திருநீற்றுப்பச்சை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திருநீற்றுப்பச்சை
Feslegen 2.JPG
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: Lamiales
குடும்பம்: Lamiaceae
பேரினம்: Ocimum
இனம்: O. basilicum
இருசொற் பெயரீடு
திருநீற்றுப்பச்சை
கரோலஸ் லின்னேயஸ்

திருநீற்றுப்பச்சை, கரந்தை அல்லது துன்னூத்துப் பச்சிலை (Basil; தாவரவியல் பெயர்: Ocimum basilicum) வீடுகளில் வளர்க்கப்படும் மூலிகையாகும். இந்த மூலிகை, பேசில் என்ற பெயரில் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்துவருகிறது. இந்தியாவில் கைமருந்தாகவும், தென்கிழக்கு ஆசியநாடுகளில் உணவிலும் மிகுதியாகப் பயன்படுத்தப்படுகிறது.

பெயர்கள்[தொகு]

திருநீற்றுப்பச்சைக்கு உருத்திரச்சடை, பச்சை சப்ஜா, விபூதிபச்சிலை, பச்சபத்திரி, திருநீத்துப்பத்திரி போன்ற வேறு பெயர்கள் உள்ளன. முற்காலங்களில் சில பகுதிகளில், திருநீறு தயாரிப்பில் இதன் சாம்பல் சேர்க்கப்பட்டதால் ‘திருநீற்றுப்’பச்சிலை எனும் பெயர் உருவாகியிருக்கலாம்.[1]

அடையாளம்[தொகு]

நல்ல வாசம் மிகுந்தது இந்தச் செடி. பூக்கள் வெள்ளை கலந்த ஊதா நிறத்தில் இருக்கும்.

வளர்க்கும் முறை[தொகு]

இதன் விதைகளையிட்டு இனப்பெருக்கம் செய்யலாம். மழைக்காலத்தில் விதைப்பது நல்ல பலனைத் தரும்.

மருத்துவக் குணம்[தொகு]

இது நுண்ணுயிர், வைரஸ் எதிர்ப்புத்தன்மைகள் கொண்டது. இதன் இலைகள் கொசு விரட்டியாகவும் பயன்படுகிறன. துளசி தரும் நன்மைகள் அனைத்தும் இந்த மூலிகையிலும் கிடைக்கும். இதன் விதைகள் சப்ஜா விதை என்ற பெயரில் தமிழ் மருந்துக் கடைகளில் கிடைக்கும். நீரில் ஊற வைத்தால், நீரை உறிஞ்சிக்கொண்டு வழவழப்பாக மாறிவிடும். நீர்க்கடுப்பு, உடல் சூடு போன்றவற்றைத் தணிப்பதற்கும் வயிற்றுக்கும் நல்லது. சர்பத், பலூடாவிலும் இது சேர்க்கப்படுகிறது[2].

குறிப்புகள்[தொகு]

  1. டாக்டர் வி.விக்ரம் குமார் (2018 திசம்பர் 1). "மருந்தாவது 'திருநீறு..!'". கட்டுரை. இந்து தமிழ். 1 திசம்பர் 2018 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
  2. தி இந்து தமிழ் இணைப்பு, நலம் வாழ 13. திசம்பர் 2014

மேலும் படங்கள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Basil
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருநீற்றுப்பச்சை&oldid=2608228" இருந்து மீள்விக்கப்பட்டது