பயனர் பேச்சு:Profvk: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தமிழ் விக்கிக் கூடலுக்கான அழைப்பு
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 397: வரிசை 397:


தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அரிய வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். [[விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்#கலந்து கொள்வோர்|உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள்.]] நன்றி.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 12:06, 24 சூன் 2013 (UTC)
தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அரிய வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். [[விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்#கலந்து கொள்வோர்|உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள்.]] நன்றி.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 12:06, 24 சூன் 2013 (UTC)

==நன்றி ==

குறிப்பிட்டதேதி தெரிந்தவுடன் னான் முடிவெடுக்கிறேன். எனக்கு வரவேண்டுமென்றுதான் விருப்பம். இப்பொழுது பெங்களூரில் தான் இருக்கிறேன்.

--[[பயனர்:Profvk|Profvk]] ([[பயனர் பேச்சு:Profvk|பேச்சு]]) 09:17, 28 சூன் 2013 (UTC)

09:17, 28 சூன் 2013 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள், Profvk!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--Umapathy 00:24, 3 ஏப்ரல் 2007 (UTC)


தங்கள் பங்களிப்புகளுக்கு நன்றி. உங்களைப் பற்றிய தகவல்களை பயனர் பக்கத்தில் தரலாம்.--Sivakumar \பேச்சு 22:44, 5 ஏப்ரல் 2007 (UTC)

நல்வரவு

உங்கள் படிப்பறிவும், பட்டற்றிவும் அபூர்வம். உங்களின் பங்களிப்பை தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் நல்கி, தமிழ்விக்கிப்பீடியாவை பலப்படுத்த வரவேற்கின்றோம். --Natkeeran 03:56, 6 ஏப்ரல் 2007 (UTC)

இன்னும் ஒரு பேராசிரியர் தமிழ் விக்கிப்பீடியாவிற்குக் கிடைத்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி.--Sivakumar \பேச்சு 05:41, 6 ஏப்ரல் 2007 (UTC)

ஆன்மாவா, ஆத்மாவா

மதிப்பிற்குரிய Profvk அவர்களுக்கு, இந்துத் தத்துவங்களில் எனது அறிவு மிகமிகக் குறைவே :(. ஆன்மா, ஆத்மா இரண்டும் ஒன்றெனில் ஆன்மா என்ற பக்கத்தை உருவாக்கி பின்னர், ஆத்மா என்ற தலைப்பை இதற்கு வழிமாற்றி விடலாம். ஆன்மா என்ற கட்டுரையை நீங்கள் தாராளமாகத் தொடங்கலாம்.--Sivakumar \பேச்சு 15:55, 10 ஏப்ரல் 2007 (UTC)

Profvk, உங்கள் வரவு நல்வரவாகுக. உங்கள் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் கண்டு நான் மகிழ்கின்றேன். பல் துறைகளில் நீங்கள் நிறைய பட்டறிவும் உள்ளவர்களாகத் தெரிகின்றீர்கள். சமயம், மெய்யியல் துறைகளில் என்னால் உதவியைச் செய்கிறேன். நீங்கள் ஆத்மா-பரமாத்மா என்றே எழுதலாம். இதுவே ஆன்மா-பரம்பொருள் என்பதும். முன்பின் அறியாதவர் தெளிவாக விளங்கிக்கொள்ளுமாறு இருப்பதே நம் குறிக்கோள். கூடிய மட்டிலும் நல்ல தமிழ்ச் சொற்களால் விளக்கினால் எல்லாத் தமிழர்களும் புரிந்து கொள்வார்கள் என்பதால் அதனைப் பரிந்துரைக்கிறோம். சிவகுமார் கூறுவது போல பல சொற்களாலும் ஒரு கட்டுரைக்கே அழைத்துச் செல்ல இயலும்.

--செல்வா 19:40, 10 ஏப்ரல் 2007 (UTC)

கணிதம் பற்றி

மதிப்பிற்குரிய ProfVK, அவர்களுக்கு, கணிதம் பற்றி எழுத முன்வந்ததற்கு மிக்க நன்றி. தாங்கள் முதலில் கணிதம் கட்டரையில் இருந்தே தொடங்கலாம். இக்கட்டுரை அவ்வளவு சிறப்பாக இல்லை. வேண்டுமானால் கட்டுரை முழுவதையுமே மீண்டும் திருத்தி அமைக்கலாம்.

1.விகிதமுறு எண்களை வரிசைப்படுத்த கேண்டரின் முறைக்காக நான் போட்டிருக்கும் படிமம் எனக்கே திருப்தி இல்லை. அதை பலப்படுத்துவது எப்படி?

பேராசிரியர். செல்வா இதைப் பற்றி அறிந்திருக்கலாம். அவர் உங்களுக்கு உதவக் கூடும்.

2. When should I give English equivalents?

When there is no standard term in Tamil, then we can use English equivalents.

3. Is there a plan for including scientific (mathematical) articles in a certain ordered routine? Who is taking care of this?

As of now, we don't have any plans. See Also பேச்சு:கணிதம்

4.I want to write a large number of articles over the entire spectrum of Mathematics - in Tamil. Can friends write to me, in my talk page, what they would like to see first?

You can start from கணிதம். See also பேச்சு:கணிதம்

--Sivakumar \பேச்சு 02:49, 13 ஏப்ரல் 2007 (UTC)

(1)மிக நல்ல முயற்சி. முழுவதும் படித்த பின் கருத்துக்கள் தெரிவிக்கின்றேன். முன்னர் சுந்தர் என்னும் பயனர் கேண்டரின் கோணல்கோடு நிறுவல்முறை என்று ஒரு கட்டுரை வரைந்து இருந்தார். அதனையும் நீங்கள் பார்க்க வேண்டும். (2) நீங்கள் எப்பொழுதெல்லாம் ஆங்கிலத்தில் ஈடான சொற்கள் தரவேண்டும் என எண்ணுகிறீர்களோ அப்பொழுதெல்லாம் தரலாம். (3) கணிதக் கருத்துக்களை எந்த முறையில் வளர்க்க வேண்டும் என்று விதிமுறை ஏதும் இல்லை, ஆனால் அடிப்படைகளை முதலில் எழுதி பின்னர் வளர்ந்த கருத்துக்களை எழுதலாம். என்றாலும் சில நேரங்களில் சற்று ஆழமான கருத்துக்களை எழுதிப் பின்னர் அதற்குத்தேவையான துணைக் கருத்துக்களையும் எழுதலாம். (4) அருள்கூர்ந்து எழுதுங்கள், உங்கள் கட்டுரைகளை ஆர்வமுடன் எதிர்பார்த்து தமிழ் மக்கள் எல்லோரும் வரவேற்பர். கடந்த சில நாட்களாக என்னால் பங்கு கொள்ள இயலவில்லை. பொதுவாக கணிதத்தில் இங்கு பலரும் ஆர்வம் உடையவர்கள். பயனர்கள் மயூரநாதன் கணிதத்தில் நிறைய நல்ல கட்டுரைகள் எழுதியுள்ளார், பயனர் சுந்தர் நல்ல கட்டுரைகள் எழுதியுள்ளார்., நானும் சில கருத்துக்கள் பற்றி எழுதியுள்ளேன். அண்மையில் தொடர் பல்கோணத் தொடுவட்டச் சிறப்பெண் என்று ஒரு கட்டுரை எழுதினேன். இதுபற்றி ஆங்கில விக்கியில் கூட ஒரு கட்டுரை இல்லை. பயனர் நற்கீரன், பயனர் கனக்ஸ், பயனர் ரவி, பயனர் சிவகுமார், பயனர் மயூரன், பயனர் கோபி, பயனர் உமாபதி, பயனர் கலாநிதி என்று ஏறத்தாழ எல்லாப் பயனர்களுமே கணிதத்தில் ஆர்வம் உள்ளவர்கள். --செல்வா 02:53, 13 ஏப்ரல் 2007 (UTC)

Abstract க்கு ஈடான தமிழ்ச்சொல்

Abstract என்னும் ஆங்கிலச் சொல் குறிக்கும் பொருளுக்குச் சரியான தமிழ்ச் சொல் இன்னும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இது தொடர்பாக தமிழ் விக்கிப்பீடியாவிலும், வெளியிலும் நிறையக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. எனினும் சரியான சொல் கிடைக்கவில்லை. தவியில் இடம்பெற்ற கலந்துரையாடலை செல்வாவின் பேச்சுப் பக்கத்தில் பார்க்கலாம். சென்னைதப் பல்கலைக்கழக அகராதியில் பண்பியல் என்ற பொருள் தரப்பட்டுள்ளது. concrete என்ற சொல்லுக்கும் இதே நிலைதான் இனிமேல்தான் சரியான சொல் உருவாக வேண்டும். Mayooranathan 17:57, 13 ஏப்ரல் 2007 (UTC)

கணிதம்

தமிழ் விக்கிப்பீடியாவுக்கு நல்வரவு!

