நூல் அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நூல் (எழுத்துப் படைப்பு) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தொல்காப்பியம் எழுதப்பட்டிருக்கும் பனையோலை நூல்
விவிலியம் எழுதப்பட்டிருக்கும் பொத்தகம்
செப்புப்பட்டையப் பொத்தகம்

நூல் என்பது எண்ணப் பதிவாகிய கருத்துகளை எழுத்து உருவில் காட்டும் ஒரு கருவி. இக்காலத்தில் அச்சிட்ட புத்தகங்களை உணர்த்த இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. காகிதம் உருவாக்கப்படுவதற்கு முன்னர் நூல் பனையோலையில் எழுதப்பட்ட பதிவாக இருந்தது. எழுதப்பட்ட பனையோலைகளைப் பொத்து [1] நூல்கயிற்றில் கோத்து வைத்தனர். பொத்துக் கோத்து வைத்த சுவடிகளைப் பொத்தகம் என்றனர். நாளடைவில் பொத்தகம் என்னும் சொல் புத்தகம் என மருவி வழங்கப்படுகிறது.

இக்காலப் புத்தகங்களில் எழுத்துருவோடு படங்களும் சேர்க்கப்படுகின்றன. கடதாசியில் [2] அல்லது அதுபோன்ற வேறு பொருள்களால் செய்யப்பட்ட, எழுதிய, அச்சடித்த, வரையப்பட்ட, அல்லது வெற்றுத்தாள்களை ஒன்றாகக் கட்டி உருவாக்கப்படுவதாகும். இது தாள்களை ஒவ்வொன்றாகத் திறந்து பார்ப்பதற்கு வசதியாக ஒரு ஓரத்தில் பிணைக்கப்பட்டு இருக்கும். நூலில் கொடுக்கப்பட்ட விடயங்களில் அளவுக்குத் தக்கபடி அதிலுள்ள தாள்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்து நூற்றுக் கணக்குவரை இருக்கும். தாளொன்றின் ஒவ்வொரு பக்கமும் பக்கம் என்று அழைக்கப்படும். மின்னணுவியல் முறையில் அமைந்த நூல் மின் நூல் எனப்படும்.

நூல்கள் ஒற்றை வெளியீடு ஆகும். இதனால் இது குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை வெளியிடப்படும் சஞ்சிகைகள், நாளேடுகள் என்பவற்றிலிருந்து வேறுபடுகிறது. நூல்கள் மீது அதிக ஆர்வமுள்ள ஒருவரைப் புத்தகப் பூச்சி அல்லது புத்தகப் புழு என்று அழைப்பதுண்டு. நூல்களை வெளியீட்டாளர்களிடம் இருந்து வாங்கி விற்கும் இடத்தைப், நூலகசாலை அல்லது நூல்கடை என்பது வழக்கம்.

நூல் அமைப்பு[தொகு]

பொதுவான புத்தக வடிவமைப்பு
1 - belly band
2 - Flap
3 - Endpaper
4 - புத்தக அட்டை
5 - மேல் விளிம்பு
6 - Fore edge
7 - Tail edge
8 - Right page, recto
9 - Left page, verso
10 - Gutter

ஒரு நூல் பின்வரும் பகுதிகளைக் கொண்டிருக்கும்.

ஊடகங்கள்[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. துளையிட்டு
  2. கடுதாசி, காகிதம், பேப்பர்
"http://ta.wikipedia.org/w/index.php?title=நூல்_அமைப்பு&oldid=1738898" இருந்து மீள்விக்கப்பட்டது