திருவுடையார்பட்டி திருமூலநாதர் கோயில்
திருமூலநாதர் கோயில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருவுடையார்பட்டியில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும். காசிக்கு இணையான பெருமையுடைய தலமாகக் கருதப்படுகிறது. வெள்ளாற்றங்கரையில் தோன்றிய சுயம்புலிங்கத்தின்மீது கி.பி.12ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கோயில் கட்டப்பட்டது. [1]
அமைவிடம்
[தொகு]புதுக்கோட்டை மாவட்டத்தின் திருவரங்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வாண்டாக்கோடை ஊராட்சியில் திருவுடையார்பட்டி அமைந்துள்ளது. புதுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி சாலையில் 7 கிமீ தொலைவில் வாண்டாக்கோட்டையிலிருந்து 2 கிமீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.
இறைவன், இறைவி
[தொகு]இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் திருமூலநாதர், இறைவி திரிபுரசுந்தரி அம்மன்.
பிற சன்னதிகள்
[தொகு]மூலவர், தேவி சன்னதிகளைத் தவிர சொர்ணகால பைரவர், தட்சிணாமூர்த்தி, விநாயகர் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன. கோயிலுக்கு வெளியே முனீஸ்வரர் காணப்படுகிறார்.
சிறப்பு
[தொகு]இங்கு தைப்பூச நாளில் தீர்த்தவாரி நிகழ்ச்சி விமர்சையாக நடைபெறுகிறது. காசிக்குச் சென்றுவருவதற்கு இணையான பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையின் பின்னணியாக அப்பகுதி மக்களால் கதைகள் கூறப்படுகின்றன. [1]
மேற்கோள்கள்
[தொகு]வெளியிணைப்புகள்
[தொகு]- திருமூலநாதர் கோவில் - புதுக்கோட்டை
- காசிக்கு இணையாக முக்தி தரும் திருவுடையார்பட்டி திருமூலநாதர்..., தினமணி, நாள்: திசம்பர் 20, 2012