது.
  • தமிழ் கட்டுரைகளுக்கு "தேவைப்படும் படிமங்கள்" பக்கத்தை தனியாய் தொடங்கவேண்டும். இதன் மூலம் புகைப்பட பங்களிப்பாளர்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.


special:UncategorizedFiles இங்குள்ள கோப்புகளில் பெரும்பாலானவை சரியான காப்புரிமை விவரங்கள் குறிப்பிடப்படாதவை. மேலும் பகுப்பு:காப்புரிமை வார்ப்புருக்கள் இதில் உள்ள வார்ப்புருவில் ஏதாவது ஒன்றை கோப்பிற்கு இடும் போது அதனுடனே பகுப்பும் சேரும் படி உள்ளது. எகாவாக வார்ப்புரு:Non-free book cover இவார்ப்புருவை இணைத்தால் நூல் அட்டைகள் என்ற பகுப்பு தானாக சேர்ந்து விடும். இம்முறையில் வார்ப்புருக்களை சரி செய்தாலே பகுப்புகளைச் சுலபமாக சேர்த்து விடலாம். (துணைப் பகுப்பு வேண்டுமானால் புதிதாக உருவாக்கலாம்)

மேலும் காப்புரிமை தெரியாத படிமங்களுக்கு பதிவேற்றியவருக்கு வேண்டுகோள் விடுக்கலாம், அல்லது நாமே சேர்க்கலாம். ஆங்கில விக்கியைப் போல இங்கு காப்புரிமை குறிப்பிடாத படிமங்களை நீக்கும் வழக்கம் உண்டா எனத் தெரியவில்லை. இருந்தாலும் இங்குள்ள அனைத்து படிமங்களுக்கும் சரியான காப்புரிமை வார்ப்புரு இணைத்தால் சரியாகிவிடும். காமன்சைப் பொறுத்தவரை அங்கு படிமப் பெயர்கள் மற்றும் விவரங்கள் மட்டுமே மற்ற மொழிகளில் இருக்க அனுமதிக்கிறார்கள் என நினைக்கிறேன். நான் அறிந்தவரை அனைத்து பகுப்புகளுக்கும் ஆங்கிலப் பெயரே பயன்படுத்தப்பட்டுள்ளது. நானும் பயன்படுத்தியுள்ளேன்.

/அளவில் மிகச்சிறிய படங்களை பகுக்கப்படாமல் இருப்பதே நல்லது என்று தோன்றுகிறது. அளவில் சிறிய படங்கள் பயன்படுவதை தவிர்க்கலாம். முடிந்தால் படவணுக்கள் (pixels) குறித்து ஒரு நிர்ணயம் செய்யவேண்டும். (regarding the dimension and minimum KB)./

அளவில் மிகச் சிறிய படங்களையே நியாயப் பயன்பாடாக பயன்படுத்த வேண்டும் என்பது கொள்கை என நினைக்கிறேன்.

//ஊடகப் போட்டியில் வந்த ஊடகங்களில் தமிழ் விக்கிமீடியா போட்டி என்ற பகுப்பு தொடரலாம். ஆங்கிலத்திலும் Wiki love monuments பகுப்பு தொடர்வதை காணமுடிகிறது.//

இது எனக்கு சரியாக புரியவில்லை. ஊடகப் போட்டியில் வந்த அனைத்து ஊடகங்களும் காமன்சில் tamilwiki media contest பகுப்பில் தான் உள்ளன.

--shanmugam (பேச்சு) 08:29, 17 மே 2012 (UTC)[பதிலளி]

சண்முகம், மேலே //அதாவது, TamilWiki_Media_Contest பகுப்பிலிருந்து நீக்க வேண்டுமா // என்று தினேஷ்பொன்னுசாமி கூறியதற்கான பத்தில் அது. −முன்நிற்கும் கருத்து எஸ்ஸார் (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
சரி எஸ்ஸார் ஒரு சிறு குழப்பம் :)--shanmugam (பேச்சு) 12:27, 17 மே 2012 (UTC)[பதிலளி]

இங்குள்ள கோப்புகளுக்கு வார்ப்புரு:No source இணைக்கலாமா? அல்லது நாமே சரியான வார்ப்புருவை இணைக்கலாமா? அல்லது கோப்பை பதிவேற்றிய பயனருக்கு வேண்டுகோள் விடுக்கலாமா? என்பது குறித்த கருத்து தேவை...

காப்புரிமை இல்லாத படிமங்களை நீக்குவது குறித்தும், பயன்படுத்தப்படாத நியாயப் பயன்பாட்டு படிமங்களை நீக்குவது குறித்தும் (ஆ.விக்கியில் பதிவேற்றியவருக்கு வேண்டுகோள் விடுப்பார்கள், பிறகும் இணைக்கப்படவில்லை எனில் நீக்கி விடுவார்கள்) என்பது குறித்தும் (இங்கும் அப்படிதான் செய்கிறோம் என நினைக்கிறேன், எனக்கு சரியாக தெரியவில்லை நிர்வாகிகள் தெளிவுபடுத்தினால் நன்று) கருத்து தேவை--shanmugam (பேச்சு) 16:01, 17 மே 2012 (UTC)[பதிலளி]