எந்த பாடம் விருப்பம் என்று தமிழ் மாணவர்களைக் கேட்டால், அனேகர் கணிதம் என்பார்கள். அப்படி சொல்வதே எதோ ஒரு சமூக மரபு போல... சில நல்ல தமிழ் பாட நூல்கள் இருக்கின்றன. ஆனால், கணிதம் பற்றி பொதுவான இதழ்களோ அல்லது படைப்புக்களோ தமிழில் இல்லை. தமிழில் அப்படியான விரிவான துல்லியமான பரந்த கணித சிந்தனைப் புலத்தை கட்டியெழுப்பலாம். பொதுக் கலைச்சொற் பயன்பாட்டை ஊக்குவிக்கலாம். உங்களின் வரவும் ஆக்கங்களும் மிகவும் மகிழ்ச்சி தருகின்றது. --Natkeeran 12:15, 14 ஏப்ரல் 2007 (UTC)

ஒரு கேள்வி

முனைவர் வி. கிருஷ்ணமூர்த்தி என்று கணிதவியலாளர் ஒருவரை நான் முன்பு சந்தித்துள்ளேன். அவர் புதிர் சிந்தனை கணிதம் என்ற தலைப்பில் கணிதக் கோலம் (graph theory) பற்றி மிக அழகான நூல் ஒன்று எழுதியிருந்தார் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பு). அவர் வேறு நீங்கள் வேறு என்றுதான் எண்ணுகிறேன். அவரை நீங்கள் அறிவீர்களா? --செல்வா 22:28, 14 ஏப்ரல் 2007 (UTC)

உங்கள் மறுமொழிக்கு நன்றி. உங்கள் பங்களிப்புகளை ஆர்வமுடன் எதிர்பார்த்திருக்கின்றோம். நீங்கள் எழுதிய கணிதத்தைப் பற்றி எழுதிய கட்டுரைகள் இரண்டைப் பார்த்தேன். மிகத்தேவையான தலைப்புகளில் எழுதியுள்ளீர்கள். சிறுதுளி பெருவெள்ளம் என்பதுபோல, நாம் அனைவரும் சிறுகச் சிறுக பயனுடைய தலைப்புகளில் எழுதிவந்தால், தமிழ் விக்கி ஒரு அரிய தொகுப்பாக அமையும். தங்களைப்போன்ற தகுதி மிக்கவர்கள் வந்து எழுதி வழிகாட்ட வேண்டும். ஏற்கனவே எழுதியுள்ள குறுங்கட்டுரைகளையும் சரிபார்க்க வேண்டுகிறேன். --செல்வா 18:23, 16 ஏப்ரல் 2007 (UTC)

Abstract பற்றி

Abstract என்பதற்குத் தமிழில் நுண்புல அல்லது நுண்பிய என்று கருத்துப் பெயர்க்கலாம் என்று எண்ணுகிறேன். Abstract mathematics என்பதற்கு நுண்பியக் கணிதம் எனலாம். ஒன்றின் அடிப்படையாக அமைந்துள்ள பொது நுண்பண்புகளை, அடிகூறுகளை ஈர்த்து வடிப்பதை நுண்பியம் (Abstraction) எனலாம் என்பது என்கருத்து. --செல்வா 18:23, 16 ஏப்ரல் 2007 (UTC)

நுண் + பண்பு => நுண்பு --> நுண் + பண்பு +இயல் => நுண்பியல் ; நுண் + பண்பு + இயம் => நுண்பியம்.--செல்வா 16:59, 19 ஏப்ரல் 2007 (UTC)

திருத்தங்கள்

யார் செய்த திருத்தமாக இருந்தாலும், கருத்துப்பிழை என்று நீங்கள் தெளிவாக உணர்ந்தால் உடனே மாற்றிவிடுங்கள். நான் கணித அமைப்பு என்னும் உங்கள் கட்டுரையில் முதல் வரியை மாற்றியதற்கு காரணம் அங்கே பேச்சுப் பக்கத்தில் இட்டுள்ளேன். உங்கள் ஆக்கங்கள் தமிழ் விக்கியின் கணிதத் துறைக் கருத்துக்களை நன்றாக ஆழப்படுத்தும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். கணிதம் பற்றிய உங்கள் ஆர்வமும் ஊக்கமும் புத்துணர்ச்சி ஊட்டுகின்றது. வழி வழியாய் தமிழர்கள் உங்களுக்கு நன்றிக் கடன் பட்டவர்களாக இருப்பர். அருள்கூர்ந்து உங்கள் நீண்ட பட்டறிவை இயன்றளவு பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களைப் போல் ஒரு 10 பேர் கணிதத் துறை பற்றி எழுதினால் எத்தனையும் பயனுடைய கருத்துக் குவியலாக அமையும்!! வாழ்க உங்கள் தமிழ் உள்ளம்!--செல்வா 16:55, 19 ஏப்ரல் 2007 (UTC)

உங்களது வருகையும் பங்களிப்பும் மிகுந்த உற்சாகமளிக்கின்றன. உங்களால் இயன்ற அளவு தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறேன். நன்றி. --கோபி 17:00, 19 ஏப்ரல் 2007 (UTC)

கணிதப்படங்களை பதிவேற்றுவது எப்படி?

சாதாரண Math Diagrams from Word Documents. How to upload them?

--Profvk 23:56, 22 ஏப்ரல் 2007 (UTC)

இடது பக்கத்தில் இருக்கும் கருவிப் பெட்டியில் இருக்கும் இணைப்புகளில் ஒன்றான கோப்பைப் பதிவேற்று என்ற சுட்டியை சுட்டி, அது வழி சென்று பதிவேற்றலாம். படிமங்கள் பொதுவாக svg, jpg, png வகையாக இருப்பது நன்று. Word document இல் இணைந்து இருந்தால் screen capture செய்து paint இல் jpeg கோப்பாக மாற்றலாம்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Upload

--Natkeeran 00:16, 23 ஏப்ரல் 2007 (UTC)

முதற்பக்கத்தில் இடது புறம் உள்ள பட்டையில் தேடுபெட்டிக்குக் கீழே கருவிப்பெட்டி என்னும் பெட்டியில் கோப்பைப் பதிவேற்று என்னும் இணைப்பைச் சொடுக்குங்கள். அது விரிக்கும் பக்கத்தின் கீழ்ப்பகுதியில் source filename என்னும் இடத்தில் உங்கள் கணினியில் உள்ள கோப்பை (file) 'browse' என்னும் பொத்தானை அழுத்திக் கண்டுபிடித்து இடுங்கள். நீங்கள் அங்கு இடும் படம் காப்புரிமை ஏதும் இல்லாததாக இருக்க வேண்டும். நீங்கள் ஆக்கிய படமாக இருப்பின், காப்புரிமையை விடுத்துப் பொதுமைப்படுத்த சுருக்கம் என்று பெயரிட்டுள்ள பெட்டியில் {{GDFL}} போன்ற ஏதேனும் ஓர் உரிமை பற்றிய குறிப்பை அங்கே இடவேண்டும். பிறகு சுருக்கம் என்னும் பெட்டியின் கீழே உள்ள கோப்பைப் பதிவேற்று என்னும் பொத்தானை அமுக்குங்கள். அவ்வளவுதான். படம் மதிவேற்றம் ஆகிவிடும். ஏதும் தடங்கள் இருந்தால் தயங்காமல் கேளுங்கள்.--செல்வா 02:22, 23 ஏப்ரல் 2007 (UTC)

படிமத்தைப்பதிவேற்ற உதவி தேவை

வி. கணபதி அய்யர் என்ற கட்டுரையில் அவர் படத்தைப்போட முயன்றேன். ஆனால் என் கோப்பின் பெயர் Image.jpg என்று பொதுப்பெயராக இருப்பதால் அதை என்னால் வி. கணபதி அய்யர் கட்டுரையில் பதிவேற்ற முடியவில்லை. படிமத்தைப்பார்க்க 'என் பங்களிப்புகளில்' இன்றைய பங்களிப்பைப்பார்க்கவும்.--Profvk 09:24, 3 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

