இயேசுவின் உயிர்த்தெழுதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.8) (தானியங்கி இணைப்பு: simple:Resurrection of Jesus
சி r2.6.8) (தானியங்கி இணைப்பு: eo:Resurekto de Jesuo
வரிசை 60: வரிசை 60:
[[el:Ανάσταση του Χριστού]]
[[el:Ανάσταση του Χριστού]]
[[en:Resurrection of Jesus]]
[[en:Resurrection of Jesus]]
[[eo:Resurekto de Jesuo]]
[[es:Resurrección de Jesús]]
[[es:Resurrección de Jesús]]
[[fi:Jeesuksen ylösnousemus]]
[[fi:Jeesuksen ylösnousemus]]

06:19, 8 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

இயேசுவின் உயிர்த்தெழுதல் (Resurrection of Jesus) என்பது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பாலஸ்தீனாவில் வாழ்ந்து, கடவுளாட்சி பற்றி மக்களுக்குப் போதித்து, சிலுவையில் அறையுண்டு இறந்த இயேசு கல்லறையினின்று மீண்டும் மாட்சிமையான உடலோடு உயிர்பெற்று எழுந்தார் என்னும் கிறித்தவ நம்பிக்கை ஆகும். இதை இயேசு கிறித்துவின் வாழ்க்கை, போதனை, சாவு ஆகியவற்றை எடுத்துரைக்கின்ற நற்செய்தி நூல்கள் பதிவு செய்துள்ளன[1].

இயேசு உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சி அவர் விண்ணேற்றமடைந்த நிகழ்ச்சியிலிருந்து (Ascension of Jesus) வேறுபடுத்திக் காட்டப்படுகிறது. இயேசு கிறித்து சாவின் மீது வெற்றிகொண்டு, உயிர்பெற்றெழுந்தது உண்மையாகவே நடந்த வரலாற்று நிகழ்ச்சி என கிறித்தவர்கள் நம்புகின்றனர்.[2] இது அவர்கள்தம் நம்பிக்கையின் (விசுவாசத்தின்) மையமும் ஆகும்.

விவிலிய ஆதாரம்

இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றிய விவிலிய குறிப்புகள் பல உள்ளன. அவற்றில் ஒரு சில: யோவான் 19:30-31; மாற்கு 16:1; 16:6. இயேசு இறந்து கல்லறையில் அடக்கப்பட்ட மூன்றாம் நாள் விடியற்காலையில் பெண்கள் சிலர் அவருடைய உடலில் பூசுவதற்கென நறுமணப் பொருட்களைக் கொண்டுசென்ற போது கல்லறையை மூடியிருந்த கல் புரட்டப்பட்டு, கல்லறை வெறுமையாய் இருக்கக் கண்டார்கள் (மத்தேயு 28:1-7; மாற்கு 16:1-8; லூக்கா 24:1-12; யோவான் 20:1-12). சாவின்மீது வெற்றிகொண்டு உயிர்பெற்றெழுந்த இயேசு நாற்பது நாள்கள் தம் சீடருக்குத் தோன்றினார் (திருத்தூதர் பணிகள் 1:3); அதைத் தொடர்ந்து விண்ணேகினார். இதுவே "இயேசுவின் விண்ணேற்றம்" (Ascension of Jesus) என அழைக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சிகளைக் கிறித்தவர்கள் உயிர்த்தெழுதல் பெருவிழா (Easter), விண்ணேற்றப் பெருவிழா (Ascension Day) என்னும் திருநாள்களாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறார்கள்.

திருவழிபாட்டு ஆண்டு
(கத்தோலிக்கம்)
திருவழிபாட்டுக் காலங்கள்
முக்கியப் பெருவிழாக்கள்

தொடக்க காலத் திருச்சபையின் நம்பிக்கைத் தொகுப்பு (Creed)

இயேசு சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்தார் என்னும் நம்பிக்கை அறிக்கை முதல் முறையாக புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் (ஆண்டு 54-55) உள்ளது:

இயேசு உண்மையாகவே உயிர்த்தெழுந்தார் என்னும் செய்தியைப் புனித பவுல் "பெற்றுக்கொண்டதாகக்" குறிப்பிடுவதால் அவருடைய காலத்துக்கு முன்பே இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றிய நம்பிக்கை உருவாகிவிட்டது என்பது தெரிகிறது. வரலாற்று ஆசிரியர்களின் கருத்துப்படி, இயேசு சிலுவையில் இறந்து அதன் பின் தம் சீடருக்குத் தோன்றிய நிகழ்வுகளைத் தொடர்ந்து கி.பி. 35 அளவிலேயே இம்மரபு எழுந்திருக்க வேண்டும். அந்த மரபைத்தான் பவுல் எடுத்தியம்புகின்றார்; கிறித்தவ சமூகத்திற்கும் அந்நம்பிக்கையை ஒப்படைக்கின்றார்.

கிறித்தவரின் நம்பிக்கைக்கு அடிப்படை

இயேசு கிறித்து துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் அறையப்பட்டு, உயிர்துறந்து, கல்லறையில் அடக்கப்பட்ட பிறகும், சாவை வென்று உயிர்பெற்றெழுந்தார் என்பது கிறித்தவர்களின் உறுதியான நம்பிக்கை. எனவே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பாலத்தீன நாட்டில் வாழ்ந்து இறந்த இயேசு இன்றும் ஒரு புதிய முறையில் கடவுளோடு இணைந்து உயிர் வாழ்கின்றார் என்பது அவர்கள் கோட்பாடு.

திருச்சபையில் திருமுழுக்கு (ஞானஸ்நானம்) பெறுவோர் உயிர்த்தெழுந்த இயேசுவின் புதிய வாழ்வில் பங்குபெற்று, புது மனிதராய் மாறுகிறார்கள் எனவும், இவ்வாறு புதுப்பிக்கப்பட்ட அவர்கள் நன்னடத்தையிலும் நன்னெறியிலும் சிறந்து விளங்க வேண்டும் எனவும் புனித பவுல் அறிவுறுத்துகிறார்:

மத்தேயு நற்செய்தி

இயேசு உயிர் பெற்று எழுந்த நிகழ்வை மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு நற்செய்தியாளர்களும் சில வேறுபாடுகளுடன் பதிவு செய்துள்ளனர். கிறித்தவ வழிபாட்டு மூவாண்டு சுழற்சியில் 2011ஆம் ஆண்டு முதலாம் ஆண்டாக உள்ளதால் மத்தேயு நற்செய்தி பாடம் கிறித்தவ கோவில்களில் வாசிக்கப்படும். இதோ:

  • மத்தேயு 28:1-10

2012ஆம் ஆண்டு இயேசுவின் உயிர்த்தெழுதல் விழா ஏப்பிரல் 8ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வழிபாட்டு மூன்று ஆண்டு சுழற்சியில் இரண்டாம் ஆண்டாகக் கருதப்படுவதால், இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றிய நற்செய்தி மாற்கு 16:1-7 பகுதியிலிருந்து எடுக்கப்படும். யோவான் 20:1-9 பகுதியையும் பயன்படுத்தலாம்.

மேலும் காண்க

ஆதாரங்கள்

  1. இயேசுவின் உயிர்த்தெழுதல்
  2. J. E. L. Newbigin, The Gospel In a Pluralist Society (London: SPCK, 1989), p.66.