உள்ளடக்கத்துக்குச் செல்

பதே சந்த் பத்வார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பதே சந்த் பத்வார்
பிறப்பு1900
இறப்பு10 அக்டோபர் 1995(1995-10-10) (அகவை 94–95)
தேசியம் இந்தியா
பணிஇந்திய அரசு ஊழியர்
விருதுகள்பிரித்தானியப் பேரரசின் மிகச் சிறந்த ஒழுங்கு (ராணுவம்) (1946)
பத்ம பூசண் (1955)

பதே சந்த் பத்வார் (Fateh Chand Badhwar) (1900 - 10 அக்டோபர் 1995) ஓர் இந்திய அரசு ஊழியரும், இந்திய இரயில்வே வாரியத்தின் தலைவரான முதல் இந்தியருமாவார்.[1][2]

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்

[தொகு]

பத்வாரின் தந்தை இந்திய குடிமைப் பணியில் அதிகாரியாக இருந்தார்.[3] இவர், நைனித்தாலில் உள்ள ஷெர்வுட் கல்லூரியில் பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் இயந்திர அறிவியலில் பட்டம் பெற்றார்.[3][4]

தொழில்

[தொகு]

இவர், ஒரு கடல் பொறியியலாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். கேம்பிரிச்சில் பொறியியல் பட்டம் முடித்த பின்னர் பல ஐரோப்பிய நாடுகளில் கடல் கட்டுமானப் பொறியியல் திட்டங்களில் பணிபுரிந்தார்.[5][6] ஜூன் 1925இல், இவர் கொல்கத்தாவின் கிழக்கு இந்திய இரயில்வேயில்[6] சேர்ந்தார். அங்கு இவர் இரயில்வேயின் தொழில்நுட்பப் பணிகளில் சேர்ந்த முதல் இந்தியரானார்.[7] இரயில்வேயில் தனது ஆரம்ப ஆண்டுகளில், புதிய பாதைகளை அமைப்பது, பாலங்களை கட்டுவது உட்பட பல கட்டுமானப் பணிகளுக்கு இவர் நியமிக்கப்பட்டார். மேலும் இவர் இலிலுவாவின் இரயில் பெட்டி தயாரிக்கும் பணிமனையில் பணியாற்றினார்.[5]

இரண்டாம் உலகப் போரின்போது, பத்வார், ஆயுதப்படைகள் மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகளுக்கான உள்கட்டமைப்பை உருவாக்கும் பொறியாளர்களுடன் பணியாற்றினார். அதில் இவர் லெப்டினன்ட்-கர்னல் ஆனார். போருக்கான இவரது சேவைகளுக்காக, 1942இல் பிரித்தானியப் பேரரசின் மிகச் சிறந்த ஒழுங்கு (ராணுவம்) என கௌரவிக்கப்பட்டார்.[5] [8]

அடுத்த ஆண்டு மீண்டும் கட்டுமானப் பிரிவின் நிர்வாகத்தில் சேர்ந்தார். இரயில்வே வாரியத்தின் செயலாளராகவும், அவுத் மற்றும் திருஹத் ரயில்வேயின் பொது மேலாளராகவும், 1949 முதல் இரயில்வே வாரியத்தில் உறுப்பினர் பணியாளராகவும் பின்னர் உறுப்பினர் பொறியியலாளராகவும் பணியாற்றினார். இவரது சேவைகளுக்காக, இவர் 1946இல் பிரித்தானிய பேரரசின் ஒழுங்கு (குடிமை) என்ற கௌரவம் இவருக்கு வழங்கப்பட்டது.[5][9] 1951இல் இரயில்வே வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட இவர் அக்டோபர் 1954இல் ஓய்வு பெறும் வரை இப்பணியியை வகித்த முதல் இந்தியரானார்.<[1]

இந்திய இரயில்வேயின் தலைவராக, புதிதாக சுதந்திரம் பெற்ற இந்தியாவை தொழில்மயமாக்குவதற்கான உயர் ஆற்றல்மிக்க குழுக்களில் ஒரு பகுதியாகவும் இருந்தார்.[10]

பிற்கால வாழ்வு

[தொகு]

