உள்ளடக்கத்துக்குச் செல்

லும்பினி தூண் கல்வெட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லும்பினி தூண் கல்வெட்டு
லும்பினி தூண்
செய்பொருள்மணற்கல்
அளவுHeight: Width:
காலம்/பண்பாடுகிமு 3ஆம் நூற்றாண்டு
இடம்லும்பினி, நேபாளம்.
தற்போதைய இடம்லும்பினி, நேபாளம்.

லும்பினி தூண் கல்வெட்டு (Lumbini pillar inscription) படேரியா கல்வெட்டு என்றும் அழைக்கப்படும் இது பண்டைய பிராமி எழுத்துமுறைகளில், காணப்படும் ஒரு கல்வெட்டாகும். இது 1896 திசம்பரில் நவீன நேபாளத்தின் லும்பினியில் அசோகரின் தூண்களில் தொல்லியலாளர் அலோயிஸ் அன்டன் ஃபுரர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. [1] இதேபோன்ற சூழலில் அருகிலேயே கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு புகழ்பெற்ற கல்வெட்டு நிகாலி சாகர் கல்வெட்டாகும். லும்பினி கல்வெட்டு பொதுவாக அசோகரின் சிறு தூண் கட்டளைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இது கடந்த காலத்தைப் பற்றியும் சாதாரண மூன்றாவது நபரைப் பற்றியும் (அரசப் பரம்பரையினர் அல்ல), இது அசோகரின் கட்டளைகளாக இல்லாமல் பிற்காலத்தில் அப்பகுதிக்கு அவரது வருகையின் நினைவாக செதுக்கப்பட்டுள்ளது.[2]

1901இல் இடிபாடுகளுடன் கூடிய லும்பினி தூணின் பார்வை[3]

கல்வெட்டின் கண்டுபிடிப்பு (1896)

[தொகு]

1895இல், அலோயிஸ் அன்டன் ஃபூரர் என்ற தொல்லியலாளர் அருகிலுள்ள நிகாலி சாகர் தூணைப் பற்றிய ஒரு கணக்கெடுப்பை மேற்கொண்டார். [4][1]

சில கணக்குகளின்படி, திசம்பர் 1 ஆம் தேதி ஃபுரர் லும்பினி தூணைக் கண்டுபிடித்தார். பின்னர் அதை தோண்டுவதற்கு உள்ளூர் தளபதி கட்கா சம்சேர் ராணாவின் உதவியைக் கேட்டார். [5][6] மற்ற கணக்குகளின்படி, தளபதி கட்கா சம்சேர் ராணா தூணின் இருப்பிடத்தை அறிந்திருந்தார். மேலும் ஃபுரரை அதற்காகவே அழைத்துச் சென்றார்.[7] ஆரம்பத்தில், தூணின் மேற்புறம் மட்டுமே தெரிந்தது. அதில் ஒரு இடைக்கால கல்வெட்டு இருந்தது. பண்டைய பிராமி எழுத்துமுறை கல்வெட்டைக் கண்டுபிடிப்பதற்காக தூண் மேலும் தோண்டப்பட்டது. [8][1]

தூணில் உள்ள பிராமி கல்வெட்டு, மௌரியப் பேரரசர் அசோகர் கிமு 3 ஆம் நூற்றாண்டில் இந்த இடத்திற்கு வருகை தந்து கௌதம புத்தரின் பிறப்பிடமாக அடையாளம் காட்டினார் என்பதற்கு சான்றுகளை அளிக்கிறது. கல்வெட்டை பரணவிதானர் என்பவர் மொழிபெயர்த்தார். [9][note 1]

இன்று, தூண் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் உலகப் பாரம்பரியத் தளமாகும்.

லும்பினி தூண் கல்வெட்டு is located in South Asia
உதயகோலம்
உதயகோலம்
நித்தூர்
நித்தூர்
Jatinga
Jatinga
Rajula Mandagiri
Rajula Mandagiri

புகைப்படங்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ashoka pillar (Lumbini)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Several alternative translations have been published.[10][11][12]
  1. 1.0 1.1 1.2 Smith, Vincent A. (1897). "The Birthplace of Gautama Buddha". The Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland: 615–621. 
  2. Beckwith, Christopher I. (2017). Greek Buddha: Pyrrho's Encounter with Early Buddhism in Central Asia (in ஆங்கிலம்). Princeton University Press. p. 246. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-691-17632-1.
  3. Mukherji, P. C.; Smith, Vincent Arthur (1901). A report on a tour of exploration of the antiquities in the Tarai, Nepal the region of Kapilavastu;. Calcutta, Office of the superintendent of government printing, India. p. Plate XIII.
  4. Beckwith, Christopher I. (2017). Greek Buddha: Pyrrho's Encounter with Early Buddhism in Central Asia (in ஆங்கிலம்). Princeton University Press. pp. 234–235. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-691-17632-1.
  5. Falk, Harry. The discovery of Lumbinī (in ஆங்கிலம்). p. 13.
  6. Barth, A. (1897). "Decouvertes recentes du Dr. Führer au Nepale" (in EN). Le Journal des savans (Académie des inscriptions et belles–lettres): 72. https://gallica.bnf.fr/ark:/12148/bpt6k54706z/f73.image. 
  7. Falk, Harry. The discovery of Lumbinī (in ஆங்கிலம்). p. 13.
  8. Weise, Kai (2013). The Sacred Garden of Lumbini: Perceptions of Buddha's birthplace (in ஆங்கிலம்). UNESCO. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-92-3-001208-3.
  9. Paranavitana, S. (Apr. - Jun., 1962). Rupandehi Pillar Inscription of Asoka, Journal of the American Oriental Society, 82 (2), 163-167
  10. Weise, Kai; et al. (2013), The Sacred Garden of Lumbini – Perceptions of Buddha's Birthplace (PDF), Paris: UNESCO, pp. 47–48, archived from the original (PDF) on 2014-08-30
  11. Hultzsch, E. /1925). Inscriptions of Asoka. Oxford: Clarendon Press, pp. 164-165
  12. Tsukamoto, Keisho (2006). [http://echo-lab.ddo.jp/Libraries/印度学仏教学研究/印度學佛教學研究第54巻第3号/Vol.54%20,%20No.3(2006)200塚本%20啓祥「ルンミンデーイーのアショーカ法勅再考%20-マヤ堂出土の「自然石」に関連して-」.pdf Reconsidering the Rummindei Pillar Edict of Asoka: In Connection with 'a piece of natural rock' from Mayadevi Temple][தொடர்பிழந்த இணைப்பு], Journal of Indian and Buddhist Studies 54 (3), 1113-1120
"https://ta.wikipedia.org/w/index.php?title=லும்பினி_தூண்_கல்வெட்டு&oldid=3444234" இலிருந்து மீள்விக்கப்பட்டது