ஆர்தர் சி. கிளார்க்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| சேர் ஆர்தர் சி. கிளார்க் | |
|---|---|
ஆர்தர் சி. கிளார்க் தனது கொழும்பு வீட்டில் மார்ச் 28, 2005 |
|
| புனைபெயர் | சார்ல்ஸ் வில்லிஸ்,[1] ஈ.ஜீ.ஓ'பிறையன்[1] |
| பிறப்பு | டிசம்பர் 16 1917 சொமர்செட், ஐக்கிய இராச்சியம் |
| இறப்பு | மார்ச் 19 2008 (அகவை 90) கொழும்பு, இலங்கை |
| தொழில் | எழுத்தாளர், கண்டுபிடிப்பாளர் |
| தேசியம் | பிரித்தானியர் மற்றும் இலங்கையர் |
| பாணி | அறிவியல் புதினம் |
| வகை | அறிவியல் |
| வாழ்க்கைத் துணை | மரிலின் மேஃபீல்ட் (1953-1964) |
| Influences | எச். ஜி. உவெல்ஸ், ஜூல்ஸ் வேர்ன் |
| Influenced | ஸ்டீபன் பாக்ஸ்டர் |
| இணையத்தளம் | http://www.clarkefoundation.org/ |
சேர் ஆர்தர் சார்ல்ஸ் கிளார்க் (Sir Arthur Charles Clarke, டிசம்பர் 16, 1917 – மார்ச் 19, 2008[2]) பிரித்தானிய அறிவியல் புதின எழுத்தாளரும் கண்டுபிடிப்பாளரும் ஆவார். ஏறத்தாழ 100 புத்தகங்களுக்கு ஆசிரியரான ஆர்தர் சி. கிளார்க், அறிவியல் பூர்வமான ஆதாரத்தையும் கோட்பாட்டையுமே தமது எழுத்துத்துறைக்கு அதிகளவுக்கு பயன்படுத்தினார். நம் உலகத்தின் எல்லைகளுக்கு அப்பாலும் மனிதரின் தலைவிதி பரந்துள்ளது என்ற கருத்தை வலுவாக முன்னிறுத்தினார். இவரது இந்த தொலைநோக்குக்கு, 2001: ஸ்பேஸ் ஒடிசி என்ற புதினமும் 1968 இல் அதே பெயரில் ஸ்டான்லி கூப்ரிக் இயக்கி இவரால் தயாரிக்கப்பட்ட திரைப்படமும் அவர் செய்த மிக தெள்ளத் தெளிவான சேவைகளாகும்.
பொருளடக்கம் |
[தொகு] வாழ்க்கைக் குறிப்பு
கிளார்க் இங்கிலாந்தில் சொமர்செட் என்ற இடத்தில் டிசம்பர் 16, 1917 இல் பிறந்தார்[2]. அவரது தந்தை ஒரு உழவர். தாய் அஞ்சல் நிலையத்தில் தந்தி அனுப்புனர். நான்கு குழந்தைகளில் மூத்தவரான் இவர் அருகில் உள்ள டாண்டன் (Taunton) நகர உயர்நிலைப்பள்ளியில் புலமைப்பரிசில் (scholarship - கல்விதிறமை பரிசில்) மாணவனாக கல்வி பயின்றார். தான் பிள்ளைப் பருவத்தில் சோமர்செட் கடற்கரையோரம் நடக்கையில் தனது அறிவியல் கற்பனைகளை விழித்தெழச் செயத பல நிகழ்ச்சிகளை நினைவு கூர்வார். அவற்றில் ஒரு சில, தன் தந்தை ஒரு முறை ஒரு டைனாசர் படம் உள்ள ஒரு சீட்டு கட்டு கொடுத்தது, கட்டுமானம் செய்யும் விளையாட்டுப் பொருள்களை அன்பளிப்பாக பெற்றது போன்றன. சிறு வயதிலேயே வானியலில் ஈடுபாடு கொண்ட ஆர்தர் பழைய அமெரிக்க அறிவியல் புதின நூல்களை படிப்பது அவர் வழக்கம். ஆரம்பக் கல்வியை முடித்துக் கொண்டவர் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் படிக்க அவரது குடும்ப வருவாய் போதாமையினால், கல்வித்திணக்களத்தில் பணியாற்றினார்.