படிமத்தை வேறு பெயருக்கு நகர்த்தி, வெட்டிச் சுருக்கி, கட்டுரையில் ஏற்றியுள்ளேன். --சோடாபாட்டில்உரையாடுக 13:35, 3 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
நன்றி. வேறு பெயருக்கு நகர்த்துவதுதான் எப்படி என்று எனக்குத் தெரிவிக்கமுடியுமா?--Profvk 13:38, 3 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
படிம நகர்த்தல் வசதி நிருவாகிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. பிற படிமங்களை நகர்த்த இங்கு அல்லது ஆலமரத்தடியில் குறிப்பிடுங்கள், நிருவாகிகள் நகர்த்திவிடுகிறோம்.--சோடாபாட்டில்உரையாடுக 13:48, 3 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

ஒரு விண்ணப்பம்

பேரா.வி.கே. அவர்களே, வணக்கம். கணிதம் தொடர்பான உங்கள் பங்களிப்புக்களைக் கண்டு மகிழ்ச்சி. வாய்ப்பு கிடைக்கும்போது 0.999... என்ற கட்டுரையை மேம்படுத்த வேண்டுகிறேன். -- Sundar \பேச்சு 09:08, 23 ஏப்ரல் 2007 (UTC)

Wikipedia:எழுத்துப் பெயர்ப்பு முறைகள்

Wikipedia:எழுத்துப் பெயர்ப்பு முறைகள் தங்களது கவனத்தை இந்த பக்கத்துக்கு வேண்டுகிறேன். முடியுமான போது வந்து பங்களிக்கவும்.--டெரன்ஸ் \பேச்சு 02:03, 26 ஏப்ரல் 2007 (UTC)

ஒரு வேண்டுகோள்

பேரா.க்ரிஷ்ணமூர்த்தி , நீங்கள் ஆரியர் கட்டுரையை பார்த்து, தக்கவாறு விமர்சித்து, மேம்படுத்த கேட்டுக் கொள்கிறேன்.--விஜயராகவன் 13:15, 1 மே 2007 (UTC)[பதிலளி]

மைக்ரோசாப்ட் பவர் கால்குலேட்டர்

மைக்ரோசாப்ட் இவ்வாறான வரைபடங்களை உருவாக்குவதற்கென்று பவர் கால்குலேட்டர் என்ற ஒன்றைப் பாவிக்கலாம். இது மிக இலகுவானது. {உங்களிடம் விண்டோஸ் எக்ஸ்பி ராயன்விம் (RyanVM.net) இணையத்தளத்துனூடான மேம்படுத்தலூடாக நிறுவியிருந்தால் ஏற்கனவே உங்களிடம் இருக்கலாம் } அவ்வாறில்லாவிட்டால் http://download.microsoft.com/download/whistler/Install/2/WXP/EN-US/PowerCalcPowertoySetup.exe (இணைப்பு சரியா தெரியவில்லை பதிவிறக்கிப் பாவித்துப் பார்க்கவும். இப்போது அலுவலகத்தில் உள்ளேன். சரிபார்க்கும் வசதியில்லை. எதற்கும் ஒருக்கா http://www.microsoft.com/windowsxp/downloads/powertoys/xppowertoys.mspx பார்வையிடுங்கள். --Umapathy 14:20, 13 மே 2007 (UTC)[பதிலளி]

கணிதச் சொற்கள்

http://valavu.blogspot.com/2007/01/blog-post_117008110441154169.html

--Natkeeran 01:55, 19 மே 2007 (UTC)[பதிலளி]

தலைப்பை மாற்றுதல்

புகுபதிகை செய்த பயனர் எவரும் தலைப்பை நகர்த்தி மாற்றலாம். அதற்கு மேலேயுள்ள நகர்த்து என்பதைப் பயன்படுத்தலாம். பக்கங்களை நீக்குதல், காப்புச் செய்தல் போன்ற சில விடயங்களைக் கையாள மட்டுமே நிர்வாக அனுமதி தேவைப்படுகிறது. பொதுவான மாற்றங்களைப் பயனர் யாவரும் செய்யலாம். நன்றி. --கோபி 20:29, 23 மே 2007 (UTC)[பதிலளி]

அமைதியான பணி

அமைதியாக, மிக ஆழமான கட்டுரைகளை நிதானமாக ஆக்கித்தருகின்றீர்கள். விரைவில் உங்கள் கட்டுரைகளின் உள்ளடக்கத்தை ஆணித்தரமாக வைத்து மேலும் கட்டுரைகளைப் படைக்க ஆக்கர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கின்றேன். மிக்க நன்றி. --Natkeeran 04:54, 6 ஜூன் 2007 (UTC)

பதக்கம்

பேரா. வி. கே அவர்களே உங்கள் அரும் பணியைப் பாராட்டி உங்களுக்கு கீழ்க்காணும் பதக்கத்தை இட்டு என் மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்றேன். நீங்கள் அருள்கூர்ந்து நீங்கள் மேலும் மேலும் தொடர்ந்து நல்லாக்கங்கள் தந்து தமிழர்களுக்கு வழிகாட்ட வேண்டுமாய் வேண்டிக்கொள்கிறேன். கணிதம் பற்றியும், வானியல் பற்றியும், மெய்யியல் மற்றியும் நீங்கள் அளித்துவரும் உங்களுடைய பங்களிப்புகள் பலருக்கும் வழிகாட்டியாய் இருக்கும். --செல்வா 20:44, 10 ஜூலை 2007 (UTC)

பேரா.வி.கே, உங்கள் அரும்பணியையும் வழிகாட்டுதலையும் வாழ்த்தி என் உவப்பை தெரிவிக்க இப்பதக்கத்தை அளிக்கின்றேன்-செல்வா

உப இயல் தலைப்புகளில் சிறு கட்டுரைகள் எழுதினால் நன்று.

இவை பல இடங்களில் சிகப்பு சுட்டியாக தெரிய வாய்புள்ளது. எனவே, சிறு கட்டுரைகள் வரைந்தால் நன்று. நன்றி.

--Natkeeran 10:25, 14 ஜூலை 2007 (UTC)

தமிழில் கணிதத்துக்கு நல்ல அடிப்படை சிந்தனைப் புலம்

கணிதத்துக்கு தமிழில், தமிழ் விக்கிப்பீடியாவில் நல்ல அடிப்படை அமைக்க முடியும், வேண்டும் என்ற பலர் ஆர்வம் கொண்டிருந்தாலும், இவ்வளவு ஆழமாக, விரைவாக முடியும் என்று எதிர்பார்க்கவில்லை. நீங்கள் எழுதிவரும் கட்டுரைகளின் தெரிவு நன்று. பல துறைசார் வல்லுனர்களுக்கு பல தடைகள் இருக்கின்றது. ஆனால் நீங்கள் நல்ல முன்மாதிரி.

உங்கள் கட்டுரைகளை எடுத்துக்காட்டும் பொழுது, புரிகிறதோ இல்லையோ, அசந்து விடுகிறார்கள். தமிழிலும் முடியும் என்று புரிய வைக்க எளிய முறை. உங்களைப் போன்றே, தடைகளை மீறி பிறரும் இணைவார் என்று எதிர்பார்ப்போம். நன்றி.

