உள்ளடக்கத்துக்குச் செல்

ஈற்றுணவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இனிப்பு-விருந்துக்குப் பின்
வகைஇனிப்பு
வேறுபாடுகள்(மாச்சில்லுகள், அணிச்சல்கள், குக்கீகள், மிட்டாய், ஜெலட்டின் இனிப்புகள், குளிர்களி, பேஸ்ட்ரி, பை, புட்டிங்)

ஈற்றுணவு அல்லது விருந்துக்குப்பின் இனிப்பு (dessert) என்பது ஓர் உணவை சாப்பிட்டு முடித்த பின் சாப்பிடப்படும் ஓர் இனிப்பு வகை ஆகும். இது வழக்கமான இனிப்பு உணவுகள் மற்றும் இனிப்பு மது அல்லது மதுபானப் பொருள் போன்ற பானமாக இருக்கலாம். உலகின் சில பகுதிகளில், மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்காவின் பெரும்பகுதி மற்றும் சீனாவின் பெரும்பாலான பகுதிகளில், உணவை முடிப்பதற்கு ஓர் இனிப்பு வழங்கி முடிக்கும் பாரம்பரியம் இல்லை.

விருந்துக்கு பின் மாச்சில்லு, அணிச்சல், குக்கீ, மிட்டாய், ஜெலட்டின் இனிப்புகள், குளிர்களி பேஸ்ட்ரி, பை, புட்டிங் வேக வைத்த கூழ் மற்றும் இனிப்பு ரசங்கள் போன்றவை வழங்கப்படுகின்றன. ஆசிய நாடுகளில் விருந்துக்குப் பின் இனிப்பில் பெரும்பாலும் பழங்களே பயன்படுத்தப்படுகின்றன. ஏனெனில் இவை இயற்கையிலேயே இனிப்பு சுவை உடையவை. சில கலாச்சாரங்களில் விருந்துக்குப்பின் இனிப்பு உணவாக பொதுவாக மிகவும் சுவையாக இருக்கும் உமாமி தின்பண்டங்களை பயன்படுத்துகிறார்கள். தமிழர் கலாசாரத்தில் உணவு விருந்திற்கு பின்பு சர்க்கரைபொங்கல், பழங்கள், வடை, மோதகம், வெற்றிலை-பீடா, கேசரி, தேநீர் அல்லது பாயசம் போன்றவை வழங்கப்படுகின்றன.

சொற்பிறப்பு

[தொகு]

விருந்துக்குப்பின் இனிப்பு (Dessert) என்ற வார்த்தை பிரெஞ்சு வார்த்தையின் 'டெஸ்வேர்ர்' என்பதிலிருந்து உருவானது, இதன் பொருள் 'மேசைகளை அழிக்க' என்பதாகும்.[1] 1600 ஆம் ஆண்டில் வில்லியம் வாகன் எழுதிய உடல்நலம் பற்றிய கல்வி கையேட்டில் உடல் நலம் குறித்த இயற்கையான மற்றும் செயற்கை வழிமுறைகள் என்ற தலைப்பிலான கட்டுரை மூலம் இதன் முதல் பயன்பாடு அறியப்பட்டது.[2]

மைக்கேல் கிராண்ட்ல் என்பவர் தனது 'எ ஹிஸ்டரி ஆஃப் டெசர்ட்' (2013) என்ற பதிவில் எல்லா உணவு வகைகளும் பரிமாறி முடித்த பின்னர் உணவு பரிமாறப்பட்ட மேசையை சுத்தம் செய்வதற்கு சற்று முன்னர் விருந்தின் கடைசி நிகழ்வாக இவைகள் வழங்கப்பட்டது என்ற உண்மையை இது குறிக்கிறது என்று விளக்குகிறார். 14 ஆம் நூற்றாண்டில் வழக்கத்தில் இருந்த "சர்வீஸ் லா ரஸ்ஸஸ்" (ஒரே விதமான உணவு வகைகளை பரிமாறுதல்) என்கிற வார்த்தையானது "சர்வீஸ் லா பிரான்சைஸ்" (வித விதமான உணவு வகைகளை ஒரே நேரத்தில் மேசையில் பரிமாறுதல்) என்னும் வார்த்தையாக 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மாற்றம் பெற்றது.

