ஜி. சீனிவாசன்
ஜி. சீனிவாசன் | |
---|---|
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகர், எழுத்தாளர், இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 1975–2011 |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள், கன்னிப்பருவத்திலே, ராணுவ வீரன், இதய கோவில் |
வாழ்க்கைத் துணை | புலியூர் சரோஜா |
ஜி. சீனிவாசன் என்பவர் ஒரு இந்தியத் திரைப்பட நடிகர், எழுத்தாளர், இயக்குனர் ஆவார். இவர் முக்கியமாக தமிழ் படங்களில் நடித்துள்ளார். 1970, 1980களில் துணைப் பாத்திரங்களிலும், எதிர் நாயகன் பாத்திரங்களிலும் நடித்துவந்தார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். பாரதிராஜாவின் புதிய வார்ப்புகள் (1979) படத்தில் முதன்மை எதிர்நாயகனாக அறிமுகமானார். இவரது மனைவி நடன இயக்குனர் புலியூர் சரோஜா 70, 80, 90 ஆண்டுகளில் பிரபலமான நடன இயக்குநராக இருந்தார். இவர்களுக்கு சொந்தமாக கல்வி நிறுவனங்கள் உள்ளன.[1]
திரைப்பட வாழ்க்கை
[தொகு]இவர் எட்டு படங்களை எழுதியும், மூன்று படங்களை இயக்கியுமுள்ளார். ஆதூர்த்தி சுப்பா ராவின் உதவியாளராகத் இருந்த இவர், தாதா மிராசி மற்றும் கே. விஸ்வநாத் போன்ற பல்வேறு இயக்குநர்களுடன் துணை இயக்குநராக பணியாற்றியுள்ளார். தமிழில் ராணுவ வீரன், பெண்மணி அவள் கண்மணி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் எதிர்மறை கதைப்பாத்திரங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.[2]
குடும்பம்
[தொகு]இவர் நடன இயக்குனர் புலியார் சரோஜாவை மணந்தார். இவர்களது ஒரே மகன் சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்தார்.
கைது
[தொகு]சரோஜாவும் சீனிவாசனும் ராமாவரம் பகுதியில் சத்யா மெட்ரிகுலேசன் பள்ளியை நடத்தி வருகின்றனர். பள்ளியின் கழிவுநீர்த் தொட்டியில் 5 வயது சிறுவன் சுவாதிராஜன் தவறி விழுந்து இறந்தான். போலீசார் வழக்கை பதிவு செய்து விசாரித்தனர். இதையடுத்து, கழிவுநீர்த் தொட்டியை அலட்சியமாக சரியாக மூடாததற்காக பள்ளி நிறுவனர் சீனிவாசனை போலீசார் கைது செய்தனர்.[3]
திரைப்படவியல்
[தொகு]இது ஒரு பகுதி திரைப்படவியல் மட்டுமே. நீங்கள் இதை விரிவாக்கலாம்.
1970 கள்
[தொகு]ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1975 | அவள் ஓரு காவியம் | அறிமுக படம் | |
1978 | கிழக்கே போகும் ரயில் | மருது | |
1979 | புதிய வார்ப்புகள் | பண்ணையார் | வில்லனாக |
1979 | திசை மாறிய பறவைகள் | ||
1979 | கன்னிப்பருவத்திலே | ||
1979 | எணிப்பாடிகள் | ||
1979 | நல்லதொரு குடும்பம் |
1980 கள்
[தொகு]ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1980 | பூட்டாத பூட்டுகள் | ||
1980 | முரட்டுக்காளை | ||
1981 | சட்டம் ஒரு இருட்டறை | ||
1981 | ராணுவ வீரன் | ||
1981 | கடல் மீன்கள் | ||
1981 | வெளிச்சத்துக்கு வாங்க | ||
1981 | கிளிஞ்சல்கள் | ||
1982 | வாழ்வே மாயம் | ||
1982 | பரிட்சைக்கு நேரமாச்சு | ||
1983 | வெள்ளை ரோஜா | ||
1983 | தூரம் அதிகமில்லை | ||
1984 | வாய்ச் சொல்லில் வீரனடி | ||
1984 | பொழுது விடிஞ்சாச்சு | ||
1985 | படிக்காத பண்ணையார் | ||
1985 | ஸ்ரீ ராகவேந்திரா | ||
1985 | இதய கோவில் | ||
1985 | சிதம்பர ரகசியம் | ||
1987 | இவள் ஒரு தொடர் கதை | ||
1987 | இது ஒரு தொடர் கதை | ||
1987 | மனிதன் | ||
1988 | பெண்மணி அவள் கண்மணி | ||
1988 | பார்த்தால் பசு | ||
1989 | ராஜாதி ராஜா | ||
1989 | உரிமை கீதம் | ||
1989 | என்னெப் பெத்த ராசா |
1990 கள்
[தொகு]ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1990 | ராஜா எங்க ராஜா | ||
1991 | புதிய ராகம் | ||
1992 | காவல் கீதம் |
2010 கள்
[தொகு]ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2005 | ஐயா | ||
2010 | நகரம் | ||
2011 | வேங்கை | கடைசி படம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "G.Sreenivasan". Antru Kanda Mugam (in ஆங்கிலம்). 21 October 2013. பார்க்கப்பட்ட நாள் 31 January 2020.
- ↑ Kumar, S. R. Ashok (25 December 2010). "Grill Mill: G. Srinivasan" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/features/cinema/Grill-Mill-G.-Srinivasan/article15608202.ece.
- ↑ Staff (6 August 2006). "நடன இயக்குநர் புலியூர் சரேஜாவின் கணவர் கைது!". Oneindia (Tamil). பார்க்கப்பட்ட நாள் 31 January 2020.