பன்றி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| பன்றி | ||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
கொல்லைப்படுத்தப்பட்ட பன்றியும் அதன் குட்டியும்
|
||||||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||||||
|
||||||||||||||||||
| Species | ||||||||||||||||||
|
Sus barbatus |
பன்றி இரட்டைப்படைக் குளம்பி வரிசையில் பன்றிக் குடும்பத்தில் அடங்கும் ஒரு பேரினம் ஆகும். பன்றிப் பேரினத்தில் கொல்லைப்படுத்தப்பட்ட பன்றி (Sus domestica) காட்டுப் பன்றி (Sus scrofa) உட்பட 12 இனங்கள் கணக்கிடப்பட்டுள்ளன. பன்றிகள் அவற்றின் இறைச்சிக்காகவும், தோலுக்காகவும் பல நாடுகளில் பண்ணைகளிலும் வீடுகளிலும் வளர்க்கப் படுகின்றன. இவற்றின் முடி பொதுவாக தூரிகை செய்யப் பயன்படுகின்றது.
கிட்டத்தட்ட 2 பில்லியன் எண்ணிகையைக் கொண்டுள்ள கொல்லைப்படுத்தப்பட்ட பன்றிகளே பன்றி இனங்களில் அதிக எண்ணிகையானவையாகும். [1][2] பன்றிகள் அனைத்துண்ணிகள் ஆகும். பன்றிகள் புத்திகூர்மையுள்ள சமூக விலங்குகள் ஆகும்.
பன்றிகளுக்கு தகுந்த வியர்வை சுரப்பிகள் இல்லாத காரணத்தால் அவை நீரில் இருப்பதன் மூலமோ சேற்றைப் பூசிக்கொள்வதன் மூலமோ தங்கள் உடம்பைக் குளிர்வித்துக் கொள்கின்றன. மேலும், இந்த சேற்றுப் பூச்சானது சூரிய வெப்பம் மற்றும் பூச்சிகளிடம் இருந்து காத்துக்கொள்ளவும் உதவுகிறது.
[தொகு] செல்ல விலங்கு
பன்றிகள் அறிவுக்கூர்மை உள்ள விலங்குகளாகக் கருதப்படுகின்றன. நாய், பூனைகளை விட இவற்றை எளிதில் பழக்க முடியும். எனவே இவற்றை செல்ல விலங்குகளாகவும் மக்கள் வளர்க்கின்றனர்.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ Production, Supply and Distribution Online Query, United States Department of Agriculture, Foreign Agricultural Service
- ↑ Swine Summary Selected Countries, United States Department of Agriculture, Foreign Agricultural Service, (total number is Production (Pig Crop) plus Total Beginning Stocks