வேறு பெயர்கள்

[தொகு]

ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து ஆகியவற்றில் 'டெஸ்ஸர்ட்' என்ற வார்த்தை பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது, அதே நேரத்தில் 'புட்டிங்' என்பது பொதுவாக இங்கிலாந்தில் பயன்படுத்தப்படுகிறது.[3]

வரலாறு

[தொகு]

பழங்கால மெசொப்பொத்தேமியாவில் உள்ள கடவுளர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்திய வரலாறு மற்றும் பிற பண்டைய நாகரீகங்களில் இனிப்பு பாட்டம் வழங்கப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. உலர்ந்த பழங்கள் மற்றும் தேன் அநேகமாக உலகின் பெரும்பகுதிகளில் பயன்படுத்தப்படும் முதல் இனிப்பு வகைகள் ஆகும்.

உலகெங்கிலும் கரும்பு மூலம் விருந்துக்குப் பின் இனிப்பு செய்வதற்கு மிகவும் உதவுகின்றது. கி.மு. 500 க்கு முன்னரே இந்தியாவில் கரும்பு விளைவிக்கப்பட்டு சர்க்கரையாக மாற்றப்பட்டது. எனவே எளிதாக வர்த்தகம் செய்ய ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்த செல்ல முடிந்தது. கரும்பு மற்றும் சர்க்கரையானது மாசிடோனியாவில் கிமு 300 ஆம் ஆண்டுகளில் வர்த்தகம் செய்யப்பட்டது. கி.மு 600 ல் சீன தேசத்திலும் கரும்பு மற்றும் சர்க்கரையானது வர்த்தகம் செய்யப்பட்டது. மத்திய கிழக்கு நாடுகள், தெற்காசியா மற்றும் சீனாவில் ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சர்க்கரையானது சமையல் மற்றும் இனிப்புப் பண்டங்களின் பிரதானமாக இருந்து வந்துள்ளது. ஐரோப்பாவில் கரும்பு மற்றும் சர்க்கரையின் பயன்பாடானது பன்னிரண்டாவது நூற்றாண்டு மற்றும் அதற்குப் பிறகும் மிகச்சிறிய அளவில் கூட அறியப்படவில்லை. சிலுவைப்போர்கள் மற்றும் காலனித்துவம் மூலமாகவே கரும்பு மற்றும் சர்க்கரையின் பயன்பாடு  பரவலாக அறியப்பட்டது.

ஐரோப்பாவிலும் பிற்கால ஐக்கிய அமெரிக்காவிலும் ஏற்பட்ட தொழில்துறை புரட்சியால் இனிப்பு வகைகள் (மற்றும் பொதுவாக உணவு) பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டு பதப்படுத்தி பாதுகாக்கப்பட்டது. 1920 களில் உறைபனி தோன்றியபோது இனிப்பு உள்ளிட்ட உறைந்த உணவுகள் மிகவும் பிரபலமாகின. இந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள் பல தொழில்மயமான நாடுகளில் உணவுகளில் பெரும் பகுதியாக மாறியது. பல நாடுகளில் இனிப்பு வகைகள் மற்றும் உணவுகள் தங்கள் நாடுகளுக்கு அல்லது பிராந்தியத்திற்கு தனித்துவமாக மாறியது.

தேவையான பொருட்கள்

[தொகு]

இனிப்பு உணவு தயாரிப்பதில் பொதுவாக கரும்பு சர்க்கரை, கருப்பட்டி, பழுப்பு சர்க்கரை, தேன் அல்லது மோலாஸ்கள், மேப்பிள் சிரப் அல்லது சோளம் சிரப் போன்ற சில வகை சிரப் வகைகள் பயன்படுத்தப்படுகின்றன. மேற்கத்திய பாணியிலான இனிப்புகளில் பொதுவான பொருட்கள் மாவு அல்லது வெண்ணெய் அல்லது பன்றிக்கொழுப்பு போன்ற சமையல் கொழுப்பு, பால், முட்டை, உப்பு, எலுமிச்சை சாறு போன்ற அமில பொருட்கள் மற்றும் மசாலாப் பொருட்கள் மற்றும் சாக்கலேட், வேர்க்கடலை வெண்ணெய், பழங்கள் மற்றும் பழக்கொட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன.

