பி. என். ரெட்டி
பி. என். ரெட்டி | |
---|---|
இந்தியாவின் அஞ்சல் முத்திரையில் பி. என். ரெட்டி | |
பிறப்பு | பொம்மிரெட்டி நரசிம்ம ரெட்டி 16 நவம்பர் 1908 புலிவெந்துலா, கடப்பா மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய ஆந்திரப் பிரதேசம், இந்தியா) |
இறப்பு | 8 நவம்பர் 1977 சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 68)
பணி | தயாரிப்பாளர், படத்தொகுப்பாளர், கதை எழுத்தாளர், தொழிலதிபர், தொண்டுப்பணி |
செயற்பாட்டுக் காலம் | 1939–1969 |
விருதுகள் | பத்ம பூசண் கடிதங்களின் முனைவர் தாதாசாகெப் பால்கே விருது தேசிய திரைப்பட விருதுகள் |
பொம்மிரெட்டி நரசிம்ம ரெட்டி ( Bommireddy Narasimha Reddy ) (16 நவம்பர் 1908 - 8 நவம்பர் 1977) பி. என். ரெட்டி என்று பிரபலமாக அறியப்பட்ட இவர் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநரும், தெலுங்குத் திரைப்படத்துறையில் ஆரம்பகால நபராகவும் இருந்தார்.[1][2]
பிரபல திரைப்படத் தயாரிப்பாளரான பி.நாகி ரெட்டி இவரது சகோதரராவார். தனது ஆரம்பகாலத் திரைப்படங்களான வந்தே மாதரம், தேவதா போன்றவற்றில் சித்தூர் வி. நாகையாவை முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்.
என். டி. ராமராவ் மற்றும் பானுமதி ஆகியோர் நடித்த இவரது "மல்லிஸ்வரி" (1951) என்ற திரைப்படம் இந்தியத் திரைப்படத்துறையின் உன்னதப் படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தென்னிந்தியாவிலிருந்து மதிப்புமிக்க தாதா சாகெப் பால்கே விருதை பெற்ற முதல் நபர் இவர்.[3] கடிதங்களில் முனிவர் என்ற கௌரவத்தைப் பெற்ற முதல் இந்திய திரைப்பட ஆளுமையாவார்.[4]
குழந்தைப் பருவம்
[தொகு]1908 நவம்பர் 16 ஆம் தேதி கடப்பா மாவட்டத்தின் புலிவெந்துலா அருகே, கொத்தப்பள்ளி கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை நரசிம்ம ரெட்டி சென்னையிலிருந்து வெங்காயத்தை ஏற்றுமதி செய்து வந்தார்.
விருதுகள்
[தொகு]- பங்காரு பாப்பா என்ற படத்துக்காக 1955 - தெலுங்கில் சிறந்தத் திரைப்படத்திற்கான இந்தியக் குடியரசுத் தலைவரின் வெள்ளிப் பதக்கம் [5]
- பாக்ய ரேகா என்ற படத்துக்காக 1957 - தெலுங்கில் சிறந்தத் திரைப்படத்திற்கான மெரிட் சான்றிதழ்.[6]
- ரங்குலா ராட்டினம் என்ற படத்துக்காக 1966 - தெலுங்கில் சிறந்தத் திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது
- 1974 - தாதாசாகெப் பால்கே விருது
- பங்காரு பஞ்சாரம் (1969) என்ற படத்துக்காக பிலிம்பேர் சிறந்தத் திரைப்பட விருது (தெலுங்கு)
- பத்ம பூசண்
- கடிதங்களின் முனைவர்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rangula Ratnam (1967) Awards | Award Winners Of Rangula Ratnam telugu Movie. gomolo.com
- ↑ Friday Review Chennai / Tribute : Tale of a celluloid poet. The Hindu (28 November 2008). Retrieved on 2018-11-12.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
- ↑ "Directorate of Film Festival" (PDF). Archived from the original (PDF) on 27 December 2015. பார்க்கப்பட்ட நாள் 3 January 2012.
- ↑ "3rd National Film Awards" (PDF). Directorate of Film Festivals. Archived from the original (PDF) on 5 November 2013. பார்க்கப்பட்ட நாள் 1 September 2011.
- ↑ "5th National Film Awards" (PDF). Directorate of Film Festivals. பார்க்கப்பட்ட நாள் 2 September 2011.