மேலாண்மை தணிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தணிக்கை என்றவுடன் நமது நினைவுக்கு வருவது நிதி நிலை தணிக்கைதான். தணிக்கை எனும் கோட்பாடு நாளுக்கு நாள் விரிவடைந்து ,இன்று அனேகமாக அனைத்துத் துறைகளிலும் மிகவும் அவசியமான ஒரு கருவியாக மாறிவிட்டது.

நிதிநிலை தணிக்கை[தொகு]

தனி நபர் வாணிபத்தில் தணிக்கைக்கு அவ்வளவு முக்கியத்துவம் இருக்கவில்லை. கூட்டு வாணிபம், கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட பங்கு நிறுமங்களின் தோற்றம் , தணிக்கைக்கு முக்கியத்துவம் அளித்தது. ஏனெனில் பங்கு நிருமங்களில் முதல் போடுபவர்கள் பலராகவும் வணிகத்தைப் பொறுப்பேற்று நடத்துபவர்கள் வேறு நபர்களாக இருப்பதாலும் நடுநிலையான ஒரு நபரைக் கொண்டு கணக்குகளைத் தணிக்கை செய்ய வேண்டியது அவசியமாகிறது.

மேலாண்மை தணிக்கை[தொகு]

ஒரு வர்த்தக நிறுவனத்தை நடத்திச் செல்லும் நபர்கள், பல்வேறு முடிவுகளை எடுக்கவேண்டியது அவசியம் ஆகிறது.சில முடிவுகள், நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவலாம்.சில முடிவுகள் , தவறாகப் போய் நிறுவனத்தை நட்டத்தில் தள்ளி விடலாம். சில சமயங்களில் நிறுவனத்தை மூடிவிடும் அபாயமும் ஏற்படலாம்.எனவே மேலாண்மைப் பொறுப்பில் உள்ளவர்கள், சரியான முடிவுகளைத்தான் எடுக்கிறார்களா என்பது உறுதி செய்யப் பட வேண்டும். இதனைத்தான் மேலாண்மை தணிக்கை என்கிறோம்.

நிதி நிலை தணிக்கை என்பது "போஸ்ட் மார்ட்டம்" போன்றதாகும்.ஆனால் மேலாண்மை தணிக்கை அவ்வாறு இருத்தல் ஆகாது.வர்த்தக முடிவுகள் எடுக்கப் பட்ட பின் அவை சரியா தவறா என்று ஆராய்வதால் என்ன பயன்?அப்படியானால் மேலாண்மை தணிக்கை என்பதை எப்படி வரையறுப்பது?

வர்த்தக முடிவுகளும் அதற்குத் தேவையான தகவல்களும்[தொகு]

வர்த்தக நிறுவனத்தை மேலாண்மை செய்பவர்களுக்கு பல விதமான முடிவுகளை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இந்த முடிவுகளை எடுக்க அவர்களுக்கு பல தகவல்கள் தேவைப் படுகின்றன. எடுத்துக் காட்டாக இந்த ஆண்டு நமது உற்பத்தியை மேலும் அதிகரிக்க அவர்கள் விரும்பினால் அதற்கான வசதிகள் நிறுவனத்தில் உள்ளதா என்பது அவர்களுக்குத் தெரிய வேண்டும். இந்த தகவலை அவர்கள் எங்கிருந்து பெறுவார்கள்? இத்தகைய தகவல்களை அளிப்பதற்காக ஒவ்வொரு நிறுவனமும் "மேலாண்மை தகவல் முறைமை " ஒன்றை தம் அகத்தே உருவாக்கி வைத்துள்ளன. நிறுவனத்தின் உள்ளே இருந்து தகவல்களைப் பெறுவதுடன் நிறுவனத்தின் வெளியே இருந்தும் பலதகவல்களைப் பெறவேண்டிய அவசியம் ஒரு வர்த்தக நிறுவனத்துக்கு ஏற்படுகிறது.உதாரணமாக நமது போட்டியாளர்கள் எடுக்கும் முடிவுகள் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டியது மிகமிக அவசியம் ஆகும். இத்தகைய தகவல்களைப் பெற சந்தை ஆராய்ச்சி (Marketing Research) போன்ற சாதனங்களை வர்த்தக நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேலாண்மை_தணிக்கை&oldid=803811" இலிருந்து மீள்விக்கப்பட்டது