சப்ஜா விதை
Appearance
சப்ஜா விதை (துளசி விதை) திருநீற்றுப்பச்சை, கரந்தை அல்லது துன்னூத்துப் பச்சிலை (Basil; தாவரவியல் பெயர்: Ocimum basilicum) வீடுகளில் வளர்க்கப்படும் ஒரு மூலிகை செடியாகும். இந்த செடியின் விதைகள் சப்ஜா விதைகள் என அழைக்கப்படுகின்றது. இது குளிர்பானங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றது. பார்ப்பதற்கு எள் மற்றும் கருஞ்சீரகத்தினை போல் இருக்கும். நீரில் 15 நிமிடங்கள் ஊரவைத்தால் நீரினை உறிஞ்சி வழவழப்புத்தன்மையுடன் இருக்கும். சர்பத்கள் மற்றும் பலூடாவிலும் இது சேர்க்கப்படுகிறது.
மருத்துவக் குணம்
[தொகு]- சப்ஜா விதையில் துத்தநாகம், சல்ஃபர், ஆன்டிஆக்ஸிடன்ட், வைட்டமின் ஏ, பி, சி உள்ளிட்ட சத்துகள் உள்ளன.
- நீர்க்கடுப்பு, உடல் சூடு போன்றவற்றைத் தணிப்பதற்கும், குடல் மற்றும் வயிற்று புண்களை சிறப்பாக ஆற்றக்கூடியது.
- மலச்சிக்கலைப் போக்கும்.
- நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தும்.
- அதிக அளவு இரும்புச்சத்து இருப்பதால், ரத்தச் சோகை வராமல் காக்கும்.[1][2]
- ஆண்மையை அதிகரிக்கும்.[சான்று தேவை]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://www.care2.com/greenliving/are-basil-seeds-a-new-superfood.html பரணிடப்பட்டது 2018-02-22 at the வந்தவழி இயந்திரம்,
- ↑ https://www.vikatan.com/news/health/72400-seeds-with-health-benefits.html, விகடன் செய்தி-பதினான்கு விதைகள்.பிரம்மாண்ட பலன்கள். நவம்பர் 2016