ஆர். கே. நாராயண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ராசிபுரம் கிருஷ்ணசுவாமி நாராயண் (10 அக்டோபர் 1906-13 மே 2001) ஆங்கிலத்தில் எழுதிய ஓர் இந்திய நாவல் ஆசிரியர் ஆவார். இவரின் உணர்ச்சிபூர்வமான நாவல்கள் 20 ஆம் நூற்றாண்டு இந்தியரின் வாழ்கையைப் பிரதிபலிக்கும் மால்குடி எனும் கற்பனைக் கிராமத்தைத் தழுவி எழுதப் பட்டவையாகும். முல்க் ராஜ் ஆனந்த் மற்றும் ராஜா ராவ் ஆகியோருடன் இவர் 20 ஆம் நூற்றாண்டின் மூன்று சிறந்த இந்திய-ஆங்கில மொழி எழுத்தாளர்களில் ஒருவர்.[1]

நாராயணனின் ஆரம்ப வாழ்க்கை[தொகு]

அநேகமாக நாரயணனின் எழுத்துக்கள் சுவாமியும் அவரது நண்பர்களும் என்று ஆங்கில்த்தில் பொருள் படும் Swami and friends இலேயே ஆரம்பித்து. இது மால்குடி என்னும் கற்பனைக் கிராமத்தைப் பின்னணியாகக் கொண்டது. இதே கற்பனைக் கிராமத்தையே பின்னணியாகக் கொண்டபோதும் ஒவ்வொன்றும் தனித்துவமானவை.

பிறப்பு[தொகு]

ஆர்.கே.நாராயண் இந்தியாவில் மைசூரில் இலக்கம் 1 வெள்ளா வீதியில் 1906 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடன் பிறந்த எண்மருள் இவர் மூன்றாமவர். இவரது முழுப்பெயர் (இ)ராசிபுரம் கிருஷ்ணசுவாமி ஐயர் நாராயணசுவாமி. தென்னிந்திய மற்றும் இலங்கைத் தமிழ் வழக்கப் படி முதற்பெயரானது பெற்றோரின் பெயரே வருவதால் இவரது சகோதரர்களும் முதற்பெயராக ஆர்.கே என்பதையே கொண்டிருந்தனர் (உதாரணமாக ஆர். கே. லக்ஷ்மண்). இவரது முதற் பதிப்பாளரன ஹமிஷ் ஹமில்ரன் (Hamish Hamilton இவரது பெயர் பெரிது எனக்கருதி அதைக்குறுக்கும் ஆலோசனைப் படி ஆர்.கே கிருஷ்ணசுவாமி என அழைக்கப்பட்டார்.

குழந்தைப் பருவம்[தொகு]

நாராயணனின் தாயாரான ஞானாம்பாள் இவரது பிறப்பை அடுத்து உடல் நலங்குன்றினார். எனவே இவர் ஓர் மருத்துவத் தாதியினால் பராமரிக்கப் பட்டார். தாயார் மீண்டும் தாய்மையடைந்ததால் இவர் சென்னையிலுள்ள அம்மணி என்றழைக்கப்படும் அம்மம்மாவின் வீட்டிற்கு அனுப்பப்பட்டார். இவர் தனது பதின்ம வயதுவரை அம்மம்மாவுடனும் மாமாவான ரீ.என்.சேஷாச்சலத்துடனும் வாழ்ந்து வந்தார். இவர் தனது சகோதரர்களையும் பெற்றோரையும் சந்திக்க ஒரு சில வாரங்களையே செலவழிப்பார். நாராயண் தமிழ் மொழியையும் பாடசாலையில் ஆங்கிலத்தையும் கற்று வந்தார். நாராயணினின் சுயசரிதையான எனது நாட்கள் என்ற பொருள்படும் ஆங்கில நாவலான My Days இல் பெற்றோரைப் பார்ப்பதற்காக மைசூர் வந்த போது கன்னட மொழிபேசும் கடைக்காரர்கள் உரையாடல்களைப் புரிந்து கொள்ள முடியாதிருந்ததையும் பின்னரே இம்மொழியை அறிந்ததையும் குறிப்பிட்டுள்ளார்.

