பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கட்டுரை முற்பதிவு அறிவிப்பு
வரிசை 89: வரிசை 89:


நன்றி. தற்போது புரிந்து கொண்டேன். --[[பயனர்:TNSE Mahalingam VNR|மகாலிங்கம்]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 10:33, 21 மே 2017 (UTC)
நன்றி. தற்போது புரிந்து கொண்டேன். --[[பயனர்:TNSE Mahalingam VNR|மகாலிங்கம்]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 10:33, 21 மே 2017 (UTC)

== தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு ==
{{வார்ப்புரு:விக்கித்திட்டம் 15/பயனர் அறிவிப்பு 4}}
--[[விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி#ஒருங்கிணைப்புக் குழு|ஒருங்கிணைப்புக் குழு]] ([[விக்கிப்பீடியா பேச்சு:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி|பேச்சு]]) சார்பாக [[பயனர்:ShriheeranBOT|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:ShriheeranBOT|பேச்சு]]) 17:03, 31 மே 2017 (UTC)

17:03, 31 மே 2017 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள்!

வாருங்கள், TNSE Mahalingam VNR, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- நந்தினி (பேச்சு) 16:47, 20 ஏப்ரல் 2017 (UTC)

April 2017

Information icon Hello, TNSE Mahalingam VNR, welcome to Wikipedia and thank you for your contributions. Your editing pattern indicates that you may be using multiple accounts or coordinating editing with people outside Wikipedia. Our policy on multiple accounts usually does not allow this, and users who use multiple accounts may be blocked from editing. If you operate multiple accounts directly or with the help of another person, please disclose these connections. Thank you. AntanO 17:55, 20 ஏப்ரல் 2017 (UTC)

விக்கித்தரவில் சேர்க்க

ஒரு கட்டுரையை விக்கித்தரவில் சேர்க்க: -->விக்கிப்பீடியா:விக்கித்தரவு<-- என்பதை வாசித்துப் பாருங்கள். உங்கள் கட்டுரை வேண்டுகோளுக்கு அமைய ஹெக்சாமெதிலீன்டெட்ரமீன் என மாற்றப்பட்டுள்ளது; விக்கித்தரவில் சேர்க்கப்பட்டுவிட்டது. --சி.செந்தி (உரையாடுக) 05:31, 7 மே 2017 (UTC)[பதிலளி]

நன்றிகள்.

பேச்சு பக்கங்களில் உங்கள் கருத்துகளுக்கு கீழே கையொப்பம் தோன்ற -~~~~ சேர்த்துவிடுங்கள் அல்லது கருவிப்பட்டையிலுள்ள “நேரமுத்திரையுடன் கையொப்பம்" பொத்தானை ( ) அழுத்தினால், உங்கள் கையொப்பம் சேர்ந்து விடும்.--சி.செந்தி (உரையாடுக) 05:49, 7 மே 2017 (UTC)[பதிலளி]

நன்றிகள்--மகாலிங்கம் (பேச்சு) 13:47, 7 மே 2017 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி

வணக்கம், TNSE Mahalingam VNR!

உங்கள் கட்டுரையை பயிர் போல் வளர்ப்போம், காப்போம்! வித்திட்டதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 09:11, 10 மே 2017 (UTC)[பதிலளி]

பதக்கம்

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
அம்மோனியம் குளோரைடு கட்டுரையை மிகச் சிறப்பாக வளர்த்து வருகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. விக்கிப்பீடியாவில் பங்களிப்பது பற்றி உங்கள் மாவட்ட சக ஆசிரியர்களுக்கும் எடுத்துரையுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 17:44, 11 மே 2017 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:08, 11 மே 2017 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--சி.செந்தி (உரையாடுக) 05:56, 12 மே 2017 (UTC)[பதிலளி]

நிா்வாகிகளுக்கு நன்றிகள் உரித்தாகட்டும். தொடர்ந்து என் குறைகளை சுட்டிக்காட்டி வழிகாட்டுங்கள். எங்கள் மாவட்டத்தில் ஆசிரியப் பெருமக்களிடம் என்னால் ஆன விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறேன்.--மகாலிங்கம் (பேச்சு) 01:13, 12 மே 2017 (UTC)[பதிலளி]