--Natkeeran 22:19, 28 ஜூலை 2007 (UTC)

நற்கீரன் சொன்னதை அப்படியே வழிமொழிகிறேன். பலருக்கு முன்மாதிரியாகவும் தூண்டுகோலாகவும் இருக்கின்றன உங்கள் செயல்பாடுகளும் கட்டுரைகளும்--ரவி 01:01, 29 ஜூலை 2007 (UTC)

மேலே நற்கீரன் மற்றும் ரவி சொல்லிய கருத்துக்களே எனது கருத்தும். தமிழில் துணிச்சலாக கணிதம் தொடர்பான கட்டுரைகளை விக்கிப்பீடியாவிற்கு வழங்குவதையிட்டுப் பெருமகிழ்ச்சியடைகின்றேன். தங்களைப் பின்பற்றி மேலும் பலர் விக்கிப்பீடியாவில் ஆக்கபூர்வமாகப் பங்களிப்பார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்திருக்கின்றேன். மேலும் இலங்கை அரச பாடத்திட்டம் அமைப்பவர்கள், தமிழ் மொழியில் பாடத்திட்டம் அமைப்பவர்களும் இந்திய அரசு அமைப்புக்கள் இம்மாதிரியான தளங்களில் உள்ளவற்றை உசாத்துணையாகக் கொண்டு இங்குள்ள சொற்களையே பாவித்தால் நல்லது. --Umapathy 13:27, 29 ஜூலை 2007 (UTC)

நற்கீரன், ரவி, உமாபதி, மற்றும் செல்வா, ஊக்கமளிக்கும் உங்களுக்கெல்லாம் நன்றி, நன்றி. கணிதத்தில் தொடக்கப்பட்ட இச்சிறு பங்களிப்பை இன்னும் பெரிதாக, ஆழமாக, பரந்ததாக ஆக்குவதற்கு நிறைய இளைஞர்கள் முன்வருவார்கள் என்று உங்களைப் போல் நானும் நம்புகிறேன். அதுவரையில் எடுத்த காரியத்தைத் தொடர, வேண்டிய மனவலுவும் உடல் வலுவும் தர ஆண்டவனை நம்பியிருக்கிறேன். நன்றி.--Profvk 14:41, 29 ஜூலை 2007 (UTC)

தமிழில் கணிதத்தலைப்புக்களில் இத்தனை கட்டுரைகுள் வேறெங்கும் இருக்காதென்றுதான் நினைக்கிறேன். இந்த வலுவான அடித்தளத்தை மையமாகக் கொண்டு பின்வருபவர்கள் மேலும் தகவல்களைச் சேர்ப்பார்கள் என்று நம்புகிறேன். நீங்கள் நெடுஞ்சாலைகள் அமைத்துள்ளீர்கள் -- தனி ஒருவராக. பின்வருபவர்கள் ஆங்காங்கே சிறு சாலைகள் அமைக்க இது உதவும். மென்மேலும் நீங்கள் இங்கு பங்களிக்க உங்களுக்கு வேண்டிய மனவலுவும் உடல்வலுவும் கிட்டுமென விரும்புகிறேன். -- Sundar \பேச்சு 14:59, 31 ஜூலை 2007 (UTC)

பதிற்குறி

பேச்சு:கணிதக் கலைச்சொற்கள் (ஆங்கில அகர வரிசையில்), அங்கே உங்களுக்கு பதிற்குறி இட்டிருக்கின்றேன். பார்க்க. நன்றி. --Natkeeran 15:37, 6 ஆகஸ்ட் 2007 (UTC)

புதிய பகுப்புக்கள்

பேரா.வி.கே,

நீங்கள் கணிதத்துறையில் வேகமாகப் பல கட்டுரைகளை உருவாக்கி வருகிறீர்கள் எனவே நிச்சயமாகப் பல புதிய பகுப்புக்கள் தேவைப்படும் என்பதில் ஐயம் இல்லை. இத்துறையில் என்னென்ன பகுப்புக்கள் தேவைப்படும் என்பதைத் தீர்மானிப்பதற்கு நீங்கள் தான் மிகவும் பொருத்தமானவர் என்பது எனது எண்ணம். போதிய கட்டுரைகள் ஏற்கெனவே இருக்கின்றன அல்லது எழுதப்படக்கூடும் என்றால் புதிய பகுப்புக்களை உருவாக்கலாம். தேவை என்று உங்களுக்குப் படும் பகுப்புக்களை நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம். அல்லது என்னென்ன பகுப்புக்கள் தேவை என்று தெரிவித்தால் நானோ மற்றவர்களோ உருவாக்கலாம். இராமானுஜன் தொடர்பான கட்டுரைகளுக்கு எனப் பகுப்பொன்றை ஏற்படுத்துவதில் எனக்கும் சம்மதமே.

கணிதத்துறையில் நீங்கள் எழுதிவரும் கட்டுரைகள் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு நல்ல வலுச் சேர்க்கின்றன. உங்கள் பணி உறுதியாகத் தொடரட்டும். நன்றி. Mayooranathan 18:59, 24 ஆகஸ்ட் 2007 (UTC)

சார்புப்பகுவியல், சார்புப் பகுவியல் இரண்டும் நற்கீரனால் ஏற்கெனவே ஒன்றாக்கப்பட்டு சார்புப்பகுவியல் பகுப்பு நீக்கப்பட்டு விட்டது. Mayooranathan 02:49, 26 ஆகஸ்ட் 2007 (UTC)
நன்றி, மயூரநாதன், நற்கீரன் இருவருக்கும் நன்றி. இப்பொழுது அடிப்படையாக இரண்டு கேள்விகள். இதற்கு நீங்களும் மற்ற நிர்வாகிகளும் பதில் சொல்லக்கோருகிறேன்.--Profvk 22:31, 26 ஆகஸ்ட் 2007 (UTC)

பகுப்புகளைப்பற்றி: எல்லா நிர்வாகிகளும் கவனிக்க

கேள்வி 1. பகுப்புக்கட்டமைப்பு கீழ்நிலையிலிருந்து மேலே போவதை நான் இப்படிப்புரிந்து கொண்டிருப்பது சரியா? அதாவது:

கட்டுரை துணைப்பக்கவகை பகுப்பு தாய்ப்பகுப்பு
எடுத்துக்காட்டாக, தாய்ப்பகுப்பு = கணிதம்
பகுப்புகள் = இயற்கணிதம், (வடிவியல், இடவியல், பகுவியல், மற்றும் பல)
துணைப்பக்கவகை = அடிப்படை இயற்கணிதம், (நுண்புல இயற்கணிதம், Geometric Algebra, etc.)
கட்டுரைகள் : (ஒவ்வொரு துணைப்பக்கவகயின் கீழ் உள்ள கட்டுரைகள்)

கட்டுரைகளின் அடியில் பகுப்பு என்று குறிப்பிடும்போது துணைப்பக்கவகையையோ, பகுப்பையோ குறிப்பிட்டுவிட்டால், அதற்குமேல் தடத்திலுள்ள பகுப்பையோ, தாய்ப்பகுப்பையோ குறிப்பிடவேண்டியதில்லை. ஆனால், ஒரே கட்டுரை பல துணைப்பக்கவகைகளிலோ அல்லது பல பகுப்புகளிலோ சம்பந்தப்பட்டிருந்தால் அதைக் குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும்.

இவையெல்லாம் சரியென்றால், அதன்படி நான் எல்லா கணிதக் கட்டுரைகளிலும் திருத்தம் செய்துவிடுகிறேன். முதலில் எல்லாவற்றிலும் கணிதம் என்ற 'பகுப்பு' வரவேண்டிய அவசியமில்லை.

இப்போதைக்கு ஒரு சிறு விளக்கம், பின்னர் மேலும் விரிவாக எழுதுகிறேன். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரளவு நிரந்தரமான taxonomy கணிதத்துக்கு இன்னும் ஏற்படவில்லை. இருப்பினும், நீங்கள் மேலே குறிப்பிட்டது அனேகமாக சரி. ஒரே கட்டுரை ஒன்றுக்கு மேற்பட்ட பகுப்புக்களுக்குள் வரும் (நீங்கள் மேலே சுட்டிய படி). குறிப்பாக எந்த பகுப்பு என்று தெரியாவிட்டால் தாய்ப் பகுப்பில் போடுவது வழமை. அதனால்தான் அதற்குள் அத்தனை கட்டுரைகள். நீங்கள் பகுப்படுத்தினால் நன்று. நன்றி. --Natkeeran 23:08, 26 ஆகஸ்ட் 2007 (UTC)

கேள்வி 2 : ஆமாம், 'Portal' என்ற பக்கத்தின் நோக்கம் என்ன? நான் ஆங்கில விக்கியில் கவனித்தது, முதல் பக்கத்தில் 'கணிதத்தை' சுட்டினால், அது கணித பொர்டல்க்குத்தான் எடுத்துச்செல்கிறது. ஆனால் நம் தமிழ் விக்கியில் முதல் பக்கத்தில் கணிதத்தைச்சுட்டினால் அது கணிதத்தில் உள்ள பகுப்பு வகைகளுக்கு இட்டுச்செல்கிறது. இதை நாம் மாற்ற வேண்டுமா? அல்லது இப்படியேதான் இருக்கப்போகிறதா?

