நாத்திகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கடவுளின் என்று ஒன்று உண்டு என்னும் தொடர்பான நம்பிக்கைகளையும் கோட்பாடுகளையும் அறவே மறுக்கும் கொள்கையும் நிலைப்பாடும் நாத்திகம் ஆகும். நாத்திகம் என்ற வடமொழிச்சொல்லுக்கு இணையாக இறைமறுப்பு என்ற சொல் தமிழ் சூழலில் வழங்கிவருகிறது. கீழைநாட்டு மெய்யியலில் மிகத் தொன்றுதொட்டு வழங்கி வரும் மெய்யியல் நிலைப்பாடுகளில் இதுவும் ஒன்றாகும் மேலைநாட்டு மெய்யியல் மரபிலும் இறைமறுப்பு வாதத்திற்கான சான்றுகள் நிறைய காணக்கிடைக்கின்றன. இந்தியச் சூழலில் பௌத்தம் சமணம் போன்ற மதங்கள் கூட இறைமறுப்பு வாதத்தையே முன்வைத்தன. ஆயினும் பௌத்த, சமண, நாஸ்திக வாதங்கள், இறைவன் மட்டுமே இல்லை என்றும், இந்து மதக் கடவுள்களை, தேவர்கள், இயக்கர்கள் (யக்ஷர்கள்) என்று கண்டன. உதாரணத்திற்கு, கதிர்காம முருகப்பெருமானை இந்துக்களான தமிழ் மக்கள், முருகன் என்ற கடவுளாகவும் [2], இந்து - பௌத்தர்களான சிங்களர்கள், கதரகாமா தேவியோ (கதிர்காமத் தேவர்) என்றும் வணங்குகின்றனர் [3]. ஆனால், ஈவெரா மற்றும் பெரியாரிய நாத்திகமானது மேற்கத்திய இறைமறுப்புக்கொள்கையை புகுத்தி, இந்து மத மறுப்புக் கொள்கையை உடையது.
அண்மைக்கால தமிழ்ச் சூழலில் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. தோற்றுவித்த சுயமரியாதை இயக்கம், மார்க்சிய மெய்யியலை தமது அரசியல் நிலைப்பாடுகளுள் உள்ளடக்கியிருக்கும் இடதுசாரி இயக்கம் போன்றன இறைமறுப்பியலை அரசியல் நிலைப்பாடுகளுள் ஒன்றாக கைக்கொண்டன.
பொருளடக்கம் |
[தொகு] நாத்திக வாதங்கள்
[தொகு] இறை ஆண்டையா, மனிதன் அடிமையா
- இறை அனைத்தையும் கட்டுப்படுத்தும் அல்லது ஆட்சி செய்வது என்றால், அது மனிதனையும் கட்டுப்படுதும். அப்படியானால் மனிதனுக்கு சுதந்திரம் இல்லை. இறையை வழிபடுவது, இத்தகைய ஒரு அடிமை ஆண்டை உறவின் வெளிப்பாடே. இந்தகைய இறை இருந்தாலும் வெறுக்கப்படத்தக்கதே.
[தொகு] உலகில் துன்பமும் இறையின் அலட்சியமும்
- உலகில் துன்பம், சாவு, சித்தரவதை, வன்முறை, ஏழ்மை இருக்கிறது. பச்சிளம் குழந்தை உணவு இல்லாமல் பட்டினிச் கிடந்து சாகிறது. இந்த நிலையை கருணை உள்ளம் கொண்டவனாக கருதப்படும் இறை எப்படி அனுமதிக்கலாம்?
- கடவுள் அன்புள்ளது, பலம் பொருந்தியது, எல்லாவற்றையும் படைத்தது என்றால் பல்வேறு குறைகள் கொண்ட உலகை அது ஏன் படைத்தது? குறைகள் இருக்கிறது, தீர்க்க முடியவில்லையா? அல்லது தீர்க்க விரும்பவில்லையா? இப்படியானல் இறை உண்மையில் கருணை உள்ளம் உடையதா? எல்லா வல்லமையும் பொருந்தியதா?
[தொகு] சமய முரன்பாடுகள்
- வெவ்வேறு சமயங்கள் (குறிப்பாக: கிறீஸ்தவம், இஸ்லாம், யூதம்) அவர்களின் சமயம் மட்டுமே உண்மையனது என்றும் மற்ற சமயங்களை நம்புவர்கள் எல்லாம் நரகத்து போவார்கள் என்று கூறுகின்றார்கள். இது சமயங்களுக்கிடையான ஒரு அடிப்படை முரண்பாடு, குறை.
- சமணம் வேர்த் தாவரங்களையும் தவிர் என்கிறது. இந்து மதம் சைவ உணவைப் பரிந்துரைக்கிறது. குறிப்பாக மாட்டை உண்ண வேண்டாம் என்கிறது. இஸ்லாம் மாடு உண்பதைப் பொருட்படுத்தவில்லை, ஆனால் பன்றி உண்பதை தவிர் என்கிறது. ஏன் மனிதனையும் சிலர் உண்கிறார்கள். [1] இந்த சமய முரண்பாடுகள் அவற்றின் உண்மைத் தன்மையை கேள்விக்குட்படுத்துகின்றன.
