பகடி சமயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


பகடி சமயம் (Parody religion) என்பது பிறரது சமய நம்பிக்கைகளை அங்கதம், பகடி, கேலி மூலம் கேள்விக்குள்ளாக்கும் முறையாகும். பொதுவாக சமய நம்பிக்கையை அல்லது ஒரு குறிப்பிட்ட சமயம் அல்லது குழுவின் நம்பிக்கைகள் மற்றும் சம்பிரதாயங்களைப் பகடி செய்யும் வண்ணம் பகடி சமயங்கள் உருவாக்கப்படுகின்றன.




குறிப்பிடத்தக்க பகடி சமயங்களின் பட்டியல்[தொகு]

சமயம் குறிப்புகள்
எப்படியும்நடந்துவிடுமியம் (Eventualism) சயன்டாலஜி போன்ற சமயங்களைப் பகடி செய்ய ஸ்கிசோபோலிஸ் என்ற திரைப்படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.[1]
காணமுடியாத இளஞ்சிவப்புக் கொம்புக்குதிரை இறை நம்பிக்கையாளர்களின் இறைவன் பற்றிய விளக்கங்களைப் பகடி செய்கிறது. சமயங்களின் பொய்யாக நிறுவ இயலாமையினையும் அடிப்படையற்ற தன்மையினையும் ரசலின் தேனீர் கேத்தலைப் போல சுட்டிக் காட்டுகிறது.[2][3]
கிபாலஜி யூஸ்னெட் இணைய மன்றங்களில் பரவலான ஒரு நகைச்சுவை அங்கத சமயம்[4]
லாண்டோவர் ஞானஸ்தானத் திருச்சபை அடிப்படைவாத கிறித்தவத்தைப் பகடி செய்வது.[5]
போன வியாழக்கிழமையியம் (Last Thursdayism) அண்டம் பொன வியாழக்கிழமை தான் உருவாக்கப்பட்டது என்ற நம்பிக்கை கொண்டது. சமயங்களின் பொய்பிக்க இயலாமையைப் பகடி செய்கின்றது. இதே போன்று அடுத்த புதன்கிழமையியம் என்ற சமயமும் உண்டு.[6]
டார்வுயியம் (Tarvuism) லுக் அரவுண்ட் யூ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக பிரித்தானிய நகைச்சுவையாளர்கள் பீட்டர் செராஃபினோவிக்ஸ், ராபர்ட் பாப்பர் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. கிறித்தவர்கள், சயன்டாலஜியர்களின் சமயப் பரப்புரை நிகழ்படங்களை பகடி செய்கிறது.[7][8][9]
இறுதி சிரிப்பின் முதற் திருச்சபை (First Church of the Last Laugh) ஆண்டு தோறும் சான் பிரான்சிஸ்கோ நகரில் புனித முட்டாளின் நாள் ஊர்வலத்தை நடத்துகிறது.[10]
பாசுத்தாஃபாரினியம் பறக்கும் இடியாப்ப அரக்கன் திருச்சபை என்றும் அழைக்கப்படும். ரசலின் தேனீர் கேத்தலின் தற்கால மாற்றாகப் பயன்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Review: "Schizopolis"". Variety (magazine). 28 May 1996. http://variety.com/1996/film/reviews/schizopolis-2-1200445720/. பார்த்த நாள்: 3 October 2013. 
  2. "Pastafarians: Finding God on world wide web". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 28 May 2010 இம் மூலத்தில் இருந்து 4 அக்டோபர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131004232855/http://articles.timesofindia.indiatimes.com/2009-05-28/science/28151773_1_ramen-holy-family-religion. பார்த்த நாள்: 3 October 2013. 
  3. Nigel Suckling (December 2006). Unicorns. AAPPL. பக். 94. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-904332-68-8. http://books.google.com/books?id=Rpd2Tk-NwMcC&pg=PA94. 
  4. William H. Swatos; Peter Kivisto (1 January 1998). Encyclopedia of Religion and Society. Rowman Altamira. பக். 237. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7619-8956-1. http://books.google.com/books?id=6TMFoMFe-D8C&pg=PA237. 
  5. Dale McGowan (25 February 2013). Atheism For Dummies. John Wiley & Sons. பக். 210. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-118-50921-0. http://books.google.com/books?id=GJJk_Cjv44UC&pg=PA210. பார்த்த நாள்: 3 October 2013. 
  6. "Faith takes strange forms on the Web". Stars and Stripes (newspaper). 15 June 2008. http://www.stripes.com/news/faith-takes-strange-forms-on-the-web-1.80022. பார்த்த நாள்: 3 October 2013. 
  7. "Say 'Hebbo' to Tarvuism!". Chortle.co.uk. 14 October 2010. பார்க்கப்பட்ட நாள் 30 October 2010.
  8. Dumas, D (4 September 2010). "Look Around You: Science Video Reductio ad Absurdum". வயர்ட். http://www.wired.com/wiredscience/2010/08/look-around-you-science-video/. பார்த்த நாள்: 3 October 2013. 
  9. Thill, Scott (17 January 2009). "Education Spoof Look Around You Schools Adult Swim". வயர்ட். http://www.wired.com/underwire/2009/01/education-spoof/. பார்த்த நாள்: 3 October 2013. 
  10. "St. Stupid's Day Parade mocks economic and religious institutions". 1 March 2011 இம் மூலத்தில் இருந்து 3 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303225914/http://www.sfbg.com/politics/2011/04/01/st-stupids-day-parade-mocks-economic-and-religious-institutions. பார்த்த நாள்: 3 October 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகடி_சமயம்&oldid=3678475" இலிருந்து மீள்விக்கப்பட்டது