--Profvk 22:31, 26 ஆகஸ்ட் 2007 (UTC)

இந்த 'Portal' அல்லது வலைவாசல் என்பது ஒரு குறிப்பிட்ட விடயம் சார்ந்த கட்டுரைகளுக்கான முகப்புப் போன்றது. இங்கிருந்து அவ் விடயம் சார்ந்த கட்டுரைகளுக்கு வழிகாட்டுதலே அதன் நோக்கம். இது ஓரளவுக்கு நூல் ஒன்றின் முகப்பு அட்டை போன்றது என்றும் கூறலாம். பொதுவாக விக்கியில் இப் பக்கத்தின் பெயர் Portal:தலைப்பு என்ற வடிவத்தில் அமையும். உண்மையில் கட்டுரைகளை அவற்றின் விடயங்கள் தொடர்பில் ஒழுங்குபடுத்திப் பயனர்கள் அவற்றை இலகுவில் அணுக வழி செய்வதற்காக விக்கிப்பீடியாவில் கையாளப்படும் பல வழிகளில் இதுவும் ஒன்று. நாம் வழமையாகச் கையாளும் பகுப்பு முறை, பட்டியல் பக்கங்கள் என்பன இவ் வேலையைத்தான் செய்கின்றன. ஆனால் வலைவாசல் படிமங்களுடன் கவர்ச்சியாக உருவாக்கப்படுகின்றது.
ஆனாலும் தமிழில் பயன்பாட்டிலுள்ள மென்பொருள் இதனை ஒரு தனி namespace ஆக அடையாளம் காணுவதில்லை. இதனால் தமிழில் 'Portal' கள் அதிகம் உருவாக்கப்படவில்லை. ஆனாலும் நுழைவாயில்:இலங்கை, நுழைவாயில்:அய்யாவழி போன்ற தலைப்புக்கள் சிலவற்றுக்கு இது உருவாக்கப்பட்டது. எனினும் இவை முறையான 'Portal' கள் அல்ல. உரிய முறையில் 'Portal' களை உருவாக்குவதற்கு விக்கி மென்பொருளில் சிறிய திருத்தங்கள் செய்ய வேண்டும். இதனை யாராவது கணினித் துறையைச் சேர்ந்த பயனர்கள் செய்தால் நல்லது. Mayooranathan 03:15, 27 ஆகஸ்ட் 2007 (UTC)

மீண்டும் பாராட்டுகள்

பேரா வி.கே, நீங்கள் ஆக்கிவரும் கணிதவியல் கட்டுரைகளும், கணிதவியலாளர்கள் பற்றிய கட்டுரைகளும் தமிழ் எழுத்துலகில் வரலாறு படைக்கின்றது! இதுவரை யாரும் இத்தனை விரிவாகவும் ஆழமாகவும் கணிதவியலாளர்களைப்பற்றியும், இவ்வகை கணிதக் கருத்துக்களைப் பற்றியும் தமிழில் எழுதவில்லை என்பது என் துணிபு. உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! என் நெஞ்சார்ந்த நன்றிகள்! அருள்கூர்ந்து மேலும் எழுதி புது வரலாறு படைக்க வேண்டுகிறேன். இன்னும் ஒரு வேண்டுகோள்! கேரள கணிதவியல் அறிஞர்களைப்பற்றி எழுதவேண்டும் என வெகு நாட்களாக எண்ணியிருந்தேன், இன்றளவும் நிறைவேறவில்லை. நீலகண்ட சோமயாஜி, பரமேஷ்வராம் மேல்பத்தூர் நாராயண பட்டாத்திரி முதலான பல கணிதவியலர் இருந்திருக்கின்றனர் (14-16 ஆம் நூற்றாண்டுகளில்). அருள்கூர்ந்து இவர்களைப்பற்றி நீங்கள் எழுதுங்கள்.--செல்வா 03:11, 14 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

பேரா வி.கே, உங்கள் பணி வியக்க வைக்கிறது. கணிதந் தொடர்பாக குறிப்பிடத்தக்க இணைய உள்ளடக்க உருவாக்கத்தை நீங்கள் வேகமாக உருவாக்கிவருகிறீர்கள். வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், நன்றிகள். --கோபி 03:18, 14 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]
இரண்டு ஆண்டுகள் முன்பு மயூரநாதன் மட்டும் தனியாக த.வி. தளத்தில் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவர் என்ன நம்பிக்கை கொண்டிருந்தாரோ தெரியாது. ஆனால், பின்னர், நான், இரவி, நற்கீரன், சிவகுமார் ஆகியோர் வந்தபின்னும் எங்களில் பலருக்கு இது உண்மையில் பயன் தரத் துவங்குமா என்ற ஐயம் இருந்துகொண்டுதான் இருந்தது. ஆனால், நீங்கள் எழுதியிருக்கும் கணிதக் கட்டுரைகளுக்கு களம் அமைத்துக் கொடுத்ததே த.வி. பெரும்பயன் தரத் துவங்கியதற்கான அடையாளம். இவ்வளவு விடயங்களைத் தமிழில் எழுத உங்களைப் போன்ற ஒரு அறிஞர் தன்னார்வத்துடன் இருந்தும் அதற்கான சூழல் இல்லாமலிருந்திருப்பதையே இது காட்டுகிறது. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். -- Sundar \பேச்சு 07:28, 14 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]
நன்றி, செல்வா, கோபி, சுந்தர் மூவருக்கும் மிக்க நன்றி. என் எழுத்துக்களை தமிழ் கணித உலகில் எல்லோரும் பார்க்கும் அளவிற்கு வாய்ப்பு அளிக்கக்கூடியபடி, மயூரநாதன் தலைமையில் நீங்கள் எல்லோரும் தளம் அமைத்துக்கொடுத்ததற்கும், என்னை ஊக்குவிப்பதற்கும் மிக்க நன்றி. தமிழ்நாட்டுக் கல்வியை இயக்குபவர்களும், ஆசிரியர்களும், மாணவர்களும் கணிதத்தையும் கணிதவியலாளர்களையும் தெரிந்துகொள்வதற்கு இப்படி ஒரு வாய்ப்பு இருப்பதை அறிவார்களா? அவர்களை உசுப்பிவிட்டு த.வி பக்கம் திருப்புவதற்கு ஏதாவது வழி இருக்கிறதா?

--Profvk 15:52, 15 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

Georg Cantor

இன்றைய சிறப்புக் கட்டுரையாக ஆங்கில விக்கியில் கியார்கு கேன்ட்டர் வாழ்க்கை வெளியாகி உள்ளது. துவக்கமாக 4-5 வரிகளில் ஒரு குறுங்கட்டுரை எழுதியுள்ளேன். நீங்களோ, சுந்தரோ இதனை விரிவுபடுத்தினால் காலச்சிறப்புடையதாக இருக்கும். --செல்வா 19:36, 15 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி பேரா.வி.கே!!--செல்வா 23:11, 15 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

படங்களுக்கு - சில குறிப்புகள்

  • http://commons.wikimedia.org/wiki/Category:Combinatorics
  • கணிதம் தொடர்பான படங்களுக்கு விக்கி பொதுவிலும் பெறலாம். அவற்றை தரவிறக்கி Paint தமிழ்ப்படுத்துவது சில வேளைகளில் சுலபமாக இருக்கலாம்.

--Natkeeran 22:10, 30 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

தமிழ்நாட்டு பாட நூல்கள் இணையத்தில், இலவசமாக

விக்கியிடை இணைப்புகள் தொடர்பில்

விக்கியிடை இணைப்புகள் தொடர்பில் நீங்கள் ஆலமரத்தடியில் கேட்டிருந்தீர்கள். தமிழ் விக்கி கட்டுரைகளிலிருந்து ஆங்கிலம், யெர்மன் போன்ற பெரிய விக்கிக்களில் ஏதேனும் ஒன்றிற்கு உள்ள ஒத்த கட்டுரைகளுக்கு இணைப்பு தந்து விட்டால் போதும். சுந்தர்பாட் அந்த விக்கிக்குச் சென்று த.வி. கட்டுரைக்கு இணைப்புத் தந்துவிடும். அங்கிருந்து இயங்கும் பல தானியங்கிகள் த.வி. இணைப்பைப் பெற்று எல்லா விக்கிக்களில் இருந்தும் நம் கட்டுரைகளுக்கு இணைப்பு தந்து விடும். ஆக, நாம் செய்ய வேண்டியது இங்கிருந்து ஆ.வி. கட்டுரைகளுக்கு விக்கியிடை இணைப்பு தருவது மட்டுமே. :-) -- Sundar \பேச்சு 07:45, 1 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