- ஒருவனுக்கு ஒருத்தி என்கிறது இராமாயணம். ஆனால் இராமனின் தந்தைக்கே நான்குக்கு மேற்பட்ட மனைவிகள். இந்து மதக் கடவுளான முருகனுக்கே இரண்டு மனைவிகள். இது உள் முரண்பாடு. கிறிஸ்தவம் ஒருவனுக்கு ஒருத்தி என்று ஓரிடத்தில் வலியுறுத்துகிறது(Mt.19:5-8). மொர்மனிசம் பல மனைவிகள் அடைவதே இறைநிலை அடைய வழிமுறை என்கிறது. இது முரண்பாட்டிற்கு இன்னுமொரி உதாரணம்.
[தொகு] சமயம் வன்முறைக்கும் சமூக கேடுக்கும் வழிகோலுகிறது
- சமயம் பல்வேறு போர் அல்லது வன்முறைக்கு அடிப்படைக் காரணமக இருந்து வருகிறது. en:Inquisition, en:Jihad, அயோத்தி வன்முறை, 911 தாக்குதல் ஆகியவை இதற்கு உதாரணங்கள் ஆகும்.
- ஆபிரிக்காவில் எயிட்ஸ் படு கொடுமைப்படுத்துகிறது. அங்கே condoms மூலம் பாலியல் தற்காப்பு செய்வதை கத்தோலிக்க மத சபை எதிர்க்கிறது. [2] இது எயிட்சை தடுக்க ஒரு சிறந்த வழியை இல்லமல் செய்கிறது.
- சமயம் சமூக முன்னேற்றத்துக்கு பயன்படுத்தக்கூடிய வளங்களைப் பெரிய கோயில்கள், திருவிழாக்கள், யாகங்கள் போன்றவற்றில் வீணடிக்கிறது.
- இயல்பாக ஓரினச்சேர்க்கை கொண்டவர்களின் உரிமைகளை மறுக்கிறது.
[தொகு] சமயம் அறிவியல் முரண்பாடு
- புனித நூல்களில் கூறப்படும் பல கூற்றுக்கள் அறிவியலின் தற்போதைய அறிவின் படி பிழையாக நிரூபிக்கப்பட்டுள்ளன. எ.கா உலகம் 6000 ஆண்டுகள் மட்டுமே என பைபிளில் கூறப்பட்டுள்ளது. அறிவியல் உலகம் 4 மில்லியன் ஆண்டுகளுக்கு மேலானா கால வரலாற்றை உடையது என்று கூறுகிறது.
- சமயம் அறிவியலின் வளச்சிக்கு தடையாக இருந்துள்ளது. en:Galileo affair, en:Biblical inerrancy ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டு.
- அறிவியல் கோட்பாடுகளின் அல்லது விதிகளின் விளக்கத்துக்கு இறை என்ற கருதுகோள் தேவையற்றது.
- இறை நம்பிக்கை நம்பிக்கையில் அமைந்தது, பகுத்தறிவின் மூலமோ, அறிவியல் மூலமோ நிறுவ முடியாதது.
[தொகு] ஆதாரம் இன்மை
- இதுவரைக்கு ஆத்மா, மறுபிறவி, சொர்க்கம், நரகம் ஆகியவற்றுக்கு எந்தவிதமான அனுபவ அல்லது பொருள் முறை ஆதாரமும் இல்லை.
- இறை தன்னை ஏன் இலகுவாக வெளிப்படுத்தவில்லை?
[தொகு] பாஸ்கலின் பந்தயம் - விவாதம்
பாஸ்கலின் பந்தயம் (en:Pascal's Wager) என்ற இறை ஏற்பு வாதம் பின்வருமாறு. இறைவன் இருக்கென்று நிறுவ முடியாவிட்டாலும், இறைவன் இருக்கென்று கருதி செயற்படுவதால் மனிதன் இழப்பது ஏதும் இல்லை, ஆனால் அது உண்மையானல் அவன் எல்லாவற்றையும் பெறுவான் என்கிறது. இதற்கு பல்வேறு விவாதங்கள் உண்டு. எந்த இறைவனை வழிபடுவது? இறைவன் நம்பிக்கையானவரை மட்டும் ஏன் காப்பாற்றுவான் என்று எதிர்பாக்க வேண்டும்? இறைவனை நம்பி சமயத்தில் ஈடுபடுவதால் வன்முறை உருவாறதே..எனவே அது ஒரு இழப்பல்லா. இந்த வாதம் இறைவனை நம்புவது ஏன் நல்லது என்று சுட்ட முயல்கிறதே தவிர, இறை உள்ளது என்று நிறுவ முறபடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
[தொகு] தற்காலா மேலை நாட்டு நாத்திகர்கள்
[தொகு] தமிழ்நாட்டு நாத்திகர்கள்
- ஈ.வெ.ரா. பெரியார்
- கலைஞர். கருணாநிதி
- சி.என். அண்ணாத்துரை
- எம்.ஆர். ராதா
- பழ. நெடுமாறன்
- சுப. வீரபாண்டியன்
- கீ. வீரமணி
- கொளத்தூர். மணி
- இயக்குனர். சீமான்
- பேராசிரியர். மா. நன்னன்
- நடிகர் சத்யராஜ்
[தொகு] மேற்கோள்கள்
- ↑ "Americans eat oysters but not snails. The French eat snails but not locusts. The Zulus eat locusts but not fish. The Jews eat fish but not port. The Hindus eat port but not beef. The Russians eat beef but not snakes. The Chinese eat snakes but not people. The Jali of New Guinea find people delicious." Robertson I. (1987). Sociology. New York: Worth Publishers.
- ↑ Catholic Moral Teaching: The nature of an act (its object) determines its morality. Intercourse with a condom is intrinsically disordered, evil in and of itself [1]