ஒரே மாதத்திற்குள் நல்ல ஆக்கங்களை உருவாக்கி வரும் தங்களுக்கு எம் இனிய வாழ்த்துகள்--2405:204:700A:61B8:3EB3:82FB:9ACA:92AD 02:09, 12 மே 2017 (UTC)[பதிலளி]
வேதியியல் சார்ந்து நல்ல திறனூக்கமுடைய கட்டுரைகளை எழுதி வரும் தங்களுக்கு உளங்கனிந்த வாழ்த்துகள். தங்கள் மாவட்டத்தில் தங்களைப்போன்று ஆர்வத்துடன் எழுதும் வகையில் விக்கிப்பீடியர்களை உருவாக்க விழைகின்றேன்.--Thamizhpparithi Maari (பேச்சு) 05:54, 12 மே 2017 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்! தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துக்கள். நீங்கள் அறிவியல் தொடர்பான கட்டுரைகளை சிறப்பாக மொழிபெயர்த்து உருவாக்கி விரிவாக்கி வருவதையிட்டு மிக்க மகிழ்வடைகின்றேன். இது போன்ற கட்டுரைகள் பள்ளி மாணவர்களுக்கும் மிகப் பயனுள்ளதாக அமையும். இப்பக்கத்தில் முக்கியமான சில அறிவியல் சார் கட்டுரைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. முடிந்தால் இங்கு சிவப்பு இணைப்பாக உள்ள கட்டுரைகளை உருவாக்கி உதவுங்கள். பிற கட்டுரைகளை முடியும் போது விரிவாக்கி உதவுங்கள்.
அறிவியல் விாிவுரையாளராகிய நீங்கள் தங்களது அறிவை பயன்மிக்க வகையில் இங்கு பயன்படுத்துவதையிட்டு மிக்க மகிழ்வடைகின்றேன். உங்கள் சக ஆசிரிய நண்பர்களையும் விக்கிக்கு அழைத்துவாருங்கள். வாழ்த்துகள்! 🙂 --{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 06:43, 12 மே 2017 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:46, 12 மே 2017 (UTC)[பதிலளி]
வாழ்த்துக்கள்!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:38, 12 மே 2017 (UTC)[பதிலளி]

வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். என்னை வழிநடத்தி வரும் அத்தனை பேருக்கும் நன்றிகள். தொடர்ந்து பங்களிக்க ஊக்கமளிப்பதாய் உள்ளது உங்களின் வாழ்த்துக்கள். --மகாலிங்கம் (பேச்சு) 17:04, 12 மே 2017 (UTC)[பதிலளி]

வாழ்த்துகள் மகாலிங்கம். 👍 விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:29, 14 மே 2017 (UTC)[பதிலளி]

விக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது!

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

  • 👍 - போட்டி ஆரம்பமாகின்றது!
    • 📆 - மே 01, 2017, இலங்கை & இந்திய நேரம் காலை 05:30 முதல் (UTC:-00:00)
  • ✒️ - இன்றே பங்குபற்றத் தொடங்குங்கள்!...
  • ⏩ - விரிவாக்கிய கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் இற்றை செய்யுங்கள்!...
  • 🎁 - அசத்தலாகப் பங்குபற்றி பரிசுகளையும் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:31, 13 மே 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி

வணக்கம் நண்பரே! போட்டியில் பங்குபற்றுவதையிட்டு மகிழ்ச்சியாக உள்ளது. எனினும் நீங்கள் விரிவாக்கிய வேதி வினைவேகவியல் எனும் கட்டுரை இப்பட்டியலில் இல்லை. பரவாயில்லை! இனிமேல் அப்பட்டியலில் உள்ள கட்டுரைகளை மட்டும் விரிவாக்க்குங்கள்! முற்கூட்டியே விரிவாக்கவுள்ள கட்டுரைகளை இங்கு குறிப்பிடலாம். போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்! உதவிகள் தேவைப்படின் தயங்காது கேளுங்கள்! தங்கள் பதிலை எதிர்பார்க்கின்றேன்! நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:49, 13 மே 2017 (UTC)[பதிலளி]

வணக்கம் மகாலிங்கம்! கட்டுரை விரிவாக்கப் போட்டியில் பங்குபற்றுவதற்கு வாழ்த்துக்கள். நீங்கள் போட்டிக்கான கட்டுரையை விரிவாக்கும்போது, அதற்கான விதிகளைக் கருத்தில் கொள்ளுங்கள். போட்டிக்கான கட்டுரைகள் பட்டியலில் தெரிவு செய்து விரிவாக்கும் கட்டுரைக்கு, உங்களால் 6000 பைட்டுக்கள் சேர்க்கப்பட்ட பின்னர், கட்டுரையின் மொத்த அளவு 26000 பைட்டுக்களைத் தாண்டிய பின்னரே அந்தக் கட்டுரையை சமர்ப்பியுங்கள். நீங்கள் ஏற்கனவே சமர்ப்பித்த கட்டுரை பட்டியலில் இல்லாததுடன், 26000 பைட்டுக்களை அடையவுமில்லை. எனவே அதனைக் கவனித்துச் செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். மேலும் உங்கள் பெயரை இங்கே பதிவு செய்து வையுங்கள். மேலும் நீங்கள் முற்பதிவு செய்த பல கட்டுரைகளில் மேற்கோளில்லை என்ற வார்ப்புரு உள்ளது. தயவுசெய்து நீங்கள் கட்டுரையை விரிவாக்கம் செய்யும்போது, முக்கிய தகவல்களுக்கான மேற்கோள்களையும் இணைத்துவிடுங்கள். எந்த உதவி வேண்டுமானாலும் தயங்காது கேளுங்கள். நன்றி. --கலை (பேச்சு) 18:24, 13 மே 2017 (UTC)[பதிலளி]

