அளவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அளவுகள், அளக்கும் முறைகள், அளவீடு கோட்பாடுகள், அளவுப்படி அமைத்தல், அளவுப்பொறியமைப்பு போன்ற அளத்தலுடன் தொடர்புடைய கூறுகளை ஆயும் இயல் அளவியல் ஆகும். அளத்தல் அறிவியலுக்கு அடிப்படை, ஆகையால் அளவியல் அறிவியலுக்கு ஒரு முக்கிய இயல். ஒரு குறிப்பிட்ட அளவை அளத்தல் என்பது அதன் மதிப்பை நிலையான மற்றொரு மதிப்போடு ஒப்பிட்டுக் கூறுவது. இந்த நிலையான அளவு 'அலகு' எனப்படும். கணிதம், இயற்பியல், கட்டுபாட்டுவியல், புள்ளியியல், கணினியியல் ஆகிய துறைகளும் அளவியலுடன் நெருங்கிய தொடர்புடையவை. இயல் அறிவியல் மற்றும் பொறியலில் அளவீடுகள் பொருட்கள் அல்லது நிகழ்வுகளின் பெயரளவு பண்புகளைப் பின்பற்றாது, மேலும் அவை, பன்னாட்டு எடைகள் மற்றும் அளவீடுகளால் பதிப்பிக்கப்பட்ட அளவியலின் பன்னாட்டு சொற்பட்டியலைப் பின்பற்றுகின்றன. இருப்பினும் மற்ற துறைகளான புள்ளிவிவர இயல் மற்றும் நடத்தை அறிவியலில், அளவீடுகள் பல நிலைகளைக் கொண்டிருக்கலாம். அவை, பெயரளவு, வரிசை அளவு, இடைவெளி மற்றும் விகித அளவுகோல்களைக் கொண்டுள்ளன.

SI படித்தரங்கள்[தொகு]

நீளம்[தொகு]

இரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தொலைவு நீளம் என வரையறுக்கப்படுகிறது. நீளத்தின் SI அலகு மீட்டர் ஆகும். கிரிப்டான் மின்னிறக்க விளக்கில் கிரிப்டான்-86 என்ற தனித்தனியான அணுக்களால் உமிழப்பட்ட ஆரஞ்சு - சிவப்பு ஒளியின் 1,650,763.73 அலை நீளங்கள் ஒரு படித்தர மீட்டருக்குச் சமம் என வரையறுக்கப்படுகிறது.

நிறை[தொகு]

பொருளொன்று பெற்றுள்ள பருப்பொருளின் அளவு நிறை ஆகும். இது வெப்பநிலையையும் அழுத்தத்தையும் பொருத்ததல்ல. நிறையானது இடத்திற்கு இடம் மாறுபடாது. நிறையின் அலகு கிலோகிராம் ஆகும். பிரான்சில், பாரீசுக்கு அருகில் சவரெசு என்ற இடத்தில், எடைகள் மற்றும் அளவீடுகளின் பன்னாட்டு நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ள பிளாட்டினம் - இரிடியம் உலோகக் கலவையிலான உருளையின் நகலின் நிறை ஒரு கிலோகிராமிற்குச் சமம் என வரையறுக்கப்படுகிறது.

அணுவின் அடிப்படையிலான படித்தர நிறை, இதுவரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஏனெனில், பெரிய அளவுகோல் போன்று, துல்லியமாக அணுவின் அளவுகோலில் நிறைகளை அளந்தறிய முடியவில்லை.

காலம்[தொகு]

1960-ஆண்டு வரை படித்தர காலம் என்பது, சராசரி சூரிய நாளைக் கொண்டு கணக்கிடப்பட்டது. அதாவது, தீர்க்கரேகை வழியாக, மிக உயரமான புள்ளியில் சூரியன் கடக்கக்கூடிய அடுத்தடுத்த இரு நிகழ்வுகளுக்கான கால இடைவெளியைக் கொண்டு, ஒரு ஆண்டின் சராசரியாக காலம் கணக்கிடப்பட்டது. காலத்தின் SI அலகான நொடி, 1967-ஆம் ஆண்டு அணுவின் படித்தரத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஒரு படித்தர நொடி என்பது, சீசியம் -133 அணுவின் இரு அடிஆற்றல் நிலைகளின், மீநுண்ணிய மட்டங்களுக்கிடையே சீரான பரிமாற்றம் நிகழ்வதால் ஏற்படும் கதிர்வீச்சிற்குரிய 9,192,631,770 அலைவுக் காலங்களாகும்.

ஆம்பியர்[தொகு]

வெற்றிடத்தில், ஒரு மீட்டர் இடைவெளியில் வைக்கப்பட்ட, புறக்கணிக்கத்தக்க குறுக்குப் பரப்பு உடைய, இரு முடிவில்லா நீளங்கள் உடைய இணைக் கடத்திகள் வழியே ஒரு மீட்டர் நீளத்தில் பாயும் சீரான மின்னோட்டம், அவ்விரு கடத்திகளுக்கிடையே 2×10–7 நியூட்டன் விசையை ஏற்படுத்தினால், அம்மின்னோட்டம் ஒரு ஆம்பியர் என வரையறுக்கப்படுகிறது.