இரண்டாம் உலகப் போரின் போது ரோயல் வான்படையில் இணைந்து ராடார் பாதுகாப்புத் திட்டத்தில் பணியாற்றினார். போர் முடிவின் பின்னர் அவர் லண்டன் அரச கல்லூரியில் கணிதம் மற்றும் இயற்பியலில் பட்டம் பெற்றார்.
1937 தொடக்கம் 1945 வரையான காலப்பக்குதியில் சில புதினக்களை கிளார்க் எழுதியிருந்தாலும் 1946 ஆம் ஆண்டில் அவர் எழுதிய Astounding Science Fiction முதன் முதலில் விற்பனைக்கு வந்தது. கிளார்க் Science Abstracts (1949) என்ற இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். 1951 இலிருந்து முழுநேர எழுத்தாளரானார்.
1953 இல் கிளார்க் மரிலின் மேஃபீல்ட் என்ற பெண்ணை மணம் புரிந்தார். மணம் புரிந்து ஆறு மாதங்களில் அவர்கள் பிரிந்தனர். ஆனாலும் 1964 ஆம் ஆண்டிலேயே அவர்கள் அதிகாரபூர்வமாகப் பிரிந்தனர்[3].
[தொகு] விண்வெளி ஆய்வு
இவருடைய புகழ்பெற்ற அறிவியல் கருத்து என்னவென்றால் புவியில் இருந்து பார்க்கும் பொழுது வானில் ஒரே இடத்தில் இருக்குமாறு செய்மதிகளை அமைத்து, உலகளாவிய பரப்பில் தொலைதொடர்புக் கருவிகளைப் பயன்படுத்தலாம் என்று இவர் 1945 இல் முன்வைத்ததாகும்[4]. இக் கருத்துதான் தற்கால வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது என்று கூறவியலாது எனினும், இவர் நினைவாக, புவியிடமிருந்து மாறா சுற்றுப்பாதைகளுக்கு (புவிநிலை வலயம், geostationary orbit) சிலநேரங்களில் கிளார்க் வலயம் என்றும் சொல்வதுண்டு.
அவரது ஆக்கங்கள் முன்உணர்ந்த தன்மையவை. அவர், 1945 இலேயே, முன்னறிவிப்புபோல் தொலைத்தொடர்பு செயற்கைகோள்கள் பற்றி விவரமாக எழுதியது உலகைச் சுற்றி ஏவுகணைகள் பறப்பதற்கு ஒரு பதின்ம ஆண்டுகளுக்கும் முன்னரே. விண்வெளித் திட்டங்களின் முதல் ஆதரவாளர்கள் சிலர், இந்த புதிய தொழில்நுணுக்கத்தை தூண்டி தொடங்கினால் அதவே அதன் செலவுகளுக்கு ஈடு செய்யும் என்றனர். கிளார்க் அவர்களோ தன் குறிக்கோளை இன்னும் மேலே உயர்த்தி வைத்தார். வில்லியம் ஜேம்ஸ் என்பாரது ஒரு வாசகத்தை கடன் பெற்று, சூரிய குடும்பத்தை சென்று ஆய்வது "போர் செய்வதற்கு இணையான தருமம்" என்று சொல்லி, அணுக்கருவால் உலக படுகொலைக்கு இட்டு செல்லாமல், நாடுகளின் ஆற்றலுக்கு ஒரு வடிகால் கொடுத்தார்.
விண்வெளி பற்றிய பொதுமக்களின் மனப்பாங்கு, கிளார்க் அவர்களால் மாற்றம் உற்றது என்பதை அமெரிக்க, மற்றும் ருசிய விண்வெளி வீரர்களால் ஆமோதிக்கப்பட்டது. ஜீன் ராட்பெர்ரி என்பார், தொலைக்காட்சி செயல் இயக்குனர்களால் காணாமுகத்துக்கும், ஏன் கிண்டலுக்கும் ஆளான ஸ்டார் ட்ரெக் (Star Trek) திட்டத்தை தொடர துணிவை (courage) கொடுத்தற்கு திரு கிளார்க்கின் எழுத்துக்களுக்கு நன்றி நவில்கிறார்.