இரு நிற மணிமாலைப் படம் நன்றாக உள்ளது

இப்படம் கருத்தை விளக்க நன்றாகப் பயன்படும் என்பது தெளிவு. நல்ல படம். வாழ்த்துக்கள்.--செல்வா 23:12, 5 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

குலம்

குலம் (முன்னோர் வழி) என்று இருந்ததை குலம் (மக்கள்) என்று மாற்றியுள்ளேன். சற்று எளிமையாகவும் சுருக்கமாகவும் இருக்கட்டும் என்று. பொருட்படுத்த மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். --செல்வா 16:45, 7 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

ஒரு மாத சுணக்கம் எதிர்பார்க்கப்படுகிறது

இரண்டாண்டு அமெரிக்க வாசத்திற்குப் பிறகு நான் இந்தியாவுக்கு (பங்களூருவுக்கு) திரும்பிக் கொண்டிருக்கின்றேன். அதனால் ஏறக்குறைய நான்கு வாரங்களுக்கு என்னுடைய விக்கி பங்களிப்பு தடைபடும் என்பதை எல்லா தமிழ் விக்கி நேயர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். --Profvk 17:20, 1 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

பேராசிரியரே, உங்களுடைய நீண்ட பங்களிப்புக்களுக்குப் பின் ஓய்வும் மிகத்தேவைதான். நல்ல ஓய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் பங்களியுங்கள். அவற்றை எதிர்நோக்கி காத்திருப்போம். -- Sundar \பேச்சு 03:24, 2 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]
விடுமுறைக்குப் பிறகு மீண்டும் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களிக்கத் துவங்கிவிட்டது கண்டு மிக்க மகிழ்ச்சி. தங்களை மறுபடியும் வரவேற்கிறேன்.--சிவகுமார் \பேச்சு 11:50, 16 ஜனவரி 2008 (UTC)

2007 ஆண்டு அறிக்கையும் கருத்து வேண்டுதலும்

கடந்த இரு ஆண்டுகளாக ஆண்டு இறுதியில் அந்த ஆண்டுச் செயற்பாடுகள் நோக்கிய ஒரு அலசலைச் செய்து தமிழ் விக்கிப்பீடியாவை மேலும் மேம்படுத்த பருந்துரைகள் செய்வது வழக்கம். இவ்வருட ஆண்டு அறிக்கை கீழே:

த.வி பற்றிய உங்களின் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் அதன் பேச்சுப் பக்கத்தில் தந்தால் எமது பணிகளை ஒருங்கிணைக்கவும், மேம்படுத்தவும், மேலும் சிறப்பாக வளர்க்கவும் அவை உதவும். நன்றி.

--Natkeeran 00:47, 20 டிசம்பர் 2007 (UTC)

நலமா?

பேரா வி.கே எப்படி இருக்கின்றீர்கள்? நலமா? நெடுநாட்கள் விடுப்பில் உள்ளீர்கள் போல் தெரிகின்றது. இயலும் என்றால் மீண்டும் விக்கியில் பங்களிக்க வேண்டுகின்றேன். --செல்வா 17:41, 16 டிசம்பர் 2008 (UTC)

உங்கள் பணி தமிழுலகிற்குத் தேவை! வேண்டுவது --செல்வா 17:43, 16 டிசம்பர் 2008 (UTC)

கணிதவியல் மற்றும் அறிவியல் இலக்கியங்கள் வரலாறு

இதனைப் பார்க்க வேண்டுகிறேன் --செல்வா 17:41, 16 டிசம்பர் 2008 (UTC)

மீண்டும் நல்வரவு

உங்களை மீண்டும் இங்கு காண்பது மகிழ்ச்சியாய் இருக்கின்றது. டௌ-சார்புக் காட்டுரையில் திருத்தம் செய்திருந்ததைப் பார்த்தேன். நல்வரவு!!--செல்வா 20:15, 20 மார்ச் 2009 (UTC)

படிமங்கள்

படிமங்கள் பொதுவாகக் காப்புரிமைக்கு உட்ப்படுத்தப்பட்டவை. ஆனாலும் விக்கிப்பீடியாவில் தகவலுக்காக (பொதுப் பயன்பாட்டிற்காக) பயன்படுத்துவது நியாயமான பயன்பாடு என்ற வகையில் தகுதி பெறலாம். படிமத்துடன் Non-free fair use in என்ற வார்ப்புருவைப் பயன்படுத்தலாம். அத்துடன் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்பதையும், குறுப்பிட்ட படிமத்தின் நியாயமான பயன்பாட்டுக்கான ஓரிரு காரணங்களையும் குறிப்பிடலாம். எடுத்துக்காட்டுக்கு Ss-pillai.jpg படிமத்தைப் பாருங்கள்.--Kanags \பேச்சு 12:27, 31 மார்ச் 2009 (UTC)

இதையும் பாருங்கள் Ananda rau.jpg , Andr_Weil.jpg, C_P_Ramanujam.jpg, Chandrasekaran.jpg, Chevalley.jpg, Hardy.jpg, Harish Chandra.jpg, M_H_Stone.jpg, Minakshisundaram.jpg --கார்த்திக் 15:40, 31 மார்ச் 2009 (UTC)


:இதையும் பாருங்கள் Patodi.jpg, Racine.jpg, Deligne_maths.jpg, S_Chowla.jpg, S_S_Pillai.jpg, T_Vijayaragavan.jpg, Vaithyanathaswamy.jpg--கார்த்திக் 06:24, 2 ஏப்ரல் 2009 (UTC)

டிரிழ்ச்லெட் காரக்டர்

நீங்கள் என் பயனர் பேச்சு பக்கத்தில் நான் டிரிழ்ச்லெட் காரக்டகருக்கு வைத்த பேரைப் பற்றி கேட்டிருந்தீர்கள். முதலில் Group Character என்பது அணியியலில் வரும் Trace என்பதற்கு இணையான குலக் கோட்பாடு என்பதால் வேறு வகையில் பெயர் சூட்டலாம் என்று நினைக்கிறேன். Trace என்பதை மூலைக்கூட்டு அல்லது சுவடு எனலாம். சதுர அணியில்

என்பது மூலைவிட்டத்தில் (diagonal) உள்ள உறுப்புகளின் கூட்டுத் தொகை. எனவே Group character என்பதற்கு தமிழில் இருபொருள் பட குலச் சுவடு எனலாம். சுவடு என்பது அடையாளப் "பதிவு" என்னும் பொருளில் trace, character ஆகிய இருபொருள்களும் கொள்ளும். டிரிழ்ச்லெட் காரக்டருக்கு நான் டிரிழ்ச்லெட் சுவடு என்று பெயர் இட்டிருக்கலாம், ஆனால் சற்று சுற்றி வளைத்துப் பெயர் சூட்டிவிட்டேன். டிரிழ்ச்லெட் காரக்டர் டிரிழ்ச்லெட் எல்-சார்பியத்தில் (Dirichlet L-function) வருவதாலும், இவை சில புள்ளிகளில் தெறித்து முடிவிலி கொள்ளும் மேரோமார்ஃவிக் சார்பியம்(meromorphic functions)(பொறிவிரிவு சார்பியம்) ஆக நீட்சிப்பெறக்கூடியது என்பதாலும் டிரிழ்ச்லெட் எழுச்சி சார்பியம் என்று பெயர் சூட்டினேன். இன்னொரு காரணம், டிரிழ்ச்லெட் காரக்டர் χ(n) = χ(n + k) என்னும் அலையீடு (periodic) பண்பு கொண்டிருப்பதாலும் மீண்டும் மீண்டும் எழுந்தீடு கொள்வதால் டிரிழ்ச்லெட் காரக்டரை டிரிழ்ச்லெட் எழுச்சி என்று கூறினேன். டிரிழ்ச்லெட் காரக்டரை விட டிரிழ்ச்லெட் எல்-சார்பியத்துக்கு இப்பெயர் பொருந்தும் என நினைக்கிறேன். டிரிழ்ச்லெட் காரக்டருக்கு, எளிமையாக டிரிழ்ச்லெட் சுவடு அல்லது டிரிழ்ச்லெட் சுவடியம் என்றும் பெயர் சூட்டலாம். --செல்வா 00:05, 5 ஏப்ரல் 2009 (UTC)