கல்வி[தொகு]

8 வருடக்கல்வியை சென்னையில் அம்மம்மாவின் வீட்டிற்கு அருகில் உள்ள லூத்தரன் மிஷன் பள்ளியில் (Lutheran Mission School) படித்தார். சிறிது காலம் CRC உயர் பாடசாலையிலும் படித்தார். இவரது தகப்பனாரான ராசிபுரம் வெங்கட்ராம கிருஷ்ணசுவாமி ஐயர் மைசூரில் தலைமை ஆசிரியராக நியமிக்கப் பட்ட பின்னர் பெற்றோரிடமே சென்றுவிட்டார். ஆரம்பத்தில் பிரதான் புத்தகமானது களைப்பளிக்கக் கூடியதாக இருந்ததால் ஆங்கிலத்தில் எழுதும் கல்லூரி நுழைவுத் தேர்வில் வெற்றியடையவில்லை எனினும் மீண்டும் முயற்சி செய்து மைசூர் பல்கலைக் கழகத்தில் பட்டதாரியானார்.

எழுத்தாளராக[தொகு]

ஆரம்பம்[தொகு]

ஒரு சில குறிப்பிடதக்க இந்திய ஆங்கில எழுத்தாளர்களே இந்தியாவில் ஏறத்தாழத் தொடர்ந்து வசித்து வந்தனர். 1956 இல் ரொக்ஃபெல்லர் அமைப்பின் அழைப்பின் பேரில் அமெரிக்கா சென்றார். தி இந்து ஆங்கில செய்திதாளில் குறுங்கதைகளை எழுதினார். அத்துடன் நியாயம் (Justice) என்னும் சென்னையிலிருந்து வெளிவரும் பத்திரிகையின் மைசூர் ஆசிரியராகவும் சிறிதுகாலம் கடமையாற்றினார்

இலக்கிய வடிவம்[தொகு]

இவரது படைப்புகள் எளிய நடையும், இழைந்தோடும் நகைச்சுவை உணர்வும் கொண்டவை. இவரது கதாபாத்திரங்கள் யாவும் சிற்றூர்களைச் சார்ந்தவை. சுவாமியும் நண்பர்களும் என்பதிலிந்தே அவரது எழுதாக்கங்கள் ஆரம்பித்தன. முதலில் இவரது நாவல்களை வெளியிட எந்த பதிப்பகமும் முன்வரவில்லை. இறுதியாக நண்பரிடம் கிரகாம் கிறீனியிடம் ஆரம்ப வரைதலைக் காட்டினார். கிறீனி இதை மிகவும் பாராட்டியதுடன் வெளியிடுவதற்கும் ஏற்பாடு செய்தார். இதைத் தொடர்ந்து தொடர்ச்சியாக மால்குடி எனும் கற்பனைக் கிராமத்தைப் பின்பற்றி பல நாவல்களைப் பிரசுரித்தார். சில நாவல்கள் இவரது சுயசரிதையைப் பின்பற்றியவை. உதாரணமாக ஆங்கில ஆசிரியர் (The English Teacher) என்னும் நாவல் இவரது இளம் மனைவியின் மரணத்தைப் தழுவியெழுதப் பட்டதாகும்.

நாராயணனின் ஆக்கங்கள் ஒவ்வொரு நாளும் சமுதாயத்தில் நடைபெறுவதைத் தழுவியதாகும். இவர் இந்துப் புராணக் கதைகளையும், நாட்டுப்புறக் கதைகளையும் கூறத் தயங்கவில்லை இவரது இத்தன்மையானது விமர்சிக்கப்பட்டபோதும் சிறந்த ஓர் எழுத்தாளராகவே கருதப் பட்டார்.

ஆர். கே. லக்ஷ்மன்[தொகு]

நாராயணனின் இளைய சகோதரரான ஆர். கே. லக்ஷ்மன் இந்தியாவில் பிரபல கேலிச் சித்திரங்களை ஓவியர்.

குறிப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._கே._நாராயண்&oldid=1371923" இருந்து மீள்விக்கப்பட்டது