கிறித்தபர் ஃகிச்சின்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கிறித்தபர் ஃகிச்சின்சு

2007ல் ஹிட்சன்ஸ்
பிறப்பு கிரிஸ்டோபர் எரிக் ஹிட்சனஸ்
ஏப்ரல் 13, 1949 (1949-04-13) (அகவை 65)
போர்ட்ஸ்மவுத், இங்கிலாந்து, ஐக்கிய ராஜ்யம்
இறப்பு திசம்பர் 15, 2011 (அகவை 62)
ஹூஸ்டன், டெக்சாஸ், அமெரிக்கா
தொழில் எழுத்தாளர், பத்திரிக்கையாளர், அரசியல் நோக்கர்
நாடு ஐக்கிய ராஜ்யம்
ஐக்கிய அமெரிக்கா

கிறித்தபர் ஃகிச்சின்சு (கிரிஸ்டோபர் ஹிட்சனஸ், Christopher Hitchens) என்பவர் ஐக்கிய இராச்சியத்தில் பிறந்த, அமெரிக்க எழுத்தாளர், ஊடவியலாளர், இலக்கிய விமர்சகர். இவரது சமயத்தை நோக்கி, குறிப்பாக சமயத்தில் புனிதமாக கருதப்படுபவையை நோக்கிய விமர்சனங்களுக்காக இவர் பெரிதும் அறியப்படுகிறார். புதிய இறைமறுப்பு இயக்கத்தின் நான்கு குதிரைவீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். (மற்ற மூவர்: சாம் ஃகாரிசு, ரிச்சர்ட் டாக்கின்சு, டேனியல் டென்னட்)

முன்னர் இடதுசாரி அரசியல் பார்வை கொண்ட இவர், சல்மான் ருஷ்டிக்கு எதிராக இரானிய இஸ்லாமிய முல்லாக்கள் ஃபத்வா விடப்பட்டபின்னர், இடதுசாரிகள் அதை ஆதரித்ததை எதிர்த்து இடதுசாரி பிரிவில் இருந்து விலகினார். இவர் 18 மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவற்றுள் அன்னை தெரசாவை விமர்சித்து இவர் எழுதிய The Missionary Position நூல், சமய நம்பிக்கையை விமர்சித்து இவர் எழுதிய God Is Not Great என்று நூல் ஆகியவை பெரும் சர்சையை எழுப்பியவை.