::तत् त्वम् असि அல்லது तत्त्वमसि

तत् त्वम् असि அல்லது तत्त्वमसि என அக்கட்ட்டுரையில் இப்பொழுதுள்ளது. அந்த வார்ர்ப்புரு வேண்டியதில்லை. --செல்வா 14:40, 19 ஏப்ரல் 2009 (UTC)
அந்த lang-sa என்னும் வார்ப்புருவுக்கான {{lang-sa|..}} என்னும் பகுதிகளை நீக்கினேன். நான் என்ன செய்தேன் என்பதைக் காண பக்கத்தின் வரலாறு என்னும் பிரிகையை (tab)அழுத்தி, தேவையான மாற்றம் கொண்ட பதிப்பில் "கடைசி" என்னும் சுட்டியைச் சொடுக்கினால் "வேறுபாடு" தெரியும். இங்கே பாருங்கள் நான் செய்த மாற்றம் என்ன என்று காண. --செல்வா 15:47, 19 ஏப்ரல் 2009 (UTC)

வணக்கம் Profvk, விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் இடம்பெறச் செய்யும் வகையில் உங்களைப் பற்றிய சிறு அறிமுகம், புகைப்படம் தந்து உதவுவீர்களா? நன்றி--ரவி 11:05, 5 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

சேர்ந்தெடுப்பு பற்றிய கருத்து வேண்டல்

விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#சேர்ந்தெடுப்பு வேண்டுகோள் என்னும் பகுதியில் உங்கள் கருத்துகளை அருள்கூர்ந்து தர வேண்டுகிறேன் --செல்வா 00:00, 19 பெப்ரவரி 2010 (UTC)

தேவைப்படும் கட்டுரைகள்

வணக்கம். வலைவாசல்:கட்டுரைப்போட்டி/தலைப்புகள் பட்டியல் பக்கத்தில் தேவைப்படும் கட்டுரைத் தலைப்புகளைக் குவிக்க உதவ முடியுமா? நடக்க இருக்கும் கட்டுரைப் போட்டியை முன்னிட்டு இயன்ற அளவு வழமையை விடக் கூடுதலாக உங்களால் பங்களிக்க முடிந்தால் நன்றாக இருக்கும். நன்றி--ரவி 11:49, 8 மார்ச் 2010 (UTC)

விக்கி மாரத்தான்

விக்கி மாரத்தானில் கலந்து கொள்ள வாருங்கள்--இரவி 09:24, 27 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

மீண்டும் விக்கிப் பணிக்கு வர வேண்டுகோள்

வணக்கம் Profvk. நலமா? கடந்த சில மாதங்களாகத் தமிழ் விக்கிப்பீடியா நன்கு வளர்ந்து வருகிறது. மூன்றே வாரங்களில் புதிதாக ஆயிரம் கட்டுரைகளை எழுதுகிறோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் :) விரைவில் 50,000+ கட்டுரைகள் என்ற இலக்கை முன்வைத்து உழைக்க விரும்புகிறோம். இந்நேரத்தில் ஏற்கனவே தமிழ் விக்கியில் ஈடுபாடு காட்டிய உங்களைப் போன்ற பலரும் அவ்வப்போதாவது மீண்டும் வந்து விக்கிப்பணியில் இணைந்து கொண்டால் உற்சாகமாக இருக்கும். உங்களால் பங்கு கொள்ள இயலாவிட்டாலும், உங்கள் நண்பர்கள் வட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றி எடுத்துச் சொல்லி புதிய பங்களிப்பாளர்களை ஈர்க்க உதவ இயலுமா? நன்றி--இரவி 12:59, 2 மே 2011 (UTC)[பதிலளி]

வணக்கம், Ravidreams, வருகிறேன். என்னை உசுப்பிவிட்டதற்கு நன்றி.--Profvk 09:50, 2 சூலை 2011 (UTC)[பதிலளி]

மீண்டும் உங்கள் பங்களிப்புகளைக் காண மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி--இரவி 10:19, 17 சூலை 2011 (UTC)[பதிலளி]

உங்களுக்குத் தெரியுமா? திட்டம்





கணிதக்கட்டுரை எழுத தட்டச்சு முறையில் உதவி தேவை

எல்லா பழைய நண்பர்களுக்கும் வணக்கம். நான் இரண்டாண்டுக்குமுன் கையாண்ட முறை இப்பொழுது மாறிவிட்டதுபோல் தெரிகிறது. Latex mark-up த.வி.இல் காணப்படவில்லை. உதவி தேவை. Urgent! --Profvk 11:41, 4 சூலை 2011 (UTC) இதை வலியுறுத்துவதற்காக இன்னொருமுறை எழுதுகிறேன். மன்னிக்கவும். --Profvk 11:46, 4 சூலை 2011 (UTC)[பதிலளி]

முன்பு எவ்வாறு இருந்தது என்று எனக்குத் தெரியவில்லை. இப்போது en:WP:MATH - இங்குள்ள உதவிக் குறிப்புகளைப் பயன்படுத்தி <math> </math> டேகுகளிடையே latex markup எழுதி வருகிறேன் --சோடாபாட்டில்உரையாடுக 12:31, 4 சூலை 2011 (UTC)[பதிலளி]
மீண்டும் வருக பேராசிரியரே!! பெருமகிழ்ச்சி :) சோடாபாட்டில் சுட்டிய பக்கம் பயனுடையது, அதில் கூறியுள்ளவாறு, "MediaWiki uses a subset of AMS-LaTeX markup, a superset of LaTeX markup which is in turn a superset of TeX markup, for mathematical formulae.". எனவே நீங்கள் முன்னர் பயன்படுத்திய முறையோடு ஒப்பிடும்பொழுது பெரிய வேறுபாடுகள் இராது. --செல்வா 13:37, 4 சூலை 2011 (UTC)[பதிலளி]
பேராசிரியர் அவர்கள் பயன்படுத்திய முறை இப்போதுள்ள பீட்டா பதிப்பில் இல்லை என நினைக்கிறேன். ஒரு கட்டுரையைத் தொகுக்கும் போதே கணிதக் குறியீடுகளை உள்ளீடு செய்வதற்கு ஏற்ற மாதிரி இருந்ததாக ஞாபகம். பீட்டா பதிப்பில் இப்படியான சில பயனுள்ள குறியீடுகள் காணாமல் போய் விட்டன.--Kanags \உரையாடுக 21:10, 4 சூலை 2011 (UTC)[பதிலளி]

உதவி

வணக்கம். இராமானுசன் கூட்டுகை என்னும் ஒரு பக்கத்தை பயனர் ஆர்.சீனிவாசன் என்பவர் தொடங்கினார். அது நீக்கப்பட்டு, மீள்விக்கப்பட்டுள்ளது. ஆனால் இக்கட்டுரையின் உள்ளடக்கத்தைப் பற்றி ஆங்கில விக்கியில் மாறுபட்ட கருத்துரையாடல்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றையும் கருத்தில் கொண்டு ஏற்கப்பட்ட கருத்துகளை மட்டும் மொழிபெயர்க்க வேண்டும். இக்கட்டுரையை நீங்கள் மீள்பார்வை இட்டு சரியா என்று சொல்ல இயலுமா? மொழிபெயர்ப்பதில் நானும் உதவமுடியும் (சிறு கட்டுரையே). நன்றி--செல்வா 16:24, 4 சூலை 2011 (UTC)[பதிலளி]

வணக்கம். நான் பார்க்கிறேன். --Profvk 16:39, 16 சூலை 2011 (UTC)[பதிலளி]
இராமானுசன் கூட்டுகை கட்டுரை பற்றி நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு மிக்க நன்றி! திரு அல்லாடி கிருட்டிணசாமி அவர்களிடம் இருந்து விடை பெற்று அதன் பொருள் சரியானது என்று உறுதி செய்துவிட்டால், மொழி பெயர்ப்பதை நானும் கூடச் செய்யக்கூடும். உங்கள் உதவிக்கு நெஞ்சார்ந்த நன்றி.--செல்வா 13:47, 22 சூலை 2011 (UTC)[பதிலளி]

தட்டச்சுச் சிக்கல்

பேராசிரியர், நீங்கள் எழுத்துப் பெயர்ப்பு முறையிலா, தமிழ் 99 முறையிலா தட்டச்சிடுகிறீர்கள்? எழுத்துப் பெயர்ப்பு முறையில் வழமையாக s,h தட்டச்சிடும்போது "ஷ" வரவேண்டும் அது இங்கே வரவில்லை. தமிழ் 99 முறையைப் பயன்படுத்துவீர்களானால் shift+w ஐ அழுத்தி "ஷ" வைத் தட்டச்சிடலாம்.

