திராங்கானு கல்வெட்டு
கோலாலம்பூர் தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தில் உள்ள திராங்கானு கல்வெட்டின் பிரதி | |
செய்பொருள் | கருங்கல் |
---|---|
உயரம் | < 89 cm (35 அங்) |
அகலம் | < 53 cm (21 அங்) |
எழுத்து | சாவி எழுத்துமுறை |
உருவாக்கம் | அண். 1303 கிபி |
தற்போதைய இடம் | திராங்கானு மாநில அருங்காட்சியகம் |
திராங்கானு கல்வெட்டு (ஆங்கிலம்: Terengganu Inscription Stone; மலாய்: Batu Bersurat Terengganu; சாவி: باتو برسورت ترڠݢانو) என்பது 1899-ஆம் ஆண்டு மலேசியா, திராங்கானு, உலு திராங்கானு மாவட்டம் (Hulu Terengganu District), கோலா பேராங் தெர்சாட் ஆற்றின் அருகே கண்டுபிடிக்கப்பட்ட கருங்கல் கல்வெட்டு.[1]
இந்தக் கல்வெட்டு 14-ஆம் நூற்றாண்டு மலாய் எழுத்திலும் (Classical Malay); ஜாவி எழுத்திலும் (Jawi script) எழுதப்பட்டு உள்ளது.[2]
அதில் செரி படுக்கா துவான் (Seri Paduka Tuan) என அழைக்கப்படும் திராங்கானு ஆட்சியாளரால் வெளியிடப்பட்ட பிரகடனம் உள்ளது. அந்த ஆட்சியாளரின் குடிமக்கள் இசுலாம் மதத்தை நீட்டிக்கச் செய்யவும், நிலைநிறுத்தவும் மற்றும் அவர்களின் வழிகாட்டுதலுக்காக 10 அடிப்படை சரியா (Sharia) சட்டங்களை பின்பற்றுமாறும் வலியுறுத்தப் படுகிறது.
பொது
[தொகு]702 AH என தேதியிடப்பட்ட இந்தக் கல்வெட்டு (பொ.ஊ. 1303), தென்கிழக்கு ஆசியாவின் மலாய் உலகில் சாவி எழுத்துமுறையில் எழுதப்பட்டதற்கான தொடக்கச் சான்றாக உள்ளது. அத்துடன் இப்பகுதியில் இசுலாம் ஓர் அரசு மதமாக வந்ததற்கான மிகப் பழமையான சான்றுகளில் ஒன்றாகவும் அமைகிறது.[3]
1899-ஆம் ஆண்டு கோலா பேராங்கில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கிற்குப் பிறகு, தெர்சாட் ஆற்றின் (Tersat River) அருகே, சையித் உசின் பின் குலாம் அல்-போகாரி (Sayid Husin bin Ghulam al-Bokhari) என்ற அரபு வணிகராலும்; பெங்கீரான் அனும் எங்கு அப்துல் காதிர் பின் எங்கு பேசார் (Pengiran Anum Engku Abdul Kadir bin Engku Besar) எனும் அரச பிரபுவாலும்; திராங்கானு கல்வெட்டு தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது.[4]
அந்தக் கல்வெட்டு அப்போதைய திராங்கானு சுல்தான் சைனல் அபிடின் III (Zainal Abidin III of Terengganu) என்பவரிடம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் அந்தக் கல்வெட்டு புக்கிட் புத்திரி (Bukit Puteri) எனும் இளவரசி மலையின் உச்சியில் வைக்கப்பட்டது.
திராங்கானு மாநில அருங்காட்சியகம்
[தொகு]இந்த திராங்கானு கல்வெட்டு மலாக்கா சுல்தானகத்தின் காலத்தைவிட முந்தையது. இது இப்போது திராங்கானு மாநில அருங்காட்சியகத்தில் (Terengganu State Museum) காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. [5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ UNESCO 2009, ப. 6
- ↑ Teeuw 1959, ப. 141–143
- ↑ UNESCO 2009, ப. 1–3
- ↑ Nicholas Tarling, ed. (25 January 1993). The Cambridge History of Southeast Asia, Volume 1. Cambridge University Press. p. 514. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0521355056.
- ↑ "The Batu Bersurat Terengganu ("Inscribed Stone of Terengganu") was listed as one of the United Nation's Memory of The World, a UNESCO's program to preserve valuable heritage archive worldwide. The stone was found by a gold and tin mining Arab trader, Syed Hussin Ghulam al-Bukhari, in 1903 in Kampung Buluh, a village 3km from the town of Kuala Berang". www.wonderfulmalaysia.com. பார்க்கப்பட்ட நாள் 1 July 2023.
நூல்கள் பட்டியல்
[தொகு]- Adi Yasran, A. A.; Mohd Zin, M. Z.; Hashim, M.; Halimah, H.; Mohd Sharifudin, Y.; Syed Nurulakla, S. A.; Nurhidayah J; A. Asmadi Sakat; M. Roslan Mohd Nor (2012), "The Jawi writing system and vocabulary of the earliest legal malay inscription and manuscripts", Journal of Applied Sciences Research, 8 (7), பன்னாட்டுத் தர தொடர் எண் 1816-157X
- Hooker, Virginia Matheson (2003), A Short History of Malaysia: Linking East and West, Allen & Unwin, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-186-4489-55-2
- Teeuw, Andries (1959), The history of the Malay language. A preliminary survey, Royal Netherlands Institute of Southeast Asian and Caribbean Studies, பார்க்கப்பட்ட நாள் 17 October 2012
- UNESCO (2009), Memory of the World: Batu Bersurat Terengganu (Inscribed Stone of Terengganu) (PDF)
- UNESCO (2001), Memory of the World: Malaysia