பலவிதமான சுவைகளைச் சேர்க்க இனிப்புகளில் பல மசாலாப் பொருட்களும் சாறுகல் சேர்க்கப்படுகின்றன. இனிப்பு சுவைகளை சமன் செய்வதற்கும் சுவைகளில் ஒரு மாறுபாட்டை உருவாக்குவதற்கும் இனிப்புடன் உப்பு மற்றும் அமிலங்கள் சேர்க்கப்படுகின்றன. சில இனிப்புகள் கோப்பி சுவை கொண்டவை, எடுத்துக்காட்டாக ஒரு பனிக்கட்டி காபி அல்லது காபி பிஸ்கட் போன்றவை அடங்கும்.

வகைகள்

[தொகு]

அணிச்சல்கள்

[தொகு]

அணிச்சல் மாவு, சர்க்கரை, முட்டை மற்றும் வெண்ணெய் போன்ற பொருட்களின் கலவையில் செய்யப்படுகிறது. இது திருமண விழா, பிறந்த நாள் விழா போன்ற திருநாட்களைக் கொண்டாடுவதற்குச் செய்யப்படும் சிற்றுண்டி வகையினைச்சேர்ந்த உணவுப் பண்டமாகும்.[4]

மாச்சில்லுகள்

[தொகு]

மாவினைச் சுடுவதன் மூலம் மாச்சில்லு என்ற உணவுப் பண்டம் தயாரிக்கப்பட்டது.

குலாப் ஜாமுன்

[தொகு]

இது பெரும்பாலும் திட பால் பொருட்கள், கோயாவில் (பால் குறுக்கப்பட்டு மாவு போன்று மாற்றப்படுதல்) இருந்து தயாரிக்கப்படுகிறது. தற்காலத்தில் கோயாவிற்கு பதிலாக உலர்த்தி பொடியாக்கிய பால் பயன்படுத்தப்படுகிறது. இதனுடன் பாதாம் சேர்த்து அரைத்து சுவை அதிகரிக்கப்படுகிறது.

மோதகம்

[தொகு]

புதிதாக அரைக்கப்பட்ட தேங்காய் மற்றும் வெல்லம் கொண்டு நிரப்பப்படுகிறது. இதன் வெளிப்புற மென்மையான ஓடானது அரிசி மாவு அல்லது கோதுமை, மைதா மாவு கலந்து தயாரிக்கப்படுகிறது.

குளிர் உணவு பண்டம்

[தொகு]

இனிப்பும் சுவையும் சேர்க்கப்பட்ட பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடிப்பிடிக்காமல் ஒரு பங்கு பால் அரைப்பங்காகும் வரை தொடர்ந்து காய்ச்சிக் குளிர்வித்துக் குல்ஃபி தயாரிக்கப்படுகிறது.

பால், கிறீம் போன்ற பாற் பொருட்கள் மற்றும் நிறமூட்டிகள், சுவையூட்டிகள் ஆகியன கலந்து தயாரிக்கப்படும் குளிரூட்டப்பட்ட சிற்றுண்டியாகும்.

ரோஸ் சிரப், சேமியா, திருநீற்றுப்பச்சை விதைகள் மற்றும் ஜெல்லி துண்டுகளுடன் பால் கலந்து செய்யப்படுகிறது,

குடிக்கும் உணவு பண்டம்

[தொகு]

பால் பாயசத்தைப் பால், சவ்வரிசி, சேமியா முதலியவற்றைக் கொண்டு செய்கிறார்கள்.

படங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Dessert". Merriam-Webster Dictionary. Merriam-Webster Incorporated. பார்க்கப்பட்ட நாள் 15 October 2012.
  2. Charlton, Anne (2005). "An example of health education in the early 17th century: Naturall and artificial Directions for Health by William Vaughan". Health Education Research 20 (6): 656–664. doi:10.1093/her/cyh030. பப்மெட்:15857908. https://archive.org/details/sim_health-education-research_2005-12_20_6/page/656. 
  3. "Eating and Drinking". The Septic's Companion. பார்க்கப்பட்ட நாள் July 22, 2015.
  4. Drzal, Dawn. "How We Got to Dessert". The New York Times. https://www.nytimes.com/2011/12/04/books/review/how-we-got-to-dessert.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈற்றுணவு&oldid=4052332" இலிருந்து மீள்விக்கப்பட்டது