ஆலோசனைகளுக்கு நன்றிகள். ஏற்கெனவே என்னுடைய பெயர் பதிவிட்டுள்ளேன். தற்போது போட்டி விதிகள் பற்றி தெரிந்து கொண்டுள்ளேன். கட்டுரைகள் தேர்வில் நீங்கள் கூறியவற்றைக் கவனத்தில் கொள்கிறேன். என்னுடைய நோக்கத்தில் இந்த போட்டி என்பது கூடுதல் வாய்ப்பு. பள்ளிக்கல்வித்துறை செயலர் அவா்களின் உத்தரவுப்படி அறிவியல் கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்ப்பதே எனது முக்கிய நோக்கமாக உள்ளது. இருப்பினும் ஸ்ரீஹீரன், கலையரசி ஆகியோர் எனக்கு வழங்கிய ஆலோசனைகளை வரவேற்று பின்பற்றி நடக்க முயற்சிக்கிறேன். மீண்டும் நன்றிகள்.--மகாலிங்கம் (பேச்சு) 00:59, 14 மே 2017 (UTC)[பதிலளி]

மகிழ்ழ்சி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 01:04, 14 மே 2017 (UTC)[பதிலளி]

பதக்கம்

சிறப்புப் பதக்கம்
ஒரு புதிய பயனராக இருந்தும், வேதி வினைவேகவியல் கட்டுரையை அருமையாக வளர்த்தெடுக்கிறீர்கள். பாராட்டுகள். --இரா. செல்வராசு (பேச்சு) 15:39, 14 மே 2017 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம் வாழ்த்துக்கள்! --{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 15:58, 14 மே 2017 (UTC)[பதிலளி]

எனது முயற்சிகளைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் தமிழ் விக்கிப்பீடியா நிா்வாகிகள் அனைவருக்கும் நன்றிகள். --மகாலிங்கம் (பேச்சு) 16:10, 14 மே 2017 (UTC)[பதிலளி]

வாழ்த்துகள்! நாம் நிருவாகிகள் அல்லர். தங்களைப் போன்ற சக பயனர்கள் தாம். தொடர்ந்து சிறப்பாகப் பங்களியுங்கள். நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:24, 14 மே 2017 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் வாழ்த்துக்கள்!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:30, 14 மே 2017 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் வாழ்த்துக்கள்! --கலை (பேச்சு) 17:00, 14 மே 2017 (UTC)[பதிலளி]

பயனர்:கி.மூர்த்தி

பயனர்:கி.மூர்த்தியுடன் உரையாடினீர்களா? அவரது அலைப்பேசி எண்ணைத் தங்களுக்கு, SCERTயில் தந்தேனென்றே ஞாபகம். அவர் தங்களைப் போன்றே வேதியியல் கட்டுரைகளில் ஆர்வம் மிக்கவர்.--உழவன் (உரை) 02:21, 16 மே 2017 (UTC)[பதிலளி]

இன்று கி.மூர்த்தி அவா்களுடன் தொடர்பு கொண்டு பேசினேன். நல்ல பல ஆலோசனைகளைப் பெற்றேன். வேதியியல் கட்டுரைகளில் எழுதப்பட வேண்டியவை தொடர்பான விவரங்கள் அறிந்து கொண்டேன். நன்றிகள் தகவல் உழவன் ஐயா. --மகாலிங்கம் (பேச்சு) 14:57, 16 மே 2017 (UTC)[பதிலளி]

தொடரட்டும் விக்கிப் பங்களிப்புகள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:59, 16 மே 2017 (UTC)[பதிலளி]
சோடியம் ஐதராக்சைடு கட்டுரையை கட்டுரைப் போட்டிக்குப் பதியுங்கள்.--Kanags \உரையாடுக 02:05, 17 மே 2017 (UTC)[பதிலளி]

சோடியம் ஐதராக்சைடு கட்டுரை போட்டிக்கான தலைப்புகளில் உள்ள கட்டுரையா? --மகாலிங்கம் (பேச்சு) 07:28, 17 மே 2017 (UTC)[பதிலளி]

