நிகழ்தகவுக் கோட்பாடு
Appearance
நிகழ்தகவுக் கோட்பாடு என்பது குறிப்பில்வழித் (random) தோற்றப்பாடுகளைப் பகுத்தாயும் கணிதத்தின் ஒரு கிளைத்துறை ஆகும். குறிப்பில்வழி மாறிகள், வாய்ப்பியல் செயல்பாடுகள், நிகழ்வுகள் என்பன நிகழ்தகவுக் கொள்கையின் முக்கிய கூறுகள் ஆகும். நாணயமொன்றைச் சுண்டுவது அல்லது தாயக்கட்டையை உருட்டுவது குறிப்பில்வழி நிகழ்வுகளாக இருப்பினும், தொடர்ச்சியாக இவை நிகழும்போது குறிப்பில்வழி நிகழ்வுத் தொடரில், ஒரு புள்ளியியல் ஒழுங்கு முறை காணப்படும். இவ்வொழுங்கு முறைகளை ஆய்வு செய்து எதிர்வுகூற முடியும். இப்படியான ஒழுங்கு முறைகளை விபரிக்கும் இரண்டு முக்கிய கணித விளைவுகள், பேரெண் விதி, மைய எல்லைக் கொள்கை என்பனவாகும்.