குலாப் ஜாமுன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குலாப் ஜாமுன்
Gulaab Jamun (homemade!) bright.jpg
குலாப் ஜாமுன்
மாற்றுப் பெயர்கள் குலாப் ஜாமுன் (வட இந்தியா/பாகிஸ்தான்), லால் மொஹன் (வட இந்தியா/நேபாளம்), குலாப் ஜம்(கிழக்கு இந்தியா/வங்கதேசம்)
பரிமாறப்படும் வெப்பநிலை உணவு
தொடங்கிய இடம் இந்தியா
பரிமாறப்படும் வெப்பநிலை வெப்பம், குளிர், அல்லது அறை வெப்பநிலை
முக்கிய சேர்பொருட்கள் கோயா, குங்குமப்பூ
Cookbook: குலாப் ஜாமுன்  Media: குலாப் ஜாமுன்

குலாப் ஜாமுன் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் பங்களாதேஷ் மற்றும் மியான்மரில் பிரபலமான திட-பால் சார்ந்த இனிப்பு வகையாகும். மொரிஷியஸ், பிஜி, தெற்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா, மலாய் தீபகற்பம், கரிபியன் நாடுகள், ஜமைக்கா ஆகிய பகுதிகளிலும் காணப்படுகிறது. இது பெரும்பாலும் திட பால் பொருட்கள், கோயாவில் (பால் குறுக்கப்பட்டு மாவு போன்று மாற்றப்படுதல்) இருந்து தயாரிக்கப்படுகிறது. தற்காலத்தில் கோயாவிற்கு பதிலாக உலர்த்தி பொடியாக்கிய பால் பயன்படுத்தப்படுகிறது. இதனுடன் பாதாம் சேர்த்து அரைத்து சுவை அதிகரிக்கப்படுகிறது.

தயாரிப்பு[தொகு]

இந்தியாவில் பால் திடப்பொருளாக மாற்றப்படுவதற்கு குறைந்த தீயில் அதிக நேரம் கொதிக்க வைக்கப்படுகிறது இதன் மூலம் நீர் குறைந்து திடப் பொருளாகிறது. இது இந்தியா, நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் கோயா என அழைக்கப்படுகிறது. இதனுடன் சிறிதளவு மைதா சேர்த்து பிசைந்து அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி 148 டிகிரி செல்சியஸ் [1] கொண்ட எண்ணெயில் குறைந்த தீயில் நன்கு பொரித்து, நிறம் மாறியதும், சர்க்கரை பாகில் ஏலக்காய், ரோஸ் நீர், குங்குமப்பூ சேர்த்து அதனுடன் சேர்த்து ஊற வைக்கப்படுகிறது.[2]

தோற்றுவாய்கள்[தொகு]

இடைக்கால இந்தியாவில் முதன்முதலில் குலாப் ஜாமுன் தயாரிக்கப்பட்டது. மத்திய ஆசிய துருக்கிய படையெடுப்பாளர்களால் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டது.[3] முகலாயப் பேரரசர் ஷாஜகானின் தனிப்பட்ட சமையல்காரரால் தற்செயலாக தயாரிக்கப்பட்டதாக ஒரு கோட்பாடு கூறுகிறது.[4] "குலாப்" என்ற பெர்சியன் வார்த்தையில் gol (பூ) மற்றும் āb (நீர்) என பொருள்படுகிறது. ரோஜா நீர் கலந்த சர்க்கரைப் பாகைக் குறிக்கிறது."ஜாமுன்" அல்லது "ஜமான்" என்பது இந்தி-உருது வார்த்தையாகும். இது சைசிஜியம் ஜம்போலனம் பொதுவாக பிளாக் பிளம் என்று அழைக்கப்படுகிற இந்திய பழம்த்தின் அளவு மற்றும் வடிவம் கொண்டது.[5]

குலாப் ஜாமுன் ஒரு மாறுபாடு காலா ஜாமுன் என்று அழைக்கப்படுகிறது

குறிப்புகள்[தொகு]

  1. Marty Snortum, Lachu Moorjani (2005). Ajanta: regional feasts of India. Gibbs Smith. பக். 17. ISBN 1-58685-777-0. https://books.google.com/books?id=Sj6SMyPQ7nMC&printsec=frontcover&dq=isbn:1586857770&hl=en&sa=X&ei=BAc4T9fEL6Kn0AGHyNW-Ag&ved=0CDIQ6AEwAA#v=snippet&q=Gulab%20jamun&f=false. 
  2. shraddha.bht. "Gulab Jamoon". Konkani Recipes. பார்த்த நாள் 25 May 2010.
  3. Michael Krondl (1 June 2014). The Donut: History, Recipes, and Lore from Boston to Berlin. Chicago Review Press. பக். 7. ISBN 978-1-61374-673-8. https://books.google.com/books?id=rAeAAwAAQBAJ&pg=PA7. 
  4. Charmaine O'Brien (2003). Flavours Of Delhi: A Food Lover's Guide. Penguin Books Limited. பக். 145. ISBN 978-93-5118-237-5. https://books.google.com/books?id=xeSXAAAAQBAJ&pg=PT145. 
  5. [Banerjee, A; Dasgupta, N; De, B (2005). "In vitro study of antioxidant activity of Syzygium cumini fruit". Food Chemistry. 90 (4): 727. doi:10.1016/j.foodchem.2004.04.033]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குலாப்_ஜாமுன்&oldid=2701142" இருந்து மீள்விக்கப்பட்டது