இது போட்டிக்கட்டுரைத் தலைப்புக்களில் இல்லை. அதனால் தற்போதைக்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனால், இது தொடர்பில் எனது கருத்தை இங்கே குறிப்பிடுகிறேன்.--கலை (பேச்சு) 09:15, 17 மே 2017 (UTC)[பதிலளி]
மகாலிங்கள் அவர்களே, இங்குள்ள பட்டியலில் காணப்படும் கட்டுர்டைகள் மட்டுமே போட்டியாளர்கள் விரிவாக்க வேண்டியவை. Kanags தவறாக புரிந்துகொண்டுள்ளார். பரவாயில்லை, இப்போதைக்கு நீங்கள் விரிவாக்கிய சோடியம் ஐதராக்சைடு கட்டுரையை ஏற்றுக்கொண்டுள்ளேன். இனிமேல் அருள்கூர்ந்து, அப்பட்டியலில் உள்ள கட்டுரைகளை மட்டும் விரிவாக்கிவிட்டு சமர்ப்பியுங்கள். போட்டியில் முனைப்போடு பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகள். நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:09, 17 மே 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்பு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

  • ✒️ - போட்டிக்காக ஒரு கட்டுரையை நீங்கள் விரிவாக்கும் போது, பிற பயனர்கள் நீங்கள் விரிவாக்கும் கட்டுரையைத் தொகுக்கலாம். அப்போது நீங்கள் செய்த மொத்த விரிவாக்கமும் அழிந்து போக நேரிடலாம். இதனைத் தவிர்த்துக்கொள்ள,
  • ⏩ - நீங்கள் விரிவாக்கும் கட்டுரையின் மேலே {{AEC|உங்கள்பெயர்}} என்பதனை இட்டு சேமித்துவிட்டு, விரிவாக்க ஆரம்பியுங்கள். உங்கள் பயனர் பெயரைக் குறிப்பிடத் தவறாதீர்கள்.
  • 👉 - விரிவாக்கம் முடிந்த பின் {{AEC|உங்கள்பெயர்}} இனை நீக்கிவிடுங்கள்.
  • 🎁 - தொடர்ந்து முனைப்போடு பங்குபற்றி போட்டியில் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:14, 21 மே 2017 (UTC)[பதிலளி]

என்பதை தலைப்புகள் முற்பதிவு செய்த இடத்திலா? அல்லது போட்டிக்காக விாிவாக்கப்பட வேண்டிய கட்டுரைத் தலைப்புகள் என்று குறிப்பிடப்பட்டுள்ள இடத்திலா? எந்த இடத்தில் போட வேண்டும்.
அதனை நீங்கள் விரிவாக்க எதிர்பார்க்கும் கட்டுரையின் தொகுப்புப் பக்கத்தில் போடுங்கள். எடுத்துக்காட்டுக்கு, நீங்கள் கதிரியக்கம் எனும் கட்டுரையை சில நிமிடங்களில் விரிவாக்க உள்ளீர்கள் என்றால், அதற்கு முன்னர் அக்கட்டுரையின் மேல் இதனை இடலாம். கட்டாயம் என்று இல்லை. நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:30, 21 மே 2017 (UTC)[பதிலளி]

நன்றி. தற்போது புரிந்து கொண்டேன். --மகாலிங்கம் (பேச்சு) 10:33, 21 மே 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
சிலநேரங்களில் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை இன்னொருவர் விரிவாக்கும் செயற்பாடு தவறுதலாக நடைபெற்றுள்ளதனால், அதனைத் தவிர்க்கும் வகையிலும், அனைவருக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கும் வகையிலும் கட்டுரைகள் முற்பதிவு செய்வதில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு:

  • 👉 - ஒரு நேரத்தில் ஒருவர் மூன்று கட்டுரைகளுக்கு மட்டுமே முற்பதிவு செய்து வைக்கலாம். முற்பதிவைச் செய்ய இங்கே செல்லுங்கள்.
  • 🎰 - நீங்கள் முற்பதிவு செய்யும் கட்டுரைக்கு, முற்பதிவு வார்ப்புரு இடப்படும்.
  • ✒️ - ஒருவரால் முற்பதிவு செய்யப்படும் கட்டுரை 10 நாட்கள்வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வேறொருவர் விரும்பினால் விரிவாக்கலாம்.
  • ⏩ - போட்டிக்கான முற்பதிவு வார்ப்புரு இடப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை 10 நாட்களுக்கு முன்னர் வேறொருவர் விரிவாக்கினால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புரிந்துணர்வுடன், ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நம்புகின்றோம்.
  • 🎁 - இவற்றை கருத்திற் கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகின்றோம்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:03, 31 மே 2017 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:TNSE_Mahalingam_VNR&oldid=2297097" இலிருந்து மீள்விக்கப்பட்டது