மாச்சில்லு
மாச்சில்லு, ஈரட்டி அல்லது விசுக்கோத்து (Biscuit) என்பது சுடப்பட்ட, உண்ணக்கூடிய, மாவால் தயாரிக்கப்பட்ட உணவுப் பண்டம் ஆகும்.[1] ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும் ஈரட்டி (Biscuit) என்பது சிறிய, மென்மையான வெதுப்பியைக் குறிக்கும். பொதுநலவாய நாடுகளில் ஈரட்டி (Biscuit')' என்பது சிறிய, கடினமான, பெரும்பாலும் இனிப்பான, சுடப்பட்ட உணவாகும்.
வரலாறு[தொகு]
பயணத்துக்கான மாச்சில்லுகள்[தொகு]
நீண்ட பயணங்களின்போது, குறிப்பாகக் கடற்பயணங்களின்போது சத்தான, இலகுவில் கொண்டு செல்லக்கூடிய, இலகுவாகச் சேமித்து வைக்கக்கூடிய, நீண்ட நாட்கள் பழுதடையாமல் இருக்கக்கூடிய உணவுப் பண்டங்களுக்கான தேவை எழுந்தது. இதனால் மாவினைச் சுடுவதன் மூலம் மாச்சில்லு என்ற உணவுப் பண்டம் தயாரிக்கப்பட்டது. எகிப்திய மாலுமிகளும் உரோமர்களும் பயணங்களின்போது மாச்சில்லுகளைப் பயன்படுத்தினார்கள்.
இன்றைய மாச்சில்லுகள்[தொகு]
இன்றைய காலத்தில் தயாரிக்கப்படும் மாச்சில்லுகள் பெரும்பாலும் காரச் சுவையுடையதாக அல்லது இனிப்புச் சுவையுடையதாகத் தயாரிக்கப்படுகின்றன. அநேகமான மாச்சில்லுகள் ஏறத்தாழ இரண்டு அங்குல விட்டமுடையதாகவும் தட்டையானதாகவும் தயாரிக்கப்படுகின்றன. சில மாச்சில்லுகளின் நடுவில் பழப்பாகு அல்லது பாலேடு வைக்கப்படுவதுண்டு.
நிறுவனங்கள்[தொகு]
இலங்கை[தொகு]
இலங்கையில் மலிபன், மஞ்சி, லக்கிலேன்ட் முதலிய நிறுவனங்கள் மாச்சில்லுகளைத் தயாரித்து விற்று வருகின்றன.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ மாச்சில்லு (ஆங்கில மொழியில்)
- ↑ இலங்கையில் பிரபல்யம் பரணிடப்பட்டது 2012-03-06 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)