கெல்வின்[தொகு]

கெல்வின் என்பது நீரின் முப்புள்ளியில் (triple point) வெப்ப இயக்கவியலின் வெப்பநிலையில் 1/273.16 பின்னப்பகுதி என வரையறுக்கப்படுகிறது.

கேண்டிலா[தொகு]

ஒளிமூலம் ஒன்று உமிழும் 540×1012 எர்ட்சு அதிர்வெண் உடைய ஒற்றை நிறக் கதிர்வீச்சின் செறிவு, ஒரு குறிப்பிட்ட திசையில் ஒரு ஸ்டேரிடியனுக்கு 1/683 வாட் எனில், அத்திசையில் ஒளிச்செறிவு ஒரு கேண்டிலா என வரையறுக்கப்படுகிறது.


மோல்[தொகு]

0.012 கிலோகிராம் கார்பனில் உள்ள கார்பன்-12 அணுக்கள் போன்ற பல அடிப்படைத் துகள்களை உள்ளடக்கிய பொருளின் அளவு மோல் எனப்படும்.

சர்வதேச அலகுகள்[தொகு]

அலகுகள் சர்வதேச அமைப்பு (பிரஞ்சு மொழியில், சர்வதேச அலகுகள் ஒழுங்கமைப்பு (ஸிஸ்டெமெ இன்டர்நேஷனல் டி யுனிடெஸ் - Système International d'Unités) சுருக்கமாக SI என குறிகப்படுகிறது. இது பதின்ம அடுக்கு அளவு முறையின் நவீன மாற்றமைவு ஆகும். இது அன்றாட வியாபாரத்திலும், அறிவியலிலும் உலகில் மிகப் பரவலாக பயன்படுத்தப்படும் அலகு முறை ஆகும். முதலில் பயன்படுத்தப்பட்ட சென்டிமீட்டர்-கிராம்-வினாடி என்ற சி.ஜி.எஸ்(CGS) அமைப்பில் பல மாறுபாடுகளும் மாற்றுக்களும் இருந்தன. அவற்றைக் களைய, மீட்டர்-கிலோகிராம்-வினாடி என்ற அமைப்பிலிருந்து எம்.கே.எஸ் (MKS) முறை உருவாக்கப்பட்டது. இதிலிருந்து 1960ஆம் ஆண்டு எஸ்.ஐ (SI) அலகுகள் தோன்றின. எஸ்.ஐ., அலகுமுறையின் வளர்ச்சியின் போது, பதின்ம அடுக்கு அளவு முறையில் பயன்படுத்தப்படாத பல புதிய அலகுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அடிப்படையான ஏழு வகை, பொருள் அல்லது இருப்பு சார்ந்த அளவுகளுக்கான அசல் எஸ்.ஐ., அலகுகளின் பட்டியல்:[1] [2]

அடிப்படை அளவு அடிப்படை அலகு குறியீடு தற்போதைய SI மாறிலிகள் முன்மொழியப்பட்ட புதிய SI மாறிலிகள்[3]
நேரம் நொடி s சீசியம்-133 அணுவில் மீ நுண் பிளத்தல் தற்போது எஸ்ஐ (SI) அலகில் உள்ளது போல்
நீளம் மீட்டர் m வெற்றிடத்தில் ஒளியின் வேகம், c தற்போது எஸ்ஐ (SI) அலகில் உள்ளது போல்
பொருண்மை கிலோகிராம் kg சர்வதேச மூல முன்மாதிரி நிறை கிலோகிராம் ஐபிகே (IPK) பிளான்கின் (Planck) மாறிலி, h
மின்சாரம் - மின்னோட்டம் ஆம்பியர் ஏ (A) தடையற்ற இடைவெளி உட்புகவிடுமியல்பு, தடையற்ற இடைவெளி மின் உட்புகு திறன் எலக்ட்ரானின் மின்சுமை, ஈ (e)
வெப்பநிலை கெல்வின் கே (K) தண்ணீரின் மும்மைப் புள்ளி, வெப்பநிலைக் கீழ்வரம்பு போல்ட்ஸ்மான் மாறிலி, கே (k)
பொருள் அளவு மோல் (அலகு) மோல் (mol) கார்பன் - 12 மோலிர நிறை அவகாதரோவின் மாறிலி என் (N)A
தன்னொளிர்வுச் செறிவு கான்டெலா சிடி (cd) தன்னொளிர்வு மூலத்தின் ஒளிரும் திறன் 540 THz தற்போது எஸ்ஐ (SI) அலகில் உள்ளது போல்


நுட்பியல் சொற்கள்[தொகு]

  1. International Bureau of Weights and Measures (2006), The International System of Units (SI) (8th ed.), p. 147, ISBN 92-822-2213-6, http://www.bipm.org/utils/common/pdf/si_brochure_8_en.pdf 
  2. வார்ப்புரு:Https://en.wikipedia.org/wiki/International Bureau of Weights and Measures
  3. Crease 2011, ப. 261
"https://ta.wikipedia.org/w/index.php?title=அளவியல்&oldid=2406406" இருந்து மீள்விக்கப்பட்டது