ஐசாக் அசிமோவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஐசாக் அசிமோவ்

1965ல் அசிமோவ்
பிறப்பு ஐசாக் யுடோவிச் ஓசிமோவ்
அக்டோபர் 4, 1919 - ஜனவரி 2, 1920[1]
பெட்ரோவிச்சி, பெலாரஸ்
இறப்பு ஏப்ரல் 6 1992 (அகவை 72)
நியூ யார்க், ஐக்கிய அமெரிக்கா
தொழில் எழுத்தாளர்
நாடு ரஷ்யர் / அமெரிக்கர்
இனம் யூதர்
இயக்கம் அறிபுனையின் பொற்காலம்
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
ஃபவுண்டேஷன் வரிசை, ரோபோ வரிசை

ஐசாக் அசிமோவ் (ரஷ்ய மொழி: Айзек Азимов; ஆங்கிலம்: Isaac Asimov, பி. ஜனவரி 2, 1920 – இ. ஏப்ரல் 6, 1992) ஒரு அமெரிக்க அறிபுனை எழுத்தாளர். பாஸ்டன் பலகலைக்கழகத்தில் உயிர் வேதியல் பேராசிரியராகவும் பணியாற்றியவர். அறிபுனைப் புத்தகங்களைத் தவிர வெகுஜன அறிவியல் புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

அசிமோவ் அறிபுனை எழுத்தின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் எழுதிய ஃபவுண்டேஷன் (Foundation series) வரிசைப் புதினங்களும், ரோபோ (Robot series) வரிசைப் புதினங்களும் அறிபுனை இலக்கியத்தின் செம்மையான படைப்புகளாகக் கருதப்படுகின்றன. தனது வாழ்நாளில் 500 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் 9000 கடிதங்களை எழுதிய அசிமோவ் தூவி தசம முறையிலுள்ள (நூலகப் பகுப்பு முறை) பத்து துறை பகுப்புகளில் ஒன்பது துறைகளில் புத்தகங்களை எழுதியுள்ளார். அவர் எழுதாத ஒரே துறை - மெய்யியல் மற்றும் உளவியல். அசிமோவ் வாழ்ந்த காலத்தில் அறிபுனை இலக்கியத்தின் முப்பெரும் எழுத்தாளார்களுள் ஒருவராகக் கருதப்பட்டார். (மற்ற இருவர் ஆர்தர் சி. கிளார்க்கும் ராபர்ட் ஹெய்ன்லீனும்). புதினங்கள் தவிர குறுநாவல்கள், சிறுகதைகள், அபுனைவு கட்டுறைகள் போன்ற வடிவங்களிலும் அசிமோவ் எழுதியுள்ளார்.

மேற்கோள்கள் [தொகு]

  1. Asimov, Isaac. In Memory Yet Green. "The date of my birth, as I celebrate it, was January 2, 1920. It could not have been later than that. It might, however, have been earlier. Allowing for the uncertainties of the times, of the lack of records, of the Jewish and Julian calendars, it might have been as early as October 4, 1919. There is, however, no way of finding out. My parents were always uncertain and it really doesn't matter. I celebrate January 2, 1920, so let it be." 

வெளி இணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஐசாக்_அசிமோவ்&oldid=1357264" இருந்து மீள்விக்கப்பட்டது