ஓய்வு பெற்ற பிறகு, பேர்ட் & ஹெயில்ஜர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் பணியாற்றினார்.[11] இவர் சுங்க விசாரணைக் குழு மற்றும் தேசிய தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.[5] கொழும்பு திட்டத்தின் கீழ் அந்த நாட்டில் இரண்டு மாதங்கள் பணியாற்றியபோது 1950களில் இலங்கை தொடருந்து போக்குவரத்தை மறுசீரமைக்க இவர் உதவினார்.[12][13][14] இவர், ஒரு இயற்கை ஆர்வலரும் மலையேறுபவரும் ஆவார். இவர் தில்லி பறவை கண்காணிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக பணியாற்றினார். இமயமலை ஏறும் சங்கத்துடன் நீண்டகால தொடர்பு கொண்டிருந்தார். அதில் இவர் 1964-67 க்கு இடையில் முதல் இந்தியத் தலைவராக இருந்தார்.[15] பாட்டியாலாவைத் தளமாகக் கொண்ட கலாச்சார ஒத்துழைப்பு மற்றும் நட்புக்கான இந்திய சங்கத்தின் செயலாளராகவும் பணியாற்றினார்.[16]

பத்வார், அக்டோபர் 10, 1995 இல் இறந்தார்.[1]

மரியாதை

[தொகு]

இந்திய அரசு 1955இல் பத்ம பூசண் விருது வழங்கி இவரை கௌரவித்தது.[17] மும்பையின் கொலாபா பகுதியிலுள்ள இரயில்வே குடியிருப்புக்கு பாத்வர் பார்க் என இவரது நினைவாக பெயரிடப்பட்டுள்ளது.[7][18]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "OBITUARY: F. C. Badhwar". The Independent. 19 October 1995 இம் மூலத்தில் இருந்து 29 ஜூன் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130629111259/http://www.highbeam.com/doc/1P2-4746409.html. 
  2. "IN MEMORIAM — FATEH CHAND BADHWAR (1900-1995)". The Himalayan Club. Archived from the original on 10 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 12 April 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. 3.0 3.1 Khosla, Gopal Das (1985). Memory's Gay Chariot: An Autobiographical Narrative. Allied Publishers. p. 50. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170230281.
  4. M. O. Mathai (1979). My Days With Nehru. Vikas Publishing House. p. 156. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7069-0823-7.
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 "IN MEMORIAM — FATEH CHAND BADHWAR (1900-1995)". The Himalayan Club. Archived from the original on 10 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 12 April 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)"IN MEMORIAM — FATEH CHAND BADHWAR (1900-1995)" பரணிடப்பட்டது 2019-04-24 at the வந்தவழி இயந்திரம். The Himalayan Club. Retrieved 12 April 2013.
  6. 6.0 6.1 Railway Gazette International. Reed Business Pub. January 1953. p. 345. பார்க்கப்பட்ட நாள் 1 June 2013.
  7. 7.0 7.1 "Rail Trail". The Indian Express. 8 October இம் மூலத்தில் இருந்து 2013-06-29 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130629121451/http://expressindia.indianexpress.com/latest-news/rail-trail/371036/. 
  8. "Supplement to the London Gazette, January 1942" (PDF). London Gazette. பார்க்கப்பட்ட நாள் 12 April 2013.[தொடர்பிழந்த இணைப்பு]
  9. "Supplement to the London Gazette, June 1946" (PDF). London Gazette. Archived from the original (PDF) on 14 ஜூன் 2012. பார்க்கப்பட்ட நாள் 12 April 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. L. C. Jain (1998). The city of hope: the Faridabad story. Concept Publishing Company. p. 136. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7022-748-9.
  11. Civic Affairs. P. C. Kapoor at the Citizen Press. 1958. pp. 30–34.
  12. Railway Gazette International. Reed Business Pub. 1955. p. 226.
  13. Overseas Railways. 1955. p. 71.
  14. Bamunuarachchige Don Rampala (1991). History of the Sri Lanka Government Railway: B.D. Rampala Felicitation Volume. Institution of Engineers, Sri Lanka. p. 134. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-9119-00-5.
  15. Kapadia, Harish (1996). "Himalayan Journal 52". The Himalayan Journal 52. http://www.himalayanclub.org/journal/editorial-36/. பார்த்த நாள்: 12 April 2013. 
  16. Mohinder Singh (2001). Punjab 2000: Political and Socio-economic Developments. Anamika Publishers & Distributors (P) Limited. p. 389. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-86565-90-2.
  17. "Bharat Ratna for Nehru". The Hindu. 9 September 1955. http://www.hindu.com/thehindu/thscrip/print.pl?file=2005090902270900.htm&date=2005/09/09/&prd=th&. [தொடர்பிழந்த இணைப்பு]
  18. "Badhwar Park". பார்க்கப்பட்ட நாள் 12 April 2013.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதே_சந்த்_பத்வார்&oldid=3711207" இலிருந்து மீள்விக்கப்பட்டது