[தொகு] இலங்கைக்கு புலம் பெயர்வு
1956 ஆம் ஆண்டில் இலங்கையில் குடியேறி அங்கிருந்து தனது எழுத்துக்களையும் ஆய்வுகளையும் தொடர்ந்தார்[5]. 1998 இல் இங்கிலாந்தின் இரண்டாம் எலிசபெத் அரசியாரால் சேர் பட்டம் "நைட்" (knight) பட்டம் பெற்றார்.
[தொகு] மறைவு
2007 டிசம்பர் 16 ஆம் நாள் தனது கடைசி பிறந்தநாளைக் கொண்டாடிய இவர், தனது மூன்று விருப்பங்களை வெளியிட்டார். அதில் ஒன்றாக இலங்கையில் நீடித்து நிலைக்கும் அமைதி திரும்பவேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் தெரிவித்திருந்தார்.
மார்ச் 19 ஆம் தேதி, 2008, புதன்கிழமை காலை அவர் கொழும்பில் உயிர் துறந்த போது அவருக்கு வயது 90.
[தொகு] எழுதிய புதின நூல்கள்
- Prelude to Space (1951)
- The Sands of Mars (1951)
- Islands in the Sky (1952)
- Against the Fall of Night (1953)
- Childhood's End (1953)
- Earthlight (1955)
- The City and the Stars (1956)
- The Deep Range (1957)
- A Fall of Moondust (1961)
- Dolphin Island (1963)
- Glide Path (1963)
- 2001: A Space Odyssey (1968)
- Rendezvous with Rama (1972)
- Imperial Earth (1975)
- The Fountains of Paradise (1979)
- 2010: Odyssey Two (1982)
- The Songs of Distant Earth (1986)
- 2061: Odyssey Three (1988)
- A Meeting with Medusa (1988)
- Cradle (novel)|Cradle (1988) (ஜெண்ட்ரி லீ உடன் இணைந்து)
- Rama II (1989) (ஜெண்ட்ரி லீ உடன் இணைந்து)
- Beyond the Fall of Night (1990) (கிரெகரி பென்ஃபோர்ட்டுடன் இணைந்து)
- The Ghost from the Grand Banks (1990)
- The Garden of Rama (1991) (ஜெண்ட்ரி லீ உடன் இணைந்து)
- Rama Revealed (1993) (ஜெண்ட்ரி லீ உடன் இணைந்து)
- The Hammer of God (1993)
- Richter 10 (1996) (மைக் மக்கீ உடன் இணைந்து)
- 3001: The Final Odyssey (1997)
- The Trigger (1999) (மைக்கல் கியூப்-மக்டோவல் உடன் இணைந்து)
- The Light of Other Days (2000) (ஸ்டீபன் பாக்ஸ்டர் உடன் இணைந்து)
- Time's Eye (2003) (ஸ்டீபன் பாக்ஸ்டர் உடன் இணைந்து)
- Sunstorm (2005) (ஸ்டீபன் பாக்ஸ்டர் உடன் இணைந்து)
- Firstborn (2007) (ஸ்டீபன் பாக்ஸ்டர் உடன் இணைந்து)
[தொகு] மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "books and writers" Arthur Charles Clarke bio, retrieved 2008-03-18.
- ↑ 2.0 2.1 "Science fiction author Arthur C Clarke dies aged 90", The Times, 18 March 2008. 2008-03-19 அன்று தகவல் பெறப்பட்டது. “Science fiction writer Sir Arthur C Clarke has died aged 90 in his adopted home of Sri Lanka, it was confirmed tonight.”
- ↑ McAleer, Neil. "Arthur C. Clarke: The Authorized Biography", Contemporary Books, Chicago, 1992. ISBN 0-8092-3720-2
- ↑ "Extra-Terrestrial Relays — Can Rocket Stations Give Worldwide Radio Coverage?", published in Wireless World in October 1945
- ↑ (2005-12-11) Happy Birthday Sir Arthur C. Clarke!. Sunday Observer. இணைப்பு 2007-02-08 அன்று அணுகப்பட்டது.