"ஞ்" க்கு எழுத்துப் பெயர்ப்பில் n,j ஐயும், தமிழ் 99 இல் shift+],f ஐயும் தட்டச்சிடுங்கள்.

-- மயூரநாதன் 18:46, 16 சூலை 2011 (UTC)[பதிலளி]

எழுத்துப்பெயர்ப்பில் S+h (uppercase S +h) தட்டச்சினால் ஷ் வரும்படி உள்ளது. uppercase S அடித்தால் முதலில் ஸ் வரும் அடுத்து h அழுத்தியவுடன் ஷ் என்று மாறி விடும் --சோடாபாட்டில்உரையாடுக 19:08, 16 சூலை 2011 (UTC)[பதிலளி]
தற்போது எழுத்துப்பெயர்ப்பில் s+h = ஷ் வருமாறு செய்துள்ளேன்.--சோடாபாட்டில்உரையாடுக 19:37, 16 சூலை 2011 (UTC)[பதிலளி]
மயூரநாதன், Sodabottle, விஞ்ஞானம், விஷ்ணு - இவைகளைப் போன்ற சொற்களைத் தட்டச்சுசெய்ய சொல்லிக்கொடுத்ததற்கு இருவருக்கும் மிக்க நன்றி. --Profvk 23:50, 16 சூலை 2011 (UTC)[பதிலளி]

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011


வணக்கம் Profvk,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

உபய வேதாந்தம்

பேராசிரியர் அவர்கள் உபய வேதாந்தம் கட்டுரையில் ஏதேனும் பிழைகள் இருக்குமாயின் திருத்தியருள வேண்டுகிறேன். --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 07:27, 11 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

டாக்டர் கார்த்தி, வணக்கம். மேற்படி கட்டுரையை விரிவாக்குவீர்கள் என்று நம்புகிறேன். இதுவரையில் எனக்கு ஒன்றும் தவறு தெரியவில்லை.

தங்களுடைய கட்டுரைப்பட்டியலைப்பார்த்து அசந்து போனேன். தங்களைப்போல் பல இளம்வயதினர் த. வி. க்கு வந்து பணியாற்றினால் த.வி. யின் வளர்ச்சி மட்டுமல்ல, தமிழ்நாட்டு சமூகத்தின் வளர்ச்சி மேலோங்கி இருக்கும். --Profvk 15:36, 11 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

Invite to WikiConference India 2011


Hi Profvk,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.

But the activities start now with the 100 day long WikiOutreach.

Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)

As you are part of Wikimedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011

மனுவந்தரம்

ஐயா, ஒரு பிரம்ம கல்பத்திற்கு 14 இந்திரர்கள். ஒரு பிரம்மநாளுக்கு(2 கல்பம்(பகலிரவு)) 28 இந்திரர்கள்.(28 மனுக்கள்) இது தானே சரி. ஆனால் நீங்கள் 1 பிரம்மநாளுக்கு 14 இந்திரர்கள் என்று மனுவந்தரம் கட்டுரையில் மாற்றம் செய்திருக்கிறீர்கள். எனக்கு அதில் தவறு இருப்பது போல் தெரிகிறது.--தென்காசி சுப்பிரமணியன் 15:52, 14 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

பிரம்மாவின் இரவில் இந்திரன், மனு, மற்றும் பூலோகம், புவர் லோகம், சுவர்லோகம் ஆகிய ஒன்றுமே இருக்காது. ஏனென்றால் பிரம்மாவின் பகல் முடியும்போது பிரளயத்தில் எல்லாம் அழிந்து பகவானிடத்தில் ஒடுங்கிவிடும். பிரம்மாவும் தூங்குவதுபோல் இருப்பார். மறுநாள் (மறு கல்பத்தில்) படைப்பு முதலிலிருந்து தொடங்கும். ஒவ்வொரு கல்பத்திலும் 14 மனுக்களும், 14 இந்திரர்களும் இருப்பர். மனு பூலோகத்திற்கதிபதி. இந்திரன் தேவலோகத்துக்கதிபதி. மனுவும் இந்திரனும் ஒரேகாலத்தவர். இந்திரனின் காலமும் ஒரு மன்வந்தரம் தான்.--Profvk 17:05, 14 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

ஐயா, இந்திரன்=மனுY ஆயிற்று.

  • ஆனால் ஒரு பிரம்ம நாள்=864 கோடி ஆண்டுகள் = 28 மனுவந்தரம் = 28 இந்திரன்கள் இதுதானே சரி.
  • ஒரு கல்பத்திற்கு 14 இந்திரன்கள் Y ஆயிற்று. ஆனால் ஒரு பிரம்ம நாளுக்கு 28 இந்திரன்கள் இதுதானே சரி. ஆனால் நீங்கள் ஒரு பிரம்ம நாளுக்கு 14 இந்திரன்கள் என்றல்லவா மாற்றினீர்கள்.
  • ஒன்று ஒரு கல்பம்= 14 இந்திரன்
  • அல்லது ஒரு பிரம்ம நாள்= 28 இந்திரன் அல்லவா.
  • மேலும் ஒரு கற்பம்= பாதி பிரம்மநாள் என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன்--தென்காசி சுப்பிரமணியன் 17:42, 14 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
சுப்ரமணியன் அவர்களே,

இந்திரனும் மனுவும் வெவ்வேறு. ஆனால் ஒவ்வொரு மன்வந்திரத்திலும் ஒரு மனு பூமியிலும் ஒரு இந்திரன் தேவலோகத்திலும் ஆட்சி செய்வார்கள். 71 மகாயுகத்திற்கு இவர்கள் ஆட்சி செய்வார்கள். பிறகு அடுத்த மன்வந்திரத்திற்காக வேறு ஒரு மனுவும் வேறு ஒரு இந்திரனும் வருவார்கள். இதனால் ஒரு கல்பத்தில் 14 மனுக்கள், 14 இந்திரர்கள் என்று சொல்கிறோம். இரவில் இந்திரனோ மனுவோ கிடையாது. பிரம்மாவின் நாள் காலக்கணக்கிற்காக பகல் + இரவு என்பது சரி. இரவில் வேறு ஒன்றும் கிடையாதாகையால், பேச்சு வழக்கில் பிரம்மாவின் 360 கல்பங்களை, 360 நாட்கள் என்றே சொல்லும் வழக்கம் உண்டு. காலம் கணக்கிடும்போது மட்டும், துல்யமாக பகலுக்காக எடுத்துக்கொள்ளும் 1000 மகயுகங்களையும் இரவுக்காக இன்னொரு 1000 மகாயுகங்களை எடுத்துக்கொள்ள வேணும். ஆனால் இந்த இரவுக்காக எடுத்துக்கொள்ளும் மகாயுகங்களில் காலம்தான் செல்லுமே தவிர இந்திரனோ, மனுவோ,படைப்போ, எந்த விவகாரமோ கிடையாது.--Profvk 02:29, 15 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

ஐயா, இந்த உரையாடலை அனைவரும் அறிந்து கொள்ளும் நோக்கில் பேச்சு:மனுவந்தரம் பக்கத்திலும் கொடுத்துள்ளேன். உங்கள் தகவல்களுக்கு நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் 05:53, 15 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

ஐயா மயனும் மயாசுரனும் ஒருவர் என சிலர் கூறுகின்றனர். மற்ற மொழி விக்கிப்பீடியாக்களில் இருவரின் தகவல்களும் மாற்றி மாற்றி தரப்பட்டுள்ளன. உங்களுடைய கருத்து தேவை.--தென்காசி சுப்பிரமணியன் 08:46, 1 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் விஸ்வநாத கிருஷ்ணமூர்த்தி அய்யா

வணக்கம் Profvk அவர்களே, பிறந்தநாள் வாழ்த்துக் குழுமத்தின் சார்பாக பிறந்தநாளை இனிதே கொண்டாட வாழ்த்துகிறோம்!
இந்நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும் !
~~~~

-Vatsan34 (பேச்சு) 10:04, 30 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அரிய வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 12:06, 24 சூன் 2013 (UTC)[பதிலளி]

நன்றி

குறிப்பிட்டதேதி தெரிந்தவுடன் னான் முடிவெடுக்கிறேன். எனக்கு வரவேண்டுமென்றுதான் விருப்பம். இப்பொழுது பெங்களூரில் தான் இருக்கிறேன்.

--Profvk (பேச்சு) 09:17, 28 சூன் 2013 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Profvk&oldid=1446911" இலிருந்து மீள்விக்கப்பட்டது