அரிச்சந்திரா நதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரிச்சந்திரா நதி நாகை மாவட்டத்தின் வேதாரண்யம் பகுதியில் தலைஞாயிறு ஒன்றியம் மணக்குடியில் தொடங்கி பல கிராமங்கள் வழியாகச் சென்று கடைமடைப்பகுதியான தலைஞாயிறு பகுதியில் நாலுவேதபதி கிராமத்தின் 55 பாலம் வழியாக கடலில் கலக்கிறது. இது கோரையாற்றில் இருந்து பிரிகிறது. அரிச்சந்திரா நதியின் கடைமடை பகுதியில் பிரிஞ்சுமுலை அணை உள்ளது[1]. இந்நதி நீரைக் கொண்டு ஆலங்குடி, மணக்குடி, தலைஞாயிறு, தொழுதூர், பழையாற்றான்கரை உள்ளிட்ட 20 கிராமங்களில் விவசாயம் செய்யப்படுகிறது. மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, தலைஞாயிறு ஆகிய பகுதிகளுக்கு இந்நதி வடிகாலாகவும் உள்ளது. மேலும், இதன் மூலமாக உள்புகும் கடல்நீரைக் கொண்டு பல நூறு ஏக்கரில் இறால் பண்ணைகளும் இயங்கி வருகின்றன[2]. இந்த இறால் பண்ணைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால் நிலத்தடி நீர் மட்டம் 5 அடி வரை உப்பாக மாறிவிட்டதால் தலைஞாயிறு பகுதியில் உள்ள குளம், கிணறுகள், குட்டைகளில் உள்ள தண்ணீரை கால்நடைகள் கூட பயன்படுத்த முடியாத அளவிற்கு உப்பாகி விட்டது[3].

மேற்கோள்கள்[தொகு]

  1. "அரிச்சந்திரா நதியில் தண்ணீர் தேவை குறித்து ஆய்வு". தினமணி. திசம்பர் 28, 2015. http://www.dinamani.com/edition_trichy/nagapattinam/2013/09/21/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80/article1794947.ece. பார்த்த நாள்: 28 திசம்பர் 2015. 
  2. கரு. முத்து (மார்ச் 3, 2014). "அரிச்சந்திரா நதியின் முகத்துவாரத்தை சீரமைத்த மக்கள்- ஆற்றின் பிற பகுதிகளில் அரசு தூர்வார வேண்டுகோள்". தி இந்து (தமிழ்). http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D/article5744196.ece. பார்த்த நாள்: 28 திசம்பர் 2015. 
  3. "கடல் நீரால் கடும் பாதிப்பு அரிச்சந்திரா நதியின் குறுக்கே நிரந்தர கதவணை அமைக்க வேண்டும் கலெக்டருக்கு கோரிக்கை". தினகரன் (இந்தியா). மார்ச் 2, 2015. http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=432341&cat=504. பார்த்த நாள்: 28 திசம்பர் 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிச்சந்திரா_நதி&oldid=2468909" இலிருந்து மீள்விக்கப்பட்டது