செவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மனிதச் செவி

செவி அல்லது காது என்பது ஒலியை உணரக்கூடிய ஒரு புலன் உறுப்பு ஆகும். மீன் தொடக்கம் மனிதர் வரை முதுகெலும்பிகளின் செவிகள் பொதுவான உயிரியல் தன்மையைக் கொண்டுள்ளன. எனினும் ஒழுங்கு மற்றும் சிற்றினங்களைப் பொறுத்து அமைப்பில் வேறுபாடுகள் உள்ளன. செவி ஒலிகளைப் பெற்று உணர்வது மட்டுமன்றி, உடல் சமநிலை உணர்வு தொடர்பிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. செவி கேள்வித் தொகுதியின் ஒரு பகுதியாகும்.

செவி என்பது சரியானபடி முழுமையான உறுப்பைக் குறிப்பதற்கோ அல்லது வெளியில் தெரியும் செவிப் பகுதியை மட்டும் குறிப்பதற்கோ பயன்படக்கூடும். பெரும்பாலான விலங்குகளில் வெளியில் தெரியும் செவியின் பகுதி இழையங்களினாலான மடல் ஆகும். இது புறச்செவி அல்லது செவிமடல் எனவும் அழைக்கப்படும். புறச்செவி மட்டுமே வெளியில் தெரியும் செவியாக இருப்பினும், இது கேட்டல் என்னும் செயற்பாட்டின் பல படிகளில் முதல் படியோடு மட்டுமே தொடர்புபட்டது. இது உடற் சமநிலை உணர்வு தொடர்பில் எவ்விதப் பங்கும் வகிப்பதில்லை. முதுகெலும்பிகளில் தலையின் இரண்டு பக்கங்களிலும் பக்கத்துக்கு ஒன்றாக இரண்டு செவிகள் இருக்கும். இவ்வமைப்பு ஒலி எங்கிருந்து வருகிறது என்பதை அறிவதற்கு உதவுகிறது.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்