ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்
| இரண்டாம் எலிசபெத் Elizabeth II |
|
|---|---|
| ஐக்கிய இராச்சியம், பொதுநலவாய நாடுகளின் அரசி (more...) | |
| 2007 இல் எலிசபெத் | |
| ஆட்சி | பெப்ரவரி 6, 1952 – இற்றைவரை (61 ஆண்டுகள், 49 நாட்கள்) |
| முடிசூடல் | ஜூன் 2, 1953 |
| முன்னிருந்தவர் | ஆறாம் ஜோர்ஜ் |
| முடிக்குரியவர் | வேல்சு இளவரசர் சார்லசு |
| உடனுறை துணை | பிலிப், எடின்பரோ கோமகன் |
| பிள்ளைகள் | |
| சார்ல்ஸ் ஆன் ஆண்ட்ரூ எட்வேர்ட் |
|
| முழுப்பெயர் | |
| எலிசபெத் அலெக்சாண்ட்ரா மேரி | |
| வேந்திய மரபு | வின்சர் மரபு |
| வேந்தியப் பண் | அரசியைக் கடவுள் காப்பாராக |
| தந்தை | ஜோர்ஜ் VI |
| தாய் | எலிசபெத் போவ்ஸ்-லயோன் |
| பிறப்பு | 21 ஏப்ரல் 1926 லண்டன் |
| திருமுழுக்கு | மே 29, 1926 பக்கிங்ஹாம் அரண்மனை, லண்டன் |
இரண்டாம் எலிசபெத் (Elizabeth II, எலிசபெத் அலெக்சாந்திரா மேரி; பிறப்பு: ஏப்ரல் 21, 1926) என்பவர் ஐக்கிய இராச்சியம் உட்பட 16 சுயாட்சி நாடுகளின் அரசியாக உள்ளார். அனைத்து நாடுகளுக்கும் இவர் தனித்தனியே வெவ்வேறு பெயர்களில் ஆட்சிப் பெயர்களைக் கொண்டிருந்தாலும், ஐக்கிய இராச்சியத்திலேயே, லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் இவர் வாழ்கிறார். பெப்ரவரி 1952 ஆம் ஆண்டில் இவரது தந்தை ஆறாம் ஜோர்ஜ் இறந்தவுடன் ஏழு நாடுகளுக்கு அரசியாக இவர் முடி சூடினார். ஐக்கிய இராச்சியம் தவிர, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜெமெய்க்கா, பார்படோஸ், பகாமாஸ், கிரெனாடா, பப்புவா நியூ கினி, சொலமன் தீவுகள், துவாலு, சென் லூசியா, சென் வின்செண்ட் மற்றும் கிரெனாடின்ஸ், பெலீஸ், அண்டிகுவா பார்புடா, சென் கிட்ஸ் மற்றும் நெவிஸ் ஆகிய நாடுகளுக்கு அரசியாக உள்ளார். இவை அனைத்துக்கும் இவர் தனது சார்பில் பொது ஆளுநர் ஒருவரை நியமித்துள்ளார். இந்நாடுகள் அனைத்தும் பொதுநலவாய நாடுகள் (Commonwealth realm) என அழைக்கப்படுகின்றன. இந்நாடுகளில் இவரது அதிகாரம் மிகவும் பரந்து பட்டவை ஆயினும், பொதுவாக இவர் உள்ளூர் அரசியலில் தலையிடுவதில்லை.
1947 இல் எலிசபெத் எடின்பரோ கோமகன் பிலிப்பை மணந்தார். இவர்களுக்கு நான்குபிள்ளைகளும் எட்டு பேரப் பிள்ளைகளும் உள்ளனர்.
எலிசபெத் யார்க் கோமகனாக இருந்த இளவரசர் ஆல்பெர்ட்டிற்கும் அவரது மனைவி எலிசபெத்திற்கும் முதல் குழந்தையாக பிறந்தார். தனது கொல்லுப்பாட்டி அலெக்ஸாண்ட்ரா, பாட்டி மேரி, தாய் எலிசபெத் ஆகியோரின் பெயர்களைச் சேர்த்து எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி என்று பெயர் சூட்டப்பட்டார். தனது நெருங்கிய குடும்பத்தினரால் 'லில்லிபெத்' என்று அழைக்கப்பட்டார்.
வெளி இணைப்புகள் [தொகு]